ரவிசங்கர் ராஜா, ஆரணி
ShareChat
click to see wallet page
@ravisankarraja
ravisankarraja
ரவிசங்கர் ராஜா, ஆரணி
@ravisankarraja
நான் நெசவாளரின் மகன் (செங்குந்த/கைக்கோளர் வம்சம்)
நவராத்திரி எட்டாம் நாள் கமண்டல நாக நதி தீரநாயகி அகிலாண்ட நாயகி அருட்சக்தி அன்னை ஆரணி படவேடு ரேணுகையாய் அருட்காட்சி... 🚩🕉🪷🙏🏻 #🙏அம்மன் துணை🔱 #🌼🙏 கோவில்களில் அம்மன் தரிசனம் 🏵️ #📺நவராத்திரி உற்சவம் 2025🔴 #✨ இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🎉🪔 #🙏 நவராத்திரி ஸ்டேட்டஸ் 🎉
🙏அம்மன் துணை🔱 - ShareChat
00:59
🚩🕉ஓம் நமசிவாய🪷🙏🏻 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #👶குழந்தைகள் உலகம் #👶குழந்தைகள் உலகம் #🎥Trending வீடியோஸ்📺
🚩🕉 திருச்சிற்றம்பலம் 🪷🙏🏻 🚩🕉 தில்லையம்பலம் 🪷🙏🏻 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏 திங்கள் பக்தி ஸ்பெஷல் ✨ #🕉ஓம் நமசிவாய 🕉 ##🙏 சோமவார விரதம்
🙏🏼ஓம் நமசிவாய - ShareChat
00:23
நமச்சிவாய வாழ்க!!! நாதன் தாள் வாழ்க!!! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!!! 🚩🕉🪷🙏🏻 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏 திங்கள் பக்தி ஸ்பெஷல் ✨ #🕉ஓம் நமசிவாய 🕉 ##🙏 சோமவார விரதம்
🙏🏼ஓம் நமசிவாய - ShareChat
00:14
🚩🕉 அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 🪷🙏🏻 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏 திங்கள் பக்தி ஸ்பெஷல் ✨ ##🙏 சோமவார விரதம் #🕉ஓம் நமசிவாய 🕉
🙏🏼ஓம் நமசிவாய - ShareChat
00:36
எல்லாம் வல்ல இறைவா போற்றி !!! தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ஜகத்தை காக்கும் ஈசனே போற்றி !! 🚩🕉🪷🙏🏻 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏 திங்கள் பக்தி ஸ்பெஷல் ✨ #🕉ஓம் நமசிவாய 🕉 ##🙏 சோமவார விரதம்
🙏🏼ஓம் நமசிவாய - ShareChat
00:21
🚩🕉ஓம் நமசிவாய🪷🙏🏻 #🙏🏼ஓம் நமசிவாய #🕉ஓம் நமசிவாய 🕉 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏 திங்கள் பக்தி ஸ்பெஷல் ✨ ##🙏 சோமவார விரதம்
🙏🏼ஓம் நமசிவாய - ShareChat
00:26
*இன்று*(28-9-25) *நவராத்திரி* *ஏழாவது நாள்*: *பூஜையின் சிறப்பம்சம்*! சக்தியை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் மிகவும் முக்கியமானது நவராத்திரி விரதம். தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஸ்வர்க்கம், மோட்சம் என ஒரு மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் தரக்கூடிய விரதம் நவராத்திரி விரதம். நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நைவேத்தியம், அம்பாளுக்கு சாற்ற ஒவ்வொரு விதமான மலர், ஒன்பது நாளும் வாசிப்பதற்கு ஒன்பது வகையான வாத்தியங்கள், அம்பாளைப் பூஜிக்க ஒன்பது வகையான