
ல.செந்தில் ராஜ்
@senthilrajl
I Am Born To Win, I AM DIVINE.Think Big.
🌹இனிய சிவனே என்றிருப்பது என்றால்...
நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏
1)மனம் அமைதியாக இருப்பது
என்று பொருள்
2)வீணான எண்ணங்களிலிருந்து விடுபட்டிருப்பது என்று பொருள்
3)கவலையிலிருந்து விடுபட்டிருப்பது
என்று பொருள்
4)எல்லாப் பொறுப்பையும் அவரிடம் கொடுத்தாகிவிட்டது என்று பொருள்
5)எல்லாம் நன்மைக்கே என்று பொருள்
6)எதனாலும் குழப்பமடையாத நிலை
என்று பொருள்
7)ஆடாத,அசையாத நிச்சய புத்தி உடைய மனம் என்று பொருள்
8)மனம் லேசாகவும், முகம் மலர்ந்திருக்க வேண்டும் என்பது பொருள்
9)எந்த ஒரு சூழ்நிலையிலும் திருப்தியாக இருப்பது என்று பொருள்
10)தன்னிடம் வருபவர்களின் மனதை அமைதி அடைய வைப்பது என்பது பொருள்
11)ஏகாந்தத்தை அனுபவிப்பது என பொருள்
12)சதாகாலம் அவரையே நினைத்திருப்பது என்பது பொருள்
13)எந்த ஒரு சூழ்நிலையிலும் நிம்மதியாக இருப்பது என்று பொருள்
14)தன்னால் பிறரும் பிறரால் தானும் துக்கமடையாத நிலை என பொருள்...
15)உலகீய பொருட்களில் சாரமில்லை சிவமே
இன்பம் என நிலைத்திருப்பதாக பொருள்...
இப்படி பரம்பொருளான தந்தை ஈசனை என்றும் நினைத்து அவர் சிந்தனையிலேயே மூழ்கி இருப்பது ஒன்றே சிவனே என்றிருப்பது. என பொருள்படும்.
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹
சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும். #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #sivan #சிவ #SiV@n🐍 B@kthån 📿📿🪔🙏
நமது வாழ்வில் நடக்கும் அனைத்திற்கும் நிச்சயம் ஒரு காரணம் உண்டு.காரணம் இல்லாமல் இங்கு காரியங்கள் எதுவும் நடப்பதில்லை!
ஒன்று கிடைப்பதற்கும் ஒன்று கிடைக்காமல் தள்ளி போவதற்கும் நிச்சயம் ஒரு காரணம் இருக்கும்.
பலரை சந்திப்பதற்கும் சிலரை விட்டு விலகுவதற்கும் ஏதோ ஒரு காரணம் நிச்சயம் இருக்கும்.
காரணமின்றி எதுவும் இங்கு நடப்பதில்லை. காரணத்தை அறிய முயற்சிக்காமல் இறைவனை நம்பி நடப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்!
எல்லாம் நன்மைக்கே. என்றும் அவனருளாலே அவன் தாள் பணிந்திருங்கள்!.. #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #sivan #சிவன் #சிவ
எழும்போதும் வேலும் மயிலும் என்பேன்
எழுந்தே மகிழ்ந்து தொழும்போதும் வேலும் மயிலும் என்பேன்
தொழுதே உருகி அழும்போதும்
வேலும் மயிலும் என்பேன்
அடியேன் உடல் விழும்போதும்
வேலும் மயிலும் என்பேன்
செந்தில் வேலவனே
காத்தருள் கந்தகுரு அரசே #🕉️ஓம் முருகா #murugan #thiruchentur murug
an #முருகன் #முருக பெருமான் 🙏🙏🙏🙏
🌹சித்தர்கள்* *சொல்லிய* *சமாதி* *நிலை*
நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏
ஒரு குழந்தை தன் தாய் வயிற்றில் இருக்கும்பொழுது சுவாசிப்பதில்லை. கண்களை திறந்து எதையும் பார்ப்பதில்லை. உடலில் விந்து உற்பத்தியில்லை. இதனால் தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு மனம் இயங்குவதில்லை குழந்தை பிறந்து சுவாசிக்கத்தொடங்கியவுடன் மனம் இயங்க ஆரம்பிக்கிறது. குழந்தை கண் திறந்து பார்க்கத்தொடங்கியவுடன் மனம் இன்னும் வேகமாக இயங்குகிறது.
குழந்தையின் பதினான்கு வயதில் உடலில் விந்து உற்பத்தி தொடங்கியவுடன் மனம் இன்னும் அதிவேகமாக இயங்குகிறது. அதாவது மனம் சுவாசம் கண் பார்வை விந்து இவை நான்கும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இவைகளில் ஒன்றை கட்டுப்படுத்தினால் மற்றவை தானே அடங்கிவிடும்.
