💙 kalai 💙
ShareChat
click to see wallet page
@panjamugan
panjamugan
💙 kalai 💙
@panjamugan
Amma paiyan
நமச்சிவாய வாழ்க 🤘 #ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய - ShareChat
01:03
https://youtube.com/watch?v=I0m9PmiajFw&si=UKwbk03t_HeR7c-E #🌀வானிலை தகவல்கள்🌨️
youtube-preview
*🦉☔ எச்சரிக்கை: தென் தமிழக ஆறுகளில் 20 ஆண்டு கால அதிகபட்ச நீர்வரத்துக்கு வாய்ப்பு!* இந்த வடகிழக்குப் பருவமழை (Northeast Monsoon - NEM) காலத்தில் முதல்முறையாக, ஐரோப்பிய மத்திய கால வானிலை முன்னறிவிப்பு மையத்தின் (ECMWF) உலகளாவிய வெள்ள முன்னறிவிப்பு அமைப்பு (Global Flood Forecasting System) தமிழகத்திற்கு முக்கியமான வெள்ள அபாய முன்னறிவிப்பை அறிவித்துள்ளது. வரும் நாட்களில், தென் தமிழக ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து, சில இடங்களில் 20 ஆண்டு கால அதிகபட்ச நீர்வரத்து ஏற்பட 30% வாய்ப்பு உள்ளதால், மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். 🌊 ஆறுகளின் நீர்வரத்து நிலவரம் அடுத்த 3 நாட்களுக்குள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள தாமிரபரணி ஆற்றுப் படுகையில் – குறிப்பாகத் திருநெல்வேலி பகுதியில் – குறிப்பிடத்தக்க அளவிலான நீர்வரத்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிற்றாறு மற்றும் வைப்பாறு போன்ற மற்ற ஆறுகளில் அடுத்த வாரத்தின் தொடக்கத்தில் (Early next week) குறிப்பிடத்தக்க நீர்வரத்து இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ⚠️ 20 ஆண்டு அதிகபட்ச நீர்வரத்துக்கான வாய்ப்பு தாமிரபரணி, சிற்றாறு மற்றும் வைப்பாறு ஆகிய இந்த மூன்று ஆறுகளிலும் 20 ஆண்டு கால அதிகபட்ச நீர்வரத்தைத் (20 year high inflow) தொடுவதற்கு 30% வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையங்கள் கணித்துள்ளன. இது மிகவும் கவனிக்கத்தக்க ஒரு அபாயக் குறியீடாகும். 🌀 வானிலையின் தாக்கம் தற்போது குமரிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள வளிமண்டல சுழற்சியானது (Circulation over Comorin Sea) மெதுவாக நகர்வது அல்லது அதே இடத்தில் நீடிப்பது போன்ற காரணங்களால், தென் தமிழகத்தில் மழைப்பொழிவு வலுப்பெற வாய்ப்புள்ளது. எனவே, இந்த வளிமண்டல சுழற்சியின் நகர்வுகளைக் கண்காணிப்பது மிகவும் அவசியம். பொதுமக்கள் மற்றும் அதிகார அமைப்புகள், அடுத்த சில நாட்களுக்கு ஆறுகளின் நீர்வரத்து மற்றும் வானிலை நிலவரத்தை உன்னிப்பாகக் கண்காணித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது புத்திசாலித்தனம்.இந்த,செய்தியை, முடிந்தளவு அனைவரிடமும் கொண்டு சேருங்கள். