#🌻வாழ்த்துக்கள்💐 #✨டிரெண்டிங் பாடல்கள்🎶 #🎵Lyrical Status #😴 Sweet Dreams🎧❤❤❤💙💙💙
இந்த பாடலை கேட்கும் போது மனது மயங்குகிறது. பாடலை பாடியவர்க்கு கோடான கோடி நன்றிகள். திரு சிற்றம்பலம். 🙏🏻 #🙏🏼பக்தி மோஷன் வீடியோ
#🌻வாழ்த்துக்கள்💐 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 பிறந்த நாள் கானும்..
ராகேஷ் ஷர்மா
👉 விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற ராகேஷ் ஷர்மா 1949ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா மாவட்டத்தில் பிறந்தார்.
👉 இவர் 1970ஆம் ஆண்டு இந்திய விமானப் படையில் பயிற்சி பைலட்டாகப் பணியேற்றார். ஒரு விண்வெளி வீரராக அவருடைய பயணம் 1982ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி தொடங்கியது.
👉இதன் விளைவாக ராகேஷ், 1984ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி சரித்திரத்தின் சாதனைப் பக்கத்தில் இடம் பிடித்தார். பிறகு சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேல் பைலட்டாக இருந்த அனுபவத்தின் காரணமாக 1984ஆம் ஆண்டில் விமானப் படைப்பிரிவின் ஒரு குழுவுக்கு ராகேஷ் தலைவராக நியமிக்கப்பட்டார்.
👉 இவரும், ரஷ்ய விண்வெளி வீரர்கள் இருவரும் சோயுஸ் டி 11 விண்கலத்தில் விண்வெளிக்குப் பயணம் சென்றார்கள். சல்யூட் 7 என்னும் விண்வெளி மையத்தில் இவர் எட்டு நாட்கள் தங்கியிருந்தார். ராகேஷ் சர்மா அவர்களின் பணிகளை பாராட்டி அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது.
#🌻வாழ்த்துக்கள்💐 விவேகானந்தர்
👉 இளைஞர்களுக்கு எல்லாம் முன்னோடியாக திகழும் சுவாமி விவேகானந்தர் 1863ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார்.
👉 சுவாமி விவேகானந்தர் பிறந்த தினமான ஜனவரி 12ஆம் தேதியை இந்திய அரசு 1984ஆம் ஆண்டு தேசிய இளைஞர் தினமாக அறிவித்தது.
👉 இவர் ராமகிருஷ்ணா பரமஹம்சரின் தலைமை சீடராவார். மேலும் 'ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்' மற்றும் 'ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்' போன்ற அமைப்புகளையும் நிறுவியவர்.
👉 சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உதவியற்றோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகவும், நாட்டிற்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.
👉 ஆங்கிலேயர் ஆட்சியில், இருண்டுக் கிடந்த இந்தியர்களுக்கு மத்தியில் ஆர்வத்தை தூண்டும் விதமாக தன்னம்பிக்கை என்னும் விதையை விதைத்தார். அவரது ஆணித்தரமான, முத்துப் போன்ற வார்த்தைகளும், பிரமாதமான பேச்சுத்திறனும் உறங்கிக் கொண்டிருந்த தேசிய உணர்வைத் தூண்டியது.
👉 1893ஆம் ஆண்டு சிகாகோ உலக மதங்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையை தொடங்குவதற்கு முன், 'அமெரிக்காவின் சகோதர, சகோதரிகளே!' என்று ஆரம்பித்தார். சுவாமி விவேகானந்தர் இங்கிலாந்திற்கும் சென்றார். அங்கே பல மக்கள் இவருக்கு சீடர்களாக மாறினர். அவர்களில் மிகவும் பிரபலமானவர், 'சகோதரி நிவேதிதா'.
👉 இந்தியாவிற்கு ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்ந்த இவர் தன்னுடைய 39வது வயதில் 1902ஆம் ஆண்டு மறைந்தார்.







