@vardhusri
@vardhusri

Vardhuஶ்ரீ

🌺🌼 இதுவும் கடந்து போகும்!💐💐இந்த நிலை மாறும்!💮🌸 எதுவும் சில காலமே!🌺🌹காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே!🌸🌻அன்பே சிவம்🌹💐

#

🤔 ஆன்மீக சிந்தனைகள்

#நந்தி_கல்யாணம்_பார்த்தால்_முந்தி #திருக்கல்யாணம் எல்லாம்வல்ல பரம்பொருள் சிவபெருமானின் அதிகாரபூர்வ காப்பாளனான நந்திக்கு ஒவ்வொரு வருடமும், பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில் கல்யாணம் நடக்கிறது! அரியலூர் மாவட்டம் திருமழபாடியில்தான் இந்த சிறப்பு நிகழ்ச்சி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள நடந்தேறுகிறது. நந்திகேஸ்வரர் அவதரித்தது தஞ்சை மாவட்டம் திருவையாறை அடுத்த அந்தணர்புரத்தில். மகப்பேறு இல்லாத சிலாத முனிவர், பிள்ளை வரம் வேண்டி சிவபெருமானிடம் முறையிட்டார். இறைவனின் கருணை உடனே அவருக்கு சித்தித்தது. யாகம் செய்யும் ரிஷிகள் அதற்காகத் தேர்ந்தெடுக்கும் நிலத்தைத் தாமே உழுவது வழக்கம். அந்தவகையில் சிலாத முனிவர் வயலை உழுதபோது, நுகத்தடியில் ஒரு பெட்டி சிக்கியது. திறந்து பார்த்தால், உள்ளே நந்திதேவர், முனிவரின் ஏக்கம் தீர்க்கக் காட்சி தந்தார். அவர் வளர்ந்து, இறை உணர்விலும் திளைத்து தேஜஸ் பெற, அந்த இறைக் குழந்தைக்கு, திருவையாறு இறைவனான ஐயாறப்பன், நந்திகேஸ்வரன் என்று பெயர் சூட்டி, தம் மெய்க்காப்பாளனாக்கி, பட்டாபிஷேகமும் செய்து வைத்தார். அவருக்கு, திருமழபாடியில், வசிஷ்ட முனிவரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயம்பிரகாசாம்பிகையைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்து வைத்தார். பங்குனி மாதம் புனர்பூசத்திற்கு முதல் நாள் (15.03.19) அந்தணர்புரத்தில் நந்திதேவர் வயலில் கிடைக்கும் காட்சி நிகழ்த்திக் காட்டப்படும். அன்று மாலை ஐயாறப்பன் திருக்கோயிலில் அவருடைய பட்டாபிஷேக கோலாகலத்தை தரிசித்து மகிழலாம். புனர்பூசம் நட்சத்திர நாளில் (16.03.19) காலை 4 மணி அளவில் நந்திதேவர் வெள்ளித் தலைப்பாகை, பட்டு வேட்டி&துண்டு, வெள்ளிச் செங்கோலுடன் மாப்பிள்ளைக் கோலத்தில் குதிரை வாகனத்தில் புறப்படுவார். கூடவே வளர்ப்புப் பெற்றோர் ஐயாறப்பனும் அறம்வளர்த்த நாயகியும் வெட்டிவேர் பல்லக்கில் தொடர்ந்து, திருநெய்த்தானம், கடுவெளி, வைத்தியநாதம்பேட்டை வந்து கொள்ளிடம் நதிக்கரைக்கு வருவர். மாப்பிள்ளை மற்றும் சம்பந்தியை எதிர்கொண்டு அழைக்க, கொள்ளிடப் பந்தலில் சுயம்பிரகாசாம்பிகையின் வளர்ப்புப் பெற்றோரான வைத்தயநாதரும் சுந்தராம்பிகையும் அழகிய கண்ணாடிப் பல்லக்கில் வந்து காத்திருப்பார்கள். மாப்பிள்ளையை வரவேற்று ஊர்வலமாக அழைத்துச் செல்வார்கள். மாலை 