
💘🐦💜Sudarsan💜🐦💘(POWER MAN)வாழ்க்கை வாழவே
@sudarsan142
வர்ணிப்புபிரமிப்புமிகுந்த ஒன்றுநான்ரசித்த ஷேர்சாட்
👉 ஏழு புத்திசாலித்தனமான மேற்கோள்கள் அதில் எனதும் ஒன்றை இணைத்து எட்டு புத்திசாலித்தனமான மேற்கோள்கள் ஆக உங்களுக்கு வழங்கினேன் 👈
ஷேக்ஸ்பியர் :
மற்றவர்களின் உணர்வுகளுடன் ஒருபோதும் விளையாடாதீர்கள் ஏனென்றால் நீங்கள் விளையாட்டை வெல்லலாம் ஆனால் ஆபத்து என்னவென்றால் நீங்கள் அந்த நபரை வாழ்நாள் முழுவதும் இழக்க நேரிடும்...!!
நெப்போலியன் :
உலகம் மிகவும் பாதிக்கப்படுகிறது கெட்டவர்களின் வன்முறையால் அல்ல ஆனால் நல்லவர்களின் மௌனத்தால்...!!
ஐன்ஸ்டீன் :
எனக்கு முடியாது இல்லை என்று கூறிய அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன் அவர்களால் தான் நான் அதை செய்தேன்...!!
ஆபிரகாம் லிங்கன் :
நட்பு உங்கள் பலவீனமான புள்ளி என்றால் நீங்கள் உலகின் வலிமையான நபர்...!!
மார்ட்டின் லூதர் கிங் :
நாம் சகோதரர்களாக சேர்ந்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது முட்டாள்களாக சேர்ந்து அழிந்து போவோம்...!!
மகாத்மா காந்தி :
பலவீனமானவர் ஒருபோதும் மன்னிக்க முடியாது மன்னிப்பதே வலிமையானவரின் பண்பு...!!
டாக்டர் அப்துல் கலாம் :
ஒருவரை தோற்கடிப்பது மிகவும் எளிதானது ஆனால் ஒருவரை வெல்வது மிகவும் கடினம்...!!
Sudarsanam :
வாழ்க்கையில் நீங்கள் படிக்கும் புத்தகங்கள் அறிவையும் நீங்கள் பழகும் மனிதர்கள் அனுபவத்தையும் கற்றுத்தருகிறார்கள் என்பதை தெரிந்துக்கொள்வோம்...!!
ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமை அல்ல விழுந்த போதெல்லாம் தன்னம்பிக்கையுடன் எழுந்தான் என்பதே பெருமை...!!
வாழ்க்கை என்பது சூரியன் போன்றே அல்ல என்றும் முழுமையாய் பிரகாசிக்க அது நிலாவை போன்றது அதில் வளர்பிறை தேய்பிறை என அனைத்தும் இருக்கும் இறுதியில் ஒருநாள் மறைந்தும் போகும்...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 ##ஷேர்சாட் டிரெண்டிங், ##ஷேர்சாட் ஃபேஷன் வாரம், ## ஃபேஷன் & ஸ்டைல் ,
👉 எதார்த்தம் ஆனால் உண்மை
நிதர்சனம் சொல்லுவது சுதர்சனம் 👈
ஒரு விரல் பிறரை நோக்கி நீ காண்பிக்கும் பொழுது பிற மூன்று விரலும் உன் பக்கம் திரும்பி உன்னை காண்பிக்கும் ஒரு விரல் தனித்து நிற்க்கும் எனவே பிறரை குறை சொல்ல நீ ஒரு மடங்கு ஆரம்பித்தால் உன்னைப் பற்றி மூன்று பேர் மூன்று மடங்காக குறை பேச ஆரம்பிப்பார்கள் நீ தனித்து நிற்பாய் என்பதே இதன் அர்த்தமாகும்...!!
ஒருவரையும் தூற்றாமல்
ஒழுக்கமாய் இரு...!!
