
ரவிசங்கர் ராஜா, ஆரணி
@ravisankarraja
நான் நெசவாளரின் மகன்
(செங்குந்த/கைக்கோளர் வம்சம்)
இன்று (3.1.2026)
சனிக்கிழமை
*ஆருத்ரா தரிசனம்*
*சிறப்பு பதிவு*!
*பிறப்பே எடுக்காத* *சிவபெருமானுக்கு* *பிறந்த நட்சத்திரம்* *திருவாதிரை* *என்கிறார்களே*,
*அது எப்படி*?
ராமனுக்கு ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம்; பரதனுக்கு பூசம்; லட்சுமணனுக்கு ஆயில்யம்; சத்ருக்னனுக்கு மகம்; கிருஷ்ண னுக்கு ரோகிணி; முருகனுக்கு விசாகம்.
இவையாவும் இவர்களது பிறந்த நட்சத்திரங்கள்.
பிறப்பே எடுக்காத சிவபெருமானுக்கு
பிறந்த நட்சத்திரமாக திருவாதிரை எப்படி வந்தது என்பதை பற்றி தெரிந்து கொள்வோமா?
புராணச் செய்தி-1
"பிறவா யாக்கைப் பெரியோன்' என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம் சிவ பெருமானைக் குறிக்கிறது.
சிவபெருமானுக்குரிய நட்சத்திரமாக திருவாதிரை ஆனதுபற்றி மூன்று புராணச் செய்திகள் உள்ளன.
புராணச் செய்தி1.
சேந்தனார் ஒரு விறகு வெட்டி. அவர் சிதம்பரம் அருகேயுள்ள ஒரு சிறிய ஊரில் வாழ்ந்து வந்தார். தீவிர சிவபக்தரான இவர் தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்த பின்தான் உண்பார்.
ஒருநாள் அதிக மழை பெய்து விறகுகள் ஈரமானதால், அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு இல்லாததால் வீட்டிலிருந்த கேழ்வரகில் களி செய்து சிவனடியார் வரவை எதிர்பார்த்திருந்தார். ஆனால் யாரும் வராத நிலையில் மனம் நொந்து போனார். அவரது பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பிய நடராஜப் பெரு மான், ஒரு சிவனடியார் வேடத்தில் சேந்தனார் வீட்டுக்கு வந்தார்.
அவரைப் பார்த்து அகமகிழ்ந்த சேந்தனார் கேழ்வரகுக் களியை அவ ருக்கு அளித்தார். அந்த சிவனடியார் களியை விரும்பி உண்டதுடன், எஞ்சி யிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவுக்குத் தருமாறு கேட்டு வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.
மறுநாள் காலையில் வழக்கம்போல் தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோவில் கருவறையைத் திறந்தனர். என்ன ஒரு அதிசயக் காட்சி! நடராஜப் பெருமானைச் சுற்றி களிச் சிதறல்கள்! உடனே இந்த விவரம் மன்னருக்குத் தெரிவிக்கப்பட்டது. நடராஜப் பெருமான் தான் களியுண்ணச் சென்றதை கனவில் தோன்றி ஏற்கெனவே மன்னருக்குத் தெரிவித்திருந்தார்.
சேந்தனார் எங்கிருக்கிறார் என்று கண்டு பிடிக்கும்படி அமைச்சருக்கு ஆணையிட்டார் மன்னர். அன்று நடராஜப் பெருமானின் தேர்த் திருவிழா. அதற்கு சேந்தனாரும் சென்றிருந்தார்.
பெருமானைத் தேரில் அமர்த்தியபின் மன்னர் உள்பட எல்லாரும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மழை காரணமாக தேர்ச் சக்கரங்கள் சேற்றில் அழுந்தியிருந்ததால் தேர் சிறிதும் நகரவில்லை. இதைக் கண்டு மன்னர் மனம் வருந்தியிருக்கும்போது, "சேந்தா! நீ பல்லாண்டு பாடு' என்று ஒரு அசரீரி கேட்டது.
அங்கிருந்த சேந்தனார் இறைவனை வேண்டி அவர் அருளால், "மன்னுக தில்லை வளர்க நம் பக்தர்கள் வஞ்சகர் போயகல' என்று தொடங்கி, "பல்லாண்டு கூறுதுமே' என்று முடித்து இறைவனை வாழ்த்தி 13 பாடல்களைப் பாடினார். உடனே தேர் நகர்ந்தது.
சேந்தனாரை அடையாளம் கண்ட மன்னர், தாம் கண்ட கனவை அவரிடம் கூறினார்.
சேந்தனார் வீட்டுக்கு களியுண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம் ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள். இதை உணர்த்தும் வகையில் இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப்படுகிறது. இதனால் சிவபெருமானுக்குரிய நட்சத்திரமாக திருவாதிரை ஆனது.
புராணச் செய்தி-2.
திருமணமான பெண்கள் தங்கள் தாலிபாக்கியம் நிலைக்கக் காண வேண்டிய விழா ஒன்று உண்டு. அதுதான் ஆருத்ரா தரிசனம்.
இதற்காக ஏற்கெனவே திருமணமானவர்கள், புதுமணத் தம்பதிகள் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புண்ணிய ஸ்தலமான சுசீந்திரம் வரவேண்டும். இங்குள்ள அறம் வளர்த்த நாச்சியார் கோவில் பிரசித்தமானது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ஸ்ரீரங்கம் அரங்கனையே மணப்பேன் என்று உறுதி கொண்டாள்; மணந்தாள்.
இதேபோல சிவபெருமானையே மணப்பேன் என்று அடம்பிடித்து அவரையே மணந்து கொண்டாள் அறம்வளர்த்த நாச்சியார்.
சுசீந்திரத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேரூர் என்னும் சிறிய கிராமம்.
550 ஆண்டுகளுக்கு முன் இவ்வூரில் பள்ளியறை நாச்சியார் என்ற பெண்மணி வாழ்ந்து வந்தாள்.
இவளது மகள்தான் அறம் வளர்த்த நாச்சியார். இவள் சிறுமியாக இருந்தபோதே சிவனை வழிபடுவதில் அதிக பற்றுடைய வளாக இருந்தாள்.
தினமும் சுசீந்திரம் வந்து சிவனை வழிபட்டு வந்தாள். இவள் பருவ மங்கை ஆனதும் அக்கால வழக்கப்படி வீட்டை விட்டு வெளியே வரமுடியவில்லை.
இவளுக்கோ சுசீந்திரம் சென்று சிவனை தரிசிக்க ஆசை.
ஆனால் வீட்டாரின்
அனுமதி கிடைக்கவில்லை.
இதனால் சிவனையே நினைத்து நினைத்து, அவர் மீது கொண்ட பக்தி காதலாக மாறியது.
ஒருநாள் குறத்தி ஒருத்தி அவள் கையைப் பார்த்து, "நீ சிவனையே மணப்பாய்' என்று கூற, சிவன் மீதிருந்த காதல்
மேலும் அதிகரித்தது.
