அண்ணாமலையிடம் பேசிய விஜய்... மத்திய அமைச்சர் பொறுப்பு... கதி கலங்கி நிற்கும் திமுக...
பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை, அவருடைய பதவி காலம் முடித்து தலைவர் மாற்றம் செய்யப்பட்ட பின்பு, பாஜகவில் அவருக்கு முக்கிய பதவி எதுவும் இது வரை வழங்கப்படாமல் இருந்து வந்தது. இருந்தாலும் மத்திய பாஜக தலைமை தொடர்ந்து அண்ணாமலைக்கு கொடுத்து வரும் முக்கியத்துவம் ஒரு சதவிகிதம் கூட குறையாமல் இருந்து வருகிறது. விரைவில் பாஜக தேசிய தலைவர் மாற்றம் செய்யப்பட்ட பின்பு , தேசிய நிர்வாக பட்டியல் வெளியாவது மட்டுமில்லை மத்திய அமைச்சரவையில் மாற்றம் நிகழ் இருப்பதாக டெல்லி வட்டாரம் உறுதி படுத்துகிறது.
இந்நிலையில் பாஜகவில் புதிய தேசிய தலைவர் நியமனம் செய்யப்பட்ட பின்பு, அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்பொழுது அதில் மாற்றம் செய்யப்ட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் பாஜக தேசிய தலைவராக ஒரு பெண் நியமிக்க பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பிரதமர் மோடி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், தற்பொழுது மத்திய நிதி அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வசுந்தரா ராஜே சிந்தியா ஆகிய இருவர் பெயர் பாஜக தேசிய தலைவர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்ற போது, அங்கே பிரதமர் மோடிக்கு இணையான மரியாதையை நிர்மலா சீத்தராமனுக்கு அளித்தார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், இதெல்லாம், நிர்மலா சீதாராமன் தேசிய தலைவராக ஆவதற்கான ஒரு முன்னோட்டம் தான் என்கிறது டெல்லி வட்டாரங்கள்.
இதனை தொடர்ந்து நிர்மலா சீதாராமன் பாஜக தேசிய தலைவராக நியமிக்க பட்டால், அவர் வகித்து வரும் நிதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார், காரணம் பாஜகவில் தேசிய தலைவர் அல்லது மாநில தலைவராக இருக்க கூடியவர்கள் அமைச்சராக,பிரதமராக, முதல்வராக இருக்க கூடாது என்பது அந்த கட்சியின் விதி, இதனை தொடர்ந்து நிதி அமைச்சர் பதவியை நிர்மலா சீதாராமன் ராஜினாமா செய்த பின்பு, மத்திய அமைச்சரவையில் மாற்றம் நிகழ இருக்கிறது.
இதில் மத்திய நிதி அமைச்சராக பியூஸ் கோயல் பதவி ஏற்பார் என்றும், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, பிரதமர்துறை அல்லது உள்துறை துறையின் கீழ் இணையமைச்சராக வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் சிபிஐ அண்ணாமலை கீழ் இயங்கும் என்கிறது டெல்லி வட்டாரங்கள். தற்பொழுது அண்ணாமலை மத்திய இணையமைச்சராகி, அவருக்கு கீழ் சிபிஐ வர இருக்கும் தகவல் , திமுகவை கதிகலங்க செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், கரூர் விவகாரம் மற்றும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசி இருக்கிறார். கரூர் விவகாரத்தில் நீங்கள் பேட்டி கொடுத்த பின்பு தான் எங்களால் மீண்டும் எழ முடிந்தது என அண்ணாமலையிடம் தெரிவித்த விஜய், அதற்கு அண்ணாமலைக்கு நன்றியும் தெரிவித்து இருக்கிறார்.
தொடர்ந்து கரூர் விவகாரம் குறித்து நிறைய விஷயங்களை விஜய் அண்ணாமலையிடம் பகிர்ந்து இருக்கிறார். இந்நிலையில் விஜய் தொலைபேசியில் தொடர்பு கொன்டு அண்ணாமலையிடம் பேசிய தகவல் தமிழக அரசியலில் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #🙋♂️அண்ணாமலை