யாவருமே நேசித்திடும்
யாசகமாய் இரு...!!
சூழ்ச்சிகளை வென்றிடவும்
சூசகமாய் இரு...!!
வாசிப்போர்க்கு வசதியாக
வாசகமாய் இரு...!!
சான்றோரும் போற்றிடவும்
சாதகமாய் இரு...!!
ஆதரவாய் இருந்திடவே
ஆக்கமாய் இரு...!!
ஊனமுற்றோர்க்கு உதவிடவே
ஊக்கமாய் இரு...!!
தவறுகளை குறைத்திடும்
தாக்கமாய் இரு...!!
எப்போதும் எங்கும்
மனிதராய் இரு...!!
வாழும் வாழ்கையில்
அறம் கரமாக இரு...!!
நேர்மையாக செல்பவர்கள் எப்போதும் பின்னுக்கு தள்ளப்படுகிறார்கள்...!!
மனிதன் மிக உயரமான உச்சியை அடையலாம் ஆனால் அங்கேயே நீண்டநாள் தங்க முடியாது...!!
மகிழ்ச்சி என்ற உணர்ச்சி மட்டும் இல்லாவிட்டால் வாழ்க்கை என்பது சுமக்க முடியாத பெரிய சுமையாகி விடும்...!!
இரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும் துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது...!!
எந்த பிரச்சனையையுமே சந்திக்காமல் அமைதியாக சென்று கொண்டிருந்தால் உங்கள் வாழ்க்கையில் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்...!!
நேரத்திற்கு தகுந்தார் போல் வளைந்து நெளிந்து செல்பவர்களே முன்னுக்குச் செல்கிறார்கள் என்று வருந்தாதே...!!
வெற்றி படிகள் கூர்மையான கத்துபோல இருக்கலாம் ஏணியை திருப்பி போட்டு ஏறுவது புத்திசாலித்தனம்...!!
கம்பீரம் என்பது உண்மைக்கே உரித்தானது அதை பொய்களிடம்
எதிர்பார்க்க முடியாது...!!
குறிப்பு :
சுதர்சன் நான் என்றுமே தைரியமுடன்
நேருக்கு நேர் எதையும் எதிர்கொண்டு சந்திப்பவன் கர்ஜனை என்பது சிங்கத்திற்கே (எனக்கே) உரித்தானது அதை நாய்களிடம் எதிர்பார்க்க முடியாது நாய்களுக்கு நன்றி உண்டு என்பது எனக்கும் தெரியும் ஆனால் சில மனித நாய்களிடம் அதை எதிர்பார்க்க முடியாது குரைக்கும் கடிக்கும் இதுதான் மனித நாய்கள் என்பது என் கருத்து...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 ##ஷேர்சாட் டிரெண்டிங், ##ஷேர்சாட் ஃபேஷன் வாரம், ## ஃபேஷன் & ஸ்டைல் ,
😍🤩😍 இந்த காலத்தில் இப்படி ஒரு குழந்தையா ஆச்சரியத்தில் ஆழ்த்தும் செயல் இந்த குழந்தைக்கு என்
🙏பணிவான வணக்கம்🙏
🙏 ROYAL SALUTE 🙏
இதை பார்த்தவது இனி பெரியவர்கள் திருந்தி குழந்தைகளை
திருத்தவும் 😍🤩😍
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 ##ஷேர்சாட் டிரெண்டிங், ##ஷேர்சாட் ஃபேஷன் வாரம், ## ஃபேஷன் & ஸ்டைல் ,
🤩😍🤩 அடேய் சுதர்சன் என்னடா இது இதுவாடா இது பேரு தான்டா ஆர்வகோளாரு சொல்லுவது இடம் பொருள் தெரியாமல் இருந்தால் இதுதான் கெதிடா சுதர்சன் இன்னமோ போடா சுதர்சன் 🤩😍🤩
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 ##ஷேர்சாட் டிரெண்டிங், ##ஷேர்சாட் ஃபேஷன் வாரம், ## ஃபேஷன் & ஸ்டைல் ,
🤩😍🤩 அடேய் சுதர்சன் என்னடா இது அதுவாடா அவன் பொண்டாட்டி அம்மா வீட்டிற்கு போறேன் சொன்னதும் சந்தோஷத்தில் பைக்கை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் போறான் வழியில் புலிவருது புலியாவது புடுங்கியாவதுனு போய்டே இருக்கான் காரணம் ஒரு நிமிஷத்தில் பொண்டாட்டி மனசு மாறிட்டால் இன்ன ஆவது என்ற பயம் அவனுக்கு புலிக்கு எல்லாம் பயம் கிடையாதுடா சுதர்சன் இன்னமோ போடா சுதர்சன் 🤩😍🤩
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 ##ஷேர்சாட் டிரெண்டிங், ##ஷேர்சாட் ஃபேஷன் வாரம், ## ஃபேஷன் & ஸ்டைல் ,
👍 THINK POSITIVE 👍
ஒரு இளம் தம்பதிகள்
மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க்கொண்டிருந்தார்கள்...!!
வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது பேருந்து...!!
ஏனோ வழியில் அவர்கள் இருவரும் இறங்கிக் கொள்ள முடிவு செய்து...!!
பேருந்தை நிறுத்தி இறங்கிக் கொண்டனர்...!!
ஆளில்லாத வனாந்திரம் மான்களும்
மயில்களும் குயில்களின் இசையோடு
விளையாடிக் கொண்டிருந்தன...!!
ஆனால் அவர்கள் மனம் அதில்
லயிக்கவில்லை...!!
இறங்கிய இடத்திலிருந்து சற்று தள்ளி
இருந்த பாறையில் ஏறினர்...!!
உச்சியில் இருந்து பாதாளத்தைப் பார்த்த போது கால்கள் கூசின...!!
உடல் நடுங்கியது....!!!
இருவரும் கண்களை மூடி
கரங்களைப் பற்றிக் கொண்டனர்...!!
வனக்குரங்குகள் மரங்களிலிருந்து
இவர்களை நோக்கி க்ரீச்சிட்டன....!!
அப்போது மிகப் பெரிய சப்தம்...!!
திரும்பிப் பார்த்தார்கள்...!!
இவர்கள் இறங்கிய பேருந்தின் மீது...!!
மலையிலிருந்து மிகப் பெரிய பாறை
விழுந்து பேருந்தை நசுக்கி இருந்தது...!!
ஒருவரும் உயிருடன் தப்பவில்லை...!!
இவர்கள் இருவரைத் தவிர...!!
பாறைக்கடியில் சமாதி ஆகி இருந்தனர்...!!
குயிலோசை இல்லை...!!
மான்களும் மயில்களும் ஒடுங்கி
நின்றிருந்தன...!!
வனக்குரங்குகள் மலை உச்சிக்கு பயந்து தாவி ஓடின...!!
இளம் தம்பதிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்...!!
இருவரும் சொல்லிக் கொண்டார்கள்...!!
நாம் பேருந்தில் இருந்து இறங்கி
இருக்கவே கூடாது...!!
ஏன் அப்படிச் சொன்னார்கள்...!!
ஊகிக்க முடிகிறதா...!!
சவாலான கேள்வி...!!
100% உங்கள் யூகம் தவறாக கூட இருக்க வாய்ப்பு இருக்கிறது...!!
அவர்கள் அந்த பேருந்தில் இருந்து
இறங்கி இருக்காமல்
பயணித்திருந்தால்...!!
சில நிமிடங்களுக்கு முன்னரே
பேருந்து
அந்த இடத்தைக் கடந்திருக்கும்...!!
பாறை விழும் பேராபத்தில் இருந்து
அனைவரும் உயிருடன் தப்பி இருப்பார்கள்...!!
தற்கொலை செய்து கொள்ள வந்த இளம் தம்பதிகள் உயிரோடு இருக்கிறார்கள்...!!
