💕குறும்புக்காரன்🐬
ShareChat
click to see wallet page
@rengavamba
rengavamba
💕குறும்புக்காரன்🐬
@rengavamba
என் கடன் பணி செய்து கிடப்பதே.
#இரவு வணக்கம் ஒரு வழியாக தனித்துபோட்டி என அறிவித்துவிட்டார் விஜயண்ணா, அவருடன் எந்த கட்சியும் கூட்டணி வைப்பதாக தெரியவில்லை அவர் எதிர்பார்த்த காங்கிரசும் அவர் முதுகில் ஏறி திமுகவிடம் பெரிய கிளையினை பற்றி கொண்டு ஓடிவிட்டது போலிருக்கின்றது இதனால் அவர் 234 தொகுதிகளிலும் தனியாக நிற்கவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளபட்டிருக்கின்றார், இதனால் பெரும் சவாலை எதிர்கொள்கின்றார் அதாவது அணில் குஞ்சுகள் தியேட்டரில் விசிலடித்து அல்லது விஜய்க்காக யாரையாவது மிரட்டியே பழக்கபட்டவை அவைகளிடம் விசிலடிப்பினை எதிர்பார்க்கலாமே தவிர தேர்தல் பணியினை எதிர்பார்ப்பது கடினம் , காரணம் அப்படி ஒன்று இருப்பதே அவர்களுக்கு தெரியாது தேர்தல் என்பது மாபெரும் பணத்தை கோரும் விஷயமாகிவிட்டதால் செலவினை யார் செய்வார்கள் என்பதும் கேள்வி, விஜய் தரப்பு பெரும் பணம் இறக்கினால் கண் கொத்தி பாம்பாக இருக்கும் சில அமைப்புகள் நிதிமூலம் கேட்டு பெரும் தொல்லை கொடுப்பார்கள், இது வில்லங்கமானது இதனால் தொகுதிரீதியாக பணம் செலவழிப்பது முதல் தேர்தல் பணிகள் வரை அணில்குஞ்சுகளுக்கு சவால்கள் அதிகம் அங்கே அவை இவற்றை எதிர்கொள்வது கடினம் அவர்களுக்கு கிடைத்திருக்கும் விசில் சின்னமும் சில நிபந்தனைக்கு உட்பட்டே கொடுக்கபட்டிருக்கின்றது, சில தொகுதிகளில் இதே விசில் சின்னத்துடன் சுயேட்சைகள் நிற்கவும் வாய்ப்பு உண்டு, அப்போது அணில்குஞ்சுகளே தடுமாற கூடும் ஒரு பக்கம் தேர்தல் பணி, ஒரு பக்கம் பெரும் செலவு, ஒரு பக்கம் அணில்குஞ்சுகளின் உள்வீட்டு சண்டை, ஒரு பக்கம் எதிர்கட்சிகளின் வியூகம் இவற்றுகிடையில் விஜயண்ணாவின் நிலை வரும் தேர்தலில் எப்படி இருக்கும் என்றால் இப்படித்தான் "அமைதியா வேலைபாருங்கடா அப்ப்ரசெண்டிகளா,, சோதிக்கிறாங்களே என்னய... அடேய் பல கோடி காண்ட்ராக்ட்டுடா.. இப்படி சல்லி சல்லியா நொறுக்கிட்டானுகளே" ஆம், பிரென்ட்ஸ் படத்தின் பிரபலமான காமெடி வசனம் தனக்கே வரும் என அவர் எதிர்பார்த்திருக்கமாட்டார், என்ன செய்வது? சற்றும் எதிர்பாராதெல்லாம் நடப்பதுதான் வாழ்க்கை... #ரெங்கா! #renga-vamba! முகநூல் பதிவு தரவு இருந்து
இரவு வணக்கம் - ShareChat
#🚨கற்றது அரசியல் ✌️ #அரசியல் பழகு #கற்றுது அரசியல் #ரெங்கா! #renga-vamba! விஜயின் அரசியல் பயணம். புஷ்ஷி ஆனந்த் பேச்சு. (Bose Arc FB தரவு
🚨கற்றது அரசியல் ✌️ - ShareChat
01:35
#வம்பா ஸ்டில் #ரெங்கா! #renga-vamba!
