காஞ்சித்தலைவன் (Srinivasa perumal)
@thalaivan_1
தீர்க்க முடியாத பொது பிரச்சனைகள்,Inbox-ல் வரவும்.
மார்கழி 2ஆம் நாள்
திருப்பாவை 2 – வையத்து வாழ்வீர்காள்!
.
ஸ்ரீமதே இராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
.
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள் பையத்துயின்ற பரமனடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமாறெண்ணி உகந்தேலோரெம்பாவாய்!
.
முதல் பாட்டில் ஆய்ப்பாடி சிறுமிகளை அழைத்ததற்கு ஏற்ப கூடிய கோபிகைகளின் கூட்டத்தைப் பார்த்து மகிழ்ந்து “வையத்து வாழ்வீர்காள்!” என்று ஆச்சரியப்பட்டு அழைத்து நாம் செய்ய வேண்டிய நோன்பிற்குச் செய்யவேண்டிய கிரியைகளைக் கேளுங்கள் என்கிறாள்.
.
சேஷத்வமே நமது குறிக்கோள் என்று முதல் பாசுரத்தில் சொன்ன ஆண்டாள் அதை அடையும் மார்க்கத்தில் எதை செய்ய வேண்டும் – எதை செய்யக்கூடாது என்று க்ருத்யா – அக்ருத்ய விவேகம் சொல்கிறாள். இதை செய்தால் அவனுக்கு உகக்கும் – இதை செய்வதால் நாம் பந்தத்தில் சிக்கி உழலுவோம் என்று விவரமாகச் சொல்கிறாள்.
.
லோகாயதத்தில் நாஸ்தீக வாதம் செய்து – கண்டதே காட்சி, கொண்டதே கோலம் – கடன் வாங்கியாவது வாழ்க்கையை அனுபவி – நெய் சேர்ந்த அன்னம் உண்டு, பேசி திரிவதே இன்பம் என்று திரிவர்கள் – இது அக்ருத்யம் – செய்யத்தகாதது என்கிறாள். உன் அடியே நாடும் நாங்கள் நெய்யுண்ணோம் – பாலுண்ணோம் – மையிட்டு, மலரிட்டு, செய்யாதன செய்து, தீக்குறளைப் பேசி திரியமாட்டோம்.
.
எங்களிடம் இருப்பதையும் தான தருமமாகக் கொடுத்து விடுகிறோம்! ஐயம் என்பது நம்மைவிட உயர்ந்த ஆசார்யர்களுக்கும், சந்நியாசிகளுக்கும் சமர்ப்பணம் செய்வது. பிச்சை என்பது ஏழைகளுக்கும், ப்ரஹ்மச்சாரிகளுக்கும் தர்மமாகத் தருவது. இவை இரண்டுமே மிக உயர்ந்த காரியங்களான படியால் இவற்றைச் செய்வோம். பாற்கடலில் பையப் துயிலும் பரமனே உய்யும் ஆறு என்று எண்ணி உகந்து அவனடியைப் பாடுவோம் என்கிறாள். அதென்ன ‘பைய’ துயிலுவது? ஆம், அகில உலகத்தையும் ஈரடியால் அளந்தான் – இந்த பூவுலகைத் தாங்கித் தூக்கினான் – அப்பேர்ப்பட்டவன் சிறிய ஆலிலைக்கும் இலேசாக மிதக்க வல்லவனல்லவா?
.
இந்த பாசுரத்தின் முதல் பதங்களான வையத்து வாழ்வீர்காள்! என்ற விளியை எடுத்துக் கொண்டு பூர்வாசார்யார்கள் விசாரிக்கிறார்கள். வையத்திலே ஏது வாழ்ச்சி? பரமனோ பாற்கடலில் பைய துயிலுகின்றான். அவனுடைய சேஷிகளான நாம் இங்கே பிரிந்து மாயையில் சிக்கி உழலுகிறோம் – இப்படி இருக்க வாழ்ச்சி ஏது?
.
வையத்திலேதான் வாழ்ச்சி உண்டு – வைகுந்தத்தில் இல்லை என்பதற்கு சில காரணங்களைப் பூர்வாசார்யர்கள் சொல்லுகிறார்கள். அவைகளை பார்ப்போம்…
.