வாழும் சிந்தனையுள்ளவர்கள் விபத்தில் பலியானார்கள்...!!
வாழ்வதும் இறப்பதும் நம் கைகளில் இல்லை...!!
முடிவை தேடி நாம் ஒரு போதும் செல்லக்கூடாது...!!
எதிர்மறையான சிந்தனை
உங்களுக்குத் தோன்றி இருந்தால்...!!
நீங்கள் நேர்மறையாக சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும்...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 ##ஷேர்சாட் டிரெண்டிங், ##ஷேர்சாட் ஃபேஷன் வாரம், ## ஃபேஷன் & ஸ்டைல் ,
👉 இது எப்படி இருக்கு 👈
🤩😍🤩 நிதர்சனம் சொல்லுவது சுதர்சனம் சொல்லுவது எதார்த்தம் அதை பதாரத்தமாய் பாருங்கள் உண்ண நினைக்காதீர்கள் மீறி உண்டால் பிரச்சினை உங்களுக்கு அதனால் அர்ச்சனை எனக்கு இது
தேவையா 🤩😍🤩
உலகின் மிகப்பெரிய அதிசயம் தாஜ்மஹாலோ சீனப் பெருஞ்சுவரோ அல்ல
நேற்று இருந்த மனிதன் இன்று இல்லை என்பதே இன்றைய உலக அதிசயம்...!!
மெச்சூரிட்டின்னு சொல்றாங்களே அது என்ன என என் நண்பர் கேட்டார்
நமக்கே நாலு வண்டி பிரச்சனை இருக்கும்போது நாம அடுத்தவன் பிரச்சனைக்கு அட்வைஸ் பண்றதுக்கு பேர்தான் மெச்சூரிட்டி என நான் சொன்னேன்...!!
சந்தோஷத்தையும் சோகத்தையும் தாங்கிக்கொண்டே நம்மை எழுந்து நடமாட வைக்கும் நம் மனது தான் மிகச்சிறந்த நண்பன் நம்மை நாமே நேசிப்போம்...!!
கடவுளை நம்பியவனுக்கு கடவுள் கசப்பை கொடுப்பார் நம்பாதாவனுக்கு இனிப்பு கொடுப்பார் ஆனால் கடைசியில் கசப்பு மருந்தாகும் இனிப்பு நோயாகும் இது பட்டு அனுபவித்த பிறகு தான் புரியும்...!!
மரணம் முற்றுப்புள்ளி அல்ல அது இன்னொரு உயிராய் ஆரம்பம்
ஒரு கதையின் இன்னொரு பாகமாகும் (யூகம்)...!!
சிறிது சிறிதாக நம்மை செல்📱(செல்போன்) அரித்துக் கொண்டிருக்கிறது நம்மை...!!
உலகத்துலேயே சிறந்த பாடகர் கொசு தான்னு நினைக்கிறேன்
ஏன்னா அது பாடறப்பத்தான் நமக்கு புடிக்கலைனாலும்
நாம அதுக்கு கை தட்டறோம் (கொல்ல)...!!
கருங்காலி மாலைல பொண்டாட்டிக்கு தாலி செஞ்சு போட்டா
புருசன் சொல் பேச்சு கேட்டு எதிர்த்து பேசாம இருப்பாங்களாம் ஆராய்ச்சில் சொல்லுராங்கள் நம்புங்கள்...!!
கல்யாணம் ஆன புதுசுல பொண்டாட்டி சுவீட் கொடுக்கும்போது ஒரு சுவீட் ஸ்டாலே சுவீட் தருகிறதே அடடே என்பர்
பல வருடம் கழித்து ஒய்ஃப் அமிர்தாஞ்சன் தடவும் போது ஒரு தலைவலியே தலைவலி மருந்து தடவுகிறதே அடடே என்பர்...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 ##ஷேர்சாட் டிரெண்டிங், ##ஷேர்சாட் ஃபேஷன் வாரம், ## ஃபேஷன் & ஸ்டைல் ,
👉 இது தான் நான் இப்படி தான் நான் 👈
ஒருவன் கடவுளை நோக்கிக் கடுமையாகத் தவம் இருந்தான்...!!