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - GLOFAS Flood Forccast 1  3 days bascd on २२०d Novcmbcrinitial conditions 0- Vaippar rivet is also . Cpcctcd t0 sce inCred inflos over the nexr couple of dars 7_7பட ~ப பட -1 0-[) 5 Ualland2lcu Ipurplel occodinoc Probklllule  Euo mlcrwneal mloru Dum bacol படபr1l 1 FFh d1do mrranrನe உட்டடL பபடLT ` _ ١  ٥  uir Tn IUCN IuunI OW S 51 751 Wl 75-1 Increased inflows into Chittar (tibutary of Thmimapamni) from Couttralam 3l50 expected  Io incrclsc ovcrithc next couplc of days davs Ovcr thc ncxt couplc of inflow into Thamiraparani is ೮pccted t0 simificinty ' Increase hetucen the Ghats and Tirunelveli town on he back of heavy Fains possibly over the Manjolai ]lills  GLOFAS Flood Forccast 1  3 days bascd on २२०d Novcmbcrinitial conditions 0- Vaippar rivet is also . Cpcctcd t0 sce inCred inflos over the nexr couple of dars 7_7பட ~ப பட -1 0-[) 5 Ualland2lcu Ipurplel occodinoc Probklllule  Euo mlcrwneal mloru Dum bacol படபr1l 1 FFh d1do mrranrನe உட்டடL பபடLT ` _ ١  ٥  uir Tn IUCN IuunI OW S 51 751 Wl 75-1 Increased inflows into Chittar (tibutary of Thmimapamni) from Couttralam 3l50 expected  Io incrclsc ovcrithc next couplc of days davs Ovcr thc ncxt couplc of inflow into Thamiraparani is ೮pccted t0 simificinty ' Increase hetucen the Ghats and Tirunelveli town on he back of heavy Fains possibly over the Manjolai ]lills - ShareChat
நமச்சிவாய 🤘 #ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய - ShareChat
01:29
திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலையில் அருள்புரியும் உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள கிரிவலப் பாதையில் உள்ள புனித தீர்த்த குளங்கள் (சந்திர லிங்கம் கோவில் உள்ள தீர்த்த குளத்தில்) அடியார் பெருமக்களால் உழவாரப்பணி நடைபெற்றது உழவாரம் செய்வோம் உள்வினை அறுப்போம் உழவாரப்பணி செய்த அனைத்து அடியார்கள் திருவடிக்கு நன்றி........ உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையாரின் அருள் பரிபூரணமாக கிடைக்க எல்லாம் வல்ல இறைவனின் திருவருளும் குருவருளும் திருகருணையும் கிடைக்கட்டும் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்! என் கடன் பணி செய்து கிடப்பதே நமச்சிவாய 🤘 வருடம் தோறும் கார்த்திகை மாதத்தில் இந்தப் பணி இனிதே நடைபெறும் 🤟 தமிழகத்தில் இருந்து கலந்து கொள்பவர்கள் தங்கள் பெயர் வாட்சப் எண்ணை பதிவு செய்து கொள்ளலாம்🙏 #ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய - ShareChat
பகானின் திருவிளையாடல்!!! எது நடந்தாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கும்.... ஒரு புகழ் பெற்ற கோவிலில், பணியாள் ஒருவர் இருந்தார். பெருக்கிச் சுத்தம் செய்வது தான் அவரது பணி. அதைக் குறைவின்றி சிறப்பாகச் செய்து வந்தார். கோவில், விட்டால் வீடு என்றுதான் வாழ்ந்து வந்தார். இதைத் தவிர அவருக்கு வேறொன்றும் தெரியாது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து இறைவனை தரிசனம் செய்த வண்ணமிருந்தனர். #ஓம் நமச்சிவாய இறைவன் இப்படி எல்லா நேரமும் நின்றுகொண்டே இருக்கிறானே… அவனுக்கு சோர்வாக இருக்காதா?’