ஒரு கட்டத்துக்கு மேல எல்லாமே சலிச்சு போகுதுல? கூட்டங்களில் இருந்து விலகி தனிமையை தேடுவது, Wanted ஆக நண்பர்களுக்கு கால் செய்து பேசுவதை குறைத்து கொண்டது,
எந்நேரமும் பேசிக்கொண்டே இருக்கும் நம்மிடம் அமைதி ஒட்டிக் கொண்டது, புதிய நண்பர்களை கண்டு வியப்பது குறைந்துவிட்டது, மற்றவர்களை அளவுகடந்து நம்புவதை நிறுத்தியது,
எதற்க் கெடுத்தாலும் கோபப்படும்
நாம் பொறுமையை கடைப்பிடிப்பது,
எதையெல்லாம் மாற்ற முயற்சித்தோமோ அதையெல்லாம் அப்படியே கடக்க பழகிவிட்டது,
பிறர் எண்ணங்களுக்கு நாம், விளக்கப்படுத்துவதை நிறுத்தியது, பிடித்ததெல்லாம் பிடிக்காமல் போனது, சரி தவறு என வாதம் செய்வது குறைத்துக்கொண்டது, யாரெல்லாம் முக்கியம் நினைத்தோமோ இப்போது யாருமே தேவையில்லை என்கிற மனநிலை வந்தது, சின்ன சின்ன விஷயங்களுக்கு feel பன்ற நாம feel பன்ன இதை விட பெரிய விஷயம் இருக்குனு நினைக்கிறது,
இப்படி நிறைய நிறைய மாற்றங்கள் பக்குவங்கள் எல்லாமே சில மனிதர்களும் நில நிகழ்வுகளும் தான் காரணம்...
ஆனால் அவர்கள், அவைகள் நமக்கு இனி வரும் நாட்களை பக்குவமாக கையாளவும் மனிதர்களை அறிந்து வாழவும் ஒரு சூழலை ஒரு படிப்பினையை நமக்கு ஏற்படுத்திருக்கிறார்கள் அதான் நாம் இதுநாள் வரை சந்தித்து சலித்துப்போன #அத்தனையும்...
இன்னும் இன்னும் முன்பை விட, தற்போது இருப்பதை விடவும், இன்னொரு நிலைகளை தேடி தேடி நம்மை நகர்த்தும், நகர்த்திக் கொண்டே இருக்கும்.
#✍️Quotes