
ரவிசங்கர் ராஜா, ஆரணி
@ravisankarraja
நான் நெசவாளரின் மகன்
(செங்குந்த/கைக்கோளர் வம்சம்)
*இன்று*(26-9-25)
*நவராத்திரி*
*ஐந்தாவது நாள்*:
*பூஜையின் சிறப்பம்சம்*!
சக்தியை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் மிகவும் முக்கியமானது
நவராத்திரி விரதம்.
தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஸ்வர்க்கம், மோட்சம் என ஒரு மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் தரக்கூடிய விரதம் நவராத்திரி விரதம்.
நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நைவேத்தியம், அம்பாளுக்கு சாற்ற ஒவ்வொரு விதமான மலர், ஒன்பது நாளும் வாசிப்பதற்கு ஒன்பது வகையான வாத்தியங்கள், அம்பாளைப் பூஜிக்க ஒன்பது வகையான மந்திரங்கள் என்று ஏராளமாக இருக்கிறது.
நவராத்திரி விழாவில் ஒவ்வொரு தினத்தில் செய்ய வேண்டிய பூஜை மற்றும் பிரசாதங்களின் விபரம்:
அந்தவகையில் நவராத்திரியின் ஐந்தாம் நாளான இன்று(26-9-25)
என்ன செய்ய வேண்டும்? என்பதை பார்க்கலாம்!!
நவராத்திரியின் ஐந்தாம் நாள் நாம் வழிபட வேண்டிய தெய்வம் மகேஸ்வரி. மகேஸ்வரனின் சக்தி என்பதால் இவள் மகேஸ்வரி என்றும், கந்தனின் அன்னை என்பதால் ஸ்கந்தமாதா என்றும் அழைக்கப்படுகிறாள்.
ஐந்தாவது நாளுக்கு
இவளை வழிபடும் உரிய. குமாரி – சண்டிகா தேவி;
மந்திரம் – ஓம் சண்டிகாயை நம; சுவாசிநியின் பெயர் – ஸ்கந்தமாதா;
மந்திரம் – ஓம் ஸ்கந்த மாதாயை நம:
மலர் – சந்தன இலை;
நைவேத்தியம் – தயிர்சாதம்; வாத்தியம் – ஜல்லரி; ராகம் – பந்துவராளி;
இன்றைய தினம் கடலைமாவினால் பறவைக் கோலங்களில் ஏதேனும் ஒன்றை போடலாம்.
இன்றைய தினம் ஆறு வயது சிறுமிகளை நம்மால் முடிந்த அளவு ஒற்றைப்படை எண்ணிக்கையில் வீட்டுக்குஅழைத்து,
அவர்களை ‘சண்டிகா’ என்ற திருப்பெயருடன் வழிபடவேண்டும்.
அம்பிகைக்கு தயிர் சாதமும், ஏதேனும் ஒரு நவதானியம் கொண்டு சுண்டலும் செய்து அம்பிகைக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும். நைவேத்தியம் செய்ததை அனைவருக்கும் அம்பிகையின் பிரசாதமாகக் கொடுக்க வேண்டும்.
இன்று நாம் அம்பிகையை வழிபடுவதால், சகல ஐஸ்வர்யங்களும் கிடைப்பதுடன், புத்திர பாக்கியமும் கிடைக்கும்.
நவராத்திரி விழாவின் ஐந்தாம் நாளாம் பஞ்சமி அன்று 'ஸ்கந்த மாதா' என்று துர்க்கையை வழிபடுகின்றனர்.
ஸ்கந்த என்ற சொல் முருகனை குறிக்கும்.
மாதா என்றால் அன்னை. முருகனின் தாயாக இருப்பதால் ஸ்கந்த மாதா என்று இவளை கூறுவர். தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் பகையாக விளங்கிய தாரகாசுரனை (சூரபத்மனை) கொன்றவர் தேவசேனாபதியாகிய முருகன். அத்தகைய முருகனின் தாயான இவள் மிகவும் மதிக்கப் படுகிறாள்.
இவள் நான்கு கரங்களை கொண்டவள். இரண்டு கரங்களில் தாமரை மலரை கொண்டவள். ஒரு கரம் பக்தருக்கு ஆசி வழங்கும். இவளின் மடியில் ஸ்கந்தன் குழந்தை வடிவாக ஆறுமுகத்தோடு காட்சி தருவான். அன்னையை சிங்கம் தாங்கி நிற்கும். இவள் சில நேரங்களில் தாமரை மலர் மீது அமர்ந்து தவம் செய்பவளாக காட்சி தருவாள். அதனால் இவளை 'பத்மாசினி' என்றும் கூறுவர்.
இவளின் வடிவம் பக்தரை மெய்மறக்க செய்யும். இவள் தூய்மையின் வடிவானவள். இவளை வணங்குவோர் மனமும், ஆத்மாவும் அமைதி பெறும். அவர்கள் தன்னுடைய துக்கங்களை மறப்பர். வாழ்வில் இறை இன்பத்தை அனுபவிப்பர். இவளின் ஆசிகள் உண்மையான வேண்டுதல்களை நிறைவேற்றும். தன்னை நம்புவோரை இவள் என்றும் கைவிட மாட்டாள். இவளின் அருள் மோட்சத்திற்கு இட்டுச் செல்லும் என்று நம்புகின்றனர்.
இந்நாளில் யோகிகள் 'விசுத்தி' சக்கரத்தை அடைவர். விசுத்தி என்றால் கலப்படம் இல்லாதது, தூய்மையானது என பொருள் வரும். இவள் அருள் கொண்டு இந்த சக்ரத்தை அடைவோரின் மனம் தூய்மையான கருத்துக்களால் நிறையும். இவளை சரண் அடைந்தோரின் மனதில் இருந்து தூய்மையில்லாத கருத்துக்கள் வெளியேறி விடும்.