கடவுள் அவன் தவத்தை மெச்சி என்ன வரம் வேண்டும் பக்தா என்றார்...!!
மற்றவர்களின் மனதை படிக்கிற திறனை அருள வேண்டும் சுவாமி என்றான்
கடவுளும் வரம் தந்தேன் என்றார்...!!
சில நாட்களிலேயே அவன் அழுது புலம்பி கடவுளை அழைத்து தயவு செய்து இந்தவரத்தை திரும்ப வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றான்
ஏன் என்றார் கடவுள்...!!
அனைவரும் என்னைப் பற்றி தவறு தவறாக நினைக்கிறார்கள் என்னால் அவற்றை தாங்க முடியவில்லை என்றான்...!!
அப்படியா இந்த ஆலமரத்தின் அடியில் கண்களை மூடிப் படுத்துக் கொள் என்ன நடக்கிறது என்று கவனி என்றார் கடவுள்
அப்படியே செய்தான் பக்தன்...!!
அப்போது ஒரு குடிகாரன் வந்தான் யார்ரா இவன் நினைவே இல்லாம படுத்திருக்கான் குடிகாரப் பயல் என்று சொல்லி விட்டுப் போனான்...!!
பிறகு ஒரு திருடன் வந்தான் ராத்திரி பூரா கொள்ளையடிச்சுட்டு வந்து எவனோ இங்க படுத்து கிடக்கான் என்று சொல்லிவிட்டுப் போனான்...!!
ஒரு நோயாளி வந்தான் பாவம் வயித்துவலி போல சுருண்டு கிடக்கான் என்று சொல்லிவிட்டுப் போனான்...!!
ஒரு துறவி வந்தார் யாரோ முற்றும் துறந்தவர் போல அனைத்தையும் மறந்து உறங்குகிறார் என்று சொல்லி விட்டுப் போனார்...!!
சிறிது நேரம் கழிந்தது கடவுள் பக்தனிடம் வந்தார்...!!
பார்த்தாயா உன்னைப் பற்றி அவரவர் அவரவர் கோணங்களில் புரிந்து கொள்கிறார்கள் இனியாவது உன்னைப் பற்றிய மற்றவர் விமர்சனத்தை பொருட்படுத்தாதே
ஒவ்வொரு பார்வைக்கும் ஒரு புரிதல் இருக்கும் உன்னுடைய சரியான பாதையில் தைரியமாக செல் வெற்றி உனக்குத்தான் என்றார்
பக்தன் தெளிவடைந்தான்....!!
நாமும் தெளிவடைவோம்...!!
கருத்து :
யாருடைய விமர்சனத்துக்கும் அஞ்சாதே விமர்சனங்கள் தடைக்கற்களாக இருந்தால் அவற்றை படிக்கற்களாக மாற்றி மிதித்து ஏறி உன் வழியில் செல் அது உனக்கு நல்வழியாக அமையும்...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💖நீயே என் சந்தோசம்🥰#ஷேர்சாட் டிரெண்டிங் ##ஷேர்சாட் டிரெண்டிங், ##ஷேர்சாட் ஃபேஷன் வாரம், ## ஃபேஷன் & ஸ்டைல் , #🤔தெரிந்து கொள்வோம் #💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖
👉 முடியும் 👈
துன்பங்களை கடந்தால் தான்
இன்பங்களை தொட முடியும்...!!
வறுமைகளை கடந்தால் தான்
வரலாறு படைக்க முடியும்...!!
வெறுமைகளை கடந்தால் தான்
பொறுமைகளைத் தொட முடியும்...!!
வெற்றுப் பேச்சுக்களை
கடந்தால் தான் வெற்றி காண முடியும்...!!
தோல்விகளை கடந்தால் தான்
தோற்றம் காண முடியும்...!!