அந்த வைகுந்தனே “ஸ்ரீவைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரிணீ தடே” என்று ஸ்ரீவைகுந்தத்திலே விரக்தி அடைந்து அங்கேயே இருக்கவொட்டாது இங்கே புவிக்கு ஓடி ஓடி வந்துவிடுகிறான்… அப்படி அவன் செய்ய பூமி உகந்ததாகவும் உயர்ந்ததாகவும் இருப்பதால் தானே?
.
ஜகத் காரணனான பகவான், செளலப்யன், செளசீல்யன், தயாளன், கருணா சாகரன் என்றெல்லாம் வேதங்கள் கோஷிக்கின்றன. ஆனால் தனது அந்த எளிய செளலப்ய தன்மையையோ, கருணையையோ வைகுந்தத்திலே யாரிடம் காண்பிப்பது? எளியவர்களிடம் தானே கருணையும் எளிமையும் காட்டமுடியும்… அது இந்த வையகத்திலேதானே இயல்பாக அமையக்கூடியது… அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும் நந்தகோபாலா என்று இறைஞ்சக்கூடியவர்கள் இங்கேதானே இருக்கிறார்கள்…!
.
அடுத்து சொல்கிறார்கள்,
கால அவசரங்களும், கலக்கங்களும் நிறைந்த இந்த உலகத்தில் ஆடாத அசையாத ஆழ்ந்த பக்தி செலுத்துவதுதானே கடினமானதும், பெருமை வாய்ந்ததும் ஆனது? ஆகவே வைகுந்தத்தை விட வையகத்திலேதான் வாழ்ச்சி – அதனால் வையத்து வாழ்வீர்காள்! என்று பெருமை பொங்க ஆண்டாள் அழைக்கிறாள்!
.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே ஸரணம். #🙋♂️தமிழக வெற்றி கழகம் #🤝பா.ம.க #😎தே.மு.தி.க #ttv தினகரன் #📺அரசியல் 360🔴

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே ஸரணம். #திருப்பாவை #திருப்பாவை & திருவெம்பாவை #🙏🏻ஆண்டாள் பாடல்கள் #🙏 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் #அ. ம. மு. க
திருப்பாவை 1– மார்கழித் திங்கள்.
ஸ்ரீமதே இராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
.
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் நாரா யணனே நமக்கே பறைதருவான் பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!
.
...சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வ சிறுமீர்காள்!
.
சீர் மிகுந்த ஆய்ப்பாடி! அங்கே செல்வம் மிகுந்த சிறுமிகளை ஆண்டாள் அழைக்கிறாள். ஆய்பாடியைச் சேர்ந்த சிறுமிகள், நாரயண பரம் ப்ரஹ்ம: என்றபடி ஈஸ்வரனைத் தம்முடன் கொண்டதால் ஐஸ்வர்யம் மிகுந்தவர்கள். அதையே இப்பாடலில் வரும் நாராயண சப்தத்தால் ஆண்டாள் குறிப்பிட்டு காட்டுகிறாள்.
.
கண்ணனாக வந்த நாராயணன் சாதாரணமாக இல்லை. நந்தகோபனின் குமாரன் – ஏரார்ந்த கண்ணை உடைய யசோதையின் மைந்தன் – சிங்கமானது குட்டியாய் இருக்கும்போதே மதயானையையும் எதிர்த்து நிற்குமாம் – வீரத்துக்கு வயது ஒரு வரம்பல்ல என்று பர்த்ருஹரி சொன்னது போல் – அவன் இளம் சிங்கம்! அவனுக்குக் கரிய மேகத்தைப் போன்ற மேனி – அதிலேயே அவன் கருணாசாகரனாக காட்சி தருகிறான். அவனுக்குக் கதிரவனைப் போல ப்ரகாசமாகவும், அதே நேரத்தில் குளிர் மதிபோல தண்மையான வாத்ஸல்யம் நிரம்பிய முகம்!
.
விபுவாக உலகமெலாம் பரந்து விரிந்த இந்த மூர்த்தி சிறு குழந்தையாய் வந்த ஒரே காரணத்தால் இந்த குழந்தைக்குத்தான் எத்தனை ஆபத்துக்கள்! குழந்தை தவழ்ந்தால் அங்கே ஒரு அசுரன் காத்திருக்கிறான். நடந்தால் ஒரு அசுரன் வருகிறான். குழந்தைக்குப் பசித்தால் அதற்கென்றே ஒரு அரக்கி காத்திருக்கிறாள். ஐயகோ! இந்த குழந்தைக்கு இன்னும் எத்தனை ஆபத்து வருமோ என்று எண்ணிய நந்த கோபர், கொடுந்தொழில் புரிபவனைப்போல் இனி இக்குழந்தைக்கு யாரேனும் ஆபத்து விளைவிப்பரேல் சற்றும் பொறேன் என்று கூரிய வேல் பிடித்த கையினரானார்.