மற்ற எந்த தேவிகளுக்கும் இல்லாத சிறப்பு இவளுக்கு உண்டு. இவளை வழிபடும் போது நாம் முருகனையும் சேர்த்து வணங்குகிறோம். இவளின் தியான மந்திரம்
“சின்ஹாசன் கட நித்யம் பத்மஸ்ரித் கர்தவ்ய
சுபதஸ்து சதா தேவி ஸ்கந்த மாதா யஷஷ்வினி
"தன் இருகரங்களில் தாமரை மலர் ஏந்தியவளும், சிம்மாசனத்தில் அமர்ந்து இருப்பவளும், ஸ்கந்தனின் தாயாகவும் இருக்கும் தேவி துர்க்கையை நான்
வணங்குகின்றேன்" .
ஸ்கந்த மாதா தேவியின் தியான மந்திரத்தின் ஒலி வடிவ காணொளிக்காட்சி கீழே!👇👇🚩🕉🪷🙏🏻 #🙏அம்மன் துணை🔱 #📿நவராத்திரி பூஜை முறை🪔 #✨ இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🎉🪔 #🙏 நவராத்திரி ஸ்டேட்டஸ் 🎉 #🎵 நவராத்திரி பஜனை ✨
*இன்று*(25-9-25)
*நவராத்திரி*
*நான்காவது நாள்*:
*பூஜையின் சிறப்பம்சம்*!
சக்தியை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் மிகவும் முக்கியமானது
நவராத்திரி விரதம்.
தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஸ்வர்க்கம், மோட்சம் என ஒரு மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் தரக்கூடிய விரதம் நவராத்திரி விரதம்.
நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நைவேத்தியம், அம்பாளுக்கு சாற்ற ஒவ்வொரு விதமான மலர், ஒன்பது நாளும் வாசிப்பதற்கு ஒன்பது வகையான வாத்தியங்கள், அம்பாளைப் பூஜிக்க ஒன்பது வகையான மந்திரங்கள் என்று ஏராளமாக இருக்கிறது.
நவராத்திரி விழாவில் ஒவ்வொரு தினத்தில் செய்ய வேண்டிய பூஜை மற்றும் பிரசாதங்களின் விபரம்:
அந்தவகையில் நவராத்திரியின் நான்காவது நாளான இன்று(25-9-25)
என்ன செய்ய வேண்டும்? என்பதை பார்க்கலாம்!!
நவராத்திரியின் நான்காம் நாளான இன்று ஐந்து வயதுபெண் குழந்தைகளை
நம் வசதிக்கு ஏற்றபடி ஒருகுழந்தையோ அல்லது ஒன்றுக்கு மேல் ஒற்றைப்படை எண்ணிக்கையில் நம் வீட்டுக்கு வரவழைத்து, ரோஹிணி என்ற திருப்பெயருடன் வழிபடவேண்டும்.
ரோஹிணி என்ற பெயருக்கு ரோகங்களை அகற்றுபவள் என்றுபொருள்.
நான்காவது நாளில் பெண்குழந்தைகளை ரோஹிணியாக பூஜித்தால், நோய்நொடிகளில் இருந்து விடுபடுவதுடன், ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெறலாம்.
நான்காவது நாள் காலையில் முழு அரிசியைக்கொண்டு படிக்கட்டுக் கோலம் போடவேண்டும்.
பிறகு லட்சுமி அஷ்டோத்திரம், லட்சுமி வழிபாட்டு பாடல்களைப்பாடி விஷ்ணுவின் சக்தியான வைஷ்ணவியை வழிபடவேண்டும்.
மாலையில் வைஷ்ணவி தேவிக்கு கதம்பசாதமும், ஏதேனும் ஒரு சுண்டலும் செய்து நைவேத்தியம் செய்து, வீட்டுக்குவரும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பிரசாதமாக கொடுக்க வேண்டும்.
இன்றைய தினத்துக்கான குமாரியின் பெயர் -ரோஹிணி;
மந்த்ரம் – ஓம் ரோஹிண்யை நம:
சுவாசிநியின் பெயர் கூஷ்மாண்டா.
மந்த்ரம் – ஓம் கூஷ்மாண்டாயை நம:
இன்று அம்பிகைக்கு கதிர்பச்சை மலர்களால் அதாவது மருக்கொழுந்து, தவனம் போன்ற மலர்களால் அர்ச்சனை செய்யலாம்.
அனைத்துக்கும் ஆதாரமாக திகழ்பவள் அன்னைசக்திதான் என்பதால், நவராத்திரி நாள்களில் சக்தியின் ஆதர்சவடிவமாக விளங்கும் பெண்குழந்தைகளை நாம் பூஜிக்கிறோம்.
இதன்காரணமாக நம்மில் சிறியவரையும் மதிக்கும் மனப்பான்மை நமக்கு ஏற்படுவதுடன், பூஜிக்கப் படும் குழந்தைகளின் மனதிலும் நல்லமாற்றத்தை ஏற்படுத்துகிறது.
நவராத்திரியின் நான்காவது நாளான சதுர்த்தி தினத்தன்று ‘கூஷ்மாண்டா’ வடிவ துர்க்கையை வணங்குவது வழக்கம்.
கூஷ்மாண்டா என்றால், ‘தன்
புன்சிரிப்பிலிருந்து உலகை உண்டுபண்ணுபவள்’ என்று தேவி பாகவதம் போற்றுகிறது.
‘கூஷ்மம்’ என்றால் முட்டை, ‘அண்டம்’ என்றால் உலகம்.
உலகத்தை உருவாக்கிய கூஷ்மம் என்னும் முட்டை தோன்றியது இந்த தேவியிடமிருந்தே.
கூஷ்மாண்டா என்றால் பூசணிக்காய் என்ற ஒரு பொருளும் உண்டு.
