ஒரு பெண்…
தன் இளமையிலிருந்து காத்து மறைத்து வந்த பெண்மையை,
தன் கணவனைத் தவிர வேறு யாரும் காணாத அந்த மானத்தை,
அவள் தன்னையும் அறியாமல் பிரசவ வேதனையின் போது வெளிப்படுத்துகிறாள்.
அந்த நொடி—
அவள் மரணத்தின் வாயிலில் துடித்து கொண்டிருப்பாள்.
தன் ஆடை சிதறுவது கூட அறியாது,
தன் மானத்தையும், வலியையும் மறந்து…
அவள்
துடிதுடிப்பாள்
உடலோடு_போராடுவாள்
தசை_கிழித்து_பிளந்து_வேதனைப்படும்
உன்னை குறை இல்லாமல் இந்த உலகில் கொண்டுவருவதற்காக.
உன் முகம் முதலில் பார்த்த கணமே,
அந்த வேதனைகள் அனைத்தும் மறந்து,
அவள் பூரிப்பில் சிரிப்பாள்.
நீ பசி கொண்டு அழும் போது,
உன் உயிரை காப்பாற்ற,
தன் சுற்றம் மறந்து மாராப்பை திறப்பாள்.
⸻
அவள் தன் மானத்தையும் மறந்து உன்னைப் பெற்றாள்.
ஆனால் இன்று…
அவளிடமிருந்து பிறந்த நீயே —
உன் சுயலாபத்திற்காக,
அற்பமான சில்லரை உணர்ச்சிகளுக்காக,
சில்லறை சண்டைகளுக்காக,
வேறு பெண்களின் மானத்தை ஏலம் விடுகிறாய்.
“பிறர் தாய்” என்று நினைக்கும் அந்த பெண்—
உன் தாயே கூட.
⸻
ஒவ்வொரு தாயும்
ஆடை நீக்கி, உயிருடன் போராடி பெற்றெடுத்த மகன்களே,
அதே தாயை சபை முன்னிலையில் மானபங்கப்படுத்தும்
அற்புதமான நிகழ்வு தான் ஆபாச சண்டை.
அதில் இருக்கிறது கோபமா?
இல்லை…
காமம்.
ஒரு தாயை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று
“அழகு வார்த்தை ஜாலம்” போட்டுக் கூறும் போது,
அதில் கோபத்தை விட
தாயின் மேல் உள்ள காமமே தெரிகிறது.
ஒருவனை திட்ட அகராதியில் வார்த்தை இல்லாமல்,
“தாய்” என்பதையே ஆயுதமாக்கும் உன் செயலில்—
நான் கோபத்தை விட
வக்கிரத்தையே காண்கிறேன்.
⸻
பாரதத்தில்
பாஞ்சாலி சபை முன்னே துகிலுறிக்கப்பட்டாள்.
இன்று,
நவீனத்தில்
தாய்கள் கற்பழிக்கப்படுகிறார்கள்—
பலரின் முன்னே, வார்த்தைகளால்.
இந்த பதிவு,
ஆபாசத்தால் தாயின் மானத்தை
ஏலம் விடும் ஒவ்வொருவருக்கும்
சமர்ப்பணம்.
#💑கணவன் - மனைவி
#💑கணவன் மனைவி காதல்💞
#💑என் காதல் கணவா💞
#👨👩👧👦என் குடும்பம்: என் உலகம்😍
#👪 அன்பான குடும்பம்