#😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி மனம் சிதறி வலிக்கிறது…
நாயகனை காண ஆவலுடன் சென்ற அப்பாவிகள்,
திரையில் கண்ட சிரிப்பு தான்
இறுதியாக கண்ணில் பதிந்த தருணம் என
அவர்களுக்கே தெரியாமல் போனது…
வாழ்க்கை முழுதும் நினைவாக இருக்க வேண்டிய ஒரு நாள்,
ஒரு கணத்தில் உயிரைப் பறித்துக் கொண்டது.
இன்று நேசித்தவர்களை இழந்து
உலகமே கருங்கல்லாய் காட்சி தரும் அந்த குடும்பங்களுக்கு,
நாம் சொல்லும் ஆறுதல் வார்த்தைகளும்
காற்றாய் போய்விடுகின்றன…
கண்ணீரில் மட்டுமே நிற்கும் இழப்பு,
இதயத்தில் என்றும் அழியாத புண்…
இறைவன் அருள் பொழிந்து,
அனைவரது ஆத்மாவும் சாந்தியடையட்டும். 🙏