பூசணிக்காயை பலியாகக் கொடுத்தால் இத்தேவிக்கு மிகவும் பிரியம் என்று ருத்ரயாமள தந்திரம். குஞ்சிகா ஆகமம் போன்ற நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.
இந்த திருஷ்டிப் பூஷணிக்காய் எப்படி தீவினைகளையும்,
கண் திருஷ்டியையும் போக்குகிறதோ, அந்தத் தீவினைகளும், திருஷ்டியும் யாரையும் பாதிக்காமல் செய்கிறதோ அவ்வாறே அம்பிகை தன் பக்தர்களைத் தீவினைகள், தீயசக்திகள் அண்டவிடாமல் பாதுகாக்கிறாள்.
சுக்கிரதசை என்னும் அதிர்ஷ்டம் அடிக்க இந்தத் தேவியின் தயவு வேண்டும். இத்தேவியை மனமாற வணங்கினால் அசுர குருவான சுக்கிரன் வளங்களை அள்ளி அள்ளித் தருவார்.
சூர்ய மண்டலத்தை இயக்குபவளான இவளது எட்டாவது கரத்தில் உள்ள கலசம் அஷ்ட சித்திகளையும், நவ நிதிகளையும் தன் பக்தர்களுக்குத் தர வல்லது. நம் உடலில் உள்ள சக்ரங்களில் இவள் ‘அனாஹத’ சக்ரத்தில் இருப்பவள்.
யோக சாதனை செய்வோர் இவள் அருள் கொண்டு இந்த சக்ரத்தை அடைவர்.
இதை அடைந்தோர் உடல்,மன வலிமை பெறுவர்.
துக்க நிவாரணம், நோய் நிவாரணம் போன்றவையும் கிட்டுகிறது.
இத்தேவியை வணங்கும் பக்தர்கள் தங்கள் வாழ்வில் என்றும் பிரகாசிப்பார்கள்.
அவர்களுக்கு அறம், பொருள், இன்பம், வீடு எனும் சதுர்வித புருஷார்த்தங்களும் சித்திக்கும்.
இத்தேவியின் அருள் பாவத்தை அழித்து, இன்பத்தை தர வல்லது.
கூஷ்மாண்டா தியான மந்திரம்:
“சூரா சம்பூர்ண கலசம் ருத்ரபலு தவமேவச்சா
ததான ஹஸ்த பத்மப்யாம் கூஷ்மாண்டா சுபதாஸ்து மே’’
தன் தாமரை போன்ற கரங்களில் இரு கலசம் ஏந்தியவளும்,
தன் சிரிப்பால் உலகை சிருஷ்டித்து, அதை பரிபாலனம் செய்பவளாகிய தேவி கூஷ்மாண்டா என் மீது கருணை மழை பொழிவாளாக என்று அர்த்தம். நவராத்திரியில் அம்பிகையை கொண்டாடுவோம். அவளின் பரிபூரண அருளைப் பெறுவோம்.
கூஷ்மாண்டா தேவி தியான மந்திரத்தின் ஒலி வடிவ காணொளிக்காட்சி கீழே!👇🏻🚩🕉🪷🙏🏻 #🙏அம்மன் துணை🔱 #📿நவராத்திரி பூஜை முறை🪔 #✨ இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🎉🪔 #🎵 நவராத்திரி பஜனை ✨ #🙏 நவராத்திரி ஸ்டேட்டஸ் 🎉
நவராத்திரி நாள் 3 - சந்திரகாண்டா
வசந்த நவராத்திரி விழாவின் மூன்றாம் நாளில் துர்க்கையை சந்திரகாண்டா என ஆராதனை செய்கின்றனர். இதுவே அன்னையின் மூன்றாம் வடிவம் ஆகும்.
இவள் நீதியை நிலைநாட்டி சந்திர பிறையை அணிந்தவள். 'சந்திர' என்றால் நிலவு. 'காண்டா' என்றால் மணி என பொருள். சந்திர பிறை இவள் முன் நெற்றியில் மணி போல் இருப்பதால் இவளை 'சந்திர காண்டா' என அழைக்கின்றனர்.
திருவாலங்காடு தலத்தில் சிவனுக்கும் காளிக்கும் நடனப் போட்டி நடந்தபோது, ஒரு காலை தோளுக்கு இணையாக மேலே தூக்கி நடனமாடி தேவியைத் தோல்வியுறச் செய்தார். இந்த நடனம் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும். இந்த ஆட்டத்தின்போது கால்விரல்களால் வரையப்பட்ட பிரணவ ஒலிக்கோலத்திலிருந்து தோன்றிய அம்பிகை சந்த்ரகண்டா. இந்த தேவிக்கு காசியில் சௌக் கடைத்தெரு அருகே கோவில் உள்ளது. மேலும், உத்தர பிரதேசத்தில் உள்ள சித்திரகந்த குல்லி என்னும் இடத்தில் சந்த்ரகண்டாவுக்கு தனிக்கோவில் உண்டு.
இவள் உடல் சக்கரங்களில் 'மணிபூர' சக்ரத்தில் இருப்பவள். நவராத்ரியின் மூன்றாம் நாள் யோக சாதனை செய்வோர் மணிபூரா சக்ரத்தை தேவியின் அருளோடு அடைவர். இதை அடைந்தோர் தெய்வீக சப்தத்தை கேட்பர். மணிபூர சக்ரத்தில் அவர்கள் சிறிது கவனமாக இருப்பர். அதனால் சந்திர காண்டா தேவியின் அருள் அவசியமாகும்.
முக்கண்ணனின் பத்தினியான இவளும் முக்கண்களைக் கொண்டு தலையில் பிறைச்சந்திரனைச் சூடிக் கொண்டு காக்ஷி கொடுக்கின்றாள். தங்கமயமான உடல் உடையவள். நாம் செய்யும் தீவினைகள் ஆகிய அசுரர்களைத் தடுக்க பத்து கரங்கரங்களிலும் பல்வேறு ஆயுதங்களை ஏந்தியவண்ணம் புலிமீது அமர்ந்து காக்ஷி கொடுக்கின்றாள்.