7 மணிக்கு ஒரு பெரிய பந்தலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெறும். இவ்வாறு கல்யாணம் முடிந்ததும் தம்பதிகள் ஒரு பல்லக்கிலும் சம்பந்திகள் தத்தமது பல்லக்கிலுமாகப் புறப்பட்டு, ஊர்வலமாகச் சென்று கொள்ளிடம் மணற்பரப்பில் ஓய்வெடுப்பர். அப்போது அரசு சார்பில் கலைப் பண்பாட்டுத் துறை வழங்கும் கலை நிகழ்ச்சி, வாணவேடிக்கை போன்றவை விமரிசையாக நடக்கும். பிறகு, சம்பந்திகள், மணமக்கள் விடைபெறும் நிகழ்ச்சி; திருமழபாடி இறைவன் தன் திருக்கோயில் திரும்புதல்; மணமக்களும், பெற்றோரும், புனல்வாயில், பெரும்புலியூர், திருநெய்த்தானம் வழியாகச் சென்று ஐயாறு சேர்தல் என்று அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படும். வழிநெடுக பந்தல், நீர் மோர், பானகம், அன்னதானம் என்று யாரையும் பசித்திருக்காமல் சில தர்ம அமைப்புகள் பார்த்துக் கொள்கின்றன. திருமணத்திற்குக் காத்திருக்கும் பிள்ளைகளும், பெண்களும், இந்த சிறப்பு மிக்க தெய்வத் திருமணத்தை தரிசித்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். இதனை, ‘‘நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம்’’ என்ற வழக்கு மொழி உறுதி செய்கிறது. என்றும் அன்புடன் என்றும் இறைப்பணியில், -vardhuஶ்ரீ☺️🙏 🌹🌹🌹🌹🌹🌹 திருச்சிற்றம்பலம்
361 views
3 days ago
திருமழப்பாடி - ஶ்ரீ திருநந்தியெம்பெருமான் மற்றும் ஶ்ரீ சுயசாம்பிகை திருக்கல்யாண வைபவ விழா அழைப்பிதழ் - சிறப்புகள் """""""""""""""""""""""""" (16.03.2019 - சனிக்கிழமை மாலை 3-மணிக்கு மேல் மற்றும் சரியாக 6:00 மணி முதல் 7:30மணி வரை ) பொன்னார் மேனியராம் அருள்மிகு சுந்தராம்பிகை உடனாய அருள்மிகு வைத்தியநாதப் பெருமான் வீற்றிருந்தருளும் திருமழபாடியில், அவர் முன்னிலையில், அருள்மிகு தர்ம சம்வர்த்தினி அம்பாள் உடனாய செம்பொற்சோதியார் திருஐயாரப்பர் நடத்திவைக்கும்... ஶ்ரீ திருநந்தியெம்பெருமான் - ஶ்ரீ சுயசாம்பிகை திருக்கல்யாணத்தில் திருமணம் தடை உள்ள ஆண்கள் பெண்கள் கலந்துகொண்டு பயன் பெறவும். மாற்றம் தரப்போகும் திருமணம் மங்காத வளமளிக்கும் திருமணம் நந்தி திருக்கல்யாண வைபவம் வாய்ப்பை தவறால் பயன் படுத்தி சுபம் உண்டாகட்டும்.... வழிதடம்: பெரம்பலூர்-- அரியலூர் - தஞ்சாவூர் செல்லும் வழிதடத்தில் திருமானுர் வழியாக திருமழப்பாடி செல்லலாம் திருச்சி- லால்குடி -புள்ளம்பாடி -திருமானுர்- தஞ்சாவூர் செல்லும் பேருந்து திருமழப்பாடி வழியாக செல்லும் தஞ்சாவூர் இருந்து திருவையாறு திருமானுர் வழியாக திருமழப்பாடி செல்லலாம் நம்பிக்கையோடு சென்று நலம் பல பெறுங்கள் ஆன்மீக மக்கள் சேவையில்.... -vardhuஶ்ரீ😊🙏 🌹🌹🌹🌹🌹🌹
#