வம்பா ஸ்டில் - ShareChat
44 years of #வாழ்வே_மாயம் 26, ஜனவரி. 1982 கமல், ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியாவின் ‘வாழ்வே மாயம்’ - கங்கை அமரன் இசையில் பாட்டெல்லாம் ஹிட்டு! இந்து தமிழ் திசை நாளிதழ். 26_01_2020 எத்தனை வருடங்கள் கடந்தாலும், சில படங்கள் தலைமுறை கடந்தும் மக்களால் மறக்கமுடியாத படங்களாக அமைந்துவிடும். அது குடும்பப் படமாக இருக்கலாம். ஆக்‌ஷன் படமாக இருக்கலாம். மாயாஜாலப் படமாக இருக்கலாம். காதலை உணர்த்தும் படமாகவும் இருக்கலாம். எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அப்படியொரு காதல் உணர்வை தியாகம் கலந்து உணர்வுபூர்வமாகச் சொன்னதில் இன்றைக்கும் தனியிடம் பிடித்து, தனித்துவமாகத் திகழ்கிறது ‘வாழ்வே மாயம்’. ரீமேக் படங்களின் ஹீரோ என்று போற்றப்படுபவர் நடிகரும் தயாரிப்பாளருமான கே.பாலாஜி. இவரின் மூலம் ஏராளமான வேறு மாநிலப் படங்கள் தமிழுக்கு வந்திருக்கின்றன. அந்தப் படங்களை தமிழுக்குத் தகுந்தது போல் கொடுப்பதில் அசகாயசூரர் இவர். அந்தக் காலத்திலேயே சிவாஜியை வைத்து பல ரீமேக் படங்கள் எடுத்து ஹிட்டடித்திருக்கிறார். அதேபோ, ரஜினியை வைத்து இவர் எடுத்த ‘பில்லா’, ‘தீ’, ‘விடுதலை’ முதலான படங்கள் ரீமேக் படங்கள்தான். கமலை வைத்தும் ஏராளமான படங்களைத் தயாரித்துள்ளார் கே.பாலாஜி. இதில் முக்கியமான படம்... காலத்தால் அழியாத படம்... காதல் காவியம் என்று போற்றப்பட்ட படம்... ‘வாழ்வே மாயம்’. ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கினார். படம் முடிந்து ரசிகர்கள் கனத்த இதயத்துடன் எழுந்து வந்தார்கள். ராஜாவாக கமல். தேவியாக ஸ்ரீதேவி. ராதாவாக ஸ்ரீப்ரியா. பேபியாக மனோரமா. அண்ணனாக ஜெய்சங்கர். அவரின் நண்பராக பிரதாப். டாக்டராக கே.பாலாஜி. மிகக்குறைந்த கதாபாத்திரங்களைக் கொண்டு, ஒரு காதல் காவியமே படைத்திருப்பார்கள். கமல், ஸ்ரீதேவியின் அழகும் நடிப்பும் கனக்கச்சிதம். அப்படியொரு பாந்தமான ஜோடி என்று கொண்டாடப்பட்டது. ஸ்ரீப்ரியாவின் நடிப்பு மிரட்டல். அவரின் பாடி லாங்வேஜும் வசன உச்சரிப்பும் மிகத்தெளிவான பெண் என்பதைக் காட்டும் வகையில் இருந்தன. மனோரமாவின் நடிப்பு வழக்கம்போல் மனதைத் தொட்டது. அம்பிகாவும் மிகச்சிறிய கதாபாத்திரத்தில், ஆனால் மனதில் நிற்கும் கேரக்டரில் நடித்திருப்பார். தாசரி நாராயணராவின் கதைக்கு ஏ.எல்.நாராயணன் வசனம். மனிதர், பல இடங்களில் புகுந்து விளையாடியிருப்பார், தன் பேனாவால்! வழக்கமாகவே அழகனான கமல், இந்தப் படத்தில் பேரழகனாகக் காட்சி தருவார். பின்னாளில், இவர் கேன்ஸரால் உருக்குலைந்து அழகு மறைந்து போவதைக் காட்டவேண்டும் என்பதற்காகவே அப்படியொரு அழகில், முன்பாதியில் வந்தாரோ என்னவோ! ‘தேவி ஸ்ரீதேவி’, ‘ஏ ராதாவே’, ‘நீலவான ஓடையில்’, ‘மழைக்கால மேகம்’, ‘வந்தனம்’, ‘வாழ்வே மாயம்’ என்று எல்லாப் பாடல்களும் செம ஹிட்டு. இன்றைக்கும் இரவு வேளையில் தமிழ் இசை ரசிகர்களுடன் உறவாடிக் கொண்டிருக்கின்றன. அப்போதெல்ல்லாம், இந்தப் படத்தின் இசையும் பாடல்களும் பார்த்து, இளையராஜாதான் இசை