மூன்று கண்களை உடைய இவளை வணங்கினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்படும். சந்திரகாந்தக் கல் எப்படி சந்திரனின் குளுமையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு நீரைப் பொழிகின்றதோ அப்படியே அம்பாள் நம் வெம்மையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு குளுமையான கருணை நீரைப் பொழிகின்றாள். இங்கே வெம்மை என்பது நம் வினைகளைக் குறிக்கின்றது. நம் தீவினைகளால் ஏற்படும் வெப்பத்தைத் தணிவித்துத் தன் கருணை மழையால் நம்மைக் குளிர்விப்பவள் இவளே.
இவளின் இரு கரங்கள் பக்தருக்கு அருள் செய்யும் விதமாக உள்ளன. இவளின் பார்வை பக்தரின் துன்பத்தை போக்கி இன்பம் தர வல்லது. சந்திர காண்டா தேவி போருக்கு தயாரான கோலத்தில் காட்சி தருபவள். அதனால் பக்தரின் துன்பத்தையும் விரைந்து தீர்த்து வைப்பாள். இவளை வழிபட தீயசக்திகள் அழியும்; மனதிற்கு சாந்தி கிட்டும்.
இவளின் அருள் கிட்டினால் பாவம் அழியும். இவள் கரத்தில் உள்ள மணியின் ஓசை பக்தரை ரட்சிக்கும். இவள் சர்வ சுபிட்சத்தையும் தந்து அருள் செய்வாள் என நம்புகின்றனர்.
ராகுவினால் துன்பம் நேருமோ என அஞ்சுபவர்கள் இவளைத் துதிக்கலாம். செவ்வாய்க்கிழமைகளில் இவளைத் துதித்தல் துன்பம், தடைகள் நீங்கி வாழ்வில் வளம் பெறுவார்கள்.
தியான ஸ்லோகம்:
பிண்டஜப்ரவராரூடா சண்ட கோபாஸ்த்ரகைர் யுதா |
ப்ரஸாதம் தநுதே மஹ்யம் சந்த்ர கண்டேதி விஸ்ருதா ||
(ஆக்ரோஷமான புலி வாகனத்தில் பவனி வந்து சண்டனை போரில் வென்றவளான சந்த்ரகண்டா அடியேனுக்கு அருளை தந்து காக்கட்டும்.)
மந்திரம்: ஓம் சந்த்ரகண்டாயை நம:
அபிராமி அந்தாதி:
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி, அரு மறைகள்
பழகிச் சிவந்த பதாம்புயத்தாள், பனி மா மதியின்
குழவித் திருமுடிக் கோமளயாமளைக் கொம்பு இருக்க--
இழவுற்று நின்ற நெஞ்சே - இரங்கேல், உனக்கு என் குறையே?
எவருக்கும் இணையில்லாத திருமேனியழகுடையவள். வேதப் பொருளிலே திருநடம் புரிந்த சிவந்த பாதத் தாமரைகளை உடையவள். குளிர்ந்த இளம்பிறையைத் தன் திருமுடிகளில் சூடிய கோமளவல்லி, இனிமையான கொம்பான தேவி இருக்க, நெஞ்சே! ஊக்கம் குறைந்து, ஏக்கம் கொள்ளாதே! உற்ற இடத்தில் ஊன்று கோலாக அன்னை இருக்க உனக்கு ஏன் குறை?
முத்தாரம்மே சரணம் 🚩🕉🪷🙏🏻 #🙏அம்மன் துணை🔱 #✨ இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🎉🪔 #📖 நவராத்திரியின் புராணக் கதைகள் 🌺 #🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
நவராத்திரி நாள் 2 - பிரம்ஹசாரிணி
வசந்த நவராத்திரியின் இரண்டாம் நாளில் அன்னை பிரம்மச்சாரிணியாக வணங்கப்படுகிறாள். 'பிரம்ம' என்றால் தபஸ் என்று பொருள். பிரம்மச்சாரிணி என்றால் 'தப சாரிணி ' என பொருள்படும்.
இமயத்தின் மகளான இந்த தேவி மீண்டும் சிவபெருமானை மணந்து கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டாள்.
இதற்காக பிரம்மசரணி தேவி பல்லாயிரம் ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தாள். ஆயிரம் ஆண்டுகளுக்கு காய்களையும் கனிகளையும் மட்டுமே உண்டு தவம் செய்தாள். அடுத்த நூறு ஆண்டுகளுக்கு இலைகளையும், தழைகளையும் உண்டு தவம் செய்தாள். மூவாயிரம் ஆண்டுகள் பிலவ மரத்தடியில் அமர்ந்து கொண்டு அவள் மீது விழுந்த பிலவ இலையை உணவாகக் கொண்டு கடுந்தவம் புரிந்தாள். அதன் பின் பல ஆண்டுகள் எதுவுமே உண்ணாமல், தண்ணீர்கூட அருந்தாமல் சிவபெருமானையே நினைத்து மனமுருகி பொறுமையோடு கடுந்தவம் புரிந்தாள். இவளின் தவ உக்ரம் மூன்று உலகங்களிலும் எதிரொலித்தது. இறுதியில் சிவன் இவளை மணம் புரிந்தார். பொறுமையும் , தவவலிமையும் பெற்ற பிரம்மசரணி தேவி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அன்பைப் பொழிகிறாள்.
பரமேஸ்வரனின் திரிபுர தாண்டவத்தின்போது, அவர் இடக்கால் பெருவிரலால் வரைந்த கோலம் அஷ்டவசுக் கோலம் எனப்படும். இதிலிருந்து பிரம்மச்சாரிணி தேவி தோன்றினாள் என்பர். இந்த தேவிக்கு காசியில் "துர்க்காகாட்' படித்துறையில் கோவில் உள்ளது. தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியில் அன்னை பிரம்மச்சாரிணியாக அருள் செய்கிறாள்.