... என்று எண்ணிய அவர் ஒரு நாள், இறைவனிடம் “எல்லா நேரமும் இப்படி நின்று கொண்டேயிருக்கிறாயே… உனக்குப் பதிலாக நான் வேண்டுமானால் ஒரு நாள் நிற்கிறேன். நீ சற்று ஓய்வெடுத்துக் கொள்கிறாயா?” என்று கள்ளம் கபடமில்லாமல் கேட்டார். இறைவன், எனக்கு நிற்பதில் ஒன்றும் பிரச்னையில்லை. எனக்குப் பதிலாக நாளை ஒரு நாள் நீ நில். ஆனால், ஒரு முக்கிய நிபந்தனை, நீ என்னைப் போலவே அசையாமல் நிற்க வேண்டும். வருபவர்களைப் பார்த்து புன்முறுவலுடன் ஆசி வழங்கினால் போதுமானது. யார் என்ன சொன்னாலும், கேட்டாலும் நீ பதில் சொல்லக் கூடாது. நீ கடவுள் சிலை என்பதை மறந்து விடக்கூடாது. என் மீது நம்பிக்கை வைத்து அசையாது நின்றாலே போதுமானது” என்று கூறினார். அதற்கு அந்தப் பணியாளும் சம்மதித்தார். அடுத்த நாள், இறைவனைப் போலவே அலங்காரம் செய்து கொண்டு, கோவில் கருவறையில் நின்றார். இறைவனோ இவரைப் போல தோற்றத்தை ஏற்று கோவிலைப் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்யத் தொடங்கினார். முதலில், ஒரு மிகப் பெரிய செல்வந்தன் வந்தான். தன் வியாபாரம் சிறப்பாக இருக்கவேண்டும் என்று இறைவனிடம் வேண்டி, ஒரு மிகப் பெரிய தொகையை உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தினான். அவன் திரும்பிச் செல்லும் போது, தவறுதலாக தனது பணப்பையைத் தவற விட்டுச் சென்றான். இதைக் கருவறையில் கடவுள் வேடத்தில் நின்று கொண்டிருக்கும் பணியாளர் பார்த்தார். ஆனால், இறைவன் நிபந்தனை ஞாபகத்துக்கு வர பேசாமலிருந்தார். அப்படியே அசையாது நின்றார். சிறிது நேரம் கழித்து ஒரு பரம ஏழை அங்கு வந்தான். அவனிடம் உண்டியலில் போட ஒரே ஒரு ரூபாய் மட்டுமே இருந்தது. அவன், “என்னால் இது மட்டும் தான் உனக்கு தர முடிந்தது. என்னை மன்னித்துவிடு இறைவா. என்றும் போல, என்னை ஆசிர்வதிக்க வேண்டும். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் அடிப்படைத் தேவைகளுக்குக் கூட மிகக் கஷ்டமாக இருக்கிறது. என்னுடையப் பிரச்சனைகளை எல்லாம் உன்னிடமே விட்டுவிடுகிறேன். நீயே எனக்கு ஒரு நல்ல வழியைச் செய்” என்று மனமுருகக் கண்களை மூடி நம்பிக்கையுடன் வேண்டினான். சில வினாடிகள் கழித்துக் கண்களைத் திறந்தவனுக்கு எதிரே, அந்த செல்வந்தன் தவற விட்ட பணப்பை கண்ணில் பட்டது. அதனுள்ளே பணம் மட்டுமில்லை, தங்கக் காசுகளும் வைரங்களும் கூட இருந்தன. இறைவன் தனக்கே தன் பிரார்த்தனைக்கு செவிமெடுத்து அதை அளித்திருக்கிறான் என்றெண்ணி, அப்பாவித்தனமாக அதை எடுத்துக் கொள்கிறான். இறைவன் வேடத்தில் நின்று கொண்டிருந்த, அந்தப் பணியாளரால் தற்போதும் எதுவும் சொல்ல முடியவில்லை. அதே புன்சிரிப்புடன் நின்றுகொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து, ஒரு கப்பல் வியாபாரி வந்தான். ஒரு நீண்ட தூரப் பயணமாக கப்பலில் அன்று அவன் செல்லவிருப்பதால், இறைவனைத் தரிசித்து ஆசி பெற வேண்டி வந்தான். இறைவனிடம் பிரார்த்தனை செய்தான். அந்த நேரம் பார்த்து, பணப் பையைத் தொலைத்த செல்வந்தன், காவலர்களுடன் திரும்பக் கோவிலுக்கு வந்தான். அங்கு, கப்பல் வியாபாரி பிரார்த்தனை செய்வதை பார்த்து, “இவர் தான் என்பணப்பையை எடுத்திருக்க வேண்டும். இவரைப் பிடித்து