🤔தெரிந்து கொள்வோம்

🤔தெரிந்து கொள்வோம் - நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம் நந்தி தேவர் = சுயசாம்பிகை திருமணக் கோலம் - ShareChat
222 views
3 days ago
*திருவையாற்றில் இன்று #நந்தியெம்பெருமான் திருஅவதார வைபவம்* இன்று 15/03/2019 காலை #திருவையாறு அந்தணகுறிச்சியில் அருள்மிகு அறம் வளர்த்த நாயகி சமேத அருள்மிகு ஐயாறப்பர் திருஅருளினாள் சிலாதமகரிஷிக்கு மகனாக திருநந்தியம் பெருமான் அவதாரம் செய்யும் வைபவம், சிவாச்சாரியார்கள் வெள்ளி கலப்பையால் பூமியில் உழுது, அங்கிருந்து கிடைக்கப்பெற்ற நந்தியெம்பெருமானை அங்கேயே நீராட்டி, அதன்பின்னர் திருவையாறு ஐயாரப்பர் கோவிலுக்கு மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரங்கள், முழங்க எடுத்து வந்து மாலை திருநந்தியெம்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். சிவனருளால் பூரண ஆயுள் பலமும், கயிலைக்கே காவலனாகும் பேறும் பெற்றார். அதனால் அதிகார நந்தி என பெயரும் பெற்றார். நந்தியை சிவபெருமான் தன் மகனாகவே ஏற்றுக்கொண்டார். உரிய வயதில் அவனுக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணிய சிவன், வசிஷ்ட முனிவரின் பேத்தியை மண மகளாகத் தேர்ந்தெடுத்து, பங்குனி மாத புனர்பூச நட்சத்திர நாளில் (நாளை 16/03/18, 6:00 மணியிலிருந்து 7:30மணிக்குள்) திருமழபாடியில் கோலாகலமாக சிறப்பாகத் திருமணம் நடைபெறுகிறது. அதன்படி, ஆண்டுதோறும் பங்குனிமாதம் புனர்பூசநட்சத்திரத்தில் மாலை வேளையில் திரு நந்தியெம்பெருமானுக்கும்.சுயசாம்பிகை தேவியருக்கும் வெகு சிறப்பாக வேதவிற்பன்னர்கள் மந்திரம் ஒதியும், மங்கள இசை முழங்கவும் திருமணத்தை பரமசிவனும்,பார்வதியும் முன்னின்று நடத்திவைப்பதாக வரலாறு. இத்திருமணத்தை காணும் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஜதீகம்.அதனால் தான் *நந்திக்கல்யாணம் முந்தி கல்யாணம்’* என்றபழமொழியும் உண்டாயிற்று. இதற்காக திருவையாற்றில் இருந்து நந்திகேஸ்வரன் குதிரை வாகனத்தில் திருமழப்பாடி புறப்பட்டார் தனது பக்தனுக்கு தானே முன்னின்று திருமணம் செய்வதற்க்காகஜயாறப்பர்,அறம் வளர்த்தநாயகி ஆகியோர் பல்லக்கில் திருமழப்பாடிக்கு எழுந்தருள்வர். திருவையாறில் இருந்து அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாரப்பருடன் புறப்பட்டு நந்தியெம்பெருமான், வெள்ளி தலைப்பாகையுடன், குதிரை வாகனத்தில் அமர்ந்து, திருநெய்தானம், கடுவெளிப்பனையூர், வைத்தியநாதன் பேட்டை வழியாக கொள்ளிடம் ஆற்றில் வந்து இறங்குகிறார். அதே நேரத்தில், திருமழபாடியிலிருந்து சுந்தராம்பிகை உடனமர் வைத்தியநாதஸ்வாமி, கண்ணாடி பல்லக்கில் சென்று மங்கலவாத்தியங்கள் முழங்க அட்சதைமலர்கள் முதலான நறுமண மங்கலப்பொருட்களுடன் சம்பந்திகளையும், மணமகனையும் வரவேற்று உபசரிகின்றனர். கோவில் முன் அமைக்கப்பட்டுள்ள திருமணமேடை முன் அழைத்து வருவர். வேதியர்கள் வேதம் ஒத,திருமுறைகள் இசைக்க மங்கலவத்தியங்கள் முழங்க ஜயாறப்பர், வைத்தியநாதர் முன்னிலையிலும் அவர் தம் அருளாசியுடனும் *நந்தியெம்பெருமான் சுயசாம்பிகை* கழுத்தில் மங்கலநாணை அணிவிக்க சிவபெருமானுக்கு