ஸச்சிதானந்த ப்ரம்மஸ்வரூபத்தை அடையச் செய்பவள் பிரம்மசாரிணி. உடல் சக்ரங்களில் இவள் 'ஸ்வாதிஷ்தானத்தில் 'இருப்பவள்.எனவே, அவளை ஸ்வாதிஷ்டானச் சக்கரத்தில் சித்தத்தை நிறுத்தித் தியானிக்க வேண்டும் என்பர் யோகிகள்.
பிரம்மச்சாரிணி நன்றி, அறிவு, ஞானம் ஆகியவற்றின் வடிவானவள். இவள் மிகவும் எளிமையாக காட்சி தருபவள். இந்தத் தேவி எப்போதும் தவத்திலேயே இருப்பாள். வெண்ணிற ஆடையுடன் வலக்கையில் ஜபமாலையும், இடக்கையில் கமண்டலமும் தாங்கி வீற்றிருப்பாள். அன்னைக்கு வாகனம் ஏதும் இல்லை. பூமியில் நடப்பவளாக இவள் காட்சிப்படுத்தப்படுகிறாள்.
தன்னை வணங்குவோர்க்கு மிகுந்த பொறுமையைத் தர வல்லவள். அவர்கள் தங்களுடைய துன்பமான நேரத்திலும் மணம் தளராது இருக்க அருள்பவள். இவள் அருள் சோம்பலை நீக்கி சுறுசுறுப்பை தரவல்லது. பிரம்மசரணி தேவியைத் தவறாமல் பிரார்த்தனை செய்பவர்கள் ஞானத்தைப் பெறுகிறார்கள். தன்னை பூஜிப்பவருக்கு பிரம்மசரணி தேவி மன அமைதி , வளமான வாழ்க்கை , நிரந்தரமான சந்தோசம் ஆகியவைகளை அள்ளிக் கொடுக்கிறாள்.
தியான ஸ்லோகம்:
ததாநாகர பத்மாப்யாம் அக்ஷ மாலா கமண்டலூ |
தேவி ப்ரஸ்தது மயி ப்ரம்ஹசாரிணி அநுத்தமா ||
என்பது ப்ரம்ஹசாரிணி துர்காவின் ஸ்லோகம் ஆகும்.
(கமண்டலமும், தண்டமும் தன் தாமரைக் கரத்தில் ஏந்தியவளும் பிரம்மஸ்வரூபம் அடையும் எண்ணம் கொண்டவளுமாம் அன்னை பிரம்மச்சாரிணி எனக்கு அருள வேண்டும்.)
மந்திரம்: ஓம் பிரஹ்மசாரிண்யை நம:
அபிராமி அந்தாதி:
தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்
துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே
எங்கள் இறைவனாகிய சங்கரனின் இல்லத் துணைவியே! அவருக்கே அன்னையாகவும் (பராசக்தி ஈன்ற பரமசிவம்) ஆனவளே! ஆகையால் நீயே யாவர்க்கும் மேலானவள்! ஆகவே, உனக்கே இனி உண்மையான தொண்டு செய்வேன். ஆதலால், இனி நான் துன்பங்களால் துவள மாட்டேன். தாயே!
முத்தாரம்மே சரணம்! 🚩🕉🪷🙏🏻 #🙏அம்மன் துணை🔱 #✨ இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🎉🪔 #📖 நவராத்திரியின் புராணக் கதைகள் 🌺 #🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
நவராத்திரி நாள் 1 - சைலபுத்ரீ
நவதுர்கையாக வழிபடும் போது முதல் நாள் அகில உலகத்தையும் படைத்தும் காத்தும் அழித்தும் விளையாடும் அன்னையை ஷைலபுத்ரி என்று மலைமகளாக வழிபடுகின்றோம்.
மலை அரசன் இமவானின் மகளாக இருப்பதாலும் அன்னைக்கு இவ்வாறு ஒரு பெயர் உண்டு. ஹிமவானின் மகளாக உள்ளதால் ஹேமாவதி என்ற பெயரும் இவளுக்கு உண்டு. பார்வதி, பர்வதகுமாரி, பவானி என்றெல்லாம் அழைக்கப்படும் இவளே, அனைவரிலும் தேவர், மூவர் என யாவரிலும் சக்தியாக நிறைந்து நிற்பவள். இவள் சக்தியின்றி எந்த இயக்கமும் இல்லை. நடைபெறாது.
இவளின் முன் அவதாரத்தில் இவள் தட்சனின் மகளாக பிறந்ததால் 'தாட்சாயினி ' என்றும் கூறுவர். தக்ஷனின் மகள் சதிதேவி, சிவபெருமானின் முதல் மனைவி, தன்னுடைய கணவனைப் பற்றி இழிவாகப் பேசிய தந்தையின் வார்த்தைகளைத் தாங்க முடியாமல், அவர் நடத்திய யாக குண்ட அக்னியில் குதித்து சாம்பலானாள். சதிதேவி மீண்டும் இமயத்தின் மகள் ஷைலபுத்ரி தேவியாகப் பிறந்தாள். இவளே பார்வதியாகப் பிறந்து சிவனைத் திருமணம் செய்து கொண்டாள்.
பிறப்பே இல்லாதவள், விளையாட்டுக்காக ஹிமவானுக்கு மகளாக பிறந்தாள். இதையே, “உமையே! இமயத்து அன்றும் பிறந்தவளே!” என்றும்
“பிறவியும் வம்பே! மலைமகள் என்பதும் நாம் மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே!” என்றும் அபிராமி அந்தாதி கூறுகிறது.