.
பறை என்பது தாஸத்தன்மையின் சின்னம் – நாராயணனிடம் வேறு எதுவும் கேட்கத்தோன்றவில்லை ஆண்டாளுக்கு – உனக்கடிமையாக நித்ய கைங்கர்யம் செய்வதே போதும் – நாங்கள் என்றும் உன் சேஷ பூதர்கள் – சேஷத்வமே எங்கள் அடையாளம் – அதை நம்மிடமிருந்து மறைத்த நாராயணனே – நமக்கு அதை மீண்டும் தரத்தக்கவன் – அவனே பரம புருஷார்த்தம் – அந்த புருஷார்தத்தை அடைய அவனே உபாயம் – என்று ப்ராப்ய ப்ராபக சங்க்ரஹம் சொல்லி – அதுவும் அவனிடம் சரணாகதியான பிறகு – சரணாகத வத்ஸலானான நாராயணன் நமக்கே தருவன் என்கிறாள்.
.
அதென்ன இந்த சேஷத்வத்தைக் கேட்க மார்கழி முதல் நாளுக்காக எதிர்பார்த்திருந்தாளா ஆண்டாள்? மார்கழி அவ்வளவு விசேஷமா? அபரிமிதமான பக்திக்கு பரிமிதமான காலத்தைச் சொல்வதேன் என்று பூர்வாசார்யர்கள் விசாரிக்கிறார்கள். இங்கே உட்பொருள் அதுவல்ல. பகவானை அடையும் நாளே நன்னாள் – அவன் உள்ளம் எங்கும் நிறைந்த – மதி நிறைந்த நாளே எமக்கு உகப்பான நாள் – அது மார்கழித் திங்களாக இருப்பதால் மார்கழி மாதத்துக்கு பெருமை கிடைக்கிறதே அன்றி மார்கழித் திங்கள் என்பதால் பக்திக்குரிய காலம் எனக்கொள்ள வேண்டியதில்லை – பகவத் பக்திக்கு எல்லா நாளும் நன்னாளே! என்று பூர்வாசார்யர்கள் அருளியுள்ளார்கள்.
.
இத்தகைய நன்னாளில் பாரோர் புகழ – பாகவதர்கள் உகக்கும் க்ருஷ்ணானுபவத்தைப் பெற முதலில் நீராடச் செல்வோம் என்று ஆண்டாள் திருப்பாவையை ஆரம்பிக்கிறாள்.
.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே ஸரணம். #😎தே.மு.தி.க #📺அரசியல் 360🔴 #ttv தினகரன் #🤝பா.ம.க #🙋♂️தமிழக வெற்றி கழகம்

#🤝பா.ம.க #😎தே.மு.தி.க #ttv தினகரன் #📺அரசியல் 360🔴 #🙋♂️அண்ணாமலை
#💑கணவன் மனைவி காதல்💞 #🚹உளவியல் சிந்தனை #எண்ணம் போல் வாழ்க்கை #எண்ணம் #அ. ம. மு. க #🙋♂️தமிழக வெற்றி கழகம்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் 13.12.2025.
#TTVDhinakaran | #AMMK | #🙋♂️அண்ணாமலை #🔷ராகுல் காந்தி #🧓பிரதமர் மோடி #🔥விடுதலைச் சிறுத்தைகள் கட்சி #ttv தினகரன்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் 13.12.2025.
#TTVDhinakaran | #AMMK | #🙋♂ நாம் தமிழர் கட்சி #🔶பாஜக #💪தி.மு.க #✌️அ.தி.மு.க #🔷காங்கிரஸ்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் 13.12.2025 #ttvdhinakaran #TTV #TTVDhinakaran #AMMK #அ. ம. மு. க #அ ம மு க #🙋♂️தமிழக வெற்றி கழகம் | #AMMK | #HBDTTVDhinakaran
#அ. ம. மு. க #😎தே.மு.தி.க #அ ம மு க #🙋♂️தமிழக வெற்றி கழகம் #🤝பா.ம.க