காவலனாகவும் தோழனாகவும் விளங்கும் நந்தியெம்பெருமான் திருக்கல்யாணம் உற்சவம் நடைபெறுகிறது. நந்தி திருமணத்தின்போது பல தலங்களிலிருந்து பல பொருட்கள் வந்தன. *திருவேதிக்குடியிலிருந்து* வேதியர்கள் வந்தனர். *திருப்பழனத்திலிருந்து* பழ வகைகள் வந்தன. *திருப்பூந்துருத்தியிலிருந்து* மலர் மாலைகள் வந்தன. *திருநெய்த்தானத்திலிருந்து* யாகத்திற்கும் சமையலுக்குமான நெய் வந்தது. *திருச்சோற்றுத்துறையிலிருந்து* அறுசுவை அன்ன வகைகள் வந்தன. *நந்தி திருமண விழா காணும் திருமணமாகாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் விரைவில் திருமணம் கூடி வரும்* என்பர். "நந்திக் கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்' என்பது சொல் வழக்கு. விழாவைக் காண்போர் இல்லத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும்;சுபகாரியங்களும் நடைபெறும் . நந்திகேஸ்வரர் ஜனன வைபத்தை கண்டு தரிசிக்க ஆன்மிக அன்பர்கள், பொதுமக்கள் அனைவரையும் வருக வருக எனவும் இறையருள் பெறுக எனவும் அன்புடன் வரவேற்கிறோம். சீரார் திருவையாறா போற்றி!! போற்றி !!! என்றும் இறைபணியில்…. vardhuஶ்ரீ☺🙏 இந்த பதிவு நந்தியம்பெருமான் திருக்கல்யாண வைபவத்தை காணுதல் எவ்வளவு சிறப்பு என்பதை ஒரு அன்பர் சவாலாக சொல்லும் பதிவாகும் இது👇 சவாலுக்கு நான் ரெடி.... நீங்க ரெடியா ???? இந்தப் பதிவை படிக்காம கடந்து போனா நஷ்டம் உங்களுக்குத்தாங்க.... ***** திருமணத்துக்கு ஏத்த வயசுன்னு நம்மாளுங்க வகுத்து வச்சுருக்குற ஆணுக்கு 21 , பெண்ணுக்கு 18 வயசு நம்ம பிள்ளைகளுக்கும் ஆச்சு... அதுவும் பல வருஷத்துக்கு முன்னாடியே.... இதுவரைக்கும் கல்யாணம் ஆகலையே.... எவ்வளவோ தேடியும், ஒண்ணுமே வரன் அமையலையே.... என்னென்னவோ காரணம் சொல்றாங்க.... செவ்வாய் தோஷம்ங்கிறாங்க..... கல்யாண யோகம் இல்லைங்கிறாங்க..... ராகு கேது சரி இல்லைங்கிறாங்க ... அது சரியில்ல... இது சரியில்லங்கிறாங்க... என்னென்னவோ பரிகாரமும் பண்ணியாச்சு.... இப்போ நான் என்னதான் பண்றது.... கல்யாணம் ஆகுமா ? ஆகாதா..? இந்த மனநிலையில இருக்கீங்களா நீங்க... இல்ல.. உங்களுக்கு தெரிஞ்ச யாராச்சும் இப்படி இருக்காங்களா..? இந்தப் பதிவப் படிக்கிற உங்களுக்கு இனிமே ஒண்ணும் கவலை இல்லீங்க... உங்க மகனுக்கோ, மகளுக்கோ இல்ல உங்களுக்கு தெரிஞ்சவங்க மகனுக்கோ... மகளுக்கோ.... இல்ல உங்களுக்கோ.... கல்யாணம் சீக்கிரமே ஆகப் போகுதுன்னு முடிவு பண்ணிக்குங்க... .. ஆனா.. அதுக்கு நீங்க ஒண்ணு பண்ணனும்.... அது என்ன...? என்ன பரிகாரம் பண்ணனும்..? . அது என்னன்னா..? பரிகாரமெல்லாம் இல்லீங்க.... ஒரு கல்யாணத்த அட்டென்ட் பண்ணனும்... என்னது கல்யாணமா ??? என்ன கல்யாணம் ??? எங்க நடக்குது...? வர்ற 16.03.2019 சனிக்கிழமை அன்னிக்கு சாயங்காலம் திருமழபாடிங்கிற ஊர்ல ஒரு கல்யாணம் நடக்கப் போகுதுங்க.... மதியம் ஒரு மூணு மணி போல நடக்கும்ங்க... அங்க வந்தா கல்யாணம் ஆயிடுமோ....? என்னய்யா உளருறீங்க... ???? உளறலீங்க....