இறைவனின் ஆனந்த தாண்டவத்தின்போது, வலக்காலை தரையில் ஊன்றி இடக்காலைத் தூக்கி ஆடும் நிலையில் வரையப்பட்ட கோலம் மிகவும் போற்றப்படுகிறது. இதை ரிஷிமண்டல கோலம் என்பர். இதிலிருந்துதான் எழுத்துகள் வெளிப்பட்டன. அவற்றுக்குரியவளாக- அந்தக் கோலத்திலிருந்து வெளிப்பட்ட சக்தியை சைலபுத்ரி என்பர். இத்தேவிக்கு காசியிலுள்ள வருணை நதிக்கு அருகில் கோவில் உள்ளது. நவராத்திரியின் முதல் நாளில் இத்தேவியை தரிசிப்பதை மக்கள் பெரும் பேறாகக் கருதுகிறார்கள். மேலும், உத்தர பிரதேசத்தில் உள்ள மர்ஹின காட் என்னும் இடத்தில் சைலபுத்ரீக்கு தனிக்கோவில் உண்டு.
இவள் ஒன்பது சக்ரங்களில் முதல் சக்கரம் மூலாதாரமாக இருக்கிறாள். யோகிகள் தங்களுடைய யோக சாதனைகளை இவளை வணங்கியே துவங்குவர். அதனால் இவளே முதல் சக்தியாகப் போற்றப்படுகிறாள்.
சக்தியின் மூலதாரத்தை அடக்கி ஆளும் ஷைலபுத்ரிதேவி சூலத்தை ஒரு கரத்திலும், தாமரையை இன்னொரு கரத்திலும், பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான் மூவரின் சக்திகளை இணைத்து உருவாகிய காளையை வாகனமாகக் கொண்டு காட்சியளிக்கிறாள்.
இவளை வழிபட மங்களகரமான வாழ்வு கிட்டும்; திருமணத்தடை நீங்கும். ஆஸ்துமா, நீரிழிவு நோய்கள் தீரும். துக்கம் ஏழ்மை அகலும். பொருள், ஆயுள் பலம் விருத்தியாகும்.
பசுமை வர்ணத்தவளாக அதாவது இயற்கை ரூபிணியாக வணங்குகின்றோம் ஷைலபுத்ரி துர்காவை.
தியான ஸ்லோகம் :
வந்தே வாஞ்சித லாபாய சந்த்ரார்த்த க்ருத சேகராம் |
வ்ருஷாரூடாம் சூலதராம் சைல புத்ரீம் யசஸ்விநீம் ||
என்பது ஷைலபுத்ரி துர்காவின் ஸ்துதியாகும்.
(பிறை நிலவை முடியில் சூடி, நந்தி வாகனமேறி பவனி வரும், திரிசூலதாரி, இமவான் மகளாக அவதரித்த ஒப்புயர்வற்ற ஷைல புத்ரியை என்னுடைய எண்ணங்கள் ஈடேற அடியேன் வணங்குகின்றேன். )
மந்திரம்: ஓம் சைலபுத்ர்யை நம:
அபிராமி அந்தாதி :
நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது
ஒன்றேயும் இல்லை, உனக்கே பரம், எனக்கு உள்ள எல்லாம்
அன்றே உனது என்று அளித்து விட்டேன், அழியாத குணக்
குன்றே, அருட்கடலே, இமவான் பெற்ற கோமளமே
உலகமெல்லாம் பெற்றெடுத்த தலைவியாகிய அபிராமி அன்னையின் திரு மார்பகங்களைத் தாமரை மொட்டு என்கிறார்கள். கருணை ததும்பி நிற்கும் முதிர்ந்த கண்களை, மருட்சி மிக்க மான் கண்கள் என்கிறார்கள். முடிவில்லாதவள் என்றெல்லாம் பக்தர்கள் கூறுகின்றார்கள். இவையெல்லாமே மாறுபட்ட கூற்றுகள். இவைகளை நினையும் போது எனக்கு நகைப்பே உண்டாகிறது. இனிமேல் நாம் செய்யக்கூடியது இத்தகைய கற்பனைகளைத் தள்ளி அவளின் உண்மை நிலையை அறிதலேயாகும்.
முத்தாரம்மே சரணம்! 🚩🕉🪷🙏🏻 #🙏அம்மன் துணை🔱 #✨ இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🎉🪔 #📖 நவராத்திரியின் புராணக் கதைகள் 🌺 #🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
ஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகீ
=====================
தேவி மஹாத்மியத்தின் சாரமாகக் கருதப்படும் ஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகீ (Durga Saptashloki in Tamil) எனப்படும் ஏழு ஸ்லோகங்களை ஜபிப்பது ஸ்ரீ தேவி மஹாத்மிய பாராயணத்திற்கு இணையாகக் கருதப்படுகின்றது. அதுவும் அன்னைக்கு உகந்த நவராத்திரி காலத்தில் பாராயணம் செய்வது மிகவும் விஷேசம். தன்னை ஜபம் செய்வோர்க்கு ஸ்ரீ துர்க்கா ஸப்த ச்லோகீ விரும்பத்தக்கவற்றைப் பெறுவதற்கும், விலக்க வேண்டுவனவற்றைத் தள்ளுவதற்கும் அன்னையின் அருளைப் பெற்றுத் தரும்.
