ரவிசங்கர் ராஜா, ஆரணி
ShareChat
click to see wallet page
@ravisankarraja
ravisankarraja
ரவிசங்கர் ராஜா, ஆரணி
@ravisankarraja
நான் நெசவாளரின் மகன் (செங்குந்த/கைக்கோளர் வம்சம்)
ஓம் நமோ நாராயணா 🚩🕉🪷🙏🏻 #🙏பெருமாள் #🌸🙏 புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை 🙏 #புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாடு #🛕புரட்டாசி மாதம் வழிபாடு #🙏🏻புரட்டாசி மாதம்✨
🙏பெருமாள் - ShareChat
00:30
*🌸 புரட்டாசி – 10ஆம் நாள்* 🪔 வாழ்க்கையில் எதுவும் நமக்கே சொந்தம் அல்ல, அனைத்தும் *ஸ்ரீமன் நாராயணனின்* அருள் பரிசு. 🙏 அதனால் ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு மூச்சும், *அவனது திருவடிகளுக்கு* நன்றி செலுத்தும் மனநிலை இருக்க வேண்டும். *💫 “கேசவா, நாராயணா, மாதவா”* என்று ஜபித்தால் அவன் நம் உள்ளத்தில் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பான். 🚩🕉🪷🙏🏻 #🙏பெருமாள் #🌸🙏 புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை 🙏 #புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாடு #🛕புரட்டாசி மாதம் வழிபாடு #🙏🏻புரட்டாசி மாதம்✨
🙏பெருமாள் - ShareChat
*|| சடாரியின் மகத்துவம் ||*_ புரட்டாசி தின சிறப்பு பதிவு புரட்டாசி தின சிறப்பு பதிவு பெருமாள் கோவில்களில் சடாரி வைப்பதன் தத்துவம்..!! வைஷ்ணவ கோவில்களில் பெருமாளை சேவித்த பிறகு., பக்தா்களுக்கு ஆசிர்வாதம் செய்ய சடாரி என்ற மகுடத்தைத் தலையில் வைப்பாா்கள். சற்று கவனித்துப் பாா்த்தால்., அதன் மேல் இரண்டு ஐபாதச்சுவடுகள் பொறிக்கப்பட்டிருக்கும். அதென்ன திருமுடியின் மேல் திருவடி..? பெருமாளை சேவிக்கிறோம்., துளசி தீா்த்தம் ஆனப் பிறகு., சடாரி வைத்துக் கொள்கிறோம். அதன் பின்னணியை பற்றி அறிந்துக் கொள்வோம். ஒருமுறை., தான் வாசம் செய்யும் வைகுண்டத்தில் ஸ்ரீமந் நாராயணன் சயன நிலைக்குச் செல்ல ஆயத்தமாகும் சமயம்., தன்னுடைய திருமுடி., சங்கு., சக்ரம் ஆகியவற்றை எடுத்து., ஆதிசேஷன் மீது வைத்தாா். திடீரென தன்னை தாிசிக்க வந்த முனிவா்கள் குரல் கேட்டு., பாம்புப் படுக்கையில் இருந்து அவசரமாக எழுந்து சென்ற பரந்தாமன்., வழக்கத்துக்கு மாறாக தன் பாதுகைகளை ஆதிசேஷன் அருகில் சயன அறைக்குள்ளேயே விட்டு விட்டாா். ஆதிசேஷன் மீது ஒய்யாரமாக சங்கும்., சக்கரமும்., கிரீடமும் அமர்ந்திருந்தன. ஆனால்., அருகிலேயே பாதுகைகளும் இருந்தது அவற்றுக்குப் பிடிக்கவில்லை. சங்கும்., சக்கரமும் பாதுகைகளைப் பாா்த்து., “கௌரவத்தால் உயா்ந்த நாங்கள் இருக்கும் இடத்தில்., தூசியிலே புரளும் பாதுகைகளான நீங்கள் எப்படி இருக்கலாம்..?” என்று கேட்டன. “இது எங்கள் தவறில்லை. பகவான்தான் எங்களை இங்கே விட்டுச் சென்றாா்” என்றன பாதுகைகள். “பகவான் திருமுடியை அலங்கரிப்பவன் நான். கரங்களை அலங்கரிப்பவா்கள் சங்கும்., சக்கரமும்..! ஆதிசேஷன் மீது அமரும் அருகதை எங்களுக்கு மட்டுமே உண்டு.” “பாதங்களை அலங்கரிக்கும் கேவலமான பாதுகைகளான உங்களுக்கு இங்கே இருக்க அருகதை இல்லை. உங்கள் வழக்கமான இடத்துக்குப் போய்விடுங்கள்” என்று., கோபத்துடன் சொன்னது கிரீடம். இதுவரை பொறுமையாக இருந்த பாதுகைகள்., கிரீடம் இப்படிச் சொன்னதும் கோபத்துடன்., “நாங்கள் பாதங்களை அலங்கரிப்பவா்கள்தான்., ஆனால், கேவலமானவா்கள் அல்ல. தேவா்களும்., மகரிஷிகளும் பகவானின் பாதங்களில் தங்களின் திருமுடிகள் படும்படி