
RamaswamyAnnamali
@swamy_6943
💝💋காதல் 💞 💋ஒரு 🖤 💘 இனிப்பான 💔 💕விஷம் 💔
#🙏ஆன்மீகம் #🙏கோவில் #தெரிந்து கொள்வோம் மானம்பதி* வானசுந்தரேஸ்வரர் கோயில்: இழந்த பதவி மீண்டும் கிடைக்கும்; செல்வாக்கு சேரும்....*
காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது உத்திரமேரூர். அங்கிருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ளது மானாம்பதி கிராமம். காஞ்சிபுரத்திலிருந்து மேல்ரோடு வழியே உத்திரமேரூர் செல்லும் பேருந்துகளும், சென்னையிலிருந்து உத்திரமேரூர் வழியாக வந்தவாசி செல்லும் பேருந்துகளும் இந்த ஊர் வழியாகவே செல்கின்றன.
😟😯😟😯😟
சோழர்கள் எழுப்பிய சிவாலயங்கள் ஏராளமானவை இந்த மண்ணில் உள்ளன. அவை ஒவ்வொன்றும் புனிதமானவை. புராணத் தொடர்பு கொண்டவை. அப்படிப்பட்ட தலங்களை தரிசிப்பதன் மூலம் அந்த ஆலயங்களுக்குச் சேவை செய்வதன் மூலம் பல்வேறு நலன்களை நாம் பெற முடியும். அப்படிப்பட்ட ஒரு தலம் தான் மானாம்பதி வானசுந்தரேஸ்வரர் திருக்கோயில்.
ராஜேந்திர சோழன், கங்கையையும் கடாரத்தையும் வென்று, 'கங்கை கொண்டான்,' 'கடாரம் வென்றான்' என எல்லோராலும் போற்றப்பட்டான். வடக்கில் இருந்து சைவர்களை அழைத்து வந்து, தொண்டை மண்டலம் என்று சொல்லப்படும் காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அவர்களை அங்கே குடியமர்த்தினான். அந்த ஊருக்குத் தன் தாயாரின் நினைவாக, வானவன்மாதேவிபுரம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தான்.
அத்துடன், அங்கே அழகிய சிவாலயம் ஒன்றையும் கட்டினான். அந்த ஆலயத்தில் முறையாக வழிபாடுகள் நடத்தப்படவும் வேதங்கள் ஓதப்படவும் நிவந்தங்களை எழுதிவைத்தான். அத்தகைய பெருமை மிகு ஆலயமே மானம்பதி ச்ரி வானசுந்தரேஸ்வரர் ஆலயம். இதற்கு சான்றாக இங்கே ராஜேந்திர சோழன் காலத்துக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. வானவன் மாதேவிபுரமே பிற்காலத்தில் மருவி மானம்பதி ஆனது என்கிறார்கள்.
நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த வேதியர்களை அழைத்து வந்து, அவர்களுக்கு அங்கே வீடுகள் கட்டிக் கொடுத்து, வேத பாடசாலையும் அமைத்துக் கொடுத்தான் ராஜேந்திர சோழன் என்கிறது கல்வெட்டுக் குறிப்பு. இதனால், அந்த ஊர் வானவன்மாதேவி சதுர்வேதி மங்கலம் என்றும் அழைக்கப்பட்டதாம்.
இந்திரன் தன் ஆணவத்தால் சூரபத்மனால் தோற்கடிக்கப்பட்டு சிறைப்பட்டான். இதனால் அவனது இந்திரப் பதவி பறிபோனது. பிறகு முருகப்பெருமான் சூரனை அழித்து தேவர்களை சிறைமீட்டார். என்றாலும் இந்திரப்பதவியை இந்திரனால் மீண்டும் பெற முடியவில்லை.
அப்போது அவன் துயர்தீர்க்கும் தலம் எது என்று தேடி அலைந்தான். பிறகு முனிவர்கள் வழிகாட்ட இந்தத் தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டான். இங்குள்ள தீர்த்தக் குளம் மிகவும் புனிதமானது. இதில் நீராடி ஈசனை வழிபட்ட இந்திரனுக்கு ஈசன் காட்சி கொடுத்ததோடு அவன் இழந்த இந்திரப் பதவியையும் கொடுத்தார்.
எனவே இந்தத் தலத்துக்கு ஈசனை வழிபட்டால் இழந்த பதவி மீண்டும் கிடைக்கும். செல்வம், செல்வாக்கு சேரும் என்பது நம்பிக்கை.
இங்கே, சுவாமிக்கு ஸ்ரீவானசுந்தரேஸ்வரர் என்பது திருநாமம். தாயார் பெரியநாயகி என்கிற திருநாமத்தோடு அருள்பாலிக்கிறாள். இருவரும் கருணைக் கடல்களாக இங்கே காட்சிகொடுக்கிறார்கள். குறிப்பாக பெரியநாயகி அம்பிகையின் சந்நிதியில் நின்று வழிபட்டாலே மன நிம்மதியும் ஆறுதலும் கிடைக்கிறது என்கிறார்கள்.