சிவ உவாச-
தேவீத்வம் பக்தசுலபே ஸர்வகார்யவிதாயினி| கலௌ ஹி கார்யஸித்த்யர்தமுபாயம் ப்ரூஹி யத்னத: ||
தேவி உவாச-
ஸ்ருணு தேவ ப்ரவக்ஷ்யாமி கலௌ ஸர்வேஷ்டஸாதனம்| மயா தவைவ ஸ்னேஹேனாப்யம்பாஸ்துதி: ப்ரகாஸ்யதே||
ஓம் அஸ்ய ஶ்ரீ துர்கா ஸப்தலோகீ ஸ்தோத்ரமந்த்ரஸ்ய நாராயண ருஷி: அனுப்டுப் சந்த: ஶ்ரீமஹாகாளீ மஹாலக்ஷ்மீ மஹாஸரஸ்வத்யோ தேவதா: ஶ்ரீதுர்கா ப்ரீத்யர்தம் ஸப்தஸ்லோகீ துர்கேபாடே விநியோக:|
ஓம் ஜ்ஞானினாமபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஹி ஸா| பலாதாக்ருஷ்ய மோஹாய மஹா மாயா ப்ரயச்சதி|| (1)
பொருள்: ஐச்வர்யம், தர்மம், புகழ், பொருள், வைராக்கியம், ஞானம் ஆகிய ஆறு குணங்களையும் பூரணமாகப் பெற்ற மஹாமாயா ஸ்வரூபிணியான அந்த தேவி ஆத்ம ஞானம் பெற்ற ஜூவன் முக்தர்களுடைய மனோ விருத்திகளைக் கூட பலாத்காரமாக இழுத்து மோஹிக்கும்படி செய்கின்றாள்.
பலஸ்ருதி: இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால் சர்வ ஜன மோஹம் ஏற்படுவது அநுபவ சித்தம் எனக் கூறப்பட்டிருக்கின்றது.
துர்கே ஸம்ருதா ஹரஸி பீதி-மசேஷ ஜந்தோ: ஸ்வஸ்தை: ஸ்ம்ருதா மதிமதீவ சுபாம் ததாஸி| தாரித்ர்ய-து:க-பய-ஹாரிணி கா த்வதன்யா ஸர்வோபகார- கரணாய ஸதார்த்ர-சித்தா|| (2)
பொருள்: ஏ துர்கே! ஆபத்திற்குள்ளான ஒருவன் உன்னை ஸ்மரித்தால் அவனுக்கு ஏற்படும் பயத்தை நீ அழித்து விடுகின்றாய்.
சௌக்யமாய் இருப்பவர்கள் உன்னை நினைந்து அன்போடு துதித்தால் அவர்களுக்கு நல்ல அறிவை அளித்து மேன் மேலும் நற்காரியங்களிலே ஈடுபடும்படி செய்கின்றாய். வறுமை, துக்கம், பயம் இவற்றையெல்லாம் அபகரிக்கும் ஏ தேவி! உன்னைத் தவிர வேறு யார் தான் எல்லாவித காரியங்களையும் செய்வதற்காக தயாரஸம் ததும்பும் மனத்துடன் கூடியவனாக இருக்கின்றார்? ( வேறு ஒருவருமில்லை)
பலஸ்ருதி: இந்த ஸ்லோக பராயணத்தால் எல்லா துன்பங்களும் நீங்கி வறுமைப்பிணியும் நீங்கி விடும்.
ஸர்வ மங்கள-மாங்கல்யே சிவே ஸர்வார்த-ஸாதிகே| சரண்யே த்ர்யம்பகே கௌரீ(தேவி) நாராயணீ நமோ(அ)ஸ்து தே|| (3)
பொருள்: எல்லா மங்களகரமான வஸ்துக்களுக்கும் மங்கள ஸ்வரூபத்தை அளித்தவளும், ஸ்வயம் மங்கள ஸ்வரூபிணியும் எல்லாவற்றையும் ஸாதிக்கக் கூடியவளும், அனைவராலும் ஆச்ரயிக்க தகுந்தவளும் மூன்று கண்களை உடையவளுமான ஏ தேவி! நாராயணி! உனக்கு நமஸ்காரம்.
சரணாகத-தீனார்த்த-பரித்ராண-பராயணே| ஸர்வஸ்யார்த்திஹரே தேவி நாராயணி நமோ(அ)ஸ்து தே|| (4)
பொருள்: தன்னை சரணமாக அடைந்த எளியவர்கள், துன்புற்றவர்கள் இவர்களைக் காப்பாற்றுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டவளும், அனைவருடைய துன்பங்களையும் அபஹரிப்பவளுமான ஏ தேவி! நாராயணி! உனக்கு நமஸ்காரம்.
பலஸ்ருதி: மேலே கண்ட இரண்டு ஸ்லோகங்களின் பாராயணத்தினால் சகல காரியசித்தியும் பரிபூரணமாக உண்டாகும்.
ஸர்வஸ்ரூபே ஸர்வேஸே ஸர்வ-சக்தி-ஸமன்விதே பயேப்யஸ்-த்ராஹி-நோ தேவி துர்கே தேவி நமோ(அ)ஸ்துதே|| (5)
பொருள்: அனைத்து சேதனா சேதன ஸ்வரூபமாய் இருப்பவளாயும் எல்லாவற்றுக்கும் ஈசுவரியாயும் ஸமஸ்த சக்திகளுடன் கூடியவளுமான ஏ தேவி துர்கே! எங்களை பலவித பாவங்களிலிருந்து காப்பாற்ற வேண்டும். ஏ தேவி! உனக்கு நமஸ்காரம்
ரோகான-சேஷான-பஹம்ஹி துஷ்டா ருஷ்டா து காமான் ஸகலான பீஷ்டான்| த்வாமாஸ்ரிதானாம் ந விபன்ன ராணாம் த்வாமாஸ்ரிதா ஹ்யாஸ்ரயதாம் ப்ரயாந்தி|| (6)
பொருள்: உனது பிரீதி பிரவாகத்தினால் சமஸ்த ரோகங்களையும் அழித்து விடுகின்றாய்! கோபமுண்டானாலோ அவரவர்களுக்கு பிரியமான எல்லாப் பொருள்களையும் அழித்து விடுகின்றாய்! உன்னை அண்டிய மனிதர்களுக்கு ஆபத்து என்பதே உண்டாவதில்லை. உன்னை அண்டியவர்கள் மற்றவர்களால் விரும்பதக்கவர்களாகவும் ஆகிவிடுகின்றனர்.