என்று பந்தயம் கட்டியவர்களெல்லாம் உண்டு. ஆனால் படத்துக்கு இசை கங்கை அமரன். அத்தனை பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுத்திருப்பார் கங்கை அமரன். ‘சுவரில்லாத சித்திரங்கள்’, ‘சட்டம்’, ஒருவிடுகதை ஒருதொடர்கதை’ போல் இந்தப்படத்தின் பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்து வெற்றிபெற்றன. பாடலாசிரியர் கங்கை அமரன், இயக்குநர் கங்கை அமரன், இசையமைப்பாளர் கங்கை அமரன் என அவரின் பல முகங்களில், பல திறமைகளில்... இசையமைப்பாளர் என கொடி நாட்டிய படம் என ‘வாழ்வே மாயம்’ அமைந்தது. ‘வாழ்வே மாயம்’ திரைப்படமும் ஏ,பி.சி என மூன்று சென்டர்களிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 1982ம் ஆண்டு வெளியானது ‘வாழ்வே மாயம்’. கே.பாலாஜியின் திருமண நாள் ஜனவரி 26. இந்தநாளில், தன் படங்களை ரிலீஸ் செய்வது அவர் வழக்கம். ‘வாழ்வே மாயம்’ படமும் ஜனவரி 26ம் தேதிதான் வெளியானது. அவர் படத்தில் ஹீரோ ஹீரோயினுக்கு வரும் ராஜா, ராதா பெயர்கள், இந்தப் படத்தில் கமலுக்கு ராஜா என்றும் ஸ்ரீப்ரியாவுக்கு ராதா என்றும் சூட்டப்பட்டிருக்கும். படம் வெளியாகி, 44 வருடங்களாகிவிட்டன. இன்றைக்கும் ‘நீலவான ஓடையில்’ நீந்திக்கொண்டே இருக்கிறது வெண்ணிலா. #கமல்ஹாசன் ஹிட்ஸ்🎼 #கமல்ஹாசன் ஹிட்ஸ் #ரெங்கா! #renga-vamba! புன்னகை மன்னன் FB இருந்து .
கமல்ஹாசன் ஹிட்ஸ்🎼 - ShareChat
#🇮🇳இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்🌼 #ரெங்கா! #renga-vamba! பாரத தேசம் இன்று 77வது குடியரசு தினத்தினை பெருமையுடன் கொண்டாடுகின்றது. பாரத தேசம் பழம் பெரும் தேசம் நீர் அதன் புதல்வர் இந்நினை அகற்றாதீர் - மகாகவி பாரதியார்
🇮🇳இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்🌼 - குடியரசு தின நல்வாழ்த்துக்கள் 26, ஜனவரி குடியரசுதின வாழ்த்துக்கள் நாட்டில் வாழ்வது அருமை ` பண்பட்ட பாரக பண்பாட்டை சொல்லித்தந்த தமிழர்நாட்டில்  வாழ்வது பெருமை  குடியரசு தின நல்வாழ்த்துக்கள் 26, ஜனவரி குடியரசுதின வாழ்த்துக்கள் நாட்டில் வாழ்வது அருமை ` பண்பட்ட பாரக பண்பாட்டை சொல்லித்தந்த தமிழர்நாட்டில்  வாழ்வது பெருமை - ShareChat
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #வம்பா ஸ்டில் 76 வது பாரத குடியரசு தின நல்வாழ்த்துக்கள். #🇮🇳இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்🌼
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - ShareChat
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #ரெங்கா! #renga-vamba! #அருண்பகத் அவர்களின் முகநூலிருந்து மீள் (2024 இல் எழுதியது) அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், இயக்கம் எது ஒன்றிலும் committed ஆக இருப்பது வேறு. Ardent fan ஆக.. வழிபாட்டு மனநிலையோடு, குழு மனநிலையோடு இருப்பது வேறு. முன்முடிவுகளின்றி செயல்பாட்டு ரீதியாக எந்த ஒன்றையும் மதிப்பிடுவதே பகுத்தறிவின் அடிப்படை என்று