@vijayakanth2344
@vijayakanth2344

Viji

I love ShareChat

#

✍️ கதை

தேடி வரும் !! மன்னர் ஒருமுறை கிராமங்களை சுற்றிப்பார்க்க குதிரையில் கிளம்பிச் சென்றார். அப்போது வயலில் ஒரே ஒரு பெண் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தாள். மன்னர் அவரிடம் உன் நண்பர்கள் எல்லாம் எங்கே? எனக் கேட்டார். ஆனால் விசாரிப்பது மன்னர் என்பதை அறியாத அந்த பெண், அவர்கள் எல்லாம் மன்னரைப் பார்க்க போயிருக்கிறார்கள் என்று சொன்னாள். அப்படியானால் நீங்கள் மட்டும் ஏன் போகவில்லை என்று கேட்டார். அதற்கு அந்த பெண், மன்னரைப் பார்ப்பதற்காக ஒருநாள் கூலியை இழக்கும் அளவிற்கு நான் முட்டாள் இல்லை... எனக்கு ஐந்து குழந்தைகள். அவர்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது. அதனால்தான் போகவில்லை என்றாள். மன்னர் அவரது கையில் சில நூறு தங்க காசைக் கொடுத்துவிட்டு, உங்கள் நண்பர்களிடம்... நீங்கள் எல்லாம் மன்னரைப் பார்க்க சென்றீர்கள்.. ஆனால் மன்னரோ என்னைப் பார்க்க வந்தார் என்று சொல்லுங்கள்... என அப்பெண்ணிடம் கூறிவிட்டு சென்றார்... எதையும் தேடி செல்லாதே... உனக்கு தகுதி இருந்தால் எல்லாம் உன்னை தேடி வரும்...!!
5.4k காட்சிகள்
25 நாள் முன்
#

✍️ கதை

அரசர் கண்ட கனவு !! ஒரு அரசருக்கு அவருடைய அனைத்து பற்களும் விழுந்து பொக்கைவாயுடன் இருப்பதாக ஒரு கனவு வந்தது. இதனால் காலையில் பயத்துடன் எழுந்த அவர், அந்த கனவால் என்ன விளைவுகள் நேருமோ என்று பயந்துபோய் முதல் வேலையாக ஒரு நாடி ஜோதிடரை வரவழைத்தார். அந்த நாடி ஜோதிடர் தனது ஓலைச்சுவடியை எடுத்து, அதில் பொக்கைவாய் கனவு பற்றி விளக்கியிருந்த ஒரு ஓலையை வாசித்துவிட்டு, அரசே... உங்கள் மனைவி, குழந்தைகள், சொந்த பந்தங்கள் எல்லாம் உங்களுக்கு முன்பே இறந்து விடுவார்கள் என்று பலன் சொன்னார். உடனே அரசர் மிகவும் கோபம் கொண்டு, இவனை பிடித்து சிறையில் தள்ளுங்கள்... என்று உத்தரவிட்டார். அதன் பிறகும் மன்னனின் மனம் சமாதானம் அடையவில்லை. இன்னொரு நாடி ஜோதிடரை வரவழைத்து அவரிடம் தன் பொக்கைவாய் கனவைப் பற்றிய அர்த்தத்தை என்னவென்று கேட்டார். அந்த ஜோதிடரும் அதே மாதிரியான ஓலைச்சுவடியைத்தான் வைத்திருந்தார். அவரும் அதை பார்த்துவிட்டு, மன்னா... உங்கள் சொந்த பந்தங்களையெல்லாம் விட நீங்கள் நீண்ட காலம் நீடூடி வாழ்வீர்கள் என்று பலன் கூறினார். இதனால் மனம் குளிர்ந்த அரசர், அந்த ஜோதிடருக்கு தகுந்த பரிசுகள் வழங்கி அனுப்பி வைத்தார். இருவரும் ஒரே ஓலையைத்தான் படித்தார்கள். ஒரே விஷயத்தைத்தான் சொன்னார்கள். ஒருவர் எல்லோரும் இறந்துவிடுவார்கள் என்றார். இன்னொருவர் எல்லோரையும் கடந்து வாழ்வீர்கள் என்றார். அவ்வளவுதான் வித்தியாசம். பேசும் வார்த்தைகளை கவனமுடன் கையாண்டால் வாழ்வில் ஜெயிக்கலாம்..
945 காட்சிகள்
28 நாள் முன்
#