நமஸ்கரித்து வணங்குகிறாா்களே தவிர., உங்களைத் தழுவித் தாிசிப்பதில்லை.” “புனிதமான திருவடிகளை அலங்கரிக்கும் நாங்களும் புனிதமானவா்கள்தான்” என்று பதிலுக்கு வாதிட்டன. கிரீடத்துடன்., சங்கும்., சக்கரமும் சேர்ந்து கொண்டதால்., தனித்து நின்ற பாதுகைகளால்., ஏளனப் பேச்சைத் தாங்கிக்கொள்ள முடியாமல்., பகவான் எப்போது வருவாா். அவாிடம் முறையிடலாம் என்று கலங்கி காத்து நின்றன. பகவான் வந்தாா். அவா் பாதத்தில் கண்ணீர் சிந்தி., பாதுகைகள் முறையிட்டன. “இங்கே நடந்ததை நான் அறிவேன். என் சன்னதியில் ஏற்றத் தாழ்வுகள் கிடையாது என்பதை உணராமல்., கிரீடமும்., சங்கும்., சக்கரமும் கா்வம் கொண்டு., புனிதமான உங்களைத் தூற்றியதற்கான பாவ பலனை அனுபவிக்க வேண்டி வரும். தா்மத்தை நிலைநாட்ட., ஸ்ரீராமாவதாரம் நிகழும்போது., சக்கரமும்., சங்கும்., என சகோதரா்களாக பரதன்., சத்ருக்னன் என்ற பெயா்களில் அவதரிப்பாா்கள்.” “அந்த அவதாரத்தில் நான் அரச பதவியை ஏற்று சிம்ஹாசனத்தில் அமர முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும். அப்போது இந்தத் திருமுடியை சிம்ஹாசனத்தில் வைத்து அதன் மீது பாதுகைகளான உங்களை வைத்து., சங்கும்., சக்கரமும் 14 வருடங்கள் உங்களைப் பூஜிப்பாா்கள். அவரவா் வினைக்கேற்ப அவரவா் தேடிக் கொள்ளும் பயன் இது” என்றாா் பகவான். பகவான் சிரசை அலங்கரிக்கும் திருமுடி., ஒருவகையில் உயா்ந்தது என்றால்., அவாின் திருப் பாதங்களை அலங்கரிக்கும் பாதுகைகளும் மற்றொரு வகையில் உயா்ந்தவையே. சடாரியை நம் தலையில் வைத்துக் கொள்ளும் போது நம்முடைய ‘நான்’ என்ற ஆணவம்., அகங்காரம் அழியவேண்டும்., என்பதே சடாரி சாதித்தலின் பின்னணியில் உள்ள தாத்பாியம்..... 🙏🏽 ஓம் நமோ நாராயணா 🚩🕉🪷🙏🏻 #🙏பெருமாள் #🌸🙏 புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை 🙏 #புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாடு #🛕புரட்டாசி மாதம் வழிபாடு #🙏🏻புரட்டாசி மாதம்✨
🙏பெருமாள் - ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா - ShareChat
*புரட்டாசி ஸ்பெஷல் 27* கருட சேவை ! தெய்வ அனுக்கிரகத்துடன், முன்னோர் களின் ஆசியையும் பெற்றுத் தரும் மிக அற்புத மான மாதம் புரட்டாசி. இம்மாதத்தின் பெயரைக் கேட்டதுமே திருமலை திருப்பதியும், அங்கு உறையும் திருவேங்கடவனுமே நம் நினைவுக்கு வருவர். ஆமாம், பெருமாள் மாதம் என்று குறிப்பிடும் அளவுக்கு புண்ணியம் பெற்றது புரட்டாசி. இம்மாதத்தில் வரும் சனிக்கிழமை வழிபாடுகள் மட்டுமின்றி, அனந்த விரதம், அஜா மற்றும் பத்மநாபா ஏகாதசிகள் ஆகிய விரதங்களும் திருமாலுக்கு மிக உகந்தவை. கருடசேவையும் முன்னோர் ஆசியும் ! புரட்டாசியில் எண்ணற்ற கோயில்களில் பிரம்மோற்ஸவம் நிகழும். அதிலும் திருப்பதி பிரம்மோற்ஸவம் மிகப் பிரசித்திப் பெற்றது. வாழ்வில் ஒருமுறையேனும் அந்த வைபவத்தைத் தரிசிப்பதை பெரும் கொடுப்பினையாகச் சொல்வார்கள் நம் பெரியவர்கள். அந்த வைபவத்தில் மற்ற ஸேவைகளைத் தரிசிக்காவிட்டாலும், கருடசேவையை மட்டுமாவது அவசியம் தரிசிக்கவேண்டும். ஏன் தெரியுமா? செய்த பாவத்தின் காரணமாக நரகத்தில் உழலும் ஆத்மாக்கள், மோட்சப் பிராப்தி இருந்தும், ஊழ்வினை காரணமாக மோட்சத்தை எட்ட இயலாத ஆத்மாக்கள், கருட ஸேவையைத் தரிசிக்க திரள்வார்கள் என்கின்றன புராணங்கள். அந்த ஒருநாள் மட்டும், அவர்கள் தங்களின் துயரத் தளைகளில் இருந்து