மனிதன் குழந்தையாக தன் தாய் வியிற்றில் இருக்கும்பொழுது மனம் இயக்கமில்லாமல் மிக ஆழ்ந்த தூக்க நிலையில் இருக்கிறான். இந்த நிலை பேரானந்த நிலை என கூறப்படுகிறது. இதுதான் மனிதனின் ஆதி நிலையாகும். இதுதான் பிறவா நிலை எனப்படுகிறது. அந்த நிலைக்கு திரும்பி போவதைத்தான் சமாதி என குறிப்பிடுகிறார்கள். இந்த நிலையை துரியாதீதம் என்பர்.
துரியம் = தூக்கம்
அதீதம் = ஆழ்ந்தது
துரியாதீதம் = ஆழ்ந்த தூக்கம்
சமம் + ஆதி = சமாதி
ஆதி நிலைக்கு சமமாதல் சமாதியாகும். ஆதி நிலை என்பது மனமற்ற நிலையாகும். மனமற்ற நிலையே சமாதி நிலையாகும் மனமற்ற நிலைக்கு எப்படி செல்வது.
விந்துவை கட்டுபடுத்தினால் மனம் அடங்கும்.
புருவ மத்தியில் கண் பார்வையை வைத்து பழகிவந்தால் மனம் அடங்கும்.
சுவாசத்தின் மீது கவனம் செலுத்தி வந்தால் மனம் அடங்கும்.
கண் கருவிழி மீது கவனம் செலுத்தி வந்தால் மனம் அடங்கும்.
விசய ஞானத்தை தெரிந்துகொள்வதால் மட்டும் சமாதி நிலயை எட்ட முடியாது. மேற்கூறிய முறைகளில் ஒன்றை கடைபிடித்து தியானம் பழகி வந்தால் மட்டுமே காலப்போக்கில் ஒரு நாள் சமாதி நிலைக்குள் போக முடியும்.
சித்தர்கள் சொன்ன சூட்சும ரகசியங்கள் இவை
சித்தர்களை வணங்குவோம்
சித்தர்களின் ஜீவசமாதிகளை தரிசனம் செய்வோம்
நம் கர்மவினையின் வீரியத்தை குறைத்து கொள்வோம்.....
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி .🌹
சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும். #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #sivan #சிவ #சிவன்
*ஆலயங்களில் வலம் வரும் முறைகளும் அவற்றின் பலன்களும் பற்றிய பதிவுகள்* :
கோவிலுக்கு சென்று இறைவனை தரிசித்து வழிபட்ட பிறகு, இறைனின் சன்னதியை வலம் வருவது வழக்கம். பெரும்பாலானவர்கள் நேரமில்லை என சொல்லி இறைவனை மட்டும் தரிசனம் செய்து விட்டு வெளியே சென்று விடுவார்கள். ஆனால் கோவிலை வலம் வருவது மிக முக்கியமானதாகும்.
அப்படி வலம் வரும் போது, மனதார இறைவனை நினைத்தபடி வலம் வந்தால் மனதில் உள்ள தீய எண்ணங்கள் நீங்கி, இறைவனிடம் இருந்து வெளிப்படும் நேர்மறை ஆற்றல்களால் நம்முடைய மனது சுத்தமாகும். நேர்மறையான ஆற்றல்கள் பெருவதால் நன்மைகள் அதிகம் நடக்கும்.
கோவில்களை வலம் வரும் போது ஒற்றை படை எண்ணிக்கையில் தான் வலம் வர வேண்டும். ஒவ்வொரு தெய்வத்தையும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வலம் வந்து வழிபட வேண்டும் என சொல்லப்படுகிறது. இதற்கு ஏற்றாற் போல் பலன்களும் மாறுபடும். உதாரணமாக,
* விநாயகர் கோவில் - ஒரு முறை வலம் வந்து வழிபட வேண்டும். இதனால் தடைகள் விலகும்.
* முருகன் கோவில் - 6 முறை வலம் வர வேண்டும். இதனால் எதிரிகள் தொல்லை நீங்கி, ஞானம் பெருகும்.
* அம்மன் கோவில் - 5 முறை வலம் வர வேண்டும். இதனால் வெற்றி, மனஅமைதி கிடைக்கும். வெள்ளிக்கிழமை துவங்கி, செவ்வாய்கிழமை வரை தினமும் அம்பிகையின் கோவிலுக்கு சென்று 5 முறை வலம் வந்தால் நினைத்த காரியம் நிச்சயம் நடக்கும் என்பது நம்பிக்கை.
* சிவன் கோவில் - 5 முறை வலம் வந்தால் நினைத்தது நடக்கும். செல்வ வளம் பெருகும், பிறவா நிலை ஏற்படும்.
* பெருமாள் கோவில் - 3 முறை வலம் வர வேண்டும். இதனால் ஆட்சி அதிகாரம், செல்வாக்கு, அஷ்டலட்சுமி கடாட்சம் ஆகியவை கிடைக்கும்.
* நவகிரகங்கள் - ஒன்பது முறை வலம் வருவதால் ஜாதகங்களில் இருக்கும் குறைகள் நீங்கும்.