சிவனை எண்ணி எண்ணியே சாப்பிடாமல், தூங்காமல் பித்து பிடித்தவள் போல் தன் அறையிலேயே சுற்றிச் சுற்றி வந்தாள் அறம்வளர்த்த நாச்சியார்.
இதைக் கண்ட அவளது தாய் பள்ளியறை நாச்சியார் அவளை ஒரு கூண்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு சுசீந்திரம் வந்தாள்.
வண்டியில் இருந்து இறங்கிய அறம் வளர்த்த நாச்சியார் சிவன் சந்நிதானத்தை நோக்கி ஓடினாள்.
அதே நேரத்தில் அசரீரி ஒன்று, "உன் மகளை சிவனுக்குத் திருமணம் செய்து வை' என்று கட்டளையிட்டது.
அதன்படி ஒரு மாசி மாத மக நட்சத்திர நாளில் நாச்சியார்- சிவன் திருமணம் சுசீந்திரம் கோவிலில் நடந்ததாக வரலாறு கூறுகிறது.
எனவே, நினைத்தவரையே திருமணம் செய்ய விரும்பும் பெண்கள், தீர்க்க சுமங்கலிகளாக வாழவிரும்பும் பெண்கள் சுசீந்திரம் கோவிலுக்கு வந்து அறம்வளர்த்த நாச்சியாரை வணங்குகிறார்கள்.
இதற்காக ஆருத்ரா தரிசனம் என்ற விசேஷ நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று அதி காலை நான்கு மணிக்கு சுசீந்திரம் கோவிலில் நடக்கிறது.
இவ்விழாவில் பல்லாயிரக்கணக்
கானோர் கலந்துகொள்கிறார்கள்.
புராண செய்தி-3.
ஒரு காலத்தில் திரேதாயுகா என்ற பெண், பார்வதிதேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். பார்வதிதேவிக்கும் இவள்மீது அன்பு இருந்தது.
திரேதாயுகாவுக்குத் திருமணம் நடந்தது. அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில்தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும்.
ஆனால் திருமணமான மூன்றாவது நாளி லேயே திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான்.
திரேதாயுகா அலறித் துடித்து, ""பார்வதிதேவியே! உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா? உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன்?'' என்று கூறிக் கதறி அழுதாள்.
அப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி திரேதாயுகாவின் அலறலைக் கேட்டு, அவள் கணவனுக்கு உயிர்ப் பிச்சையளிக்க சபதம் செய்தாள்.
அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்துபோன சிவன் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்தார்.
இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.
அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகாவுக்கும் அவள் கணவனுக்கும் காட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள்.
இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது. இதற்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர் ஏற்பட்டது.
சேந்தனாருக்கும்,
திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக
அதாவது ஆருத்ரா தரிசனமாக
கொண்டாடப்படுகிறது.
சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாளாகும்.
சிவபெருமான் தான் இப்பூமியில் ஆவிர்பரித்து நின்ற (தோற்றுவித்த) நாள் ஆருத்ரா நன்னாள் என்பதால் சிவராத்திரியன்று சிவனை வழிபடுவதால் கிடைக்க வேண்டிய
பலன், மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர நாளில் சிவாலயங்களில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தன்று சிவனை தரிசிப்பதால் மட்டுமே பூர்த்தியாகும்!!
சிதம்பர நடராஜரின் லிங்க வடிவை போற்றித் துதிக்கும் வகையில் அமைந்த
சிறப்பான உடல் ஆரோக்கியத்தை நல்கும் சிவபெருமானுக்குரிய ஸ்ரீசிதம்பராஷ்டகம் ஒலி வடிவ காணொளிக்காட்சி கீழே!👇🚩🕉🪷🙏🏻 #🙏🏼ஓம் நமசிவாய #மார்கழி ஆருத்ரா தரிசனம் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #நடராஜர் அபிஷேகம்
🌹🌿ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன? களியும், ஏழு கறிக்கூட்டும் செய்யும் வழக்கம் எப்படி வந்தது?
மாதங்களில் சிரேஷ்டமான மார்கழி மாதத்தில், திருவாதிரை நட்சத்திரத்தன்று வருகிறது ஆருத்ரா தரிசனம்.
🌹🌿மாதங்களில் சிரேஷ்டமான மார்கழி மாதத்தில், திருவாதிரை நட்சத்திரத்தன்று வருகிறது ஆருத்ரா தரிசனம். நட்சத்திரங்களில் திருவோணம் மற்றும் திருவாதிரை இரண்டிற்கும் தான் திரு என்னும் அடைமொழி சொல்லப்பட்டிருக்கிறது. திருவாதிரையை வடமொழியில் ஆருத்ரா என்று கூறுவார்கள். ஆருத்ரா தரிசனத்திற்குக் காரணமான புராணக் கதை ஒன்றை இங்குப் பார்ப்போம்.
🌹🌿பஞ்ச பூதங்களின் இயக்கத்திற்கும் ஆதாரமாக இருக்கும் ஸ்ரீ சிவபெருமானை நிந்தித்து, ஒருமுறை தாருகாவனத்தில், முனிவர்கள் ஒன்று கூடி, முக்கண்ணனுக்கு எதிராக வேள்வி ஒன்றை நிகழ்த்தினார்கள். அதாவது, அவர்களின் கோட்பாட்டின்படி, கர்மத்தை மட்டும் செய்தால் போதுமானது. கடவுள் என்பவர் கிடையாது என்பதுதான். அவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டி, கயிலைநாதன், பிட்சாடனர் ரூபமெடுத்து, பிட்சைக் கேட்டு, முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார். பிட்சாடனரைக் கண்ட முனி பத்தினிகள் அனைவரும், அவரின் பின்னால் போகத் தொடங்கினார்கள்.
🌹🌿இச்செயலைக் கண்ட முனிவர்கள், மிகுந்த கோபம் கொண்டு வெகுண்டு எழுந்தார்கள். வேள்வித்தீயினில், மத யானை, மான், உடுக்கை, முயலகன். தீப்பிழம்பு ஆகியவற்றைத் தருவித்து, அனைத்தையும், ஸ்ரீ சிவபெருமான் மேல் ஏவி விட்டார்கள். சர்வேசன் ஆனவர், மத யானையைக் கொன்று அதன் தோலைத் தரித்துக் கொண்டார். மான், உடுக்கை, அக்னி அனைத்தையும் தானே சுவீகரித்துக் கொண்டார். முயலகனின் மேல் வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கியபடி நடனம் ஆடி, முனிவர்கள் உண்மையை அறியச் செய்தார். அதுவே ஆருத்ரா தரிசனம் என்று கூறப் படுகிறது.
🌹🌿ஸ்ரீ நடராஜப் பெருமாள் 108 நடனங்களை ஆடி இருக்கிறார். அவர் தனியாக ஆடியது 48. ஸ்ரீ உமா தேவியுடன் சேர்ந்து ஆடியது 36. தேவர்களுக்காக ஆடியது 12. ஸ்ரீ திருமாலுடன் ஆடியது 9. முருகனுடன் ஆடியது 3.