விடுபடுவதற்கான அனுமதியை பெருமாளிடம் கருட பகவானே கேட்டுப் பெற்றாராம். அதேபோல், அன்று பெருமாளைத் தரிசிக்க வரும் பூலோக மாந்தர்களுக்கும் திருவருள் புரியும்படி வரம் கேட்டு வாங்கினாராம் கருடன். அப்படி, கருடசேவையைத் தரிசிக்க வரும் பித்ருக்கள், தங்களின் சந்ததியினர் வந்திருக்கிறார்களா என்று தேடுவர். அவர்களை தியானிப்பதுடன், அவர்களின் விமோசனத்துக்காகவும் ஸ்வாமியிடம் வேண்டிக்கொள்ள வேண்டும்’ என்பது ஐதீகம்.இன்றைக்கும், கருடஸேவையைத் தரிசித்த கையோடு சிறிது நேரம் வானத்தை உற்று நோக்கி தியானிக்கும் வழக்கம், பக்தர்கள் சிலரிடம் உண்டு. இதனால் ஸ்வாமியின் திருவருளோடு, தங்கள் முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும் என்பது அவர்களது நம்பிக்கை. பித்ரு தோஷம் உள்ளவர்கள் கருட சேவையைத் தரிசித்து வந்தால், அந்த தோஷம் நீங்கும்; சந்ததி செழிக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் இனிதே நிறைவேறும். ஏழுமலையானுக்கு உகந்த புரட்டாசியில், திருப்பதிக்குச் சென்று பிரம்மோற்ஸவம்த்தில் கலந்துகொள்வதுடன், கருடசேவையையும் தரிசித்து அருள்பெற்று வாருங்கள். *கோவிந்தா ஹரி* *கோவிந்தா* 🚩🕉🪷🙏🏻 #🙏பெருமாள் #🌸🙏 புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை 🙏 #புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாடு #🛕புரட்டாசி மாதம் வழிபாடு #🙏🏻புரட்டாசி மாதம்✨
🙏பெருமாள் - ShareChat
00:11
*புரட்டாசி ஸ்பெஷல்* ! *பதிவு 30* *அப்பனுக்கு சங்காழி அளித்த பிரான்*.......!!! *ஸ்ரீநிவாசன் சங்கு சக்கரமேந்திச் சைவர்களின் சந்தேகம் தீர்த்தல்* . *குரு பரம்பரை ப்ரபாவத்திலிருந்து ஒரு நிகழ்வு*.....! உடையவரை அவரின் சிஷ்யர்கள் தண்டனிட்டு ‘தேவரீர் இதர சமயங்களை நிராகரித்து நம் ஸ்ரீவைஷ்ணவ தரிசனத்தை ஸ்தாபனம் பண்ணி அருளினீர். இனி தீதில் நன்னெறி காட்டித் தேசமெங்கும் திரிந்து திக்விஜயம் செய்து அங்குள்ள திவ்ய தேசங்களையும் சேவித்து வரவேண்டும்’ என்று விண்ணப்பம் செய்தார்கள். இதற்கு நம்பெருமாளும் இசைந்தருள, உடையவரும் சோழ மண்டலம் தொடங்கி, பாண்டிய மண்டல திவ்ய தேசங்களைச் சேவித்து, அங்கிருந்து மலையாள நாட்டு திவ்ய தேசங்களுக்குச் சென்று, வட நாட்டுக்கு எழுந்தருளி, திருசாலக்கிராமம், திருவதரி முதலான திவ்ய தேசங்களையும் சேவித்தபடியே திருமலை வந்தடைந்தார். தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும் சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் - சூழும் திரண்டருவி பாயும் திருமலைமே லெந்தைக்கு இரண்டுருவும் ஒன்றா யிசைந்து என்று ஆழ்வார் அருளினபடி திருமலையில் எழுந்தருளியிருக்கும் ஜகத்காரணனான ஸ்ரீநிவாசனுக்கு இலக்கணமாக நீள்முடியும், சங்கு சக்கர திவ்யாயுதங்களும், திரு யஜ்ஞயோபவீதமும் கூடியிருக்க, அந்த ஜகத்காரணனை உபாஸனை செய்யும் ஜீவாத்மாவுக்கு பொருந்தும்படியான தாழ்சடை, ஒள்ளிய மழுப்படை நாகாபரணம் போன்ற சிவ-லக்ஷணங்களும் சேர்ந்திருந்தபடியால், சைவர்கள் ஸ்ரீநிவாசனை தங்கள் சிவன் என்று வாதாடினார்கள். அவர்கள் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேளாததால், உடையவர் “உங்கள் தேவனுக்கு அடையாளமான திருசூலத்தையும், உடுக்கையும், எங்கள் பெருமானுக்கு அடையாளமான சங்கு சக்கரத்தையும் இத்தெய்வத்திற்கு முன்னே வைப்போம். எதை விரும்பி