பலஸ்ருதி: இந்த ஸ்லோக பாராயணத்தால் எல்லா வித்யாப்ராப்திகளும் உண்டாகும்
ஸர்வா-பாதா-ப்ரஸமனம் த்ரைலோக்யஸ்யாகிலேஸ்வரி| ஏவ மேவ த்வயா கார்யமஸ்மத்வைரி விநாஸனம்|| (7)
இதி ஶ்ரீ துர்காஸப்தஸ்லோகீ சம்பூர்ணம்||
பொருள்: எல்லாவற்றுக்கும் ஈச்வரியான ஏ தேவி இவ்விதமே முவுலகங்களுடைய எல்லா விதமான துன்பங்களையும் நிவர்த்தி செய்தல், எங்கள் விரோதிகளை அழித்தல் இவை எப்போழுதும் உன்னால் செய்யப்பட வேண்டும்.
பலஸ்ருதி: இந்த ஸ்லோக பாராயணத்தால் எல்லா துன்பங்களும் நீங்கி விடும்.
இல்லற வாழ்வில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் மேலே கூறிய பயன்கள் எல்லாம் அவசியமானதால் ஸர்வேஸ்வரியின் திருவருளால் அவற்றைப் பெற இந்த “ஸ்ரீ துர்கா ஸப்தச்லோகியின்” பாராயணம் அனைவருக்கும் மிக அவசியம் 🚩🕉🪷🙏🏻 #🙏அம்மன் துணை🔱 #📿நவராத்திரி பூஜை முறை🪔 #📖 நவராத்திரியின் புராணக் கதைகள் 🌺 #✨ இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🎉🪔 #🌼🙏 கோவில்களில் அம்மன் தரிசனம் 🏵️
கன்யா பூஜை
============
இந்தப் பூஜையின் பலனை ஆயிரம் தேவையுடைய ஆதிசேஷனார்கூட அளவிட்டுக் கூறமுடியாது என்று நூல்கள் போதிக்கின்றன.
நவராத்திரி ஒவ்வொரு நாளும் இரவு 2வயதுப் பெண் குழந்தை முதல் முறையே பத்து வயதுப் பெண் குழந்தை வரை
தினம் ஒரு கன்னிகைக்கு ஸ்னாநாதி உபசாரங்களுடன் புது வஸ்திரமளித்து அன்னமளிக்க வேண்டும். ஒரு வயது கன்னிகை கூடாது.
முதல் நாள் இரண்டு வயது கன்னிகையை 'குமாரி' என்ற பெயரால் பூஜிக்க வேண்டும்.
பலன் =தரித்திரநாசம்
இரண்டாவது நாள் என்று பூஜிக்க கன்னிகையை 'திரிமூர்த்தி' மூன்று வயது வேண்டும். இது மாதிரி அந்தந்த பெயரால் கன்னிகைகளைப் பூஜிக்க வேண்டும்.
பலன் -தனதான்யவளம்
நான்கு வயதான கன்னிகை - கல்யாணி=பகை ஒழிதல்
ஐந்து வயதுள்ளவள் - ரோகிணி =. கல்வி வளர்ச்சி
ஆறு வயதுள்ளவள் - காளிகா =துன்பம் நீங்குதல்
ஏழு வயதுள்ளவள் - சண்டிகா =செல்வ வளர்ச்சி
எட்டு வயதுள்ளவள் - சாம்பவீ க்ஷேமம்=
ஒன்பது வயதுள்ளவள் - துர்க்கை -பயம் நீங்குதல்
பத்து வயதுள்ளவர் - சுபத்திரை.
சர்வ மங்களங்களும் உண்டாகும்
பத்து வயதிற்கு உட்பட்ட கன்னிகைகளைநவராத்ரி பூஜைக்கு கன்னிகைகளையே பூஜிக்கவேண்டும். 🚩🕉🪷🙏🏻 #📿நவராத்திரி பூஜை முறை🪔 #🎵 நவராத்திரி பஜனை ✨ #✨ இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🎉🪔 #📖 நவராத்திரியின் புராணக் கதைகள் 🌺 #🪔 நவராத்திரி ஸ்பெஷல் பரிகாரங்கள் 🙏
அருள்மிகு லோகநாயகி சமேத பூமிநாதர் திருக்கோயில்.. ஆரணி.. நவராத்திரி ஆறாம் நாள்
ஏலவார்குழலி உமையம்மை ஏகம்பப்பெருமானை மாவடிக்கீழ் இருந்து வழிபடும் மாவடி சேவை.. 🚩🕉🪷🙏🏻 #🙏அம்மன் துணை🔱 #🙏🏼சிவன் - பார்வதி #🙏🏼ஓம் நமசிவாய #🌼🙏 கோவில்களில் அம்மன் தரிசனம் 🏵️ #✨ இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🎉🪔
ஓம் நமோ நாராயணா 🚩🕉🪷🙏🏻 #🙏பெருமாள் #🌸🙏 புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை 🙏 #புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாடு #🛕புரட்டாசி மாதம் வழிபாடு #🙏🏻புரட்டாசி மாதம்✨
*🌸 புரட்டாசி – 10ஆம் நாள்*
🪔 வாழ்க்கையில் எதுவும் நமக்கே சொந்தம் அல்ல,
அனைத்தும் *ஸ்ரீமன் நாராயணனின்* அருள் பரிசு.
🙏 அதனால் ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு மூச்சும்,
*அவனது திருவடிகளுக்கு* நன்றி செலுத்தும் மனநிலை இருக்க வேண்டும்.
*💫 “கேசவா, நாராயணா, மாதவா”* என்று ஜபித்தால்
அவன் நம் உள்ளத்தில் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பான். 🚩🕉🪷🙏🏻 #🙏பெருமாள் #🌸🙏 புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை 🙏 #புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாடு #🛕புரட்டாசி மாதம் வழிபாடு #🙏🏻புரட்டாசி மாதம்✨