விசாரியுங்கள்” என்று காவலர்களிடம் கூற, காவலர்களும் அந்தக் கப்பல் வியாபாரியைப் பிடித்துச் செல்கிறார்கள். இறைவா என் பணத்தை அபகரித்தவரை அடையாளம் காட்டியமைக்கு நன்றி!” என்று அந்த செல்வந்தன் இறைவனைப் பார்த்து நன்றி கூறிவிட்டு சென்றார். சிலையாக நின்ற பணியாளர் இறைவனை நினைத்தபடி, “கடவுளே இது நியாயமா?.... அப்பாவி ஒருவன் தண்டிக்கப்படலாமா? இனியும் என்னால் சும்மாயிருக்க முடியாது…” என்று கூறி, “கப்பல் வியாபாரி திருடவில்லை. தவறு அவர் மீது இல்லை!” என்றபடி நடந்த உண்மைகளை அனைவரிடமும் சொல்கிறார். உடனே, செல்வந்தரும், கப்பல் வியாபாரி இருவரும் நெகிழ்ந்து போய், உண்மையைக் கூறியமைக்கு இறைவனிடம் நன்றி சொல்லிவிட்டு செல்கின்றனர். இரவு வருகிறது. கோவில் வாசல் மூடப்படுகிறது. இறைவன் வருகிறார். மூலஸ்தானத்தில் நின்று கொண்டிருந்த பணியாளரிடம், இன்றைய பொழுது எப்படியிருந்தது? என்று கேட்டார். “மிகவும் கடினமாக இருந்தது. உன் வேலை எத்தனை கஷ்டம் என்பதை புரிந்துகொண்டேன். ஆனால் ஒரு நல்ல செயல் செய்தேன்….”என்று காலை கோவிலில் நடந்ததைக் கூறினார். இறைவனோ இதைக் கேட்டவுடன் அதிருப்தியடைந்தார். இறைவன் அதிருப்தியைப் பார்த்த பணியாளர் பதற்றமானான். இறைவன், “நாம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி நீ ஏன் நடந்து கொள்ளவில்லை…? என்ன நடந்தாலும் பேசக்கூடாது, அசையக்கூடாது என்ற என் நிபந்தனைகளை நீ ஏன் மீறினாய்.? உனக்கு என்மீது நம்பிக்கை இல்லை. இங்கு வருபவர்களது மனநிலையை அறியாதவனா நான்? செல்வந்தன் அளித்த காணிக்கை, தவறான வழியில் சம்பாதித்தது. அது அவனிடத்தில் மொத்தமாக உள்ள செல்வத்தில் ஒரு சிறு துளி தான். ஒரு துளியை எனக்குக் காணிக்கையாகச் செலுத்திவிட்டு, நான் பதிலுக்கு அவனுக்கு எண்ணற்றவைகளத் தரவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். ஆனால், அந்த ஏழை கொடுத்ததோ அவனிடம் எஞ்சியிருந்த இருந்த ஒரே ஒரு ரூபாய் தான். இருப்பினும் என் மீது முழு நம்பிக்கை வைத்து என்னை வணங்க வந்தான். அன்போடு அதைக் கொடுத்தான். இந்தச்சம்பவத்தில், கப்பல் வியாபாரியின் தவறு எதுவும் இல்லை. இருந்தாலும், இன்றைக்கு அவன் திட்டமிட்டபடி கப்பல் பயணம் செய்தால், விபத்தைச் சந்திக்க நேரிடும். புயலில் தாக்குண்டு அவனும் அவன் கப்பலும் காணாமல் போயிருப்பார்கள். அதிலிருந்து அவனைக் காக்கவே அவனைத் தற்காலிகமாகத்திருட்டுப் பட்டம் சுமக்கச் செய்து சிறைக்கு அனுப்ப நினைத்தேன். அந்த ஏழைக்கு அந்த பணமுடிப்பு போய் சேரவேண்டியது சரி தான். அவன் அதை நான் கொடுத்ததாக எண்ணிப் போற்றுவான். இதன் மூலம் அந்த செல்வந்தனின் கர்மா ஓரளவாவது குறைக்கப்படும். அவன் பாவப் பலன்கள் துளியாவது குறையும். இப்படி ஒரே நேரத்தில் அனைவரையும் நான் ஆசிர்வாதம் செய்ய நினைத்தேன். ஆனால், நீயோ என் எண்ணங்கள் எல்லாம் உனக்கு தெரியுமென்று நினைத்து, உன் எண்ணங்களை செயல்படுத்தி அனைத்தையும் பாழ்படுத்திவிட்டாய்.” என்றான். பணியாளர், இறைவனின் கால்களில் விழுந்து தன் தவறுக்கு மன்னிக்கும்படி வேண்டினான். “இப்போது புரிந்துகொள். நான் செய்யும் அனைத்திற்கும் ஒரு காரணம் இருக்கும். அது ஒவ்வொன்றையும் மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாது. அவர்களின் நலம் வேண்டியே நான் ஒவ்வொரு பொழுதையும் கழிக்கிறேன். அவரவரது கர்மாவின் படி பலன்களை அளிக்கிறேன். நான் கொடுப்பதிலும் கருணை இருக்கிறது. கொடுக்க மறுப்பதிலும் கருணை இருக்கிறது” என்றான்... ஒரு நாளும் இறைவன் தப்புக்கணக்கு போட்டதில்லை... 🙏