நம்புகிறேன். நமக்குள் implant செய்யப்பட்டிருக்கும் idea க்களை களைந்து ஒரு விடயத்தை, நபரை இயங்கியல் பூர்வமாக புரிந்துக் கொள்ள முயல்வதே பகுத்தறிவின் போக்கு என்று நம்புகிறேன். மற்றபடி முற்போக்கு என்று சொல்லிக்கொள்ளும் தரப்பு தங்களுக்குள் implant செய்யப்பட்டதை முன்முடிவுகளோடு அப்படியே கோவிந்தா போடுவதும் மூடநம்பிக்கையே. இப்போ இந்த அங்கலாய்ப்பு எதற்கென்றால்... கமல் எனும் ஓர் கலைஞன் இருக்கிறார். அவரை ரசிக்கிறோம் பேர்வழி என்று அவரது எல்லா செயல்பாட்டையும் ஆதரிப்பது வழிபாட்டு மனநிலை தான். விக்ரம் படத்தை சிறந்த படமென்பதெல்லாம் fanatic மனநிலை தான். Big boss இல் அவர் பிறளும் இடங்களை விமர்சிப்பவர்களை பிராண்டுவது, மய்யம் கட்சியை விமர்சிப்பவர்களை பிராண்டுவது எல்லாமும் fanatic செயல்பாடு தான். அதே போல... அவரது திரை பங்களிப்பை, திரைக்கு வெளியே பங்களிப்பை கொஞ்சம் கூட அறிவு நாணயத்தோடு அணுகாது.. முன்முடிவு வாந்திகளை எடுப்பதும் படு மோசமான மூடநம்பிக்கையே. 2023 தேசிய விருது படங்களை பாராட்டினார் கமல். அந்த பாராட்டில் கஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை நயமாக தவிர்த்து.. விருதுக்கு தகுதியற்ற படம் என்று குட்டினார் கமல். ஆனால் அதற்கு கூட அவர் பேசாமல் தவிர்த்து ஓடுகிறார் என்று கோணத்தில் அணுகினார்கள் பலர். இதோ இப்போது ராமர் கோவில் திறப்பு விழாவில் பாஜக பிரதிநிதியாக செயல்படுகிறார் ரஜினிகாந்த். ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன்பு பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது இந்தியத் திரையுலகில் இருந்து நேர்மையுடன் எதிர்ப்புக் குரல் கொடுத்த முதல் கலைஞன் கமல் மட்டுமே.!! இப்போது ரஜினி, அமிதாப், சச்சின், இளையராஜா என்று பல சினிமா, விளையாட்டு பிரபலங்கள் ஃபாசிஸ்ட்டுகளுக்கு பாத காணிக்கை செலுத்தி தங்கள் ராஜவிசுவாசத்தை‌ நிரூபித்து வரும் வேளையில்.. ஃபாசிஸ்ட்டுகளின் ஆலகால விஷ அரசியலை விதந்தோங்கி தங்கள் முதுகெலும்பை கேலிக்குள்ளாக்கி வரும் வேளையில்.. பாபர் மசூதி இடிப்பை, ராமர் கோவில் திறப்பை உறுதியாக எதிர்த்து நிற்கும் மிகச் சில திரைக் கலைஞர்களுள் ஒருவர் கமல்ஹாசன்.! இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையின் போதும், காந்தியார் கொலையின் போதும்..‌ தூவப்பட்ட இந்த விஷ விதை 1992 இல் விஷ விருட்சமாக வளர்ந்து மனிதர்களையும், சகோதரத்துவத்தையும் காவு கேட்கிறது என்று சொன்ன ஒரே படம் 'ஹே ராம்'. அந்த விஷத்தை தூவி அறுவடை செய்வது யாரென்றும் துணிச்சலாக சொன்ன ஒரே படம் 'ஹே ராம்'. சாகேத் ராம் மனைவி இஸ்லாமிய தரப்பு மத வெறியர்களால் கொல்லப்படும் காட்சியை வைத்து அது இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் என்ற தவறான பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் படமே பார்க்காத பலர் இந்த விமர்சனத்தை மனப்பாட செய்யுள் போல சொல்லிக் கொண்டே இருப்பது தான். சாகேத் ராம் காந்தியை கொல்லத் துணியும் ஒரு இந்துத்வ மிலிட்டண்ட்டாக