ஏற்றுக்கொள்கிறாரோ, அத்தெய்வமாக கொள்வோம் என்று கூறினார். எல்லோரும் சம்மதித்தனர். அதுபோலவே, ஆயுதங்களை எம்பெருமான் திருமுன்பே வைத்துக் கர்பக்ருஹத்தில் யாரும் இல்லாதபடியும் புகமுடியாதபடியும் நன்கு ஆராய்ந்து கதவை பூட்டிவைத்தனர். *மறுநாள் விடிந்த பிறகு கதவை திறந்து பார்க்கையில்*, *எம்பெருமான் சங்கு சக்கரம் கையில் ஏந்தி ஸேவை ஸாதித்தான்*. *இதைக் கண்ட சைவர்கள் தம் அறியாமைக்கு வருந்தி ஸ்ரீநிவாசனின் புகழ் பாடினார்கள்*. *எம்பெருமானாரோ ஆனந்தக் கண்ணீர் பெருகி ஸ்ரீநிவாசனை வணங்கி நின்றார்*. “ *அப்பனுக்கு சங்காழி அளித்த பிரான்*” என்று இராமானுஜர் திருமஞ்சன கட்டியத்தில் நாம் சேவிப்பதின் தாத்பரியமும் இதுவே. உய்ய ஒரே வழி உடையவர் திருவடி🙏 திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம் 🙏 ஓம் நமோ வேங்கடேசாய 🙏 *கோவிந்தா ஹரி* *கோவிந்தா*🙏 ஓம் நமோ நாராயணாய 🚩🕉🪷🙏🏻 #🙏பெருமாள் #🌸🙏 புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை 🙏 #புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாடு #🛕புரட்டாசி மாதம் வழிபாடு #🙏🏻புரட்டாசி மாதம்✨
🙏பெருமாள் - nttp; / /temple dinamala ntcp / /templl D NAMALARI DINAMALARI nttp; / /temple dinamala ntcp / /templl D NAMALARI DINAMALARI - ShareChat
*புரட்டாசி ஸ்பெஷல்* *பதிவு 29* *திருப்பதி உண்டியல்*.... 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷 *கோவிந்தா ஹரி* *கோவிந்தா*🙏 *பிரமிக்கவைக்கும் உண்டியல் அதிசயங்கள் திருப்பதியில் மட்டுமே சாத்தியம்*. "காவாளம் " என்று சொல்லப்படும் பிரமாண்ட உண்டியல்கள் அவ்வப்போது நிரம்பியதும் உடனுக்குடன் அதை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு உண்டியலைக் கொண்டு வந்து வைத்துவிடுவார்கள். காலியாக இருந்த உண்டியல் ஒரே நாளிலே நிறைந்து உடனடியாக நிறைந்து வேறு உண்டியல் மாற்றும் நிகழ்வு திருமலையில் சாதாரணம். *ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்று தெரியுமா*..??? ஏழுமலையான் தரிசனத்தை முடித்துவிட்டு உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்காக நீங்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். சரியாக உங்கள் முறை வரும்போது நீங்கள் பணம் செலுத்திய அல்லது செலுத்துவதற்குக் காத்திருக்கிற நேரத்தில் அந்த உண்டியல் நிரம்பிவிட்டது என்பதை தேவஸ்தான ஊழியர்கள் அறிந்து கொண்டால் அதற்கு மேல் போட அனுமதிக்க மாட்டார்கள். உண்டியலில் சீல் வைத்து அங்கிருந்து அப்புறப்படுத்தும் வேளையில் அந்த உண்டியலுக்கு அருகில் நிற்கின்ற இரண்டு பக்தர்களைத் தங்களுடன் அழைத்துச் செல்வார்கள். "இந்த உண்டியல் நிரம்பிவிட்டது . இதைக்கச்சிதமாக சீல் செய்து எடுத்துக் கொண்டு போனார்கள். அப்போது நான் உடன் இருந்தேன் " என்று அந்த இரண்டு பக்தரும் சாட்சிக் கையெழுத்து போட வேண்டுமாம். தைரியமாக கையெழுத்துப் போடலாம். இது சம்பிரதாயத்துக்காக செய்யப்படுகின்ற ஒன்று. ஆதி காலத்திலிருந்து பின்பற்றப்படும் நடைமுறை. ஆகவே அதை இன்றும் விடாமல் கடைபிடித்து வருகிறது தேவஸ்தானம். இப்படி சாட்சிக் கையெழுத்துப் போட்ட இரண்டு நபர்களுக்கு என்ன வெகுமதி தெரியுமா...??? மீண்டும் ஒருமுறை ஏழுமலையான் தரிசனம் இலவசமாக, அதுவும் வெகு அருகில்அழைத்துச் சென்று தரிசனம் செய்து வைப்பார்கள். இந்த தரிசனத்தின் போது உங்களை எவரும் அவசரப் படுத்த மாட்டார்கள். நின்று நிதானமாக பிரார்த்தனை செய்து விட்டு வரலாம்..,.. *கோவிந்தா ஹரி* *கோவிந்தா*...🙏 ஓம் நமோ நாராயணாய 🙏 ஓம் நமோ வெங்கடேசாய 🚩🕉🪷🙏🏻 #🙏பெருமாள் #🌸🙏 புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை 🙏 #புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாடு #🛕புரட்டாசி மாதம் வழிபாடு #🙏🏻புரட்டாசி மாதம்✨