மந்திரங்கள் என்று ஏராளமாக இருக்கிறது. நவராத்திரி விழாவில் ஒவ்வொரு தினத்தில் செய்ய வேண்டிய பூஜை மற்றும் பிரசாதங்களின் விபரம்: அந்தவகையில் நவராத்திரியின் ஏழாம் நாளான இன்று(28-9-25) என்ன செய்ய வேண்டும்? என்பதை பார்க்கலாம்!! ஏழாவது நாளில் நாம் சரஸ்வதி தேவியை ’சாம்பவி’ ஆக வழிபடவேண்டும். இன்று கும்மி வாத்தியம் தெரிந்தவர்கள் புன்னாகவராளி ராகம் இசைப்பது சிறந்தது. இன்றைய தினம் எட்டு வயது பெண் குழந்தைகளை ஒற்றைப்படை எண்ணிக்கையில் வீட்டுக்கு அழைத்து, அவர்களை சாம்பவியாக பாவித்து பூஜிக்க வேண்டும். இன்று எலுமிச்சை சாதமும், ஏதேனும் ஒரு நவதானியத்தில் செய்த சுண்டலையும் அம்பிகைக்கு நைவேத்தியம் செய்து பிரசாதமாக வழங்க வேண்டும். மேலும் இன்று பன்னீர் இலைகளைக் கொண்டு அம்பிக்கையை பூஜித்து வழிபட்டால் என்றும் நிலைத்த புகழ் கிடைக்கும் என்பது நம்பிக்கை!!! நவராத்திரியின் ஏழாம் நாள் முதல் ஒன்பதாம் நாள் வரை நாம் வழிபடவேண்டிய தெய்வம் சரஸ்வதி. ஏழாவது நாளில் நாம் சரஸ்வதி தேவியை சாம்பவியாக வழிபடவேண்டும். சாம்பவியை வழிபடும் ஏழாவது நாளுக்கு உரிய சுவாசிநியின் பெயர் - காலராத்ரி; மந்திரம் - ஓம் காலராத்ர்யை நம:; காலராத்ரி தேவியின் மந்திரம் ஒலிக்கும் ஒலிவடிவ காணொளிக்காட்சி கீழே!👇🚩🕉🪷🙏🏻 #🙏அம்மன் துணை🔱 #🎵 நவராத்திரி பஜனை ✨ #🙏 நவராத்திரி ஸ்டேட்டஸ் 🎉 #✨ இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🎉🪔 #📿நவராத்திரி பூஜை முறை🪔
🙏அம்மன் துணை🔱 - ShareChat
01:59
நவராத்திரி நாள் 6 - காத்யாயினீ வசந்த நவராத்திரியின் ஆறாம் நாள் வழிபட வேண்டியவள் காத்யாயினி, இவளே மகஷாசுர மர்த்தினியும் ஆவாள். காத்யாயன முனிவர் புத்ரி ஆனதால், காத்யாயனி எனப்பட்டாள். காத்யாயானர் என்ற முனிவர் அம்பாளை நோக்கித் தவம் புரிந்தார். அவளைத் தரிசித்ததும், தாயே, தாங்களே எனக்குப் பெண்ணாகப் பிறக்க வேண்டும் என்று வரம் கேட்டார். அம்பாளும் அவருக்கு காத்யாயனீ என்ற பெயரோடு பெண்ணாகப் பிறந்தாள். துஷ்ட அசுரர்கள் பலரை அழித்து மக்களை காத்தவள். பதஞ்சலி முனிவர் மிருதங்கம் வாசித்த போது, அதற்கேற்ப நடனமாடி முனிவரை மகிழ்வித்தார் சிவபெருமான். எனவே இது முனிதாண்டவம் என்று பெயர் பெற்றது. இந்த தாண்டவத்தின்போது சிவபெருமான் இருகால்களால் வரைந்த கோலத்திலிருந்து தோன்றியவள் காத்யாயினி. காசி ஆத்ம விஸ்வேஸ்வரர் கோவிலின் பின்பக்க நுழைவாயிலை அடுத்துள்ள சுவரில் காத்யாயினி கோட்ட தெய்வமாக வழிபடப் படுகிறாள். டெல்லியில், சட்டர்பூரிலும், தஞ்சையிலும் இவளுக்கு கோவில்கள் உள்ளன. மேலும், கிராமப்புறங்களில், காத்தாயி என்று அழைக்கப்படுபவள் இவளே. துர்கையின் ஆறாவது வடிவமான இவள், யோகத்திற்கும், ஞானத்திற்கும் அதிதேவதை. யோகிகள் இவள் அருளை துணை