@polimernews
@polimernews

Polimer News

தமிழ்நாடு அரசியல், சினிமா, உள்ளூர் செய்திகள் உடனுக்குடன் உங்கள் பாலிமர் செய்தி சேனலில்.

உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை கடுமையாக விமர்சித்த நடிகை கஸ்தூரி..!
#

TikTok

உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை கடுமையாக விமர்சித்த நடிகை கஸ்தூரி..! Polimer News
டிக் டாக் செயலியை தடை செய்வது பைத்தியகாரத்தனம் என்று உயர்நீதிமன்றத் தீர்ப்பை விமர்சித்து, சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் நடிகை கஸ்தூரி பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இபிகோ 302 என்ற புதிய படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகை கஸ்தூரி டிக்டாக் செயலியை தடை செய்வது பைத்தியகார தனமான நடவடிக்கை என்று விமர்சித்தார் சில மாதங்களுக்கு முன்பு 800 ஆபாச வீடியோ இணையதளங்கள் தடைசெய்யப்பட்ட போது எதிர்த்தவர்கள்,...
28.1k views
20 hours ago
அதிமுக, மதிமுகவிற்கு திரும்ப செல்ல கனவு கூட காணமாட்டேன் : நாஞ்சில் சம்பத்
#

📠 📃 செய்தி

அதிமுக, மதிமுகவிற்கு திரும்ப செல்ல கனவு கூட காணமாட்டேன் : நாஞ்சில் சம்பத் Polimer News
அ.தி.மு.க, ம.தி.மு.க கட்சிகளுக்கு திரும்ப செல்வது குறித்து கனவு கூட காணமாட்டேன் என தி.மு.க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தமிழ்ச்சங்கம் சார்பில் பாரீசில் நடைபெற உள்ள மாநாட்டில் கலந்துகொள்ளவதற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம், வாழ்த்து பெற்றதாகவும், நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
26.6k views
20 hours ago
மோடி வாழ்க்கை வரலாறு படம் வெளியிடக்கோரி மனு
#

📠 📃 செய்தி

மோடி வாழ்க்கை வரலாறு படம் வெளியிடக்கோரி மனு Polimer News
பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு தழுவிய படத்தை தேர்தல் முடியும் வரை வெளியிட தடைவிதிக்கும்படி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. இந்தி நடிகர் விவேக் ஓப்ராய் நடிப்பில், உருவான பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை தேர்தல் முடியும் வரை தடை விதித்து தேர்தல் ஆணையம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. ஆனால் படத்தை பார்க்காமலே ஆணையம் தடைவிதித்ததாக கூறி படத்தயாரிப்பாளர் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், படத்தை...
28.2k views
21 hours ago
திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வேட்புமனு தாக்கல்
#

தேர்தல் 2019

திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வேட்புமனு தாக்கல் Polimer News
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுவை திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்தார். அரவக்குறிச்சி தொகுதிக்கு மே மாதம் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்போது வேட்புமனு தாக்கல் நடக்கிறது.  இந்நிலையில், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி இன்று அரவக்குறிச்சி  ஏவிஎம் கார்னர் பகுதியில் இருந்து ஏராளமான தொண்டர்களுடன் பேரணியாக சென்று அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சியிடம் வேட்புமனுவை தக்கல்...
26.3k views
21 hours ago
இலங்கை குண்டுவெடிப்பில் 9 தற்கொலைப் படைத் தீவிரவாதிகள்
#

srilankanattack

இலங்கை குண்டுவெடிப்பில் 9 தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் Polimer News
இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்த தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் 9 பேரில் இருவர் இலங்கையைச் சேர்ந்த கோடீஸ்வரத் தொழிலதிபரின் மகன்கள் என தெரியவந்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த மசாலா பொருள் வர்த்தகரான முகமது யூசுஃப் இப்ராகிம் என்பவர் பெருங்கோடீஸ்வரர்களில் ஒருவர் என்பதோடு ஜனதா விமுக்திப் பெரமுனா கட்சியின் முக்கிய பிரமுகராகவும் உள்ளார். இவரது மகன்களான இம்சாத் அகமது இப்ராகிம், இல்ஹாம் அகமது இப்ராகிம் ஆகியோருக்கு சில மாதங்களுக்கு  முன்பு இலங்கையில் உள்ள...
23.5k views
21 hours ago
காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை
#

📠 📃 செய்தி

காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை Polimer News
கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறில் காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் நடைக்காவூரைச் சேர்ந்தவர் அஜின்குமார். மணிமுத்தாறு பட்டாலியனில் காவலராக பணியாற்றிவந்தார். கடந்த 20 நாட்களாக விடுமுறையில் இருந்த இவர் இன்று கோதையாறு மின் உற்பத்தி நிலையத்தில் காவல் பணியில் இருந்தார். இந்நிலையில் அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்கு...
23.5k views
21 hours ago
Share on other apps
Facebook
WhatsApp
Copy Link
Delete
Embed
I want to report this post because this post is...
Embed Post
Share on other apps
Facebook
WhatsApp
Unfollow
Copy Link
Report
Block
I want to report because