இந்த ஆலயத்தில் மகா கணபதி, ஆறுமுக சுவாமி, தட்சிணாமூர்த்தி, சண்டீஸ்வரர், பிரம்மா, துர்கை, பைரவர், நாயன்மார்கள் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. தைப்பூசம், மாசிமகம் முதலானவை இங்கு சிறப்புறக் கொண்டாடப்படுகின்றன.
அதிலும் குறிப்பாக தைப்பூசம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும். சுற்றியிருக்கும் கிராமங்களைச் சேர்ந்த 10 கோயில்களின் தெய்வங்களும் தைப்பூச உற்சவ காலத்தில் இங்கே எழுந்தருள்கிறார்கள் என்பது சிறப்பு.
அத்தனை தெய்வங்களையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்வ்தால் மனமும் சிந்தையும் மகிழ்வதோடு புண்ணிய பலன்களும் அதிகரிக்கும்.
இப்படிப்பட்ட பழைமையும் பெருமையும் வாய்ந்த சோழமன்னர்கள் வழிபட்ட மானாம்பதி ஸ்ரீவானசுந்ரேஸ்வரரை வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை சென்று தரிசியுங்கள். உங்கள் பிரச்னைகளைத் தீர்த்து பிரகாசமான எதிர்காலத்தைத் தருவார் அந்த ஈசன்.
தெரிந்து கொள்வோம்.....
🙏🙏🙏🙏🙏
#பத்தி #🙏🏼 ஓம் முருகா🙏🏼 👏👏ஓம் சரவணபவ 👏👏 ஓம் கந்தா கதிர்வேலா 🙏🏼🙏🏼 முதல் நாள்...*
*அலைகடலோரம் அமர்ந்திருக்கும் முருகா,*
*ஆறுபடை வீட்டின் அதிபதியே!*
*திருச்செந்தூரின் செந்திலாண்டவனே,*
*உன் திருவருள் காண விழைந்தோம்!*
*மனதில் பக்தியின் மணம் வீசக் கொண்டோம்*
*திருச்செந்தூர் முருகா போற்றி போற்றி ...!!!*
🙏🪷🪷🪷🪷🪷🪷🙏
#🙏ஆன்மீகம் #பத்தி
#சீதை_சொன்ன_நீதி:
நமக்கு ஒருவர் துன்பம் விளைவிக்கும்போது, நாம் அவர்களிடம் கோபம் கொள்கிறோம். பழிக்குப் பழி வாங்கத் துடிக்கிறோம். ஆனால், அது தவறான செயல். நமக்கு ஒரு துன்பம் ஏற்படுகிறது என்றால், அதற்குக் காரணம், நாம் முன் செய்த வினைப்பயன்தான். எனவே, நமக்கு ஒருவர் துன்பம் விளைவிக்கும்போது, நாம் அவரிடம் கோபம் கொள்ளாமலும், பழிக்குப் பழி வாங்க நினைக்காமலும், பொறுத்துக் கொள்ளவேண்டும்.
அசோகவனத்தில் சீதை இருந்தபோது, அவளை அரக்கியர்கள் பலர் துன்பப்படுத்தினர். அதற்காக சீதை அவர்களிடம் கோபம் கொள்ளவில்லை. மிகுந்த பொறுமையுடன் சகித்துக்கொண்டாள். தனக்கு நேரிடும் துன்பங்கள் எல்லாம், தன் வினைப்பயன் காரணமாகவே ஏற்படுகின்றன என்று உறுதியாக நம்பினாள்.
ராவண சம்ஹாரம் முடிந்த பிறகு, அசோகவனத்தில் இருந்த சீதாபிராட்டியாரிடம் விவரம் சொல்ல வந்த அனுமன், பிராட்டியை வணங்கி, ''தாயே, ஶ்ரீராமபிரான் வெற்றி வாகை சூடிவிட்டார். ராவணன் மாண்டான்'' என்று கூறினார்.
அனுமன் கூறியதைக் கேட்டு மகிழ்ந்த சீதை, ''அனுமனே, நான் முன்பொரு முறை உயிர் துறக்க நினைத்த நேரத்தில், நீ வந்து எனக்கு ஆறுதல் கூறி காப்பாற்றினாய். இப்போதும் ராமபிரான் பெற்ற வெற்றிச் செய்தியை நீயே வந்து எனக்குத் தெரிவித்தாய். ஏற்கெனவே உனக்கு நான் சிரஞ்சீவியாக இருக்கும் வரத்தைத் தந்துவிட்டேன். முன்பை விடவும் அதிகம் சந்தோஷம் தரும் செய்தியை இப்போது கொண்டு வந்திருக்கிறாய். உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்'' என்றார்.
