@rangasamy2651
@rangasamy2651

✨Rangasamy✨

ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்

#

கால்நடை

எப்படி எப்படியெல்லாம் ஆடுகளுக்கு தீவனம் கொடுக்கலாம்? வெள்ளாடுகளுக்கான தீவனம்!! கால்நடைகளுக்கு பொதுவாக தீவன மேலாண்மை என்பது முக்கியமான ஒன்றாக உள்ளது. அதில் வெள்ளாடுகளுக்கு தேவைப்படும் தீவன அமைப்பை பற்றி இங்கு காண்போம். வெள்ளாடுகளுக்கு அடர் தீவனம், உலர்தீவனம், பசுந்தீவனம், தாதூப்பு கலவை, வைட்டமின் கலவை போன்றவற்றை கொடுக்கலாம். இங்கு அதைப்பற்றி பார்ப்போம். அடர் தீவனம் : வெள்ளாடுகளுக்கு அடர்தீவனம் என்பது சிறிய அளவு நார்பொருட்களையும், அதிக அளவு செரிமான சக்திகளையும் கொண்டது ஆகும். அடர்தீவனத்தை நாமே தயாரித்து கொடுக்கலாம். அதாவது அடர்தீவனமாக மக்காச்சோளம், கம்பு, அரிசிகுருணை, அரிசி தவிடு, கோதுமை தவிடு, சோளம் மற்றும் சர்க்கரை ஆலைக்கழிவு போன்றவை விளங்குகிறது. மேலும் புரதம் மற்றும் கொழுப்பு சத்துக்களுக்கு கடலைபுண்ணாக்கு, சோயாபுண்ணாக்கு, பருத்திவிதை புண்ணாக்கு போன்றவற்றை கொடுக்கலாம். அடர்தீவனத்தை ஆடுகளின் வயதுகேற்ப தர வேண்டும். 1-3 மாதம் வரை உள்ள ஆட்டுக்குட்டிகளுக்கு 50 கிராம் அளவிற்கு முதலில் கொடுக்க ஆரம்பித்து, அதன்பிறகு சற்று அதிகரித்து 300 கிராம் வரை கொடுக்கலாம். மேலும் இளம் ஆடுகள், சினை ஆடுகள் போன்றவற்றிற்கு 300-750 கிராம் என்ற அளவினை மூன்று வேளைக்களுக்கு பிரித்து கொடுக்கலாம். பால் கொடுக்கும் ஆடுகளுக்கு 500-750 கிராம் என்ற அளவினை அசோலாவுடன் மூன்று வேளையாக பிரித்து கொடுத்தால் பாலின் அளவு கூடும். உலர் மற்றும் பசுந்தீவனம் : உலர் மற்றும் பசுந்தீவனங்களில் அதிக அளவிலான நார்ச்சத்து இருக்கும். பசுந்தீவனங்களாக சுபாபுல், அகத்தி, வேலிமசால், முயல்மசால், நேப்பியர்புல், கோ4, கோஎப்எஸ் 29, தீவன சோளம் போன்றவற்றை கொடுக்கலாம். உலர் தீவனங்களாக காய்ந்த வேர்கடலைக்கொடி, உளுந்துச்செடி, கோதுமைத்தாள், மக்காசோளத்தட்டை, சணப்பை, ஊறுகாய்புல் போன்றவற்றை கொடுக்கலாம். தாது உப்பு கலவை : தாது உப்பு கலவை வெள்ளாடுகளின் உடல் பரிணாம வளர்ச்சியில் பெரும் பங்காற்றுகிறது. தாது உப்பு கலவையை சரியான விகிதத்தில் அளிக்கும் போது ஆடுகளின் உணவு தன்மையும், சினைபிடிக்கும் தன்மையும், குட்டிகளின் வளர்ச்சி விகிதமும் அதிகரிக்கும்.  இங்கே கிளிக் செய்யுங்கள்..👆👆👆 தாது உப்பு கலவையை அடர்தீவனத்திலோ அல்லது தாது உப்பு கட்டிகளை பண்ணைகளில் கட்டி தொங்கவிடும் போது, ஆடுகள் அவற்றின் தேவைக்கேற்ப பயன்படுத்தி கொள்ளும். வைட்டமின் கலவை : வைட்டமின் கலவை பொதுவாக ஆடுகளுக்கு அவற்றின் தீவனத்திலிருந்தே கிடைத்துவிடும். ஆடுகளுக்கு வைட்டமின் யுஇ னுஇ நு போன்றவை அவசியமாக உள்ளது. வைட்டமின் யு என்பது பசுந்தழை மற்றும் புற்களின் மூலமாகவும், வைட்டமின் னு உலர்ந்த புற்கள் மற்றும் தழைகள் மூலமாகவும், பொதுவாகவே தீவனங்களில் வைட்டமின் நு-யும் கிடைக்கிறது. வேளாண் நிலங்களை பிற உயிரினங்களிடம் இருந்து பாதுகாக்க...... மயில்களிடருந்து பாதுகாக்க... மயில் வரும் பகுதிகளில் அழுகிய கோழி முட்டைகளை தெளித்து விட்டால் அவற்றை கட்டுப்படுத்தலாம். காட்டுப்பன்றி தாக்குதல் கட்டுப்படுத்த... திருத்தகத்திலிருந்து முடியினை சேகரித்து வயலை சுற்றிலும் போட்டு விடலாம். குரங்குகளை கட்டுப்படுத்த... உணவு பொருட்களில் அதிக காரம் கலந்து (மிளகாய்த்தூள்) பரவலாக தூவிவிடுவதன் மூலம் அதை சாப்பிட்டு மறுமுறை வயலுக்குள் வராது. தமிழில் மிகச்சிறந்த நாட்காட்டியான நித்ரா நாட்காட்டியை இலவசமாக உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் https://goo.gl/XOqGPp
111 காட்சிகள்
3 நாள் முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்பாலோவ்
காப்பி லிங்க்
புகார்
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்