🌹🌿பஞ்ச பூதங்களான ஆகாயம் என்பதற்கு சிதம்பரம் என்றும். அக்னி என்பதற்கு திருவண்ணாமலை என்றும், நீர் என்பதற்கு திருவானைக்காவல் என்றும், காற்றுக்கு காளஹஸ்தி என்றும் , நிலத்திற்கு காஞ்சிபுரம் அல்லது திருவாரூர் என்றும் இவைகளின் பெருமைகளைக் கூறும் வண்ணம் இந்த புண்ணியத் தலங்கள் அமைந்திருக்கின்றன. இதில் சிதம்பரம் தான் முதன்மையாகச் சொல்லப்படுகிறது.
🌹🌿ஸ்ரீ முக்கண்ணனுக்கு வருடத்தில் ஆறு முறைகள் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. மூன்று முறைகள் திதியன்றும், மூன்று மறைகள் நட்சத்திரம் அன்றும் செய்யப்படும் அபிஷேகத்தில், திருவாதிரை அன்று செய்யப்படும் அபிஷேகமே விசேஷமாகச் சொல்லப்படுகிறது.
🌹🌿ஆருத்ரா தரிசனம் அன்று களியும், ஏழு கறிக்கூட்டும் செய்யும் வழக்கம் எப்படி வந்தது?
🌹🌿முந்தைய காலத்தில் சேந்தனார் என்கிற பெயர் கொண்ட விறகு வெட்டி ஒருவர் இருந்தார். அவர் சிறந்த சிவ பக்தர். தினமும் ஒரு சிவ பக்தருக்கு ஆகாரம் அளித்துவிட்டுத் தான் உண்ணுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு நாள் நல்ல மழை பெய்ததில், வெட்டிய விறகெல்லாம் ஈரமாகி விட்டது. அதை விற்க முடியாமல் போனதால், கையில் பணம் இல்லாமல் போனது. அதனால் மனைவிடம் வீட்டு சிலவிறகு பணம் கொடுக்க முடியாமல் போனது.
🌹🌿அன்றைய தினம் ஒரு சிவபக்தர், சேந்தனாரின் இல்லம் வந்து, பிட்சைக் கேட்டார். அவரின் மனைவி, வீட்டில் இருந்த அரிசி மாவையும் வெல்லத்தினையும் சேர்த்து களி செய்தார். வீட்டில் மிகுதியிருந்த ஏழு காய்களில் கூட்டு ஒன்றினைச் செய்து, சிவனடியாரின் பசியைப் போக்கினார். பிறகே இருவரும் உண்டார்கள். அடுத்த நாள் கோயிலை வழக்கம் போல் திறந்த அர்ச்சகர், பகவானின் கருவறையில் களியும் கூட்டும் சிதறி இருப்பதைப் பார்த்தார். பிறகு உண்மையை உணர்ந்தார். சேந்தனாரின் பக்தியை உலகுக்குத் தெரியப்படுத்த ஆண்டவனே பிட்சாடனர் ரூபத்தில் வந்தார் என்பதைக் கூறவும் வேண்டுமோ?
🌹🌿பஞ்சபூத ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்பவர்கள், முதலில் சிதம்பரம், அடுத்து காளஹஸ்தி, அடுத்து திருவண்ணாமலை, அடுத்து திருவானைக்காவல், அடுத்து காஞ்சிபுரம் அல்லது திருவாரூர் என்கிற கிராமத்தில் முடிக்க வேண்டும். ஸ்ரீ நடராஜப் பெருமானின் ஆடல் கலையைத் தரிசித்தாலே புண்ணியம் என்று கூறப்படுகிறது.
🌹🌿ஆருத்ரா தரிசனம் அன்று களி, கூட்டு செய்து ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு நைவேத்தியம் செய்து சமர்ப்பித்து, முடிந்தவரை சிவ ஸ்தோத்திரங்களைக் கூற வேண்டும். நோன்பு மேற்கொள்கிறவர்கள் , மார்கழி திருவாதிரையில் நோன்பைத் தொடக்கி, ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரம் அன்றும் நோன்பு மேற்கொண்டு ஒரு வருட காலத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். எல்லாம்வல்ல ஸ்ரீ சிவகாமசுந்தரி உடனுறை ஸ்ரீ நடராஜப் பெருமான் எல்லா வளங்களையும் அனைவருக்கும் அருளட்டும். 🚩🕉🪷🙏🏻 #🙏🏼ஓம் நமசிவாய #மார்கழி ஆருத்ரா தரிசனம் #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #🙏🏻மார்கழி மாத சிறப்பு #🙏ஆன்மீகம்
மங்களகாரமண விசுவாவசு ஆண்டு மார்கழி மாதம் தட்சிணயணம்
ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை
பாடல் 19
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.
பொருள்: குத்து விளக்கெரிய, யானைத் தந்தத்தால் ஆன கட்டில் மேல் விரிக்கப்பட்ட மிருதுவான பஞ்சுமெத்தையில், விரிந்த கொத்தாக பூ சூடிய நப்பின்னையின் மார்பில் தலை வைத்து கண் மூடியிருக்கும் மலர் மாலை தரித்த கண்ணனே! நீ எங்களுடன் பேசுவாயாக. மை பூசிய கண்களை உடைய நப் பின்னையே! நீ உன் கணவனாகிய கண்ணனை எவ்வளவு நேரமானாலும் தூக்கத்தில் இருந்து எழுப்புவதில்லை. காரணம், கணநேரம் கூட அவனைப் பிரிந்திருக்கும் சக்தியை இழந்து விட்டாய். இப்படிசெய்வது உன் சுபாவத்துக்கு தகுதியாகுமா?
திருவாதவூர் மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை- பாடல் 19-
ஈசனே ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.. நீ எங்களுக்குத் தந்தையானவன்... அதனாலே இப்படி உன்னிடத்திலே கேட்க வேண்டியதானது.. !!!
திருமணத்தின் போது , மணமகளை, மணமகன் கையில் ஒப்புவித்து இனிமேல் இவள் உன் சொந்தம்.. நீ பார்த்துக் கொள் என விடுவரே அதனால் சொல்லி வைக்கிறோம் .
உன் அடியார் அல்லாதவரை யாம் சேரக் கூடாது.. உம் அடியாருக்கே யாம் மணமாதல் வேண்டும் !!
எங்கள் கரங்களும் கண்களும் உன் திருத் தொண்டுக்கானவை அவை வேறெந்த காரியங்களும் செய்விக்கலாகாது !!
அவ்வளவு தான் எங்களுக்கு வேண்டியது !!
இப்படியான மணவாழ்க்கை எங்களுக்கு நீ அருள் புரிந்து விட்டாயானால் , சூரியன் எந்த திசையில் வேண்டுமானால் உதித்துக் கொள்ளட்டும் !!!!!!