அதற்கு அனுமன், ''தாயே, எனக்கு ஒரு வரமும் வேண்டியதில்லை. நான் விரும்புவது ஒன்றேதான். கடந்த பல மாதங்களாக உங்களைப் பாடாகப் படுத்திய இந்த அரக்கிகளை, நான் தீயில் இட்டுக் கொளுத்தவேண்டும். அதற்கு தாங்கள் அனுமதிக்கவேண்டும்'' என்று அனுமன் கேட்டுக்கொண்டார்.
ஆனால், அனுமனின் கோரிக்கையில் சீதைக்கு உடன்பாடு இல்லை. எனவே அனுமனைப் பார்த்து, ''அனுமனே, நீ நினைப்பதுபோல் இந்த அரக்கியர் என்னைத் துன்புறுத்தி இருந்தாலும், அதற்காக இவர்களை தண்டிப்பதில் எனக்கு சம்மதம் இல்லை. நான் இப்படி துன்பம் அனுபவிப்பதற்குக் காரணம், நான் முன்பு செய்த செயலின் விளைவுதான். பொன்மானாக வந்த மாயமானுக்கு ஆசைப்பட்டு, அதைப் பிடித்து வர என் கணவரை அனுப்பியதும், சென்ற கணவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராமலும், 'லட்சுமணா, லட்சுமணா' என்று அபயக் குரல் எழுப்பியதாலும், பயந்து போன நான், எனக்குக் காவலாக இருந்த லட்சுமணனை அனுப்பிப் பார்க்கச் சொன்னேன். அவர் என் கணவருக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டிருக்காது என்று மறுத்துக் கூறியும், நான் ஏற்றுக்கொள்ளாமல் சுடுசொற்களால் லட்சுமணனைக் கண்டித்துப் பேசினேன். ஒரு பாவமும் அறியாமல், இரவும் பகலுமாக எங்களைக் கண்ணிமைபோல் காவல் காத்த லட்சுமணனின் மனம் நோகும்படி நான் பேசியதுதான், இங்கே நான் அனுபவித்த துன்பத்துக்குக் காரணம்.
எனவே, நீ அரக்கியர்களை ஒன்றும் செய்துவிடாதே. அவர்கள் அரக்கியர்கள் என்றாலும் பெண்கள். அவர்களுக்குத் தீங்கு செய்து நீ பெரும் பாவத்தைத் தேடிக்கொள்ளாதே'' என்று கூறினார். அனுமன் உண்மையைப் புரிந்துக்கொண்டார்.
நமக்கு மற்றவர்கள் துன்பம் விளைவிக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் நாம் முன் செய்த தீவினைப் பயன்தான் காரணம்.
இதைத்தான் மகாபாரதத்தில் வரும் ஆணிமாண்டவ்யரின் வாழ்க்கையும் நமக்கு உணர்த்துகிறது. சிறுவயதில் அவர் தும்பியின் வாலில் கூரிய முனை கொண்ட தர்ப்பைப் புல்லைச் செருகியதால், பிற்காலத்தில் மன்னன் ஒருவனால் கழுவில் ஏற்றப்பட்டார். மகரிஷியான தனக்கு ஏன் இப்படி ஒரு துன்பம் ஏற்பட்டது என்று ஆணிமாண்டவ்யர் தர்மதேவதையிடம் கேட்டபோது, சிறுவயதில் அவர் தும்பியைத் துன்புறுத்தியதுதான் காரணம் என்று கூறியது.
இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை, 'பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் பிற்பகல் தமக்கின்னா தாமே வரும்' என்று நமக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.
எனவே, நமக்கு ஒருவர் துன்பம் விளைவித்தாலும், நம்மை ஒருவர் பழித்துப் பேசினாலும், அதற்குக் காரணம் நாம் செய்த வினைப்பயன்தான் என்பதை உணர்ந்து, நாம் பதிலுக்கு அவரைப் பழிதீர்க்க நினைக்கக்கூடாது.
*உயிர்கள் அனைத்தும் வாழ்க வளத்துடன்!*🦚🌹🦚.
#பத்தி #🙏ஆன்மீகம் ஜீவ மரணம்*சுவாமி சிவானந்தபரமஹசர்சுவாமி*
#🤣காமெடி ஸ்டேட்டஸ் #🤣காமெடி ஸ்டேட்டஸ் #🤣 லொள்ளு #🤣 லொள்ளு #😂 வேடிக்கை வீடியோக்கள்😅 #😂 வேடிக்கை வீடியோக்கள்😅
#தெரிந்து கொள்வோம் #🙏ஆன்மீகம் போக கூடாத கோவில்கள் *தெரிந்து கொள்வோம்*
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💝இதயத்தின் துடிப்பு நீ