@sairethi82
@sairethi82

💜sairethi💜💕.......🌹

👉ஒருவருடைய அன்பு உண்மையா பொய்யா தெரியாம ஏற்றுக் கொள்வது மிக கடினம்...💝

#

✒️பிடித்த கவிதை

#✒️பிடித்த கவிதை 🌹 *அழகானவள்*🌹 கண்ணே எந்தன் கனியமுதே - உன் கண்விழி காட்டும் காந்தப்பார்வையில் கவிதைகள் பிறக்குதடி ஆயிரமாயிரம் கணைகள் தொடுக்கும் வில்லைப்போல் கடும்போரில் வாகைசூடிய வாளைப்போல் கணக்காய் அமைந்துவிட்ட புருவங்கள் கட்டித்தங்கத்தை எடுத்து உருக்கி கரைத்துப்போட்ட பளபளப்பாய் நிற்கும் கலையாத மேகமடி உன்நெற்றி - அதில் கருத்தாய் நிருத்தினாய் பொட்டு கரையுதடி இதயம் எனைவிட்டு கரைசேர்வேனோ நான் உனைதொட்டு கனி போன்று சிவந்திருப்பதால் கதைபேசும் கிளிகள் கண்டால் கவ்விப் போகுமடி உன்னிதழ்களை கண்ணனின் கைகள் ஏந்திய கவிகள் பாடும் குழல்தானோ கண்ணானவளே உந்தன் நாசி கன்னங்களை என்னென்று சொல்வேன் கருசுமந்த தாயின் உள்ளங்கைபோல் கசங்காச பட்டுபோன்ற மிருதுவானதடி கவனிக்கும் செவிகளை கண்டால் கமலம் மலர்ந்திருக்கும் காட்சியாய் கண்ணில் தெரியுதடி எனக்கு கண்டதில்லை நான் வலம்புரியை கருமணிகள் நடனம் புரியும் கழுத்தில் கண்டேனடி அஃதை கண்ணுயர்த்தி விந்தையாய் பார்க்கிறேன் கருமேகங்கள் கலைந்து செல்வதைபோல் - உன் கருங்கூந்தல் காற்றில் அலைபாயுதடி கலகலவென சிரிக்கும் பற்களில் கடந்து செல்கிறதோ மின்சாரம் கண்ணை பறிக்குதடி ஒளிவெள்ளம் கனிவாய் திருவுளம் மலர்ந்து கனிமொழியை உதிர்த்திட்ட போது கருணை அங்கே கரைபுரண்டதடி கரும்பும் முப்பழ ரசமும் கருகாமல் காய்ச்சி வடித்த கற்கண்டை போன்றதடி உன்சொற்கள் கண்டு கொண்டே இருந்தால் கவலைகள் மறந்து போகும் கண்ணியமானதடி உன் திருமுகம் கடைசிவரை இந்த மண்ணில் - உந்தன் கவிபடும் பித்தனாய் பக்தனாய் கரைசேர்கிறேன் நான் மொத்தமாய் என்றென்றும் அன்புடன்
146 காட்சிகள்
10 மணி நேரத்துக்கு முன்
#

✒️பிடித்த கவிதை

#✒️பிடித்த கவிதை 🌹 *திருநங்கை*🌹 உடலளவில் ஆண்மையும் உள்ளத்தில் பெண்மையும் உண்டாக்கிய இறைவா - இதை உலகுக்கும் எங்கள் உறவுக்கும் சற்று உணர்த்திடுவாய் தேவா உடைத்து சொல்லாமல் உள்ளுக்குள் புதைந்து உருகினோம் பலநாட்கள் உண்மை அறிந்தபோது உண்டாக்கிய பெற்றோரும் உதாசீனம் செய்தனர் உண்டான பேதத்தை உணர்ந்த வயதில் உயர்வான கல்வியிழந்தோம் உள்ளுக்குள் மாற்றத்தை உருவாக்கினாய் தேவனே.. உதிரிகளாய் அனாதையானோம் உண்ணவும் உறங்கவும் உடுத்தவும் ஒதுங்கவும் உரிய வழியில்லை உற்ற நண்பர்களும் உள்ளூர நகைத்தனர் உறவுக்கே அழைத்தனர் உலகிலுள்ள ஜீவன்கள் உண்டுகளித்து அதனிருப்பில் உல்லாசமாய் இருக்கிறது.. உணர்வோடு உடைமாற்றிதால் உலகில் வாழ்ந்திடும் உரிமை இழந்தோமா உலக்கையில் சேலையிருந்தால் உள்நோக்கி பார்க்கும் - #சில உதவாக்கரை ஆணினமே - எங்கள் உணர்வை அறியாமல் உடைக்குள் ஊடுருவதை உணர்வது எப்போது உயரிய நோக்கங்கள் உள்ளபடியே எமக்குமுண்டு உருவாக்கினால் உயர்ந்திடுவோம் உன்னில் பாதியை உரியவளுக்கு தந்த - ஓ.. உலகையாளும் அர்த்தநாரியே உள்ள குறையனைத்தும் உன்னிடம் சொன்னோம் உண்டாக்குவாய் ஒருவழியை என்றென்றும் அன்புடன்
151 காட்சிகள்
10 மணி நேரத்துக்கு முன்
#

✒️பிடித்த கவிதை

🌹 *கவிதை தந்தவள்*🌹 என் படைப்பில் எத்தனையோ நானிங்கு எழுதி விட்டேன் எழதியவை எல்லாம் என்னவளின் நினைப்பில் எனக்கு தோன்றியவை என்னையும் பலபேர் என்னென்னமோ சொல்லி எடுத்திங்கு பாராட்டினர் எவருக்கும் தெரிந்ததில்லை எஃகான எனக்குள்ளும் என்னவள் புகுந்தது என்னாசைகள் பலவற்றை எடுத்துசொல்ல வழியின்றிதான் எதையெதையோ எழுதுகிறேன் என்எண்ணம் அவளுக்கு எப்போதோ புரிந்திருக்கும் என்றாலும் செவிமடுக்கவில்லை எனினும் என்காதலை எடுத்தெறிய மனமின்றி எழுதிக்கொண்டே இருக்கிறேன் என்றுதான் தீருமோ எத்தனை ஜென்மங்கள் எடுத்தாக வ #✒️பிடித்த கவிதை
147 காட்சிகள்
10 மணி நேரத்துக்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்பாலோவ்
காப்பி லிங்க்
புகார்
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்