எனக்கான நேரம் வரும் அப்போது பார்த்துக் கொள்கிறேன் ஜெய்சுவால்!!!!! தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.இந்த தொடரில் கேப்டன் சுப்மன் கில்லுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு பதிலாக மாற்று வீரராக யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் அவரே ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்கி விளையாடியிருந்தார்.இந்த ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் பேட்டிங்கில் பெரிய அளவில் சோபிக்காத ஜெய்ஸ்வால் கடைசி போட்டியின் போது தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்திக்கொண்டு ஆட்டமிழக்காமல் 116 ரன்களை குவித்து இந்திய அணியை வெற்றிக்கும் அழைத்துச் சென்றிருந்தார்.
இதன் காரணமாக தொடர்ச்சியாக இனி யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒருநாள் போட்டிகளில் இடம்பெற வேண்டும் என்ற ஆதரவு இருந்து வருகிறது. ஆனால் சுப்மன் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பும் போது அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்பதே நிதர்சனமான உண்மை. ஆனால் ரசிகர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுத்தால் சிறப்பாக விளையாடுவார் என்று கூறி வருகிறார்கள். #😍நம்ம ஊரு விளையாட்டு😍 #🥇விளையாட்டு அப்டேட்ஸ்🏆 #🎥விளையாட்டு வீடியோக்கள் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ்
#💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍 #💪 தன்னம்பிக்கை #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ்
#👌அருமையான ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💪 தன்னம்பிக்கை #💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍
#💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍 #💪 தன்னம்பிக்கை #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ்
#👌அருமையான ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💪 தன்னம்பிக்கை #💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍
#💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍 #💪 தன்னம்பிக்கை #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ்
அன்றிரவு என்ன செய்வது என்று தெரியமல் நின்ற பாவனாவிடம்
பி.டி. தாமஸ் ஒரே ஒரு விஷயத்தைச் சொன்னார்,
முதலில் உன்னை திருமணம் செய்ய போகும் உன் வருங்கால கணவரிடம் சொல்லு, பிறகு சட்டப்பூர்வமாகத் தொடர அனுமதி கேள்."
எந்தப் பெண்ணும் கனத்த இதயத்துடன் எதிர்கொள்ளும் தருணம். சமூகம் என்ன சொல்லும், குடும்பம் என்ன நினைக்கும், நிச்சயிக்கப்பட்ட திருமணம் ரத்து செய்யப்படுமா என்பது பற்றி ஆயிரம் கவலைகள்.
ஆனால், அந்த தொலைபேசி அழைப்பைத் தாண்டி நவீனின் பதில்தான் அந்தப் பெண்ணை இவ்வளவு நேரம் தலை நிமிர்ந்து நிற்க வைத்தது.
"நாம் சட்டப்படி முன்னேற வேண்டும், அவர்களை விட்டுவிட முடியாது. பயப்படாதே, எல்லாவற்றுக்கும் நான் உன்னுடன் இருக்கிறேன்..."
நினைவில் கொள்ளுங்கள், அந்த நேரத்தில் அவர்களுக்கிடையேயான திருமணம்
வார்த்தைகளின் மட்டுமே வாக்குறுதியில் இருந்தது.
'அவமானத்திற்க்கு' பயந்து பலர் உறவுகளை பாதியிலேயே முடித்துக் கொள்ளும் இந்தக் காலத்தில், செய்வதறியது நிற்கும் ஒரு பெண்ணிடம்
"நீ சண்டை போடு" உனக்கு நான் இருக்கிறேன்
என்று நவீன் சொல்லும் மனம்... அதுதான் உண்மையான காதல்!
மோசமான சூழ்நிலையில் ஒருவர் நமக்கு எப்படி பக்கபலமாய் நிற்கிறார் என்பதுதான் அன்பின் உண்மையான அளவுகோல். தனது துணைக்கு ஏற்பட்ட துயரத்திற்கு அனுதாபப்பட்டு ஒதுங்கி நிற்காமல், "இப்போது நீ வலிமையாக இருக்க வேண்டிய நேரம் இது" என்று அவருடன் நின்ற நவீன், அந்தப் பெண்ணுக்கு ஒரு உயிரைக் கொடுத்தது.
அன்று அந்தக் கைகள் இணைந்திருக்காவிட்டால், பாவனா என்ற போராளி இருந்திருக்க மாட்டாள். நல்ல காலங்களில் யார் வேண்டுமானாலும் உங்களுடன் நிற்க முடியும், ஆனால் நீங்கள் நிச்சயமாக விழும் இடத்தில் உங்களை ஆதரிப்பவனே உண்மையான துணை. நவீன், இந்த உலகம் உன்னை மதிக்கிறது
❤️
#musiccollaboration
#song
#personalstory
#charityevent
#livemusic
#memes
#newmusic
#theatre
#movienight
#👌அருமையான ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💪 தன்னம்பிக்கை #💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍
#😨கல்யாணத்தை நிறுத்திய மந்தனா❌
ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து!!!!இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும் பலாஷ் முச்சாலுக்கும் இடையே கடந்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது.ஸ்மிருதி மந்தனா தந்தைக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் திருமணம் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே பலாஷ் முச்சால் உடனான திருமணம் ரத்து செய்யப்படுவதாக ஸ்மிருதி மந்தனா அறிவித்துள்ளார்.