இப்படி எந்த தெய்வத்தின் கோவிலுக்கு சென்று எத்தனை முறை வலம் வர வேண்டும் என தெரியாதவர்கள், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள முடியாதவர்கள் பொதுவாக எந்த கோவிலுக்கு சென்றாலும் எத்தனை முறை வலம் வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதையும் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
*வலம் வரும் எண்ணிக்கையும், பலன்களும் :*
* 1 முறை - இறைவனிடம் நெருங்க செய்யும்
* 3 முறை - மனச்சுமை குறையும்
* 5 முறை - விருப்பங்கள் நிறைவேறும்
* 7 முறை - காரிய வெற்றி
* 9 முறை - எதிரிகள் தொல்லை நீங்கும்
* 11 முறை - ஆயுள் விருத்தி
* 13 முறை - பிரார்த்தனை நிறைவேறும்
* 15 முறை - செல்வம் பெருகும்
* 17 முறை - தானிய வளம் பெருகும்
* 19 முறை - நோய் தீரும்
* 21 முறை - கல்வி வளர்ச்சி
* 27 முறை - குழந்தை பாக்கியம்
* 108 முறை - சகல நலன்களும் கிடைக்கும்
*இதை மனதில் கொண்டு இனி ஆலய வழிபாட்டினைச் செய்து இறையுருள் பெறுவோம்*
*ஓம் நமசிவாய* #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #sivan #சிவன் #சிவ
🌻 தமிழ்நாட்டில் சிவனுக்குரிய பெருமை மிக்க ஸ்தலங்களின்
பெருமைகள்...
ராஜ கோபுரத்தை விட மூலவருக்கு உயர்ந்த விமானம் உள்ள இடங்கள்
1,தஞ்சை – பிரகதீஸ்வரர்
2,கங்கைகொண்டசோழபுரம் – பிரகதீஸ்வரர்
3,தாராசுரம் – ஐராவதேஸ்வரர்
4,திருபுவனம் – கம்பேஸ்வரர்
சிவனுக்குரிய விஷேச ஸ்தலங்கள்.
1, திருவேள்விக்குடி – கௌதுகாபந்தன க்ஷேத்ரம்
2, திருமங்கலகுடி – பஞ்சமங்கள க்ஷேத்ரம்
3, திருவையாறு – பஞ்ச நந்தி க்ஷேத்ரம்
4, திருவிடைமருதூர் – பஞ்சலிங்க க்ஷேத்ரம்
5, திருநீலக்குடி – பஞ்சவில்வாரண்ய க்ஷேத்ரம்
6, திருவிற்கோலம் – நைமிசாரண்ய க்ஷேத்ரம்
7, திருநெல்லிக்கா – பஞ்சாட்சரபுரம்
8, காஞ்சி – சத்தியவிரத க்ஷேத்ரம்
9, திருவல்லம் – வில்வாரண்யம்
10, திருகண்டியூர் – ஆதிவில்வாரண்யம்
சிவ பூஜைக்கு சிறந்த ஸ்தலங்கள்.
1, திருக்குற்றாலம் – திருவனந்தல் பூஜை
2, இராமேஸ்வரம் – காலை சந்தி பூஜை
3, திருவானைக்கா – உச்சிகால பூஜை
4, திருவாரூர் – சாயரக்ஷை பூஜை
5, மதுரை – இராக்கால பூஜை
6, சிதம்பரம் – அர்த்தஜாம பூஜை
காசிக்கு சமமான ஸ்தலங்கள்
1, திருவெண்காடு. 2, திருவையாறு. 3, மயிலாடுதறை. 4, திருவிடைமருதூர்.
5, திருச்சாய்காடு. 6, ஸ்ரீவாஞ்சியம். 7, விருத்தாசலம். 8, மதுரை.
9, திருப்புவனம்
தருமநூல்கள் 18.
கடவுளால் வகுத்தது தருமத்தை பற்றி மட்டும் உபதேசித்தது.
1.மனு, 2.அத்தி, 3.விண்டு, 4.வாசிட்டம், 5.யமம், 6.ஆபத்தமம், 7.யாஞ்ஞ வற்கியம், 8.பராசரம், 9.அங்கீரசம், 10.உசனம், 11.காத்தியாயனம், 12.சம்பவர்த்தம், 13.வியாசம், 14.பிரகற்பதி, 15.சங்க்லிதம், 16.சாதாதபம். 17.கௌதம், 18.தக்கம்.
பாரதத்தின் முக்தி ஸ்தலங்கள்
1,காசி 2,காஞ்சி 3,மதுராபுரி 4,அரித்துவார் 5,உஜ்ஜையினி 6,அயோத்தி 7,துவாரகை.
பாரதமே பரமசிவம்.
1,திருப்பரும்பதம் – தலை உச்சி
2,திருக்கேதாரம் – நெற்றி.