ஓம் நமச்சிவாய - தங்கக்குடத்தில் பாலும் வெள்ளிக்குடத்தில் தேனும் குடித்தாலும் மயானத்தில் குடத்தின் U6uu தண்ணீர்தெளித்தே தகனம் ஆகிறான்மனிதன் ! தங்கக்குடத்தில் பாலும் வெள்ளிக்குடத்தில் தேனும் குடித்தாலும் மயானத்தில் குடத்தின் U6uu தண்ணீர்தெளித்தே தகனம் ஆகிறான்மனிதன் ! - ShareChat
இந்த அம்மன் படம் வீட்டில் இருந்தால் திருஷ்டிகள் விலகும்; பணவரவு பெருகும்! மீன் செல்வத்தின் அடையாளம். அதன்மீது வீற்றிருப்பது போன்ற அம்பாளின் திருக்கோலம் அபூர்வமானது; மிகவும் விசேஷமானது. இந்த அம்பிகையின் படம் வீட்டில் இருந் தாலே சகல சம்பத்துகளும் வந்து சேரும்; வீட்டில் செல்வம் வற்றாமல் நிறைந்திருக்கும்' என்பது நம்பிக்கை. இந்த அம்பிகையை `ஐஸ்வர்ய மகா கெளரி' எனப் போற்றுகின்றன ஞானநூல்கள்! ஆம்! வீட்டில் எப்போதும் பணம் புழங்கவேண்டும்; கடன் பிரச்னை கள் விரைவில் தீரவேண்டும் என விரும்புகிறீர்களா? எனில், மகா சக்தியை ஐஸ்வர்ய மகாகெளரியாக தியானித்து வழிபடவேண்டும். இந்த கெளரிதேவியின் அருளால் வீட்டில் உள்ள திருஷ்டி தோஷம் முற்றிலும் விலகும். குலதெய்வங்களின் திருவருளும் பரிபூரணமாகக் கிடைக்கும்! அகத்திய மாமுனிவர் ஐஸ்வர்ய மகா கெளரி வழிபாடு குறித்து அருளியுள்ளார். அதுபற்றி அறியுமுன் இந்ததேவியின் தோற்றம் குறித்து புராணங்கள் சொல்லும் தகவலை அறிவோம். முன்பு ஒருமுறை பெரும் ஊழி ஏற்பட்டது. ஊழிக்காலம் முடிந்ததும் மீண்டும் படைப்புகள் நிகழ்ந்தன. அப்போது அலைகடலின் நடுவில் சுவர்ணலிங்கம் தோன்றியது. தேவர்களும், முனிவர்களும், அசுரர்களும், நாகர்களும் அதை வணங்கிப்போற்றினர். அந்த லிங்கத்திலிருந்து பொன் மேனியராக சிவபெருமான் வெளிப்பட்டார். அவரைத் தழுவிய பொற்கொடியாக சக்தியும் தோன்றி னாள். அவளைத் தேவர்கள் `சுவர்ண வல்லி' எனப் போற்றினர். கடல் அரசனும் நாகலோக வாசிகளும், அந்த அம்பிகையைத் தங்கள் உலகுக்கு வந்து இருக்கும்படி வேண்டினர். அம்பிகையும் பாதாள லோகம் சென்று தங்கினாள். அவள் அருளால் பூமியில் தங்கம், இரும்பு, வெள்ளி முதலான உலோகங்கள் விளைந்தன. இதற்குப் பிறகு, தேவர்கள் ஒருமுறை செல்வம் வேண்டி தவம் புரிந்தனர். அவர்களுக்கு அருளும் பொருட்டு, பாதாளத்திலிருந்து வெளிப்பட்டாள் அம்பிகை. பொன்மயமான பிரகாசத்துடன், கடல் பரப்பில் பெரிய மீன் மீது அமர்ந்த நிலையில் தோன்றினாள் சுவர்ண மகா கெளரி. அந்த அன்னை, தம்முடைய திருக்கரங்களில் ஞானத்தைக் குறிக்கும் தாமரை, போகத்தைக் குறிக்கும் நீலோற்பல மலர், நோயற்ற வாழ்வுடன் ஆயுள் விருத்தியைத் தரும் அமிர்தக் கலசம், செல்வங் களின் வடிவமான பணப்பேழை ஆகியவற்றை ஏந்தியபடி காட்சி தந்தாள்! அவளை வணங்கிப் போற்றிய