🙏பெருமாள் - ShareChat
*புரட்டாசி ஸ்பெஷல்* *பதிவு 28* 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷 *ஏழுமலையான் தளிகை*: 🪷🪷🪷🪷🪷🪷🪷 கோவிந்தா ஹரி கோவிந்தா 🙏 திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம்.புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமையில் ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு படைப்பது தளியல் ஆகும். வீடு வாசலை சுத்தம் செய்து பூஜை அறையில் விளக்கேற்றி படைக்கும் இடத்தில் படையல் கோலம் போட வேண்டும். தளியலுக்கு தேவையான சர்க்கரை பொங்கல்,எள்ளு பாயசம், புளி சாதம், தயிர் சாதம், தளியல் வடை, கொண்டை கடலை சுண்டலுடன் வாழைக்காய் பொரியல் ஆகிய நைவேத்யங்கள் தயார் செய்ய வேண்டும். குத்து விளக்கிற்கு குங்குமம் வைத்து துளசி மாலை அணிய வேண்டும். குத்து விளக்கின் ஐந்து முகங்களையும் நெய் தீபம் ஏற்றி கோலத்தின் இருபுறமும் வைக்க வேண்டும். மூன்று நுனி வாழை இலைகளை விளக்கிற்கு முன்புறம் போட்டு நைவேதயங்களை இலையில் பரிமார வேண்டும். உத்தரணி அல்லது ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் துளசியை கலந்து வைக்கவும். தேங்காய், வாழைப்பழம், பூ, வெற்றிலை, பாக்கு, சூடம் விபூதி குங்குமம் இவைகளை தட்டில் வைத்து தூப தீப ஆராதனை செய்து "கோவிந்தா" என்ற நாமத்துடன் புரட்டாசி சனிக்கிழமை ஸ்ரீ வெங்கடேச பெருமாளை வழிபடுவது பழக்கம். ஓம் நமோ வேங்கடேசாய 🙏 *கோவிந்தா ஹரி* *கோவிந்தா* 🙏 ஓம் நமோ நாராயணாய 🚩🕉🪷🙏🏻 #🙏பெருமாள் #🌸🙏 புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை 🙏 #புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாடு #🛕புரட்டாசி மாதம் வழிபாடு #🙏🏻புரட்டாசி மாதம்✨
🙏பெருமாள் - ShareChat
*புரட்டாசி ஸ்பெஷல் 26* *இல்லத்தில் சுபிட்சம் !* புரட்டாசி மாதத்தில், துளசியை வணங்குவதும் துளசிச் செடிக்கு தண்ணீர் விடுவதும் விசேஷம். இதுவரை இல்லாவிட்டாலும் வீட்டில் துளசிச்செடி வைத்து, புரட்டாசி மாதத்தில் வளர்க்கத் தொடங்குங்கள். உங்கள் இல்லத்தில் அனைத்து சுபிட்சங்களையும் நிறைத்து அருள்பாலிப்பார்கள் மகாலக்ஷ்மியும் வேங்கடவனும். புரட்டாசி மாதம் புண்ணியம் நிறைந்த மாதம். புரட்டாசி மாதம் என்பது வேங்கடவனுக்கு உரிய மாதம். புரட்டாசி என்பது விரதம் மேற்கொள்வதற்கு உண்டான மாதம். புரட்டாசி மாதம் திருமாலை தரிசிப்பதற்கு உண்டான மாதம். புரட்டாசி மாதம் என்பது துளசிக்கும் நமக்குமான மாதம். இந்த மாதத்தில் ‘கோவிந்தா’ என்று பெருமாளின் திருநாமம் சொல்லி, எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் அவை யாவும் வெற்றியில் முடியும். காரியம் யாவும் வெற்றியைத் தரும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். துளசி, பொதுவாகவே மணம் கமழக்கூடியதுதான் என்றாலும் புரட்டாசி மாதத்தில் இன்னும் மகிழ்வுடன் தன் நறுமணத்தைப் பரப்பும் என்பதாக ஐதீகம். இந்த