3,காசி – புருவநடு
4,பிரயாகை – நெஞ்சு
5,தில்லை – இதயம்
6,திருவாரூர் – மூலம்.
முக்தி தரும் ஸ்தலங்கள்.
திருவாரூர் – பிறக்க முக்தி
காசி – இறக்க முக்தி
திருவண்ணாமலை – நினைக்க முக்தி
சிதம்பரம் – தரிசிக்க முக்தி
வேதாரண்யம் – தீர்த்தமாட முக்தி
மதுரை – கூற முக்தி
அவினாசி – கேட்க முக்தி.
ஐந்து அற்புதங்கள்.
1, ஆவுடையார் கோவில் கொடுங்கை. 2, கடாரங்கொண்டான் மதில்
3, திருவீழிமிழலை வௌவ்வால் ஒட்டிமண்டபம் 4, தஞ்சாவூர் கோபுரம் 5, திருவலஞ்சுழி பலகணி
திவசம் சிறப்பு இடம் {பிதுர்கடன் கொடுக்க சிறப்பு ஸ்தலம்.}
காசி, கயா {விஷ்னுபாதம் ஆலமரம்}
திருவெண்காடு – ஆலமரத்தடி {ருத்ரபாதம்}
பத்ரிநாத், திருக்கோகர்ணம், பவானி, திலதர்ப்பணபுரி, செதிலப்பதி, {தசரதன்,ஜடாயுக்கு இராமன் லட்சுமனன் தர்ப்பணம் செய்தது.}
இராமேஸ்வரம், துவாரகாபுரி, பூம்புகார், இடும்பாவனம், சங்குமுகேஸ்வரர்.
12 தமிழ் மாதங்களும், தெய்வங்களும்.
1, சித்திரை, ஆடி, ஐப்பசி, தை. – பிரம்மா, சித்திரை, ஐப்பசி பிறக்கும் காலம் விஷு {விஷாவகன் – பிரம்மா}
2, வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி – விஷ்ணு. பிறக்கும்நேரம் விஷ்ணுபதி புண்ணிய காலம்.
3, ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி – சிவம். பிறக்கும் நேரம் “ஷடசீதி” {ஷடாங்கன் – சிவன்}
ஆடி மாதப் பிறப்பு தட்சிணாயன – புண்ணியகாலம் – சூரியன் தெற்கு பயனிப்பது.
தை மாதப் பிறப்பு உத்தராயண – புண்ணியகாலம் – சூரியன் வடக்கு நோக்கி பயனிப்பது.
பெரிய தேர்கள் உள்ள ஸ்தலங்கள்.
திருவாரூர், திருநெல்வேலி, ஸ்ரீவில்லிபுதூர், திருவண்ணாமலை, சிதம்பரம், காஞ்சி, மதுரை.
பன்னிரு ஜோதிர்லிங்க ஸ்தலங்கள்.
1, கேதாரம் – இமயம் {கேதாரேஸ்வரர்}
2, சோமநாதம் – குஜராத் {சௌராஷ்டிரம்,சோமநாதேஸ்வரர்}
3, மகாகாளேசம் – உஜ்ஜையினி {மகா காளேஸ்வரர்}
4, விஸ்வநாதம் – காசி {விஸ்வநாதேஸ்வரர்}
5, வைத்தியநாதம் – {மகாராஷ்டிரம், வைத்தியனாதர்}
6, பீமநாதம் – {மகாராஷ்டிரம், பீமநாதேஸ்வர்.}
7, நாகேஸ்வரம் – {மகாராஷ்டிரம், தாருகாவனம், நாகேஸ்வர்}
8, ஓங்காரேஸ்வரம் – மத்தியப்பிரதேசம் {அமலேஸ்வரம், ஓங்காரேஸ்வரர்}
9, த்ரயம்பகம் – {மகாராஷ்டிரம், கௌதம்} திரயம்பகேஸ்வரர்.
10, குசுமேசம் – மகாராஷ்டிரம் குஸ்ருணேஸ்வர்.
11, மல்லிகார்ஜுனம் – {ஆந்திரம்} ஸ்ரீசைலம் – மல்லிகார்ஜுனர்.
12, இராமநாதம் – இராமேஸ்வரம் {தமிழ்நாடு}
சப்த விடங்கத் ஸ்தலங்கள்.
1, திருவாரூர் – வீதிவிடங்கர் – அஜபா நடனம்.
2, திருநள்ளாறு – நகரவிடங்கர் – உன்மத்த நடனம்.
3, நாகப்பட்டினம் – சுந்தரவிடங்கர் – வீசி நடனம்.
4, திருக்காறாயில் – ஆதிவிடங்கர் – குக்குட நடனம்.
5, திருக்கோளிலி – அவனிவிடங்கர் – பிருங்க நடனம்.
6, திருவாய்மூர் – நீல விடங்கர் – கமல நடனம்.
7, திருமறைக்காடு – புவனி விடங்கர் – ஹம்ஸபாத நடனம்.