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க
எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்
எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய் 🚩🕉🪷🙏🏻 #திருப்பாவை & திருவெம்பாவை #திருப்பாவை #🙏🪔💮 திருவெம்பாவை💮🪔 🙏 🙏🪔💮திருப்பள்ளி எழுச்சி 💮🪔🙏 #🙏🏻ஆண்டாள் பாடல்கள் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள்
*#ஆருத்ரா_தரிசனம்_என்றால்_என்ன?*
➖➖➖➖➖➖➖➖
🟡🔵🔴🟠🟢🟣🟡🔵
*பிறப்பே எடுக்காத*
*(ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு)*
*சிவபெருமானுக்கு*
*உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி ?*
ஆர்த்ரா = திருவாதிரை
ஆஸ்லேஷா = ஆயில்யம்
அனுராதா = அனுஷம்
ஜேஷ்டா = கேட்டை
தனிஷ்டா = அவிட்டம்
புனர்வஸு = புனர் பூசம்
பூர்வ பல்குனி = பூரம்
உத்திர பல்குனி = உத்திரம்
பூர்வா ஷாடா = பூராடம்
பூர்வ பத்ரா = பூரட்டாதி
உத்ர பத்ரா = உத்திரட்டாதி
இவைகள் எல்லாம் தமிழ் நட்சத்திரங்களுக்கு சொல்லப்படும் வட மொழிப் பெயர்களாகும்.
தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது.
மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.
ராமனுக்கு ஜென்ம நட்சத்திரம் – புனர்பூசம்;
பரதனுக்கு – பூசம்;
லட்சுமணனுக்கு -ஆயில்யம்;
சத்ருக்னனுக்கு- மகம்;
கிருஷ்ணனுக்கு – ரோகிணி;
முருகனுக்கு – விசாகம்.
இவையாவும் இவர்கள் பிறந்த நட்சத்திரங்கள்.
ஆனால் பிறப்பே எடுக்காத சிவபெரு மானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே ?
பிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன்
என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம்
சிவ பெருமானைக் குறிக்கிறது.
சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனதுபற்றி புராணச் செய்திகள் உள்ளன.
சேந்தனார் வீட்டுக்கு களியுண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம், ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள் இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப்படுகிறது. இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.
ஒரு காலத்தில், திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். திரேதாயுகாவுக்குத் திருமணம் நடந்தது. அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில்தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும்.
ஆனால் திருமணமான மூன்றாவது நாளிலேயே திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான்.
திரேதாயுகா அலறித் துடித்து பார்வதிதேவியே, உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா, உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன் என்று கூறிக் கதறி அழுதாள்.
அப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி, திரேதாயுகாவின் அலறலைக் கேட்டு அவள் கணவனுக்கு உயிர்ப் பிச்சையளிக்க சபதம் செய்தாள். அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்துபோன சிவன் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்தார். இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.
அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகாவுக்கும் அவள் கணவனுக்கும் தரிசனகாட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள்.
இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது. இந்த தரிசனத்துக்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர் ஏற்பட்டது.
சேந்தனாருக்கும், திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக அதாவது ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்படுகிறது.
ஆருத்ரா தரிசனம் பற்றி தெரிந்து கொள்வோம்!
சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள்.
சுவாமி தான் இப்பூமியில் ஆவிர்பரித்து நின்ற (தோற்றுவித்த) நாள் ஆருத்ரா நன்னாள்.
சிவராத்திரியன்று அவரை வழிபட்டால் பலன். ஆருத்ராவன்று தரிசித்தாலே பலன் ஆகும். திருஉத்திரகோசமங்கை மங்களநாதார் மங்களநாயகி திருக்கோவில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் மற்றும் பல சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் மிக சிறப்பாக இருக்கும்…
கோவில் கோபுரமும், விமானமும் ஒன்றா
கோவில் அமைப்பில் விமானம் வேறு, கோபுரம் வேறு. கருவறையின் மீது கட்டப்பெறுவது விமானமாகும்.
விமானத்தில் நாகரம், வேசரம், திராவிடம் என்று மூன்று வகை உண்டு என்று சிவஞான முனிவர் காஞ்சிப் புராணத்தில் பாடியுள்ளார்
கோவில் கட்டிட அமைப்பு முறையின்படி இவை வெவ்வேறு அமைப்பு உடையன. விமானம் சதுர அமைப்புக் கொண்டிருந்தால் நாகர விமானம் என்று பெயர், உருண்டுள்ள வட்டமான விமானமாக இருந்தால் வேசர விமானம் என்று பெயர்.
எட்டுப் பட்டை கொண்ட விமானமாக இருந்தால் திராவிட விமானம் என்று பெயர். ஒரு நிலை (ஏகதள விமானம்), இருநிலை விமானம் (துவிதளம்), மூன்று நிலை விமானம் (திதி தளம்), ஐந்துநிலை விமானம் (பஞ்சதளம்) முதலிய பாகுபாடுகளும் உண்டு.
கோபுரம் என்பது கோவிலின் நுழைவாயிலில் உயர்த்துக் கட்டப் பெறுவதாகும்.
சோழர் காலத்தில் சிதம்பரம் கோவிலுக்குக் கோபுரம் உயர்த்துக் கட்டுவது முதன் முதலில் தொடங்கிற்று. விஜய நகரப் பேரரசு காலத்தில் தான் கோபுரங்கள் அதிகமாகக் கட்டப்பெற்றன. கிருட்டிண தேவராயர் காலத்தில் கோபுரம் கட்டும் பணி செல்வாக்குப் பெற்றது. அதனால் முன் பகுதியில் உயர்த்துக் கட்டப்பெறும் கோபுரத்திற்கு இராய கோபுரம் என்று பெயர் வழங்கலாயிற்று. இராசகோபுரம் என்றும் வழங்கப்பெறும்.
திருவண்ணாமலைக்கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் முதலிய இடங்களில் நான்கு திசைகளிலும் கோபுரங்கள் கட்டப்பெற்றன. ஐந்துநிலை, ஏழுநிலை, ஒன்பதுநிலை, பதினொரு நிலை என்ற நிலையில் கோபுரங்கள் உயர்ந்தன. கோபுரங்கள் அகன்று நீள் சதுரமாக அமைந்திருக்கும். மேலே செல்லச் செல்ல அளவு குறைந்து கொண்டே சென்று உச்சியில் கலசங்கள் அமைக்கப்பட்டிருக்கும். எத்தனை நிலை உண்டோ அத்தனை கலசங்கள் உச்சியில் அமைந்திருக்கும்.
கோபுரம் உயர்த்துக் கட்டும்போது அதன் கனத்தைத் தாங்குவதற்கு ஏற்ப அடிப்பகுதியில் ஆழமாகக் குழி எடுத்து மணல் பரப்பி அதன்மேல் கட்டுவதே பண்டைய முறையாகும். அவ்வாறு கட்டப்பட்ட அடிநிலையின் மீதே தற்காலத்தில் மிக உயர்த்தி அவிநாசியிலும், திருவரங்கத்திலும் கோபுரங்கள் கட்டப் பெற்றன.
தற்காலத்தில் விமானம், கோபுரம் வேறுபாடு தெரியாமல் அனைத்தையும் கோபுரம் என்றே அழைக்கின்றனர்.