நட்சத்திர கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா - பலாஷ் முச்சால் திருமணம் கடந்த மாதம் நடைபெற இருந்தது. இதற்காகப் பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இருப்பினும், கடைசி நேரத்தில் திருமணத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருமணத்திற்குச் சில மணி நேரத்திற்கு முன்பு ஸ்மிருதியின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் திருமணம் நிறுத்தப்பட்டது.
அதேபோல மறுநாளே பலாஷ் முச்சாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பலாஷ் முச்சால் எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்து முதலில் எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும், பின்னர் தனது மாமனாருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு செய்தியை கேட்டு பலாஷ் முச்சால் அழுது கொண்டே இருந்ததால் அவருக்கு நீரசத்துக் குறைபாடு ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் விளக்கமளித்தனர்.
இதற்கிடையே ஸ்மிருதி மந்தனா உடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும்போதே பலாஷ் முச்சால் வேறு ஒரு பெண்ணுடன் சாட் செய்தாக சொல்லி சில வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட்கள் இணையத்தில் பரவின. இது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. மேலும், ஸ்மிருதி மந்தனா- பலாஷ் முச்சால் திருமணம் ரத்து செய்யப்பட்டதாகத் தகவல் பரவியது.
இந்தச் சூழலில்தான் தனது திருமணம் ரத்து செய்யப்படுவதாக கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கடந்த சில வாரங்களாகத் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நிறைய விஷயங்கள் பேசப்பட்டு வருகிறது என குறிப்பிட்ட ஸ்மிருதி மந்தனா தனிப்பட்ட விஷயங்களைப் பொதுவெளியில் பகிர்ந்து கொள்ள விரும்புபவள் நான் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் திருமணம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்பதை மட்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன் எனக் கூறியுள்ள அவர், இந்த விஷயத்தை இத்தோடு முடித்துக் கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இது அவர்களது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
#😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💪 தன்னம்பிக்கை #💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍
தொடர் நாயகன் விருது சச்சினை மிஞ்சினார் விராட் கோலி!!!!!கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் படைத்திருந்த மிகப்பெரிய உலக சாதனையை, விராட் கோலி முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை 'தொடர் நாயகன்' விருது வென்ற வீரர் என்ற இமாலய சாதனையை கோலி தன்வசப்படுத்தியுள்ளார்.
விசாகப்பட்டினத்தில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுத் தொடரைக் கைப்பற்றியது. இந்தத் தொடரில் அபாரமாக விளையாடிய விராட் கோலிக்குத் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒருநாள், டி20 சேர்த்து) அதிக முறை தொடர் நாயகன் விருது வென்றவர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் (19 முறை) வைத்திருந்தார். தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் விராட் கோலி தனது 20-வது தொடர் நாயகன் விருதை வென்று, சச்சினின் நீண்ட கால சாதனையைத் தகர்த்தெறிந்துள்ளார்.
இதன் மூலம், சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 20 முறை இந்த விருதை வென்ற உலகின் முதல் மற்றும் ஒரே வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
அதிக 'தொடர் நாயகன்' விருது வென்ற வீரர்கள் பட்டியல்:
விராட் கோலி (இந்தியா) - 20 முறை*
சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 19 முறை
ஷகிப் அல் ஹசன் (வங்கதேசம்) - 17 முறை
ஜாக் காலிஸ் (தென்னாப்பிரிக்கா) - 14 முறை
சனத் ஜெயசூர்யா (இலங்கை) - 13 முறை
இந்தத் தொடரில் விராட் கோலி ஆடிய விதம் அனைவரையும் மிரள வைத்தது. அவர் மூன்று போட்டிகளில் 302 ரன்கள் குவித்தார். 2 சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் அடித்தார். அவரது சராசரி 151 என்பதாக உள்ளது. ராஞ்சி மற்றும் ராய்ப்பூர் போட்டிகளில் சதம் அடித்த அவர், விசாகப்பட்டினத்தில் ஆட்டமிழக்காமல் 65 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற வைத்தார்.
விருது பெற்ற பிறகு பேசிய கோலி, "உண்மையைச் சொல்லப்போனால், இந்தத் தொடரில் நான் ஆடிய விதம் எனக்கு மிகுந்த மனநிறைவை அளித்துள்ளது. கடந்த 2-3 ஆண்டுகளாக நான் இந்த அளவுக்குச் சிறப்பாக ஆடவில்லை என்று நினைக்கிறேன். இப்போது மனதளவில் மிகவும் சுதந்திரமாக உணர்கிறேன். ஆட்டம் எனக்குச் சாதகமாக அமைந்தது மகிழ்ச்சி" என்றார்.
எது சிறந்த இன்னிங்ஸ் என்று கேட்டதற்கு, "ராஞ்சி இன்னிங்ஸ் தான் எனக்கு ஸ்பெஷல். ஆஸ்திரேலியா தொடருக்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் ஆடினேன். அந்தப் போட்டியில் நான் ஆடிய விதம், எனக்குள் இருந்த பழைய நெருப்பை மீண்டும் பற்ற வைத்தது" என்று குறிப்பிட்டார். அடுத்ததாக விராட் கோலி விஜய் ஹசாரே டிராபியில் விளையாட திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது விராட் கோலி ரசிகர்களிடையே சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது.. #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ் #👏Inspirational videos