மாதத்தில், தன் சக்தியையும் நறுமணத்தையும் வீரிய குணங்களையும் ஒருங்கே கொண்டு, தன்னை வணங்கும் பக்தர்களையும் காத்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். துளசியில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். மகாவிஷ்ணுவின் திருமார்பில் அமர்ந்திருக்கும் மகாலக்ஷ்மி, அங்கிருந்தபடியே உலகையும் மக்களையும் ஆசீர்வதித்துக் காத்தருளும் மகாலக்ஷ்மி, துளசியில் வாசம் செய்கிறாள். இந்த மாதத்தில், பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தும் போது, தன் மணாளனனின் தோளில் சேரப்போகிறோம், அணிகலன் போல் நம்மை சார்த்தப் போகிறார்கள் என்றெண்ணி மகிழ்ந்து போகிறாளாம் மகாலக்ஷ்மி. துளசியானது புனிதத் தன்மை வாய்ந்தது. மகாலக்ஷ்மி வாசம் செய்யக்கூடியது. பெருமாளுக்கு சார்த்தப்படும் முக்கிய பூ உள்ளிட்டவற்றில் துளசிக்கு மகத்தானதொரு இடமுண்டு. துளசிச் செடியை வளர்ப்பதும் துளசிச் செடியை சுற்றி வந்து ஸேவிப்பதும் மகா புண்ணியம் என்று போற்றுகிறது புராணம். மேலும், இதுவரை வீட்டில் துளசிச்செடி இல்லாவிட்டாலும் கூட, வளர்க்காவிட்டாலும் கூட, புரட்டாசி மாதத்தில் துளசிச்செடியை வீட்டில் வளர்ப்பது சகல ஐஸ்வர்யங்களும் தந்தருளும். இல்லத்தில் சுபிட்சம் குடிகொள்ளும். துளசிச்செடி வளர்ப்பதால் இல்லத்திலும் உள்ளத்திலும் அமைதி நிலவும். ஆனந்தம் வழியும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். ஓம் நமோ வேங்கடேசாய ! கோவிந்தா ஹரி கோவிந்தா 🚩🕉🪷🙏🏻 #🙏பெருமாள் #🌸🙏 புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை 🙏 #புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாடு #🛕புரட்டாசி மாதம் வழிபாடு #🙏🏻புரட்டாசி மாதம்✨
🙏பெருமாள் - ல்லத்தில் சுபிட்சம் ல்லத்தில் சுபிட்சம் - ShareChat
*புரட்டாசி ஸ்பெஷல் 25* *ஓம் நமோ நாராயணாய நம என்று சொல்வது ஏன்?* புரட்டாசி சனியன்று நாராயணாய நமக என்ற எட்டெழுத்து மந்திரத்தை தவறாமல் சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை எந்த அளவுக்கு உளப்பூர்வமாக உச்சரிக்கிறோமோ அந்த அளவுக்கு மனம் பக்குவப்படும். இதிலுள்ள நம என்ற சொல்லுக்கு உனக்கே நான் உரியவன் என்பது அர்த்தம். ஓம் காரமாக விளங்கும் நாராயணனே உனக்கே நான் உரியவன் என்பது மந்திரத்தின் முழுப்பொருள். அதாவதுஉலகத்தில் வந்து விட்ட பிறகு, என்றோ ஒருநாள் செல்லப்போகிறோம். அவ்வாறு செல்லும் நாளில் நாராயணா! உன்னால் வந்த நாங்கள் உன் இடத்திற்கே திரும்பி வந்து விடுகிறோம் என்று சரணாகதி அடைவதாக அர்த்தம். கலியுகக் கொடுமைகளில் இருந்து தப்பித்து, பூலோகத்தில் சுகமாகவும், நிம்மதியாகவும் வாழ ஓம் நமோ நாராயணாய என்று சொல்வது பொருத்தமானது. கடவுளை விட அவருடைய திருநாமத்திற்கு அரிய சக்தி உண்டு. திரவுபதியின் துன்பத்தைப் போக்கியது கோவிந்தா என்னும் நாமம். முதலையிடம் சிக்கிய கஜேந்திர யானையின் துன்பம் தீர்த்தது ஆதிமூலம் என்ற திருநாமம். கலியுகத்தில், இவ்வாறான நாமஜெபம் மூலமாக கடவுளின் திருவடியை எளிதாக அடைய முடியும். கட்டித்தங்கம் போல கடவுள், ஆபரணத்தங்கம் போல அவரின் திருநாமம் என்று இதனைச் சொல்வதுண்டு. ஆபரணத் தங்கமான கடவுளின் திருநாமத்தை நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லி, யாரும் எளிதாகச் சேமிக்கலாம். மிக விசேஷமாக ஸ்ரீ வைஷ்ணவத்தில் மட்டுமே இறைவனை பகவான் என்ற