கருவறையின் மீது அமைந்திருப்பது விமானம். கோவிலின் நுழைவாயிலில் உயர்த்துக் கட்டப் பெறுவது கோபுரம். இரண்டும் வேறு வேறு தன்மையுடையன, அமைப்பிலும் மாறுபாடு உடையன ஆகும்
திருச்சிற்றம்பலம்!
ஓம் நமசிவாய! 🚩🕉🪷🙏🏻 #🙏🏼ஓம் நமசிவாய #மார்கழி ஆருத்ரா தரிசனம் #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #🙏ஆன்மீகம் #🙏🏻மார்கழி மாத சிறப்பு
விஞ்ஞானத்தில் ஆருத்ரா
--------------------------------
படித்ததில் பிடித்தது
திருவாதிரை
==================
தமிழில் 27 நட்சத்திரங்களில் ஆறாவது நட்சத்திரம்.தமிழ் நாட்காட்டிகளில் பார்த்திருப்பதாய் நியாபகம். இதில் வேறு என்ன இருக்கிறது....???
திருவாதிரை நட்சத்திரத்தின் ஆங்கில
வழக்கிலிருக்கும் பெயர் பீட்டல்கியூஸ் (Betelgeuse) ஆகும்.
வானியல் படி இது ஓரியன் என்ற விண்மீன் குழுவில் கணக்கிடப்படுகிறது.
இதன் அறிவியல் பெயர் {alpha Orionis}
மூதிரை, செங்கை, யாழ், ஈசர் தினம், அரணாள், யாதிரை ஆகியவை இதர தமிழ்ப்பெயர்கள்.
திருவாதிரைக்கு {alpha Orionis} நம் பூமியிலிருந்து இடைப்பட்ட தூரம் 640 ஒளி ஆண்டுகள் ஆகும்.
( 1 ஒளி ஆண்டு ஏறக்குறைய 10 லட்சம் கோடி கிலோமீட்டர்)
சராசரியாக 354.37 நாட்களுக்கு (1 சந்திர வருடம்) ஒருமுறை இந்த
ஓரியன் என்ற விண்மீன் குழு வானில் மிக அம்சமாய் காட்சியளிக்கும்.
அந்த தருணமே நமக்கு மார்கழி மாதம். முழு நிலவு தோன்றும் நாளில் இந்த விண்மீன் குழுவும் அற்புதமாய் வானில் தோன்றும்.
ஓரியன் விண்மீன் குழு வானில் ஒரு தவிர்க்கமுடியாத
அற்புதமான காட்சிகளுடன்
நேர்த்தியோடு விளங்கும் நட்சத்திர குழு.
மையத்தில் ஓரியன் கச்சை. வடகிழக்கில் ராட்சத நட்சத்திரமான திருவாதிரை. தென்மேற்கில் இன்னொரு பேருரு நட்சத்திரமான Rigel.
தென்கிழக்கில்
மிக பிரகாசமான மிருகவியாதர் (Sirius)நட்சத்திரம் என வானையே அதிர வைக்கும் குழு.
ஓரியான் மண்டலத்தில் தனித்துவத்துடன் இருப்பது திருவாதிரை நட்சத்திரம். (சூரியனைகாட்டிலும் 1000 மடங்கு பெரியதான) பிரம்மாண்டத்துடனும்
மிகுந்த ஒளியுடனும் காட்சியளிக்கும் சிகப்பு வர்ண நட்சத்திரமாகும்.
விஞ்ஞான ரீதியாக ‘திருவாதிரை’ நட்சத்திரம் தோன்றும் விண்மீன் மண்டலத்தில் வெடியம் (Sodium), வெளிமம் (Magnesium) மற்றும் இரும்பு (Iron) ஆகிய வேதிப் பொருட்கள் அதிகளவில் உருவாகும்.
வெளிமமும் இரும்பும் நம் குருதிக் கலத்தின் இயக்கத்திற்கு பெருந்துனையாக அமையும்.
மேலும் சரியான அளவில் அமைந்த வெடியம் நம் நரம்பு மண்டலத்திற்கும், மூளைக்கும் மிக உகந்ததாகும்.
எனவே திருவாதிரை நட்சத்திரம், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமையும் தருணத்தில் காற்று மண்டலத்தில் உருவாகும் வெடியம், வெளிமம், இரும்பு போன்ற வேதிப் பொருட்கள் மறைமுகமாக நம் உடல் நலத்திற்கு பல பயன்களை வழங்குகிறது.
அதுமட்டுமின்றி திருவாதிரை நட்சத்திரம் தோன்றும் விண்மீன் மண்டலத்திற்கும் நம் பிரபஞ்சத்திற்கும் அனேக தொடர்புகள் உண்டு.
இந்த orion விண்மீன் குழுவில் திருவாதிரை நட்சத்திர கீழே இடம்பெறும் நட்சத்திரங்களை கூர்ந்து கவனியுங்கள்.
3 நட்சத்திரங்கள் அருகருகே அமைந்திருப்பது புலப்படும். (Orions Belt)
அதன் வடிவிலேயே உலகில் வெகு வெகு தொலைவில் இருக்கும்,உலக அதிசயங்கள் என கணக்கிட கூடிய Egypt பிரமிடுகள் அமைக்கப்பட்டு உள்ளது.
எகிப்து மட்டுமல்ல உலகில் இன்னும் பல வேறு இடங்களில் இதே அமைப்பு கொண்ட கட்டிடங்கள் அமைக்கப்
பட்டிருக்கின்றன.
இவை அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆன உண்மைகள்.
நம்மை சுற்றி உள்ள எல்லாமே ஒரு ஒழுங்கு தன்மையோடுதான் இடம்பெறுகின்றன, நடைபெறுகின்றன.
ஆனால் நாம் தான் எதையும் சரிவர அறிய முற்படுவதில்லை.
இத்தனை பெரிய அற்புதத்தை மிக எளிமையாய் நாட்காட்டியில் கொடுத்து சென்ற நம் முன்னோர்கள்.... அறிவு ஆற்றல் பிரமிக்க வைக்கவில்லையா....
இவ்வாற்றலை நாம் உணர்ந்து அதில் இணையப் போவது எப்போது?
உணர்கிறோமோ இல்லையோ, குறைந்தபட்சம் இந்த பிரமாண்ட திருவாதிரை நட்சத்திர கூட்டணி அமைப்பு நிகழும் நாளே ஆருத்ரா தரிசனம்
என்பதையாவது நினைவில் நிறுத்துங்கள். 🚩🕉🪷🙏🏻 #🙏🏼ஓம் நமசிவாய #மார்கழி ஆருத்ரா தரிசனம் #🙏ஆன்மீகம் #🙏🏻மார்கழி பூஜை சடங்குகள் #🙏🏻மார்கழி மாத சிறப்பு
காலை சிவ சிந்தனை
====================
தரிசிக்க முக்தி தரும் சிதம்பரம்
=============================
ஆருத்ரா பதிவு 10
===============
த3ர்சநாத் அப்ரஸதஸி ஜநநாத் கமலாலயே காச்யாம் து மரணான் முக்திஹ் ஸ்மரணாத் அருணாசலே ||
மோக்ஷம் பெற நான்கு வழிகளில் முதலாவதாக
1.தர்சனாத் அப்ரஸதஸி
====================
அதாவதுமண்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் ஆகிய பஞ்சபூத க்ஷேத்ரங்களில் ஆகாய சேஷத்ரமாக விளங்குவது தமிழகத்திலுள்ள சிதம்பரம் என்னும் கனக சபாபதி க்ஷேத்ரம்.