பஞ்ச சபைத் ஸ்தலங்களும், பஞ்சாட்சர வடிவமும்.
1, திருநெல்வேலி – தாமிர சபை – ந
2, திருக்குற்றாலம் – சித்திர சபை – ம
3, திருவாலங்காடு – இரத்தின சபை – சி
4, திருத்தில்லை {சிதம்பரம்} – பொற்சபை – வ
5, மதுரை – வெள்ளிசபை – ய
திருச்சிற்றம்பலம்.
வாழ்க மெய்அன்பர்கள் வளர்க சிவம் புகழ்.
அன்பே சிவம். சிவாயநம
🙏 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #sivan #SiV@n🐍 B@kthån 📿📿🪔🙏 #சிவ
சிவசிவ🙏🏻
🌻கருவாய்க் கிடக்கும் நாள் முதல் உயிர் பிரியும் நாள் வரை நலம் அருளும் திருக்கோயில்கள்
1. கரு உருவாக ---🔱கரூர் பசுபதீஸ்வரர் கோயில்
2. சுகப் பிரசவத்திற்கு --– 🔱திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில்
3. நோயற்ற வாழ்விற்கு --- 🔱வைதீஸ்வரன் கோயில் வைதிய லிங்கக் கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில்
4. தீரா நோய் தீர ---- 🔱திருவதிகை புரம் எரித்த வீரட்டேஸ்வரர் கோயில், குத்தாலம் உத்தர வேதீஸ்வரர் கோயில்
5. நவ கிரக தோஷங்கள் நீங்க -- 🔱திருக்குவளை (திருக் கோளிலி) கோளிலிப் பெருமான் கோயில் உள்ளிட்ட ஏழு சப்த விடங்கத் தலங்களான தியாக ராஜர் கோயில்கள்
6. நாக தோஷம் நீங்க --- 🔱புதுக் கோட்டை அருகே பேரையூர் நாக நாதர் கோயில், கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில், திருநாகேஸ்வரம் நாக நாதர் கோயில், திருப் பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில் மற்றும் எல்லா நாக நாதர் நாகேஸ்வரர் கோயில்கள்.
7. பித்ரு சாபம் தோஷம் நீங்க --- 🔱திருத்திலதைப் பதி மதி முத்தர் கோயில்
8. சிறந்த ஞானத்திற்கு ----🔱-திருப்பெருந்துறை ஆளுடையார் கோயில், சீர்காழி பிரம்ம புரீஸ்வரர் கோயில், ஞானஸ்தலம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் 9. நல்ல கல்விக்கு -- திரு இன்னம்பர் எழுந்தறி நாதர் கோயில், மதுரை சொக்க நாதர் கோயில்
10. கலைகளுக்கு ------🔱 சிதம்பரம் நடராஜர் கோயில்
11. காரிய வெற்றி பெற ---- 🔱எட்டு வீரட்டேஸ்வரர் கோயில்கள்
12. எண்ணம் ஈடேற ---– 🔱திருவெண்காடு வெண்காட்டீசர் கோயில்
13. செல்வம் சேர --- 🔱நாகைக் காரோணம் காரோணேஸ்வரர் கோயில், திருப்புகலூர் கோணப்பிரான் கோயில், திருவீழிமிழலை வீழியழகர் கோயில், திருவாவடுதுறை கோமுத்தீஸ்வர் கோயில், விருத்தாச்சலம் விருத்த கிரீஸ்வரர் கோயில், திருக்கடையூர் கால சம்ஹார வீரட்டேஸ்வரர் கோயில், அசிரில் கரை அழகார் புத்தூர் படிக்காசுப் பரமர் கோயில் மற்றும் பல கோயில்கள்.
14. காணாமல் போனவை கிடைக்க ---- 🔱திருவானைக்கா ஜம்புகேவஸ்வரர் கோயில், திருமுருகன் பூண்டி முருக நாதர் கோயில்
15. பதவி, அரச பதவி, உயர் பிறவி பெற ---- 🔱காஞ்சிபுரம் தேவ சேனாபதீஸ்வர் கோயில், முருகன் சிவ பூஜை செய்து தேவ சேனாதிபதியாகப் பதவி பெற்ற தலம் (குமரக் கோட்டம்) முருகன் கோயில் என்று தவறாக வழங்கப்படுகிறது, வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயில், திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயில், திருவாரூர் தியாக ராஜர் கோயில் (எலி சிலந்தி குரங்கு மனிதனாகப் பிறந்து உலகம் ஆள அருள் செய்த ஈஸ்வரன் கோயில்கள்)
16. திருமணத் தடை நீங்க --- 🔱திருமருகல் மாணிக்க வண்ணர் கோயில்
17. பிரிந்த தம்பதியர் ஒன்று சேர -🔱--- செய்யாத்த மங்கை அயவந்தி நாதர் கோயில்
18. மலட்டுத் தன்மை நீங்கிக் குழந்தை உண்டாக 🔱செய்யாறு திருவோத்தூர் வேத புரீஸ்வரர் கோயில், திருவெண்காடு வெண்காட்டீசர் கோயில்
19. கடன் தீர ---- 🔱திருவாரூர் தியாக ராஜர் கோயில், திருச்சேறை சார பரமேஸ்வரர் கோயில். இவை சீனிவாசப் பெருமாள் வழிபட்டுக் கடன் தொல்லை நீங்கிய தலம் (கடன் வாங்காமல் வாழ்வதுதான் நல்ல வாழ்க்கை)
20. பில்லி சூனியம் ஏவல் சாபம் பேய் பித்தம் விலக ----- 🔱திருக்குற்றாலம் குறும்பலா நாதர் கோயில். திருவாலங்காடு ஆலங்காட்டீசர் கோயில்
21. தாவரம் பூ கருகாமல் செழிப்புடன் வளர --– 🔱திருக் கருகாவூர் முல்லை வன நாதர் கோயில் (தலவரலாறு தேவாரத்தில் உள்ளது. *கோயிலோடு கருவுக்கும் அம்மனுக்கும் சம்பந்தம் இல்லை. கர்ப ரட்சாம்பிகை பிற்காலக் கற்பனை அம்மன்*.