கொண்டு ஆறாம் சக்ரமான ஆக்ஞா சக்ரத்தை அடைவர். சிம்ம வாகனத்தில் தொடைமேல் கால்போட்டு அமர்ந்திருப்பாள். "சிம்மவாஹினி' என்றும் சொல்வர். இவள் நான்கு கரம் கொண்டவள். ஒரு கரம் தாமரை மலர் ஏந்தியும், மறு கரம் ஒளி வீசும் வாள் ஏந்தி காணப்படும். இரண்டு கைகள் பக்தருக்கு அபயம் தரும் விதத்தில் உள்ளன. காத்யாயினியை மக்கள் மகள் வடிவாக வணங்குகின்றனர். இவளுக்கு அன்பு அதிகம். ஆனால் இவள் தீய சக்திகளை வேரோடு அழிப்பவள். இவள் பாவம் செய்பவரையும், அரக்க சக்திகளையும் கொல்பவள். இந்த தேவி எதிரிகளை நாசம் செய்யும் சக்தி கொண்டவள். இவளை வழிபட எதிரிகள் அழிவர். இவளின் கருணை மக்களின் துயர்களை ஓடச் செய்யும். தன்னை முழுமனதோடு பிரார்த்தனை செய்பவருக்கு விரும்பியதெல்லாம் அள்ளிக் கொடுக்கிறாள். காத்யாயினிதேவியை தினமும் வழிபடுபவர் பாவங்கள் விலகி மோக்ஷமடைகிறார். கோகுலத்து கோபியர்கள் கண்ணனை அடைய இவளையே தெய்வமாய் வழிபட்டு விரதம் இருந்தனர் என்பார்கள். கன்னியர் மனம் மகிழும்படிய்க் கணவனை அளித்துக் கல்யாணப் பேறு அளிப்பாள் இவள் என்று கூறுவார்கள். காத்யாயனி! மஹாமாயே! மஹாயோகின்யதீஸ்வரி! நந்தகோபஸுதம் தேவி! பதிம் மே குரு தே நம: அதாவது, காத்யாயன முனிவருக்கு பிறந்தவளும், மாயைகளுக்கெல்லாம் இருப்பிடமும், மகத்தான யோக ஸித்திகளை அடைந்தவளுமான ஹே தேவீ ! எனக்கு நந்தகோபருடைய புத்திரரான கிருஷ்ணனைக் கணவனாக அடைய அருள்வாய்! உன்னையே நமஸ்கரிக்கிறேன் என்பதாகும். இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் பண்ணும் கன்னியர்க்கு மனதுக்கிசைந்த மணாளன் கிடைப்பான் என்பது உறுதி. இவளை வழிபட்டால், புத்தியும், ஞானமும் அளிக்கும் புதன் கல்வி, கலைகளில் சிறந்து விளங்க வைப்பதோடு, கல்யாணப் பேறும் அளிப்பார். தியான ஸ்லோகம் : சந்த்ர ஹாஸோஜ்வலகரா சார்துல வர வாஹநா | காத்யாயநீ சுபம் தத்யாத் தேவீ தாநவ காதிநீ || (திருக்கரத்தில் சந்திரஹாச வாளை ஏந்தி சிம்மவாகனத்தில் பவனி வந்து தேவர்களைக் காக்கும் காத்யாயினி அடியேனுக்கு எல்லா சுபங்களையும் வழங்கட்டும்.) மந்திரம்: ஓம் காத்யாயன்யை நம: அபிராமி அந்தாதி : சுந்தரி எந்தை துணைவி, என் பாசத்தொடரை எல்லாம் வந்து அரி சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல் அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன் கம் தரி கைத்தலத்தாள்-மலர்த்தாள் என் கருத்தனவே அன்னையே பேரழகானவள். அவள் என் தந்தை சிவபெருமானின் துணைவி. என்னுடைய அகம், புறமாகிய அனைத்து பந்த பாசங்களையும் போக்கக் கூடியவள். செந்நிறத் திருமேனியாள். அன்றொருநாள் மகிஷாசுரனின் தலை மேல் நின்று, அவனை வதம் செய்தவள் (அகந்தையை அழித்தவள்). நீல நிறமுடைய நீலி என்னும் கன்னியானவள். தன்னுடைய கையில் பிரம்ம