நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா?
(அல்குர்ஆன் 94-1)
மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்.
(அல்குர்ஆன் -94-2).
அது உம் முதுகை முறித்துக் கொண்டுடிருந்தது.
(அல்குர்ஆன் 94-3)
"பொறுமையுடன் தங்கள் சோகத்தை மறைப்பவர்களுக்கும், நிவாரணத்தை எதிர்பார்த்து கனத்த இதயத்துடன் தொழுகையில் நிற்பவர்களுக்கும்,
இவ்வுலக வாழ்க்கையால்
சோர்வடைந்தவர்களுக்கும்"
அல்லாஹ் நமக்கு இரண்டு முறை வாக்குறுதி அளித்துள்ளான்:
"நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது"
[அல்குர்ஆன் 94:6]
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதன் தன் நண்பனின் வழியிலேயே இருக்கிறான். ஆகவே, உங்களில் ஒருவர், தாம் யாருடன் நட்பு கொள்கிறோம் என்பதைக் கவனிக்கட்டும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(அபூதாவூத்: 4833)
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️
"நீங்கள் தொழுவதற்கு நிற்கும் போதெல்லாம், இதுவே உங்கள் கடைசித் தொழுகை போல (பணிவுடன்) தொழுங்கள்".
அறிவிப்பாளர்: அபூ அய்யூப் (ரலி).
சுனன் இப்னு மாஜா 4171 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️
அல்லாஹ்விடம் எப்போதும் திருப்தியுடன் இருக்க வேண்டும் திருப்தி என்பது ஒருவரின் வாழ்க்கையில் அல்லாஹ்வின் கொடைகளை ஏற்றுக் கொண்டு, அவற்றில் மனநிறைவு அடைவதாகும்.
அல்லாஹ்வின் கொடைகளுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும் என்று கேட்கப்படுகிறது. நன்றி என்பது அல்லாஹ்வின் அருளை உணர்ந்து, அதற்காக அவனைப் புகழ்வதாகும்.
ஆன்மாக்கள் அல்லாஹ்வின் நெருக்கத்தில் வளர வேண்டும்,
இது ஒருவரின் ஆன்மீக வளர்ச்சியைக் அல்லாஹ்வின் நெருக்கத்தில் வளர்வது என்பது அவனது கட்டளைகளைப் பின்பற்றி, அவனது வழியில் நடப்பதாகும்.
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் சேமித்து வைப்பதை நான் தடுத்திருந்தேன். (இப்போது) உண்ணுங்கள், சேமித்து வையுங்கள்".
ஆரம்பத்தில் பஞ்சம் இருந்ததால் இறைச்சியைச் சேமிக்கக் கூடாது என்று தடுத்த முஹம்மது நபி (ஸல்), நிலைமை சீரான பிறகு குர்பானி இறைச்சியைச் சேமித்து வைத்துக் கொள்ள அனுமதி அளித்தார்கள்.
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️
"சொர்க்கத்திற்கு நியமிக்கப்பட்டவர் தொடர்ச்சியான சோதனைகளால் சோதிக்கப்படுவார்."
"مَنْ كَانَ مَقْصُودًا لِلْجَنَّةِ يُبْتَلَى بِالْشَّدَائِدِ مُسْتَمِرًّا"
இப்னு அல்-கய்யிம் அல்-ஜவ்ஸிய்யா (ரஹ்) அவர்களின் வாக்கியம்:
இந்த வாக்கியம் இப்னு அல்-கய்யிம் அல்-ஜவ்ஸிய்யா (ரஹ்) அவர்களால் கூறப்பட்டது. இது ஒரு முக்கியமான உண்மையை விளக்குகிறது:
அல்லாஹ் ஒருவரை சொர்க்கத்திற்கு நியமித்திருந்தால், அவர் தனது வாழ்க்கையில் பல சோதனைகளை சந்திக்க நேரிடும்.
இந்த சோதனைகள் ஒருவரின் ஈமானை (நம்பிக்கையை) சோதிப்பதற்காகவும், அவரை தூய்மைப்படுத்துவதற்காகவும் உள்ளன. இது ஒருவரின் பொறுமையையும், நம்பிக்கையையும் வலுப்படுத்துகிறது.
சோதனைகள் தொடர்ச்சியாக இருக்கும். இது ஒருவரை தனது நம்பிக்கையில் உறுதியாக இருக்க வைக்கிறது.
அல்லாஹ் தனது நம்பிக்கை கொண்ட அடியார்களை சோதிப்பதன் மூலம் அவர்களை சொர்க்கத்திற்கு தயார்படுத்துகிறான். இது அல்லாஹ்வின் கருணையின் ஒரு வடிவம்.
சோதனைகளை சந்திக்கும் போது பொறுமையாகவும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும்.
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️
"என் வாழ்வின் இறுதி அத்தியாயம் மதீனாவில் நிறைவடைய வேண்டும், என்கிற என் துஆ மிகவும் அழகானது."
அல்லாஹ் என் வாழ்க்கையை அவனது வழியில் நடத்தி, எனது இறுதி மூச்சு வரை அவனது அருளையும், கருணையையும் எனக்கு, உங்களுக்கும் வழங்குவானாக.
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் ஊரிலுள்ள இடங்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான இடம் பள்ளிவாசலாகும். ஓர் ஊரிலுள்ள இடங்களிலேயே அல்லாஹ்வின் வெறுப்பிற்குரிய இடம் கடைத்தெருவாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
(முஸ்லிம்: 1190)
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️
"நீ தர்மம் செய்யாமல் முடிந்து வைத்துக் கொள்ளாதே! அவ்வாறு செய்தால் இறைவனின் கொடை உனக்கு வழங்கப்படாமல் முடிந்து வைத்துக் கொள்ளப்படும்!"
நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். என அஸ்மா(ரலி) அறிவித்தார்கள்.
‘அப்தாவின் அறிவிப்பில்,
‘நீ இவ்வளவுதான் என்று வரையறுத்து தர்மம் செய்யாதே! அல்லாஹ் உன் மீது பொழியும் அருளை வரையறுத்து விடுவான்’ எனக் கூறினார்கள் என உள்ளது.
(புகாரி: 1433)
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️
நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியபோது நான் அவர்களுக்கு என்னிடமிருந்ததிலேயே மிக நல்ல வாசனைப் பொருளைப் பூசிவந்தேன்.
அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி)
(புகாரி: 5928)
ஸுமாமா இப்னு அப்தில்லாஹ் இப்னி அனஸ் (ரஹ்) அறிவித்தார்கள்:
அனஸ் (ரலி) தமக்கு அன்பளிப்பாகத் தரப்படும் நறுமணப் பொருளை மறக்காமல் ஏற்றுக்கொள்வார்கள். மேலும், அவர்கள் ‘நபி (ஸல்) அவர்கள் தமக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்ட நறுமணப் பொருளை மறுத்ததில்லை’ என்று கூறினார்கள்.
(புகாரி: 5929)
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️