மாறுகிறான். அதற்கு காரணம் மனைவியின் கொலை. அதற்காகவே அந்தக் காட்சி. ஆனால் ராம் மனைவி கொல்லப்பட்டது.. திட்டமிடப்படாத ஒரு திடீர் எதிர்வினையாலும், கும்பல் மன நிலையினாலும் என்பதை அடுத்த காட்சியே சொல்லியிருக்கும். இந்து மதவெறியர்களால் இஸ்லாமிய குடும்பங்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருப்பர். அதற்கு எதிர்வினையாக வெறியேறிய இஸ்லாமிய இளைஞர்கள் கும்பல் வன்முறையில் ஈடுபடுவர். சாகேத் ராம் மனைவி கொலைக்கு இணையான இன்னொரு இழப்பு சாகேத் ராமுக்கு ஏற்படும். அது நண்பன் அம்ஜத்தின் கொலை. ஆனால் அம்ஜத்தின் கொலை ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட இந்துத்வ மிலிட்டண்ட்களால் நடத்தப்படும் வேட்டை. அந்தக் கொலை ராமின் எண்ணங்களை அசைத்து விடும். மதவெறி இருபக்கமும் கொளுந்து விட்டு எரிகிறது என்பதை புரிந்துக் கொள்வான். ஆனால் எல்லாவற்றிற்கும் வேர் இந்துத்வ ஃபாஸிசம் தன்னை விதைத்துக் கொள்ள முயல்வதே‌.!! என்பது தான் 'ஹேராம்' படத்தின் மொத்த சாராம்சமும்.!! எல்லாவற்றிலும் முழுமையை பார்க்காமல்.. தனது வெறுப்பு பிரச்சாரத்திற்கு வேண்டிய ஒன்றை மட்டும் கத்தரித்து எடுத்துக் கொள்ளும் சங்கித்தனம் தான்.. 'ஹே ராம்' விடயத்தில் self proclaimed முற்போக்குகளால் நிகழ்த்தப்பட்டது. பாஜக ஆட்சி நடந்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தான் அவர்களை அம்பலப்படுத்தும் 'ஹே ராமும்', உலகமயத்தின் போலித்தனத்தை அம்பலப்படுத்தும் கம்யூனிஸ பார்வை கொண்ட 'அன்பே சிவம்' படங்களும் வந்தது‌.. என்பது எவ்வளவு குறிப்பிடத்தக்கது.!! ஒரு வெகுசனக் கலைஞன் தனது எல்லைக்குள் இருந்து இதை விட கூடுதலாக சனநாயகத்தின் பக்கம் எப்படி நிற்க முடியும்.? அப்படி நிற்பது வேறு யார்.? 'விருமாண்டி' படத்தை சாதி படம் என்று சகட்டுமேனிக்கு உளறிக் கொட்டுகிறார்கள். ஒரு நிலப்பரப்பையும் அங்கு வாழும் சமூகத்தையும் பதிவு செய்தாலே அது சாதிப் படமா.? அப்படியெனில் இந்தியாவில் எந்த நிலப்பரப்பிலும் நீங்கள் கேமராவை வைக்கவே முடியாது. ஒரு விடயத்தை பதிவது வேறு.‌ விதந்தோங்குவது வேறு என்ற அடிப்படைக் கூட தெரியாமலா‌ விமர்சிப்பது. 'விருமாண்டி' குறிப்பிட்ட சாதி பெருமையை எங்காவது விதந்தோங்கியதா.? சாதி வழி அதிகாரத்தின் மோசமான விளைவுகளை பேசிய படமே விருமாண்டி. அதனை இரு நபர் பார்வை கோணத்தில் விரித்து உண்மை குறித்த ஒரு சுவாரஸ்யமான கதையாடலை நடத்தி, சிறைச்சாலைகளின் அசல் முகத்தை பதிவு செய்து, மரண தண்டனை குறித்த உரையாடலை முன்வைத்த.. ஒரு multi layered படம் விருமாண்டி.!! 'தசாவதாரம்' படத்தில் ராமானுஜ நம்பி கதாபாத்திரம் பதிவு செய்யப்பட்டதாலேயே கமல் சாதியவாதி ஆகி விட்டது எவ்வளவு அவலம்.!! கலைஞர் கருணாநிதி அவர்களும் ராமானுஜர் காவியம் எழுதினாரே.!! சைவ- வைணவ சண்டை தமிழ் மண்ணில் நிகழ்ந்த ஒரு வரலாறு. கமல் அதனை புனையவில்லை. இறுதிக் காட்சியில் சமகாலத்தில் அதே நாராயணன் சிலை கேட்பாரற்று கடற்கரையில் கிடக்கும். அப்போது ' மோசமான வைரஸ்களை உருவாக்கும் சிந்தனை மனிதர்களுக்கு ஏற்படாமல் கடவுள் தடுத்திருக்கலாமே'.! 