அனைவருக்கும் அள்ளக் குறையாத செல்வம் தந்து அருள்பாலித் தாள். அன்னையின் அந்த அற்புத வடிவை பொன்னால் செய்து அனைவரும் வழிபடத் தொடங்கினர். அதுவே ஐஸ்வர்ய கெளரி வழிபாடாகத் தொடர்கிறது. இந்த அம்பிகையின் படம் வீட்டில் இருந்தாலே சகல சம்பத்துகளும் வந்து சேரும். வீட்டில் செல்வம் வற்றாமல் நிறைந்திருக்கும்; ஏதேனும் ஒருவகையில் பணவரவு இருந்து கொண்டே இருக்கும்; கடன் பிரச்னைகள் ஏதேனும் இருப்பின், இவளை வழிபடத் தொடங்கியதும் மெள்ள மெள்ள கடன்சுமை குறையும். திருஷ்டி தோஷங்கள் முற்றிலும் விலகும். ஏதேனும் காரணங்களால் குலதெய்வ வழிபாடு விடுபட்டுப் போனவர்களுக்கு, அந்த வழிபாட்டைத் தொடர வழிவகை பிறக்கும். குலதெய்வத்தின் பூரண அருள் கிடைக்கும் என்கின்றன ஞானநூல்கள். இந்த தேவியை ஆவணி மாத வளர்பிறை திருதியை வழிபடுவது விசேஷம். அன்பர்கள் சிலர், மாசி மாதத்திலும் வழிபடுவார்கள். மட்டுமன்றி, அம்பாளுக்கு உகந்த ஞாயிற்றுக் கிழமைகளிலும், பெளர்ணமி தினங்களிலும்கூட இந்த அம்பிகையை வழிபட்டு வரம் பெறலாம். அன்று விளக்கேற்றிவைத்து, ஐஸ்வர்ய மஹா கெளரியின் படத்துக்குச் சந்தன - குங்குமத் திலகம் வைத்து, மலர்கள் சாற்றி அலங்கரிக்க வேண்டும். அவள் கடலில் தங்க மீனின் மீது தோன்றினாள் அல்லவா? அந்தக் கோலத்தில்... தாமரையும் நீலோத்பலமும், அமிர்தக் கலசமும், பணப் பேழையும் கொண்டவளாக மனதில் தியானித்து வணங்கலாம். சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடலாம். இவளை வழிபடுவதால் வீண் விரயங்களும் மனச் சலனங்களும் விலகும். பாடுபட்டு சம்பாதித்த பணம் கையைவிட்டுப் போகாமல் பயன் தந்து சுகமளிக்கும்; சொத்தும் பொருளாதாரமும் பன்மடங்கு பெருகும்!🤘🕉️ #ஓம் சக்தி
ஓம் சக்தி - ShareChat
நமச்சிவாய 🤘🤟 பிறவி கடனை தீர்க்க உழவாரப் பணி செய்வோம் 🕉️ பிறவா நிலையை அடைவோம்🙏 #🙏 ஓம் நமசிவாய
🙏 ஓம் நமசிவாய - ShareChat
01:23
புலால் உண்பவர்களுக்கு இந்த பதிவு அர்ப்பணம் 🤟🤘 #🙏 ஓம் நமசிவாய
🙏 ஓம் நமசிவாய - ShareChat
01:22
*" சிக்கலில் வேல் வாங்கி, செந்தூரில் சம்ஹாரம் ".* 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 அன்னையிடம் வேல் வாங்கிய முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்வதற்காக, தன் தாயான பார்வதிதேவியிடம் (வேல்நெடுங்கண்ணி அம்மன்) இருந்து வெற்றி வேலாயுதத்தை பெற்றார். #சூரசம்ஹாரம் இந்த தலம் சிக்கல் ஸ்ரீ சிங்காரவேவலர் திருக்கோயில், திருச்செந்தூரில் தாயிடம் பெற்ற அந்த சக்திவேலை கொண்டு, சூரபத்மனை எதிர்த்துப் போரிட்டு, அவனை வதம் செய்து வெற்றி பெற்றார். போர் முடிவடைந்ததும், தேவர்களைக் காத்து அருள்பாலித்தார். எனவே, 'சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம் என்பது வழக்கு. வேல் வாங்கும்போது சிங்காரவேலவருக்கு வியர்வை சிந்தும் அதிசயம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இந்த அாிய நிகழ்வை இன்று மாலை சிக்கல் ஸ்ரீ சிங்காரவேலவா் திருக்கோயிலில் தாிசனம் செய்யலாம். வாய்ப்பு உள்ளவா்கள் நோில்சென்று தாிசனம் செய்யுங்கள்.
சூரசம்ஹாரம் - (d00d MU R (d00d MU R - ShareChat