🌿 இயற்கை உணவு

உணவு பழக்கம் பழமொழி வடிவில் !! 1. சீரகம் இல்லா உணவு சிறக்காது. 2. தன் காயம் காக்க வெங்காயம் போதும். 3. வாழை வாழ வைக்கும். 3. அவசர சோறு ஆபத்து. 5. இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு. 6. இரத்த கொதிப்புக்கு அகத்திக்கீரை. 7. இருமலை போக்கும் வெந்தயக்கீரை. 8. உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும். 9. உஷ்ணம் தவிர்க்க கம்பங்களி. 10. கல்லீரல் பலம் பெற கொய்யாப்பழம். 11. கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராட்சை. 12. சித்தம் தெளிய வெல்லம். 13. சிறுநீர் கடுப்புக்கு அண்ணாசி. 14. சூட்டைத் தணிக்க கருணைக்கிழங்கு. 15. ஜீரண சக்திக்கு சுண்டைக்காய். 16. தலைவலி நீங்க முள்ளங்கிச்சாறு. 17. தேனுடன் இஞ்சி இரத்தத் தூய்மை. 18. பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி. 19. மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு. 20. வாந்திக்கு மருந்து மணத்தக்காளி. 21. வாத நோய் தடுக்க அரைக்கீரை. 22. வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய். 23. பருமன் குறைய முட்டைக்கோஸ். 24. பித்தம் தணிக்க நெல்லிக்காய். 25. குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை.
2k காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
#

🤣 லொள்ளு

சிரிப்போ சிரிப்பு!! ஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர் வந்தாரு. அந்த பள்ளிக்கூடத்தப் பத்தி அவரோட வேலை பாத்தவங்க ஏற்கனவே நிறைய சொல்லி இருக்காங்க... 'இது ஒரு ஏடாகூடமான ஸ்கூலு பார்த்து ட்ரீட் பண்ணுங்க"ன்னு அதனால எதுக்கும் தயாராத்தான் அவர் வந்தார்... முதல்ல ஒரு வகுப்புக்குள்ள நுழைஞ்சாரு... உடனே பசங்க எல்லாம் எழுந்திருச்சு நின்னு வணக்கம் சொன்னாங்க... சரி... எடுத்தவுடனேயே ஏதாவது கேள்வி கேக்க வேண்டாம்ன்னு முதல் பையன எழுப்பி... உன் பேர் சொல்லு 'பழனி" உன் அப்பா பேரு 'பழனியப்பா", அடுத்தப் பையன எழுப்பி, உன் பேர் சொல்லு 'மாரி" உன் அப்பா பேரு 'மாரியப்பா"... அவருக்கு கொஞ்சம் டவுட் வருது இருந்தும் அடுத்தப் பையன எழுப்பி... உன் பேர் சொல்லு 'பிச்சை" உன் அப்பா பேரு 'பிச்சையப்பா" இப்போ அவருக்கு கன்பார்ம் ஆயிடுச்சு, சரி பசங்க ஆரம்பிச்சுட்டாங்க அப்படினு புரிஞ்சுருச்சு... அடுத்தப் பையன எழுப்பினாரு... முதல்ல நீ உன் அப்பா பேரைச் சொல்லு... (மனசுக்குள்ள ஒரு பெருமிதம்) 'ஜான்" இப்போ உன் பேரைச் சொல்லு 'ஜான்சன்" கொஞ்சமா டென்சன் ஆயிடுச்சி... அடுத்த பையன எழுப்பி, உன் அப்பா பேர சொல்லு... 'டேவிட்".. உன் பேரு...? 'டேவிட்சன்" கொலவெறி ஆயிட்டாரு, கொஞ்ச நேரம் நிதானமா யோசிச்சி, அடுத்த பையன எழுப்பி, உன் தாத்தா பேர சொல்லு... சார்... அப்பாவோட தாத்தாவா? அம்மாவோட தாத்தாவா? ஆய்வாளர் பல்ல கடிச்சிக்கிட்டு, அப்பாவோட தாத்தா...ன்னாரு 'வீரமணி", சரி அப்பா பேரு? 'வீ.ரமணி", உன் பேரு? 'வீ.ர.மணி"... அப்புறம் என்ன... !!!! அதுக்கு அப்பறம் அந்த பள்ளிக்கு ஆய்வாளருன்னு ஒருத்தருமே எட்டி பார்க்குறதில்லியாம்...
2.1k காட்சிகள்
3 மாசத்திற்கு முன்
#