ஏமாற்றங்களை கடந்தால் தான்
ஏற்றம் பெற முடியும்...!!
ஆசைகளை கடந்தால் தான்
ஆச்சர்யத்தை காண முடியும்...!!
சங்கடங்களை கடந்தால் தான்
சந்தோசங்களை காண முடியும்...!!
வீழ்ச்சிகளை கடந்தால் தான்
மகிழ்ச்சிகளை காண முடியும்...!!
சில கஷ்டங்களை கடந்தால் தான்
ஞானம் பெற முடியும்...!!
கஷ்டங்களை கடந்தால் தான்
காலம் தாண்டி வாழ முடியும்...!!
துரோகிகளை கடந்தால் தான்
துணிச்சல் பெற முடியும்...!!
விரோதிகளை கடந்தால் தான்
வினோதம் காண முடியும்...!!
எதிரிகளை கடந்தால் தான்
மாதிரிகளாய் வாழ முடியும்...!!
சிரமங்களை கடந்தால் தான்
சிகரங்களைத் தொட முடியும்...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 ##ஷேர்சாட் டிரெண்டிங், ##ஷேர்சாட் ஃபேஷன் வாரம், ## ஃபேஷன் & ஸ்டைல் ,
🤩😍🤩 நகைச்சுவைக்கு மட்டுமே 🤩😍🤩
🤩😂😍 இது எப்படி இருக்கு 🤩😂😍
😀😀😀 லொள்ளு 😀😀😀
🤩😂😍 அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன் கொலம்பஸுக்கு
காதலோ
அல்லது
திருமணமாகியிருந்தால்
என்று நினைத்து
ஒரு சிறு கற்பனை இது 🤩😂😍
1, ஏங்க எங்க போறீங்க
2, யார் கூடப் போறீங்க
3, ஏன் போறீங்க
4, எப்படி போறீங்க
5, என்ன கண்டு பிடிக்கப் போறீங்க
6, ஏன் நீங்க மட்டும் போறீங்க
7, நீங்க இல்லாம நான் என்ன
பண்ணுவேன்
8, நானும் உங்க கூட வரட்டுமா
9, எப்ப திரும்ப வருவீங்க
10, எங்க சாப்பிடுவீங்க
11, எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க
12, இப்படி போகணும்ன்னு எனக்குத் தெரியாம எத்தனை நாளா பிளான் பண்ணிட்டுருந்தீங்க
13, இன்னும் வேற என்னெல்லாம் பிளான் இருக்கு
14, பதில் சொல்லுங்க
15, நான் எங்க அம்மா வீட்டுக்கு போகட்டுமா
16, நீங்க என்னை என் அம்மா வீட்டுல கொண்டு போய் விடுவீங்களா
17, நான் இனி திரும்ப வர மாட்டேன்
18, ஏன் பேசாம இருக்கீங்க
19, என்ன தடுத்து நிறுத்த மாட்டீங்களா
20, இதுக்கு முன்னாடியும் எனக்குத் தெரியாம இந்த மாதிரி போயிருக்கீங்களா
21, எத்தன கேள்வி கேட்கிறேன் ஏன் மரமண்ட மாதிரி நிக்கிறீங்க
22, இப்ப பதில் சொல்றீங்களா இல்லையா
(செத்தாண்டா சேகர்) கொலம்பஸ்
இதுக்கப்புறமும் அவரு அமெரிக்காவை கண்டு பிடிக்க கிளம்பியிருப்பாருன்னு நினைக்கிறீங்க...!!
குறிப்பு :
இந்த பதிவு கல்யாணம் செய்து தினமும் மனைவியுடன் இருந்து சாதனை படைக்கும் கணவன்மார்களுக்கும் காதலியை சமாளிக்கும் காதலர்களுக்கும் இது சமர்ப்பணம்..!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 ##ஷேர்சாட் டிரெண்டிங், ##ஷேர்சாட் ஃபேஷன் வாரம், ## ஃபேஷன் & ஸ்டைல் ,