இந்த சிதம்பரத்தில்
ஆனித்திருமஞ்சனம்
மார்கழிதிருவாதிரை போன்ற நாட்களில்நடைபெறும் நடராஜ மூர்த்தியின்ஆனந்த தாண்டவத்தை பக்தியோடு மனம் குளிர
தரிசனம் செய்து, எனக்கு ஞான வைராக்யத்தையும்
மறுபிறவி இல்லாத மோக்ஷ சாம்ராஜ்யத்தையும் தந்து அருள்புரிய வேண்டும் என்று
ஸ்ரீநடராஜ மூர்த்தியிடம் பிரார்தித்துக்கொண்டாலே மறுபிறவி இல்லாத முக்தி கிடைத்துவிடும்.
ஆருத்ராதரிசனம் கண்டு நற்கதியடைவோமாக
படிக்காசு கொடுத்த நடராஜர்
≈===================÷÷÷÷÷÷===
தேவநாயனார் என்பவர் நடராஜர் மீது ஒரு சித்தாந்த பாடலை பாடி கருவறை முன்புள்ள வெள்ளிப்படிகளில் நூலை வைத்தார். அப்போது படியில் உள்ள ஒரு யானை சிற்பம் உயிர் பெற்று அந்த நூலை எடுத்து நடராஜரின் காலடியில் எடுத்து வைத்தது. இந்த அதிசயம் காரணமாக அந்த நூலுக்கு திருக்களிற்றுப்படியார் என்ற பெயர் ஏற்பட்டது. முத்து தாண்டவர் என்ற புலவர் தினமும் சிதம்பரம் கோவிலுக்குள் நுழைந்ததும், முதலில் தன் காதில் எந்த சொல் விழுகிறதோ, அதை வைத்து கீர்த்தனை இயற்றி, பாடி நடராஜரை துதித்து வழிப்பட்டார். அவர் பாடி முடித்ததும் தினமும் அவருக்கு நடராஜர் படிக்காசு கொடுத்தது ஆச்சரியமானது.
தொடரும்..... 🚩🕉🪷🙏🏻 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #மார்கழி ஆருத்ரா தரிசனம் #🙏🏻மார்கழி மாத சிறப்பு #🙏🏻மார்கழி பூஜை சடங்குகள்
ஸ்ரீநடராஜர் நடனம்9
===============
ஆருத்ரா பதிவு=9
===============
प्रचण्डताण्डवाटोपे प्रक्षिप्ता येन दिग्गजाः ।
भवन्तु विघ्नभङ्गाय भवस्य चरणाम्भुजाः ।।
" 1.1.ப்ரசண்டதாண்டவாடோபே ப்ரக்ஷிப்தா யேன திக்கஜா: |
பவந்து விக்னபங்காய பவஸ்ய சரணாம்புஜா: || "
- ஸ்ரீ மத்ஸ்யமஹாபுராணம், மங்களஸ்லோகம்.
1.1.எவருடைய தாண்டவ நடனத்தின் வேகத்தால் திக்கஜங்கள் வீசியெறியப் படுமோ,அந்த சிவபெருமானின் தாமரை மலர் போன்ற பாதங்கள் அனைத்து விக்னங்களையும் நீக்கியருளட்டும்.
பரமேஸ்வரர் ஸ்ரீநடராஜ மூர்த்தியாக தனியாக ஆடிய நடனம் -48,
ஸ்ரீஉமாதேவியுடன் சேர்ந்து ஆடியது- 36,மஹாவிஷ்ணு பகவானுடன் 9. முருகப்பெருமானுடன் ஆடியது-3,தேவர்களுக்காக- 12 என 108 நடனங்களை ஆடியுள்ளார்
ஸ்ரீசபாநாயகர் துதி
=========================
உலகினும் உயிரினும் ஒன்றி நின்றருள்
குலவிய ஒளியுயிர் குறிக்க ஐந்தொழில்
இலகிய மன்றினுள் எழில்நடஞ் செய்வோன்
வலமிகு மலரடி வழுத்து வாமரோ
தில்லைத் திருமன்றுள் நடனமாடுகிற ஸ்ரீ ஆனந்த நடராஜப் பெருமான் உலகோடும் உயிர்களோடும் ஒன்றி நின்று அருள் செய்பவன்; உயிர்கள் விளக்கம் பெற ஐந்தொழிலைச் செய்து அருள் வழங்குபவன்; அவனது திருவடியை வணங்குவாம்.
பஞ்ச சபைகள்:
=====================
ரத்தின சபை – திருவாலங்காடு
கனகசபை – சிதம்பரம்
ரஜிதசபை – (வெள்ளி சபை) – மதுரை
தாமிரசபை – திருநெல்வேலி
சித்திரசபை – திருக்குற்றாலம்
பஞ்ச தாண்டவ தலங்கள்
ஆனந்த தாண்டவம் – சிதம்பரம், பேரூர்
அஜபா தாண்டவம் – திருவாரூர்
சுந்தரத் தாண்டவம் – மதுரை
ஊர்த்துவ தாண்டவம் – அவிநாசி
பிரம்ம தாண்டவம் – திருமுருகன்பூண்டி
காட்டிடை ஆடும் கடவுள்
==============================
திருவாலங்காடு – ஆலங்காடு
திருவெண்பாக்கம் – இலந்தைக்காடு
திருவெவ்வூர் – ஈக்காடு
திருப்பாரூர் – மூங்கிற்காடு
திருவிற்கோலம் – தர்ப்பைக்காடு
ஆனந்தத் தாண்டவம்
==========================
படைத்தல் – காளிகாதாண்டவம் – திருநெல்வேலி, தாமிரசபை.
காத்தல் – கவுரிதாண்டவம் – திருப்புத்தூர், சிற்சபை.
அழித்தல் – சங்கார தாண்டவம் – நள்ளிரவில்.
மறைத்தல் – திரிபுர தாண்டவம், குற்றாலம், சித்திரசபை
அருளல் – ஊர்த்துவ தாண்டவம் – திருவாலங்காடு, ரத்தினசபை.
ஐந்தொழில்களையும் ஒருங்கே நடத்தும் ஆனந்தத்தாண்டவம் சிதம்பரத்தில்.
தில்லையில் ஐந்து சபைகள்
===============================
1. சித்சபை – சிற்றம்பலம் நடராஜப் பெருமானும் சிவகாமி அம்மையும் வீற்றிருக்கும் கருவறை. இதன் வலப்புறம் சிதம்பர ரகசியம். பொன் வேய்ந்த பொன்னம்பலத்தில் நடராஜர் உருவம், சிதம்பர ரகசியம் அருவம், ஸ்படிகலிங்கம் அருவுருவம் என மூன்று நிலைகள்.