'கடவுள் இல்லேனு சொல்லல. இருந்தா நல்லா இருக்கும்னு தான சொன்னேன்'. என நாத்திக உரையாடலும் அதே சிலையின் முன்பு நடக்கும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்களை அணி பிரிக்க தேவைப்பட்ட ஒரு விழுமியம். இப்போது கேட்பாரற்று கிடக்கிறது. ஏனெனில் அந்த அணிகள் இப்போது ஒரே மதமாகி விட்டது. அறிவியல் வியாபாரிகள் நடத்தும் சீரழிவுகளை தடுக்கும் ஆற்றலின்றி கிடக்கிறார் நாராயண். என எவ்வளவு நுட்பமான சர்க்காஸம் அந்த இறுதிக் காட்சியில் இருக்கிறது. 'தசாவதாரம்' படத்தின் சிறந்த கதாபாத்திரம் தலித் தலைவரான வின்சென்ட் பூராகவன் கதாபாத்திரம். தனது உயிரைக் கொடுத்து எதிரியின் மகனை காப்பாற்றுவார் வின்சென்ட் பூவராகவன். வைணவ பாட்டி பூவராகவனே தனது பேரன் ஆறாமுதன் என்று மடியில் ஏந்திக் கொள்வார்.!! சாதியை உடைத்து மனிதம் மலரும் அற்புதமான இந்தக் காட்சியை வசதியாக மறந்து விட்டு.. மீண்டும் தனக்கு தேவையான பூணூல் போட்ட ராமானுஜ நம்பி கதாபாத்திரத்தை வைத்து கமலை சாதியவாதி ஆக்குவது அக்மார்க் சங்கித்தனம். பெண்களின் சுயமரியாதையை இழிவுபடுத்துவதை தனது படங்களின் முக்கிய அம்சமாக ரஜினி வைத்திருந்த போது.. 'மகளிர் மட்டும்' என்ற படத்தை எழுதி தயாரித்தார் கமல். தமிழ் சினிமாவில் இஸ்லாமிய தீவிரவாத வில்லன் டெம்ப்ளேட் ஆகிக் கொண்டிருந்த கட்டத்தில்.. அப்பாஸ் என்ற சிறந்த நேர்மைமிகு கதாபாத்திரத்தை தனது 'குருதிப்புனல்' படத்தில் வடித்திருந்தார் கமல். ஜென்டில்மேன் படம் bhramnical militant பார்வையை முன்வைக்கிறது என நடிக்க மறுத்தார் கமல். 'தேவர் மகன்' படமும் குறிப்பிட்ட சமுகம் வன்முறையை பெருமிதமாக எண்ணி தங்கள் வாழ்க்கையை நாசம் செய்து கொள்வதற்கு எதிரான ஆணித்தரமான உரையாடலை வைத்த படம் என்பதில் எப்படி எவ்விதம் மாறுபட முடியும்.?? போற்றிப் பாடடி பொண்ணே பாடல் நிச்சயம் ஒரு நெருடல் தான். கமல் அதற்கு வருத்தமும் தெரிவித்து விட்டார். பெரிய தேவர் கதாப்பாத்திர சிததரிப்பில் சாதியை விதந்தோங்குவதாக சொல்கிறார்கள் சிலர். பெரிய தேவர் ஒரு சாதி ஆதிக்கவாதி,ஒரு நிலப்பிரபு. என்ன சண்டை வேண்டாம் என்று சொல்லும் ஒரு நிலப்பிரபு. அவ்வளவு தான். அவரை பெரியாரிஸ்ட்டாக கம்யூனிஸ்ட்டாக அம்பேத்கரிஸ்ட்டாகவா காட்ட முடியும்.!! இது போக மகாநதி, குணா,ஆளவந்தான் என தனது மார்க்கெட்டை பணயம் வைத்து தமிழ் சினிமாவை 30 ஆண்டுகள் முன்னோக்கிய பாய்ச்சலுக்கு இட்டுச் சென்றார் கமல். நேரடி பிரச்சாரங்களை கலைப்படைப்பாக நம்பி பழகி பழகி அசல் கலைப் படைப்பின் முழுமையை உணர முடியாத நிலை ஒரு அவலம். நேரடி பிரச்சாரங்கள் அதிகபட்சம் மேம்போக்கான இருமையை தான் கட்டமைக்கும். ஒரு யூடியூப் விவாத நிகழ்ச்சியின் தரம் மட்டுமே அது. ஒரு கலையின் உரையாடலை, உறவாடலை, தாக்கத்தை, தனிமனித பரிசோதனையை அது ஒரு போதும் நிகழ்த்த முடியாது. கமல் மீதான பெரும்பாலான வசவுகள்.. முன் முடிவுகளிலிருந்தே எழுகிறது. அந்த