கபாலத்தைக் கொண்டிருப்பவள். அவளுடைய மலர்த்தாளையே என்றும் என் கருத்தில் கொண்டுள்ளேன். முத்தாரம்மே சரணம் 🚩🕉🪷🙏🏻 #🙏அம்மன் துணை🔱 #✨ இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🎉🪔 #📿நவராத்திரி பூஜை முறை🪔 #🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏அம்மன் துணை🔱 - #MYSOULDISCOVERY Katyayani Devi (The Warrior Goddess) Day: th Symbolism: She represents the fierce and warrior-like energy Sage Durga. Born to Katyayana after his deep penance, she is also known as the slayer of the demon Mahishasura Appearance: She rid lion and holds a sword, demonstrating her readiness for battle. Spiritual signifian Katyayani is associatet with the Ajna Chakra (Third Eye Chakra) symbolizing intuition, clarity, and inner strength: #MYSOULDISCOVERY Katyayani Devi (The Warrior Goddess) Day: th Symbolism: She represents the fierce and warrior-like energy Sage Durga. Born to Katyayana after his deep penance, she is also known as the slayer of the demon Mahishasura Appearance: She rid lion and holds a sword, demonstrating her readiness for battle. Spiritual signifian Katyayani is associatet with the Ajna Chakra (Third Eye Chakra) symbolizing intuition, clarity, and inner strength: - ShareChat
*இன்று*(27-9-25) *நவராத்திரி* *ஆறாவது நாள்*: *பூஜையின் சிறப்பம்சம்*! சக்தியை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் மிகவும் முக்கியமானது நவராத்திரி விரதம். தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஸ்வர்க்கம், மோட்சம் என ஒரு மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் தரக்கூடிய விரதம் நவராத்திரி விரதம். நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நைவேத்தியம், அம்பாளுக்கு சாற்ற ஒவ்வொரு விதமான மலர், ஒன்பது நாளும் வாசிப்பதற்கு ஒன்பது வகையான வாத்தியங்கள், அம்பாளைப் பூஜிக்க ஒன்பது வகையான மந்திரங்கள் என்று ஏராளமாக இருக்கிறது. நவராத்திரி விழாவில் ஒவ்வொரு தினத்தில் செய்ய வேண்டிய பூஜை மற்றும் பிரசாதங்களின் விபரம்: அந்தவகையில் நவராத்திரியின் ஆறாவது நாளான இன்று(27-9-25) என்ன செய்ய வேண்டும்? என்பதை பார்க்கலாம்!! நவராத்திரியின் ஆறாம் நாளில் ஏழு வயதுள்ள பெண்குழந்தைகளை ஒற்றைப்படை எண்ணிக்கையில் வீட்டுக்கு அழைத்து, அவர்களை ‘காளிகா’ தேவியாக வழிபடவேண்டும். பருப்பைக் கொண்டு பாவைகள் அலங்காரமாக “காளிகா தேவி”யையோ, அல்லது தேவி நாமத்தையோ கோலமாக போட்டு, குங்குமம் பொட்டு வைத்து, செவ்வரளிப் பூ, செம்பருத்தி பூ போன்ற சிவந்த மலர்களால் அலங்கரித்து, தும்பை பூ இலையால் அர்ச்சனை செய்து, நைவேத்தியமாக ஆரஞ்சு பழம், கடலைப்பருப்பு சுண்டல், தேங்காய் சாதம் படைத்து பூஜிக்க வேண்டும். மந்திரம் – ஓம் காத்யாயன்யை நம: யோகிகள் இவள் அருளை துணை கொண்டு ஆறாம் சக்ரமான ‘ஆக்ன்யா’ சக்ரத்தை அடைவர். இந்த சக்ரத்தை முக்கண் சக்கரம் என்று கூறுவர். இவளின் தியான மந்திரம் : “சந்திர ஹசூஜ் வல்கார லவர் வாஹன் காத்யாயனி சுப் தத்யா தேவி தவன் தாதினி" ஒளி வீசும் (ஹசூஜ்) வாளைக் கொண்டவளும், கம்பீரமான சிம்மத்தில் ஏறி தீய சக்திகளை அழிப்பவளாம் அன்னை காத்யாயனி எனக்கு அருள் செய்ய வேண்டும். இன்று நாம் அம்பிகையை வழிபடுவதால், எதிரிகளின் தொல்லை முழுமையாக விலகி, வாழ்க்கையில் என்றும் சந்தோஷத்தை நிலைக்கசெய்வாள் தேவி. ஆறாம் நாளில் துர்க்கையை காத்யாயனி என்று ஆராதனை செய்வர். உலகாளும் அன்னை தன் மகளாய்ப் பிறக்கவேண்டும் எனவேண்டினார் காத்யாயன மாமுனிவர். அவர் எண்ணம் ஈடேற அவர் மகளாய்ப் பூவுலகில் அவதரித்தாள் அன்னை. காத்யாயன மாமுனியின் மகள் என்பதால் காத்யாயினி என வழங்கப் படுகின்றாள். இவளையே மகிஷாசுர மர்த்தினி என்றும் கூறுவர். கோகுலத்து கோபியர்கள் கண்ணனை அடைய இவளையே தெய்வமாய் வழிபட்டு விரதம் இருந்தனர் என்பார்கள். கன்னியர் மனம் விரும்பும் படி, மணாளனை அளித்துக் கல்யாணப் பேறு அளிப்பாள் இவள் என்று கூறுவார்கள். "காத்யாயினி மஹாமாயே மகாயோகிந் யதீஸ்வரி நந்தகோப ஸுதம் தேவி பதிம்மே குருதே நமஹ" என்ற இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் பண்ணும் கன்னியர்கள் தங்கள் மனசுக்கு பிடித்த கணவனை விரைவில் கைபிடிப்பார்கள் என்பது உறுதி. தேவி காத்யாயினியை மகள் வடிவமாக வணங்குகின்றனர். இவளுக்கு அன்பு அதிகம். அதேபோல், தீய சக்திகளை வேரோடு அழித்து, பாவம் செய்பவரையும், அரக்க சக்திகளையும் கொல்பவள். இவளின் கருணை துயர்களை ஓடச் செய்வதோடு, கணவன் மனைவி இடையில் அடிக்கடி ஏற்படும் மனக்கசப்புகள் நீக்குவாள். அமைதியையும், செல்வத்தையும் தழைத்துச் செய்வாள். காளிகா புராணத்தில் இந்த தேவியைப் பற்றி விளக்கப்பட்டுள்ளது. வலிமையின் கடவுளாக உள்ள தேவி காத்யாயனி நான்கு கரம் கொண்டவள். ஒரு கரம் தாமரை மலர் ஏந்தியும், மறு கரம் ஒளி வீசும் வாள் ஏந்தியும், இரண்டு கைகள் பக்தருக்கு அபயம் தரும் விதத்தில் காட்சியளிக்கிறாள். ஆண்டாள் வழிபட்ட தேவியாவாள். நங்கையரின் நலன் காப்பவள். மாதா காத்யாயினி தேவியின் தியான மந்திரத்தின் ஒலி வடிவ காணொளிக்காட்சி கீழே!👇👇🚩🕉🪷🙏🏻 #🙏அம்மன் துணை🔱 #📿நவராத்திரி பூஜை முறை🪔 #✨ இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🎉🪔 #🙏 நவராத்திரி ஸ்டேட்டஸ் 🎉 #🎵 நவராத்திரி பஜனை ✨
🙏அம்மன் துணை🔱 - ShareChat
01:59