2. கனகசபை – சிற்றம்பலத்திற்கு எதிரே உள்ள எதிரம்பலம் பெருமான் திருமஞ்சனம் கொள்ளும் இடம்.
3. தேவசபை – பேரம்பலம் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி உள்ளனர்.
4. நிருத்த சபை – தேர் அம்பலம், நடராஜாவின் திருமுன்னர் கொடிமரத்தின் தென்புறம் உள்ளது. ஊர்த்துவ தாண்டவ மூர்த்திகள் காட்சி தரும் இடம்.
5. ராஜசபை – ஆயிரங்கால் மண்டபம், மார்கழி, ஆனித் திருமஞ்சனம் நடக்குமிடம். ஆருத்ரா தரிசனம் கொடுக்குமிடம்.
நவதாண்டவம்
====================
இறைவன் பல சந்தர்ப்பங்களில் பல திருத்தலங்களில் பலவிதமான நடனங்கள் ஆடி அருள்புரிந்திருக்கிறார். மேலும், சந்தியா தாண்டவம், கௌரித் தாண்டவம், திரிபுரத் தாண்டவம், காளிகா தாண்டவம், சம்ஹாரத் தாண்டவம் என பல தாண்டவங்கள் ஆடி உலகுக்கு உண்மை நிலையை உணர்த்தியுள்ளார்
திருவாரூர்
=================
திருவாரூர் திருத்தலத்தில் ஸ்ரீநடராஜப் பெருமான் திருமாலின் மூச்சுக்காற்றுக்கு இணையாக அசைந்தாடியதால் இதனை அஜபா நடனம் என்பர்.
திருக்குவளை
====================
திருக்குவளையில், முன்னும் பின்னும், மேலும் கீழுமாக- தேன்கூட்டின் முன் தேனீக்கள் அசைந்தாடி காட்சி தருவதுபோல் ஆடும் நடனத்தை பிரம்மத் தாண்டவம் என்று போற்றுகின்றனர்.
திருநள்ளாறு
============
திருநள்ளாற்று தலத்தில் உன்மத்தம் பிடித்தவன்போல ஆடியதால் அத்திருநடனத்தை உன்மத்த நடனம் என்பர்.
நாகப்பட்டினம்
==============
நாகைத் திருத்தலத்தில் கடல் அலைபோல மேலெழுந்து, பிறகு அடங்கி ஆடும் நடனத்தினை பாராவாரதரங்க நடனம் என்கின்றனர். இதனை வீசி நடனம் என்றும் சொல்வர்.
வேதாரண்யம்
====================
திருமறைக்காடு திருத்தலத்தில் இறைவன் அன்னப்பறவைபோல் அசைந்தாடுகிறார். இந்த நடனத்தினை ஹம்ச நடனம் என்பர்.
திருவாய்மூர்
================
திருவாய்மூர் திருத்தலத்தில், தடாகத்தில் மலர்ந்திருக்கும் தாமரை மலர்கள் காற்றலைகளால் அசைந்தாடுவதுபோல் ஆடியதால் கமல நடனம் என்பர்.
திருக்காறாயில்
======================
திருக்காறாயில் திருத்தலத்தில், கோழி தன் சிறகை அடித்துக் கொண்டு தன் குஞ்சுகளைச் சுற்றி வரும் நிலையில் இறைவன் ஆடியது குக்குட நடனம்.
திருவாலங்காடு
=================
திருவாலங்காட்டில் காளிக்காக ஆடியது காளி தாண்டவம்.
திருச்செங்காட்டங்குடி
======================
தஞ்சை மாவட்டம் திருச்செங்காட்டங்குடி திருத்தலத்தில் நவதாண்டவ மூர்த்திகளான புஜங்க லலிதம், கால சம்ஹாரமூர்த்தி, கங்காள மூர்த்தி, பிட்சாடன மூர்த்தி, திரிபுர சம்ஹார மூர்த்தி, பைரவர், உத்திராபதியார் ஆகியயோரை சிற்ப வடிவில் காணலாம். 🚩🕉🪷🙏🏻 #🙏🏼ஓம் நமசிவாய #மார்கழி ஆருத்ரா தரிசனம் #🙏ஆன்மீகம் #🙏🏻மார்கழி பூஜை சடங்குகள் #🙏🏻மார்கழி மாத சிறப்பு
ஆருத்ரா தரிசனம் =8
==================
.நடராஜமூர்த்தியே பஞ்சாக்ஷரம்
=====================================
தத்வார்த்த ஸுரூபம்
---------------------------------------------------
யஜுர்வேத பஞ்ச ப்ரஹ்மோபனிஷத்
=========================
"பஞ்சாக்ஷரமயம் சம்பும் பரப்ரஹ்ம ஸ்வரூபினம்
நகாராதி யகாராந்தம் ஜ்ஞாத்வா பஞ்சாக்ஷரம் ஜபேத்"
பொருள்
=========
பரப்ரஹ்ம ஸுரூபமான பஞ்சாக்ஷரத்தை தன்மயமாகக் கொண்டவர் சம்பு. பஞ்சாக்ஷரம் நகாரம் முதல் யகாரம் இறுதியாக உள்ளதென அறிந்து ஜபிக்ககடவர்
நமசிவாய – நமச்சிவாய – என்ற சொல்லின் பொருள் விளக்கம்
உலக இயக்கத்திற்கு மூலமாக உள்ள ஐந்தொழிலை பரமன் ஐந்தெழுத்தாலே நடத்துகின்றான். அந்த ஐந்தெழுத்தும் அவன் திருமேனியாக விளங்குகிறது. இதையொட்டியே நமச்சிவாய வாழ்க என்று தொடங்கி சிவபுராணப் பாடலில் மணிவாசகர் இறைவனை வாழ்த்துகின்றார்.
ந – ஆக்கல் – வலது மேல் கை
ம – காத்தல் – வலது கீழ்க் கை
சி – அழித்தல் – மேல் இடக்கை
வா – மறைத்தல் – கீழ் இடக்கை
ய - அருளுதல் – தூக்கிய இடக்கால்
ச் – ஒடுக்குதல் – ஊன்றிய வலதுகால்
இப்படி ஐந்தொழில் வல்லான் சிலை, ஆறு தொழில்களை விளக்கக்கூடிய ஒன்றாகவும் இருக்கிறது.
ஐந்தெழுத்து மந்திர வடிவமான ஆருத்ரா தரிசன நாளில் தரிசித்து நற்கதியடைவோம் 🚩🕉🪷🙏🏻 #🙏🏼ஓம் நமசிவாய #மார்கழி ஆருத்ரா தரிசனம் #🙏🏻மார்கழி பூஜை சடங்குகள் #🙏🏻மார்கழி மாத சிறப்பு #🙏ஆன்மீகம்
ஆருத்ராதரிசனம் பதிவு=7
==============================
நடராஜ மூர்த்தியும் ஐந்தொழிலும்
======================================
தத்வார்த்த ஸுரூபம்
---------------------------------------------------
சிவாகமம்
===========
"டமரோஸ் ஸ்ருஷ்டிர் ஜாயேத அபயாத் ஸ்திதி ருச்யதே
அக்னேஸ் து புரோக்தம் ஸம்ஹார: திரோதானம் து குஞ்சிதாத்
அனுக்ரஹோ ஊர்த்துவ பாத:க்ருத்யம் பஞ்ச சபாபதே"
1.வலக்கையில் உள்ள உடுக்கை (நாதம்) ஒலி = ஆக்கல் தொழிலை விளக்குகிறது
2.இரண்டாவது வலதுகையின் வாழ்த்துகின்ற தோற்றம் = காத்தல் தொழிலைக் குறிக்கிறது.