அடைமொழியில் அழைக்கிறோம். ஞானம்,சக்தி,பலம்,ஐஸ்வர்யம்,வீரியம்,தேஜஸ் ஆகிய ஆறு வகையான குணங்களை ஒன்றாக கொண்டவன் என்பதே பகவான் என்ற வார்த்தையின் உண்மை பொருளாகும் இத்தகைய பகவான் சத்யத்வம்,ஞானத்வம்,அநந்தத்வம்,ஆனந்த்வம்,அமலத்வம் என்ற உண்மை,அறிவு,எல்லை இல்லா நிலை,இன்பம்,தூய்மை ஆகிய வடிவோடு பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாகவும் நம்ப படுகிறது. இறைவனின் திருகுணங்களாக தென்கலை பிரிவினர் சொல்லும் செளலப்யம்,செளசீல்யம்,காருண்யம் ஆகியவைகளும் இங்கே சிந்திக்க தக்கதாகும். இவ்வளவு பெருமை வாய்ந்த திருமாலின் அருள் அமுதத்தை சாதாரண மனிதன் கூட நேருக்கு நேராக அனுபவிக்கும் ஒரு மார்க்கத்தை ஸ்ரீ வைஷ்ணவம் உலகுக்கு தந்துள்ளது அந்த அமுதம் என்னவென்றால் ஓம் நமோ நாராயணாய என்று எட்டெழுத்து மந்திரமாகும் இந்த மந்திரத்தின் ஆழ்ந்த அகன்ற விரிவான பொருளை நம்மால் சிந்திக்க முடியாது என்றாலும் ஓரளவாவது சிந்திக்கும் தகுதியை நமக்கு நாராயணன் தந்துள்ளான் இதில் வரும் ஓம் என்ற பிரணவம் மூல மந்திரம் என்பது நாம் அறிவோம் வைஷ்ணவ சித்தாந்தபடி அ,உ,ம என்ற மூன்று எழுத்துகளின் சேர்க்கை ஒலியே ஓம் என்பதாகும் இதனுள் இருக்கிறன அகரம் இறைவனையும்,மகரம் உயிரையும்,உகரம் படைத்தலையும் சுட்டுவதாகும். உயிரானது இறைவன் ஒருவனுக்கே அடிமை என்பதை காட்டுவதே மந்திரத்தின் கடைசி பகுதியில் வரும் நம என்ற வார்த்தையாகும் நம என்ற வார்த்தையில் ந என்ற முதல் எழுத்தில் இல்லை என்ற பொருள் மறைந்திருக்கிறது மீதமுள்ள மகாரம் உயிரை குறிப்பதாக அறிந்தோம் அதாவது இதன் பொருள் நானும் எனக்குறியவன் அல்ல என்பதாகும். அப்படி என்றால் நான் யார்க்குறியவன் சந்தேகமே வேண்டாம் நான் நாராயணன் ஒருவனுக்கே அடிமை அவனுக்கே நான் தாசானு தாசன் இந்த மந்திரத்தில் மீதமுள்ள நாராயணாய என்பது இதை தான் சொல்லாமல் சொல்கிறது மேலும் இதில் உள்ள நார,அயன,ஆய என்ற வார்த்தைகளுக்கு தனிதனி பொருள் உண்டு. நார என்பது நரனிடம் இருந்து தோன்றிய உயிர்களை குறிக்கும்.அயன என்று சொல் உபாயம்,பலன்,ஆதாரம் என்ற பல பொருள்களை தருகிறது. இவை இரண்டும் சேர்ந்த நாராயண என்ற சொல் உயிர்களுக்கு ஆதாரம் என்ற பொருளை காட்டுகிறது. கடைசியாக உள்ள ஆய என்ற பதம் பணி என்ற பொருளை கொண்டது அதாவது உயிர்கள் எப்போதும் இறைவனின் பணிக்காகவே உரியவைகள் என்பது இதன் அர்த்தமாகும் ஆக ஓம் நமோ நாராயணாய என்ற வார்த்தைகள் மனிதனின் ஆணவம் அழிகிறது ஆண்மை பிறக்கிறது ஆன்ம நேய ஒருமைப்பாடு ஏற்படுகிறது. இதனால் தான் பெரியாழ்வார் மூலம் ஆகிய ஒற்றை எழுத்தை மூன்று மாத்திரை உள்எழ வாங்கி மேலை வண்ணனை மேவுதிர் ஆகில் விண்ண கத்தில் மேவலும் ஆமே என்று சொல்கிறார் அதாவது எட்டெழுத்து மந்திரத்தை மூன்று மாத்திரை அளவு மூச்சு காற்றுடன் உள்ளுக்குள் இழுத்து தியானம் செய்தால் இறைவனாகிய திருமாலின் பரமபதம் கிடைக்கும் என்பது ஆழ்வாரின் அமுத மொழியாகும் வைஷ்ணவம் வெறுமனே வாழும் நெறியாக மட்டுமல்லாது இறைவனோடு பக்தனை கொண்டு சேர்க்கும் நெறியாகவும் இருக்கிறது என்று பல பெரியவர்கள் சத்திய வாக்காக சொல்வது இதனால் தான் எனவே நாமும் ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ நாராயணாய என்று மீண்டும் மீண்டும் சொல்லி அடியவரின் துன்பங்களை களைந்து பாவங்களை போக்கி குழந்தை போல் அரவணைத்து கொள்ளும் திருமாலின் திவ்விய பாத கமலங்களை சிக்கென பிடித்து வணங்குவோம் கோவிந்தா ஹரி கோவிந்தா 🚩🕉🪷🙏🏻 #🙏பெருமாள் #🌸🙏 புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை 🙏 #புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாடு #🛕புரட்டாசி மாதம் வழிபாடு #🙏🏻புரட்டாசி மாதம்✨