கண்டிப்பா ஆகும்.. எழுதி வச்சுக்குங்க... முடிஞ்சா திருமழபாடிக்கு வரும்போதே உங்களுக்கு வசதியான மூணு கல்யாண முகூர்த்த தேதிய முடிவு பண்ணி வச்சுக்கிட்டு வாங்க... அந்த மூணு தேதியில ஒரு தேதியில நீங்க ரொம்ப நாளா நடக்கலயேன்னு நெனைச்ச அந்த கல்யாணம் சத்தியமா நடக்கும்.... நடக்கலீன்னா....? அந்தக் கேள்விக்கே இடமில்ல.... அப்படி நடக்க வாய்ப்பே இல்ல... அப்படி நீங்க திருமழபாடியில நடக்கிற அந்தக் கல்யாணம் பாத்தும், நீங்க நெனைச்ச அந்த கல்யாணம் நடக்கலீன்னா,, இந்தப் பதிவிட்ட இவனை நடுத்தெருவில விட்டு நீங்க செருப்பால அடிக்கலாம்... கரும்புள்ளி செம்புள்ளி குத்தலாம்... கழுதை மேல ஏத்தலாம்..... போய் சொன்ன இவனுக்கு இன்னும் என்னென்ன தண்டனை உங்களுக்கு தரணும்னு தோணுதோ...அதையெல்லாம் தரலாம்.... இவன் தொடர்பு கொண்டு… எங்க வரணும்னு சொன்னாலும் இவன் வருவான்.... உங்க தண்டனைய தரலாம்... என்னடா தைரியமா சொல்லறானு பார்க்கறீங்களா... நடக்கலீன்னா....? அதெல்லாம் கண்டிப்பா நடக்கும்.... அது இவனுக்கும் தெரியும்.... ஏன்னா ... இப்படி பதிவை இவனுக்கு தெரிஞ்ச 2 வருஷமா போட்டுட்டுதான் இருக்கேன்... இதுவரைக்கும் இவன் எங்கயும் அடி வாங்கவே இல்ல.... இனி நம்புறதும் நம்பாததும் உங்க இஷ்டம்....... சவாலுக்கு நான் ரெடி... நீங்க ரெடியா...??? சரி சரி.... கிளம்பிட்டீங்களா ???? திருமழபாடிக்கு.... ***** திருமழபாடி நந்திதேவர் - சுயசாம்பிகை கல்யாணம் - 16.03.2019 - சனிக்கிழமை மாலை 3 மணியிலிருந்து ஆரம்பம் சிவ சிவ.... திருமழப்பாடி திருநந்தியெம்பெருமான் திருக்கல்யாண வைபவ விழா அழைப்பிதழ் - சிறப்புகள் """""""""""""""""""""""""" (16.03.2019 - சனிக்கிழமை மாலை 3-மணிக்கு மேல் மற்றும் சரியாக (6:00 மணி - 7:30மணி வரை) பொன்னார் மேனியராம் *அருள்மிகு சுந்தராம்பிகை உடனாய அருள்மிகு வைத்தியநாதப் பெருமான் வீற்றிருந்தருளும் திருமழபாடியில், அவர் முன்னிலையில்* *அருள்மிகு தர்ம சம்வர்த்தினி அம்பாள் உடனாய செம்பொற்சோதியார் திருஐயாரப்பர் நடத்திவைக்கும்* *திருநந்தியெம்பெருமான் - சுயசாம்பிகை திருக்கல்யாணத்தில்* *திருமணம் தடை உள்ள ஆண்கள் பெண்கள் கலந்துகொண்டு பயன் பெறவும்* மாற்றம் தரப்போகும் திருமணம் மங்காத வளமளிக்கும் திருமணம் நந்தி திருக்கல்யாண வைபவம் வாய்ப்பை தவறால் பயன் படுத்தி சுபம் உண்டாகட்டும் *வழிதடம்:* பெரம்பலூர் அரியலூர் தஞ்சாவூர் செல்லும் வழிதடத்தில் திருமானுர் வழியாக *திருமழப்பாடி* செல்லலாம் திருச்சி லால்குடி புள்ளம்பாடி திருமானுர் தஞ்சாவூர் செல்லும் பேருந்து *திருமழப்பாடி* வழியாக செல்லும் தஞ்சாவூர் இருந்து திருவையாறு திருமானுர் வழியாக *திருமழப்பாடி* செல்லலாம் நம்பிக்கையோடு சென்று நலம் பல பெறுங்கள்..👍 ஆன்மீக மக்கள் சேவையில் ... என்றும் இறைப்பணியில், vardhuஶ்ரீ☺🙏 -vardhuஶ்ரீ😊🙏 🌹🌹🌹🌹🌹🌹
#

🙏பிரார்த்தனை

🙏பிரார்த்தனை - நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம் நந்தி தேவர் = சுயசாம்பிகை திருமணக் கோலம் - ShareChat
164 views
3 days ago
Share on other apps
Facebook
WhatsApp
Copy Link
Delete
Embed
I want to report this post because this post is...
Embed Post
Share on other apps
Facebook
WhatsApp
Unfollow
Copy Link
Report
Block
I want to report because