முன்முடிவின் உள்ளடக்கம் அவர் பிறப்பு அடையாளத்தில் இருந்து எழுகிறது. தமிழ்நாட்டின் நிரந்தர சங்கி ரஜினிகாந்த். நிலப்பிரபுத்துவத்தை தனது பல்வேறு படங்களில் உயர்த்தி பிடித்து, பெண் சுயமரியாதையை இழிவுபடுத்துவதை ஆண்மை என்று விதந்தோங்கிய உச்ச நட்சத்திரங்களை விட... திரையில் சிறந்த படைப்புகளையும், திரைக்கு வெளியே சனநாயக குரலையும் தொடர்ந்து உயர்த்திப் பிடிக்கும் கமல்ஹாசன் பார்ப்பனியவாதி. லொளதிக பார்ப்பான் etc etc.. பெரிய வணிகத்தை ஈட்டும் எந்த மைய நீரோட்ட கலைஞனும் கமல் அளவுக்கு திரையிலும், திரைக்கு வெளியேயும் மக்கள் அரசியலின் பக்கம் நின்றதில்லை. சோசியல் மீடியாவில் நிகழும் புரட்சி ஸ்டண்ட் எல்லாம் அவர் பேச வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்.? அவர் பல கோடி மக்களின் ஆஸ்தான ஒரு கலைஞன். He'll be having his contours and point of compromising. அதை புரிந்துக் கொள்ள வேண்டும். யாருக்கு இல்லை சமரசம்.? அரசியலிலும் சினிமாவிலும் பரிசுத்தவாதம் பேசிய பலர் இன்று எடுத்திருக்கும் சந்தர்ப்பவாத அவதாரங்கள் எல்லாம் அடக்க முடியாத சிரிப்பை வரவழைக்கும். ஆனால், ஒருபோதும் கமல் சந்தர்ப்பவாதியாக இல்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது தான் எழுப்பிய முதல் எதிர்ப்புக் குரலிலிருந்து எந்த மாறுபாடும் இல்லாது உறுதியாக நிற்கிறார் கமல். இப்பேற்பட்ட கலைஞனை கொண்டாடாமல் இருந்தாலும் பரவாயில்லை. உங்கள் முன்முடிவு குப்பைகளை அவர் மீது கொட்டாமலாவது இருங்கள். அருண் பகத். Credit goes புன்னகை மன்னன் முகநூல் பதிவு தரவு இருந்து. #குடியரசு தின நல்வாழ்த்துக்கள்
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - LYCA PRO DUCTIoN 5 LYCA PRO DUCTIoN 5 - ShareChat
#கிரிக்கெட் #ரெங்கா! #renga-vamba! Abhishek Sharma, Remember the name🔥IND vs NZ ( 3 rd T20 in Indian soil) He becomes the second-fastest to score a half-century for India in T20Is, after his mentor Yuvraj Singh, who did it in 12 balls. 📸: Jio Star
கிரிக்கெட் - cricTracker STRIKERATE ABHISHEK T2OI CAREER 51*14 3643 100s2 50s8 SHARMA BURYA 63 cricTracker STRIKERATE ABHISHEK T2OI CAREER 51*14 3643 100s2 50s8 SHARMA BURYA 63 - ShareChat
அண்டை தேசம் #பங்களாதேஷ் அண்டை தேசம்அண்டை தேசம்வங்கதேசத்தில் பிப்ரவரி 1 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்... வங்கதேச ஜவுளித் துறை நெருக்கடியில் இந்தியாவின் பங்கு ஷேக் ஹசீனா தலைமையில் ஜவுளித்துறை அபரிமிதமான வளர்ச்சியை அடைந்தது, வங்கதேசத்தின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 80% க்கும் மேல் ஜவுளித்துறையே பங்களித்தது... சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய ஆடை ஏற்றுமதியாளராக வங்கதேசம் உருவெடுத்தது. ஆனால் வீதி யாரை விட்டது? அமெரிக்க ஆசியால் ஷேக் ஹசீனாவை விரட்டி இந்திய விரோத யூனிஸ் ஆட்சி வந்தது * இந்தியாவிலிருந்து