22. மழை பொழிய, பயிர் வளர ----- 🔱மீயச்சூர் மேக நாதர் கோயில். இந்தக் கோயிலுக்கும் லலிதாம்பிகைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஆகம விதிக்கு மாறுபட்டு
அமைந்துள்ள இந்த அம்மன் சந்நிதி தற்காலச் சந்நிதி.
23. 🔱பகையை வழக்குகளை வெல்ல –-- மதுரை சொக்க நாதர் கோயில்
24. சகல பாவமும் தீர ----🔱 பாப நாசம் பாப நாசர் கோயில்
25. கண் பார்வைக்கு --- 🔱காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் , திருவாரூர் தியாக ராஜர் கோயில் திருவீழிமிழலை வீழிநாதர் கோயில் திருக்காளத்தி காளத்தி கிரீசர் கோயில் திரு மயிலை வெள்ளீஸ்வரர் கோயில்
26. பாதுகாப்பான பயணத்திற்கு ---– 🔱விரிஞ்சிபுரம் வழித் துணையப்பர் கோயில்
27. அச்சம் குழப்பம் கவலை மரண பயம் நீங்கி மன நிம்மதிக்கு ---- 🔱திருவதிகை புரம் எரித்த வீரட்டேஸ்வரர் கோயில், திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில், திரு வலிவலம் மனத் துணையப்பர் கோயில், திருக் கடையூர் கால சம்ஹார வீரட்டேஸ்வரர் கோயில், தருமபுரம் யாழ் மூரி நாதர் கோயில், திருவாஞ்சியம் வாஞ்சி நாதர் கோயில், சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரம் தண்டீஸ்வரர் கோயில் மற்றும் யமன் சிவ பூஜை செய்த அத்தனைக் கோயில்களும்.
28. விபத்து நீங்க, உயிர் பிழைக்க ---- 🔱ஆலங்குடி, ஆடுதுறை, திருப் பழனம் ஆபத் சகாயேஸ்வரர் கோயில்கள்
29. நீண்ட ஆயுள் உண்டாக -- 🔱இறந்தவர் மீண்டும் உயிர் பெற்று வாழ்ந்த திருக் கடையூர் கால சம் ஹார வீரட்டேஸ்வரர் கோயில், திருக்கொற்கை காம தகன வீரட்டேஸ்வரர் கோயில், திருவாரூர் தியாக ராஜர் கோயில், திருமருகல் மாணிக்க வண்ணர் கோயில், திருச் செங்காட்டங்குடி கணபதீஸ்வரர் கோயில், திருமயிலை கபாலீஸ்வரர் கோயில், கரூர் பசுபதீஸ்வரர் கோயில், திருபுன்கூர் சிவலோக நாதர் கோயில்.
30. சிறந்த பிரம்மச்சர்ய சந்நியாச வாழ்க்கைக்கு ---- 🔱திருக் குறுக்கை காம தகன வீரட்டேஸ்வரர் கோயில், திருப்பெருந்துறை ஆளுடையார் கோயில்
31. இனிய முறையில் உயிர் பிரிய ----- 🔱திருப் புகலூர் கோணப்பிரான் கோயில், திருவஞ்சைக் களம் அஞ்சைக் களத்தப்பர் கோயில்
32. மீண்டும் பிறவாத முக்திக்கு ----- 🔱திருப்பெருந்துறை ஆளுடையார் கோயில், மதுரை சொக்க நாதர் கோயில், ஆச்சாள் புரம் சிவலோகத் தியாகேசர் கோயில், திருவதிகை புரம் எரித்த வீரட்டேஸ்வரர் கோயில், திருக்கோவிலூர் அந்தகாசுர வத வீரட்டேஸ்வரர் கோயில்.