3.மேல் இடைக்கையில் உள்ள சுடர் நெருப்பு = (ஒடுக்குதல்) அழித்தலைக் குறிக்கிறது.
4.கீழ் இடக்கையும், முயலகனை மிதிக்கும் வலது காலும் மறைத்தலைக் குறிக்கிறது.
குறிப்பு:- கீழ் இடக்கை மட்டும்தான் மறைத்தலைக் குறிக்கிறது என்றும், முயலகனை மிதிக்கும் வலதுகால் கொடியனவற்றை ஒடுக்குதல் என்ற தத்துவத்தைக் குறிக்கின்றது என்றும் பதினெண்சித்தர்களின் வாக்குகளிலும், வாக்கியங்களிலும், வாசகங்களிலும், நான்மறைகளிலும் மிகத் தெளிவாக குறிக்கப்படுகின்றன.
அதாவது நமசிவாய என்ற ஐந்தெழுத்து: நமச்சிவாய என்ற ஆறு எழுத்தாக வடிவப்படும்போது இந்த நடராசர் ஆறுவகை இறைமைச் செயல் நிலை விளக்கத்தை வழங்கிறது.
5. இடக்காலின் தூக்கிய திருவடி அருளுதல் எனும் தத்துவத்தை விளக்குகிறது. இந்த இடக்கால் “தூக்கிய திருவடி” அல்லது “குஞ்சிதபாதம்” எனப்படும். வலக்கால் ‘அனைத்தையும் ஒடுக்கி மறைக்கின்ற் ‘ஆடியபாதம்’ எனப்படும். சிறப்பாக, முயலகனின் (அரக்கன்) ஆட்டங்களை எல்லாம் ‘அடக்கிய பாதம்’ ஒடுக்கிய பாதம்’ அவனால் விளந்த அச்சங்களையெல்லாம் மறைத்த பாதம் அல்லது ‘அழித்த பாதம்’ எனப்படும்.
இதே கருத்தை
திருமூலர் திருமந்திரத்தில்,
=================================
அதன்துடிதோற்றம் அமைப்பில் திதியாம்
அரன் அங்கி தன்னில் அறையில் சங்காரம்
அரன் உற்று அணைப்பில் அமரும் திரோதாயி
அரனடி என்றும் அனுக்கிரகம் என்னே!
சிதம்பர மும்மணிக்கோவை
===============================
பூமலி கற்பகப் புத்தேள் வைப்பும்
நாமநீர் வரைப்பில் நானில வளாகமும்
ஏனைப் புவனமும் எண்ணீங் குயிரும் !
தானே வகுத்ததுன் தமருகக் கரமே ;
தனித்தனி வகுத்த சராசரப் பகுதி
அனைத்தையும் காப்பது உன் அமைத்தபொற் கரமே ;
தொற்றுபு நின்றவத் தொல்லுல கடங்கலும்
மாற்றுவது ஆரழல் வைத்ததோர் கரமே ;
ஈட்டிய வினைப்பயன் எவற்றையும் மறைத்துநின்று
ஊட்டுவ தாகும்நின் ஊன்றிய பதமே ;
அடுத்த இன் னுயிர்கட்கு அளவில் பேரின்பம்
கொடுப்பது , முதல்வ நின் குஞ்சித பதமே "
என்று நடராசர்சிலை ‘ஐந்தொழில் வல்லான் சிலை’ அல்லது ‘ஐந்தொழில் வல்லான் நிலை’ என்று சிறப்பிக்கப்படுகிறது
ஸ்ரீநடராஜரை தரிசித்து நற்கதியடைவோமாக. 🚩🕉🪷🙏🏻 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏻மார்கழி பூஜை சடங்குகள் #🙏🏻மார்கழி மாத சிறப்பு #🙏🏻மார்கழி மாத சிறப்பு #மார்கழி ஆருத்ரா தரிசனம்#ஆருத்ரா தரிசனம் #🙏ஆன்மீகம்
இன்று(2-1-26)
வெள்ளிக்கிழமை
மார்கழி மாதத்தின் பதினெட்டாவது
நாள் பாட வேண்டிய திருவெம்பாவை பாடல்-18:
இன்று(2-1-25)
மார்கழி மாதத்தின் பதினெட்டாவது நாள்
வியாழக்கிழமையில்
பாட வேண்டிய
*திருவெம்பாவை*
*பாடல்-18*
திருவெம்பாவை பாடல் 18ன் வரிகள்.
அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல்
கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகல
பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி
கண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடி
பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.
பொருள்: சூரியனின் ஒளிக்கீற்று வெளிப்பட்டதும் விண்ணிலுள்ள நட்சத்திரங்கள் எல்லாம் எப்படி மறைந்தனவோ, அப்படி அண்ணாமலையாரின் திருவடியைப் பணிந்ததும், தேவர்களின் மணிமுடியிலுள்ள நவரத்தினங்கள் ஒளி இழந்தன. பெண்ணாகவும், ஆணாகவும், அலியாகவும் என முப்பிரிவாகவும் திகழும் அவர் வானமாகவும், பூமியாகவும், இவையல்லாத பிற உலகங்களாகவும் திகழ்கிறார். கண்ணுக்கு இனிய அமுதம் போல் தோன்றும் அவரது சிலம்பணிந்த திருவடிகளைப் புகழ்ந்து பாடி. பூக்கள் மிதக்கும் இந்தக் குளத்தில் பாய்ந்து நீராடுங்கள்.
விளக்கம்: ஆண் இனம், பெண்ணினம் நீங்கலாக அலி என்ற இனம் இருக்கிறது. இறைப்படைப்பின் அதிசயம் அது. அதனால் தான் அவர்களை “திருநங்கை என பெயர் சூட்டி அவர்களைக் கவுரவித்துள்ளோம். இறைப் படைப்பில் எதுவுமே கேலிக்குரியதல்ல. எல்லாம் அவன் செயல். இறைவனே அலியாக இருக்கும் போது, மனிதப்படைப்பில் இருந்தாலென்ன! எல்லா உயிர்களையும் பரம்பொருளாகக் காண வேண்டும் என்பது இப்பாடலின் உட்கருத்து.
திருவெம்பாவை பாடல் 18ன் காணொளிக்காட்சி கீழே!👇🚩🕉🪷🙏🏻 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருப்பாவை & திருவெம்பாவை #🙏🪔💮 திருவெம்பாவை💮🪔 🙏 🙏🪔💮திருப்பள்ளி எழுச்சி 💮🪔🙏 #பக்தி பாடல்கள்