நூல் இறக்குமதி செய்ய வங்கதேசம் 5 முக்கிய தரைவழிகளை தடை செய்தது. * இந்தியாவிலிருந்து வரும் அரிசி, மீன் மற்றும் புகையிலை மீது கட்டுப்பாடுகளை விதித்தது. * இந்திய சரக்குகள் வங்கதேசப் பகுதி வழியாகச் செல்வதற்குப் புதிய போக்குவரத்துச் சுங்கக் கட்டணங்களை (Transit Fees) விதித்தது. இதையெல்லாம் பார்த்த பாரதம் நாங்க அமெரிக்காவையே சுருட்டி அக்குள் ல வச்சிடுவோம் நீ என்னடா சுண்டக்கா பயனு ஆட்டத்தை ஆரம்பித்தது... 1. துறைமுகக் கட்டுப்பாடுகள் (Port Restrictions): 2025-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து, வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஆயத்த ஆடைகள் (RMG) மற்றும் சணல் பொருட்களைக் கொண்டு வர இந்தியா சில கட்டுப்பாடுகளை விதித்தது... முன்னதாக 76% வர்த்தகம் பெட்ராபோல் (Petrapole) போன்ற தரைவழி எல்லைகள் வழியாக நடந்து வந்தது... ஆனால், இந்தியா இதைத் தடுத்து, கொல்கத்தா மற்றும் மும்பையின் நவா ஷேவா (Nhava Sheva) ஆகிய இரண்டு கடல் துறைமுகங்கள் வழியாக மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதித்தது... இதனால் போக்குவரத்துச் செலவு அதிகரித்ததோடு, 2-3 நாட்களில் நடக்க வேண்டிய வர்த்தகம் வாரக்கணக்கில் தாமதமாகிறது... 2. தரைவழி இறக்குமதித் தடை: சில குறிப்பிட்ட சணல் பொருட்கள் மற்றும் துணி வகைகளை நில எல்லைகள் வழியாகக் கொண்டு வர இந்தியா முழுமையாகத் தடை விதித்துள்ளது. இது வங்கதேச ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. 3. 'டம்பிங்' (Dumping) - குறைந்த விலை நூல் விற்பனை: இந்திய அரசு தன் நாட்டு ஜவுளி உற்பத்தியாளர்களுக்குப் பல்வேறு மானியங்களையும் (Subsidies), குறைந்த வட்டி கடன்களையும் (சுமார் 6%) வழங்குகிறது. இதைப் பயன்படுத்தி, இந்திய உற்பத்தியாளர்கள் வங்கதேச சந்தையில் அவர்கள் விலையை விடக் குறைவான விலைக்கு நூல்களைக் குவித்து வருவதாக வங்கதேச ஆலை உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் வங்கதேச ஆலைகளின் சுமார் 12,500 கோடி டாக்கா மதிப்பிலான நூல் விற்கப்படாமல் தேங்கிக் கிடப்பதாக அவர்கள் கூறுகின்றனர்... வங்கதேசத்தின் ஜவுளித்துறை (Textile Industry) தற்போது மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. வங்கதேச ஜவுளி ஆலைகள் சங்கம் (Bangladesh Textile Mills Association - BTMA) வரும் பிப்ரவரி 1, 2026 முதல் நாட்டில் உள்ள அனைத்து நூல் உற்பத்தி (Spinning) ஆலைகளையும் காலவரையன்றி மூடப்போவதாக அறிவித்துள்ளது. ஆலை உரிமையாளர்கள் தாங்கள் வாங்கிய வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்... "சொத்துக்களை விற்றால் கூட கடனை அடைக்க முடியாது" என்று BTMA தலைவர் ஷவ்காட் அஜீஸ் ரசல் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்... #Geopolitics #EconomicPower #modi
பங்களாதேஷ் - ) Go GADESH XA ) Go GADESH XA - ShareChat
#சத்யராஜ் #🤣லொள்ளு காமெடி #ரெங்கா! #renga-vamba!
சத்யராஜ் - ShareChat
01:38