எந்த வாசல் வழியாக நுழைந்தாலும் வலமாகச் சென்று மூலஸ்தானருக்கு நேர் எதிரே உள்ள நந்தியை வணங்கி அனுமதி பெற வேண்டும். உதாரணமாக மதுரை சுந்தரேசர் கோயிலில் கொக்க லிங்கப் பரம்பொருளுக்கு நேர் எதிரே பிரகாரத்தில் நந்தி மண்டபத்தில் உள்ள நந்தியை வணங்கி அனுமதி பெற வேண்டும். இது கல் மாடு தானே இதற்கு என்ன தெரியப் போகிறது என்று செயல்பட்டால் ஈஸ்வரனும் கல்லாகத் தான் இருப்பார். கடவுளாக அருள் பொழிய மாட்டார். ஒரு பலனும் உண்டாகாது. சிவ நினைவோடு சிவ பரம்பொருளை மட்டுமே வழிபட்டால்தான் பலன் உண்டாகும்.
சிவாய நம🙏🏻
திருச்சிற்றம்பலம்🙏🏻🙏🏻 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #சிவன் #சிவ #சிவ சிவ
முத்தா!
உந்தன் முகம் ஒளிநோக்கி!
முறுவல் நகைக்கான!
அத்தா!
சால ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே!🤭😞😪💓💔🔥🙏 மகாதேவ்
வெகு பணிவுடன் சிவ வணக்கம் 💓💔🔥🙏மகாதேவா #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #s #sivan #SiV@n🐍 B@kthån 📿📿🪔🙏
நாளை 12.11.2025 தேய்பிறை அஷ்டமி
*********************************************
கால பைரவர் விரதம்
*************************
பைரவரை தேய்பிறை அஷ்டமி தினத்தில் விரதம் இருந்து பஞ்ச தீபம் ஏற்றிவைத்து வழி பாடு செய்தால், காலத்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் கூட நீங்கும் என்பது ஐதீகம்.
◆சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றா ன தத்புருஷ முகத்தில் இருந்து தோன்றியவர் பைரவர்.
◆இவர் சிவபெருமான் ஆட்சி செய்யும் இடமாக கருதப்படும் காசியில சிவகணங்களுக்கு தலைவராக விளங்குபவர்.
◆ஆணவம் கொ ண்ட பிரம்ம தேவனின் தலையை கொய்தவர்.
◆முனிவர்களின் சாபத்தில் இருந்து, தேவேந்தி ரன் மகன் ஜெயந்தனைக் காத்து அருளியவர்.
◆மன்மதனின் கர்வம் அடங்க செய்தவர்.
◆எல்லா வற்றுக்கும் மேலாக சூரியனின் மகனான சனியை, சனீஸ்வரனாக்கி நவக்கோள்களில் வலிமை வாய்ந்த கோளாக உயர்த்தி பெருமை சேர்த்தவர்.
இப்படி பல சிறப்புகளை கொண்ட பைரவ மூர்த் தியை ‘கால பைரவர், மார்த்தாண்ட பைரவர், சேத்திர பாலகர், சத்ரு சம்கார பைரவர், வடுக பைரவர், சொர்ணாகாசன பைரவர் உள்ளிட்ட பல பெயர்களில் அழைத்து வழிபடுகிறார்கள்.
பைரவ மூர்த்தியை பவுர்ணமிக்கு பின் வரும் அஷ்டமியில், அதாவது தேய்பிறை அஷ்டமி தினத்தில் விரதம் இருந்து பஞ்ச தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்தால், காலத்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் கூட நீங்கும் என்பது ஐதீகம்.
பஞ்ச தீபம் என்பது, இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசுநெய் ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்ற வேண்டும்.
ஒரு தீபத்தில் இருந்து மற்றொரு தீபத்தை ஏற்றக்கூடாது. ஒவ்வொரு தீபத்தையும் தனித் தனியாக ஏற்ற வேண்டும். இப்படி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் அனைத்தும் விரைவி ல் நிறைவேறும் என்பது நம்பிக்கையாகும்.
பைரவர் என்றால் ‘பயத்தை அளிப்பவர்’ என்று பொருள்.அதாவது தன்னை அண்டியவர்களி ன் குறைகளைக் களைய அவர்களின் எதிரிக ளுக்கு பயத்தை அளிப்பவர். ‘பாவத்தை நீக்கு பவர்’ மற்றும் ‘அடியார்களின் பயத்தை போக் குபவர்’ என்றும் பொருள் உண்டு.
பைரவர், சிவபெருமானின் 64 வடிவங்க ளில் ஒருவர் ஆவார். அந்தகாசூரனை அழிப்பதற்கா க சிவபெருமான் எடுத்த வடிவமே பைரவர் ஆவார்.
இவர் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்த ல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களையும் செய்கிறார். சிவபெருமானைப் போலவே, பை ரவருக்கும் 64 வடிவங்கள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் ‘கால பைரவர்’.