🙏பெருமாள் - ShareChat
00:19
*புரட்டாசி ஸ்பெஷல் 24* புண்ணியம் நிறைந்த புரட்டாசி_மாதம் !! 🌟 புரட்டாசி மாதம், தமிழ் மாதங்களில் ஆறாவது மாதமாகும். சூரியன் கன்னி ராசியில் இருக்கும் நாட்களைத்தான் நாம் புரட்டாசி மாதம் என்கிறோம். 🌟 பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி. புரட்டாசியில் பக்தர்கள் விரதமிருந்து பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபடுவார்கள். 🌟 புரட்டாசி என்றாலே திருமலை திருப்பதியும் அங்கு உறையும், திருவேங்கடவனும் நம் நினைவுக்கு வருவர். புரட்டாசி மாதம் புனித மாதமாக இருப்பதாலும், பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதாலும் வைணவ கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். முன்னோர்களின் ஆசியை பெற்றுத்தரும் மிக அற்புதமான மாதம் புரட்டாசி மாதமாகும். புரட்டாசி மாதத்தில் இருக்கும் சிறப்புகள் என்னென்ன? புரட்டாசி சனி : 🌟 புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்வது சிறப்பை தரும். திருப்பதியில் புரட்டாசி சனிக்கிழமைகளில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பாகும். 🌟 புரட்டாசி சனிக்கிழமை விரதத்தை மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும், செல்வம் செழிக்கும் மற்றும் துன்பங்கள் விலகும். 🌟 புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைத்து விரதமிருந்தால் சனி தோஷம் நீங்கும். புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது? 🌟 புரட்டாசி மாதம் வெயிலும், காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம். 🌟 இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது. 🌟 இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும். 🌟 அதனால் தான் புரட்டாசி மாதத்தில் அசைவத்தை ஒதுக்கி வைத்தனர் நம் முன்னோர்கள். புரட்டாசி அமாவாசை : 🌟 மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம் என்று கருதப்படுகிறது. பட்சம் என்றால், 15 நாட்கள் என்பது பொருள். அதாவது மறைந்த நமது முன்னோர்கள், 15 நாட்கள் நம்மோடு தங்கக்கூடிய காலங்களை மகாளய பட்சம் என்று கூறுகிறோம். 🌟 மஹாளய பட்சம், புரட்டாசி மாத பௌர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதியில் துவங்கி அமாவாசை வரை நீடிக்கிறது. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையே, மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. நவராத்திரி : 🌟 மக்களின் பண்பாட்டை வளர்க்கும் விழாக்களில் முக்கியமானது நவராத்திரி. புரட்டாசி மாதம் அமாவாசைக்கு பிறகு பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே நவராத்திரி ஆகும். வீடுகளில் நவராத்திரி பூஜையை சிறப்பாக கொண்டாடுவார்கள். கோவிந்தா ஹரி கோவிந்தா 🚩🕉🪷🙏🏻 #🙏பெருமாள் #🌸🙏 புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை 🙏 #புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாடு #🛕புரட்டாசி மாதம் வழிபாடு #🙏🏻புரட்டாசி மாதம்✨
🙏பெருமாள் - ٥٣ ٧٧ 4[6 ٥٣ ٧٧ 4[6 - ShareChat