காலத்தை வென்றவர், கால சக்கரத்தை இயக்குபவர் இந்த கால பைரவர். இவரது உடலில் 27 நட்சத்திரங்களும், 12 ராசிக ளும், 9 கோள்களும் அமைந்திருப்பதாக புராணங்கள் சொல்கின்றன.
இவரது மூச்சுக்காற்றில் இருந்து தான் திருவா க்கியம் மற்றும் திருக்கணிதம் ஆகிய பஞ்சாங் கங்கள் உண்டானதாக கூறப்படுகிறது. இவற் றில் இருந்து மற்ற காலக் கணித முறைகள் தோன்றியதாம்.
கால பைரவர் மற்ற பைரவர்களைக் காட்டிலும் உக்கிரமானவர். ஆனால் தன்னை நம்பியவர்க ளை கண்ணின் இமைபோல் காப்பவர். இவரே சிவ ஆலயங்களின் காவல் தெய்வம்.
இவரின் அருள் இன்றி சிவ வழிபாடு முழுமை பெறாது. சிவவழிபாட்டில் முன்னேற்றம் காண காலபைரவரின் அருள் மிக அவசியம் ஆகும்.
உலகில் பிறந்தவர்கள் வேண்டுவது முக்தியை தான். அதாவது மறுபிறவி இல்லாத நிலை. ஆனால் ஒருவருக்கு பாவமோ அல்லது புண்ணியமோ இருந்தால் மறுபிறவி உண்டு.
எப்போது பாவம், புண்ணியம் இரண்டும் அழிந்து வெறுமை நிலை உண்டாகின்ற தோ அப்போது தான் பிறவி இல்லாத பெருநிலை ஏற்படும். அத்தகைய பிறவி இல்லாத பெரு வாழ்வை தருபவர் கால பைரவர்.
இவர் காலத்தை மாற்றும் சக்தி கொண்டவர் என்பதால், ஒருவரது பாவ- புண்ணியங்களை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு.
வீட்டில் தினமும் விளக்கேற்றி வைத்து, ‘ஓம் ஹ்ரீம் கால பைரவாய நமஹ’ என்ற மந்திரத் தை 27 முறை உச்சரித்து வந்தால், வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறலாம்.
ஓம் நமசிவாய..
ஓம் ஸ்ரீ காலபைரவா போற்றி...🙏🙏🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🪔 கால பைரவர் போற்றி 🪔🙏 #கால பைரவர் #கால பைரவர்
🌙 #இரவு #சிந்தனை 🌙
🌹 *11.11.2025* 🌹
🌻 *வாழ்க்கை வாழ்வதற்கே தவிர இல்லாததைக் கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு இல்லை* 🌻
🌻 *வாழ்ந்து உயர்ந்து விட்டால் பொறாமையில் பேசுவார்கள். தாழ்ந்து வீழ்ந்து விட்டால் கேவலமாகப் பேசுவார்கள்* 🌻
🌻 *இவ்வளவு தான் மனிதர்களின் உலகம்* 🌻
🌻 *ஆகையால் நல்ல விஷயத்திற்காகத் தனியாக நிற்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும் தைரியமாக நில்* 🌻
🌻 *எப்படி என்றால் குனிந்து வாழாதே கும்பிடு போடாதே பணிந்து வந்து கூடப் பழிகள் சொல்லாதே* 🌻
🌻 *நடக்கின்ற தூரம் வெகுதூரம் உன் கால்களைக் கட்டாதே* 🌻
🌻 *கடினங்கள் கஷ்டங்கள் எதுவானாலும் நீ கண்ணீர் சிந்தாதே* 🌻
🌻 *வழியெங்கும் முள்ளு கல்லு மேடு இருந்தாலும் நீ வலிகளைத் தாங்கி ஓடு ஓடு* 🌻
🌻 *காலங்கள் இங்கே காணாமல் போகும்* 🌻
🌻 *அடுத்து என்ன நடக்கும் என்று பயந்து வாழாதே* 🌻
🌻 *எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று துணிந்து வாழ்ந்தால் வெற்றி நிச்சயம் 🙏 👍👍👍* 🌻
🤲 முருகா இன்றைய 11-11-2025 🙏 நாளை இனிமையாக தந்தமைக்கு
நன்றி🤲
🙏நாளைய பொழுது 12-11-2025 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏
🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏
⚜️#எல்லா #நன்மைகளும் #கிடைக்க #அருள் #தருவாய் #திருச்செந்தூர் #முருகா⚜️
🌸 #கவலைகளை #மறக்க #கடவுள் #தந்த #வரமேதூக்கம் #எனவே #கவலையின்றி #நிம்மதியாக #தூங்குங்கள்😌
🌺நாளையபொழுது நல்லபடி #முருகன் அருளில் உள்ளபடி🙏
👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தை வென்று 🙏
🙏 #ஓம் #சரவணா #பவ 🙏 #murugan #Muruga #thiruchentur murug
an #முருகன் #ஓம் முரு