💑 கணவன் - மனைவி

வெற்றிக்குப் பின்னால் !! 'கையில என்ன பொட்டலம்?" 'மல்லிகைப் பூ சார்! மனைவிக்கு வாங்கிட்டுப் போறேன்....!" 'அவ்வளவு பிரியமா உங்களுக்கு ?" 'ஆமா சார்.... என்னுடைய வெற்றிக்கெல்லாம் அவதானே காரணம்!" 'உங்க வெற்றிக்கு மட்டுமா... அமெரிக்க ஜனாதிபதியா இருந்தவர் ஆண்ட்ரு ஜாக்சன். கல்யாணத்துக்கு முன்னாடி அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அவருக்கு படிக்கச் சொல்லிக் கொடுத்து... அவருக்கு அமெரிக்க ஜனாதிபதியா ஆகக்கூடிய தகுதியை ஏற்படுத்தினதே அவருடைய மனைவி தானே!" 'அப்படியா ?" 'மோட்டார் மன்னர் ஹென்றி போர்டு தெரியுமில்லே, அவரு தன்னுடைய ஆராய்ச்சியிலே தோல்வி கண்டு வந்தப்போ பக்கத்துலே இருந்தவங்க எல்லாம் அவரை பைத்தியம்ன்னு கேலி பண்ணாங்க!" 'அய்யோ பாவம்!" 'அந்த சமயத்துலே அவரு மனைவி தான் அவருக்கு உற்சாகம் ஊட்டினாங்க... மனது சோர்ந்து போயிடாதீங்க... நீங்க நிச்சயம் வெற்றி பெறுவீங்க... அதுக்கான எல்லா தகுதியும் உங்களுக்கு இருக்கு... அப்படின்னு சொல்லிக்கிட்டே வந்தாங்க. அதனாலேதான் அவரு கடைசியிலே மோட்டார் காரைக் கண்டுப்பிடிச்சாரு!" 'பார்த்தீங்களா? ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாடியும் ஒரு பெண் இருப்பான்னு சொல்றது எந்த அளவுக்குச் சரியா இருக்கு பாருங்க!" 'சரி... இப்போ நீங்க அடைஞ்ச வெற்றி என்ன ?" 'அருமையா ஒரு நாவலை எழுதி முடிச்சிருக்கேன் சார்!" 'இதுக்கு உங்க மனைவி ரொம்ப ஒத்தாசையா இருந்தாங்களா ?" 'ஆமாங்க!" 'எப்படி?" 'அதை நான் எழுதி முடிக்கிறவரைக்கும் அவ தன்னுடைய அம்மா வீட்டுக்குப் போயிருந்தா சார் !"
178 காட்சிகள்
4 மாசத்திற்கு முன்
#

🌿 இயற்கை உணவு

இதற்கு அரை மணி நேரம் ஒதுக்கினால் போதும்... உங்கள் செலவு குறையும்..!! காய்கறி தோட்டம் !! 🌿 என்னதான் தேடி தேடி சுத்தமான காய்கறிகளை வாங்கினாலும் நம் வீட்டு தோட்டத்தில் பறித்து உண்பது போன்ற சுகமே தனி தான். வீட்டில் இருக்கும் இடத்தை பொறுத்து, சிறியதாக ஒரு தோட்டம் அமைத்துக் கொண்டால் போதும். 🌾 வீட்டில் கிலோ கணக்கில் காய்கறிகளை வாங்கி வைக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. இரசாயன உரங்களோ, பூச்சி கொல்லிகளோ இல்லாத காய்கறிகளை உண்டு நலமுடன் வாழலாம். 🍂 தோட்டம் அமைக்க முதலில் கவனிக்க வேண்டியது இடத்தை தான். தனி வீடாக இருக்கும் பட்சத்தில் தரையில் கிடைக்கும் இடத்தை வைத்து தோட்டம் அமைக்கலாம். 🌾 அதனை சிறு சிறு பாத்திகளாக பிரித்து கீரை, வெண்டை, கத்தரி, தக்காளி மற்றும் வரப்பு ஓரங்களில் சின்ன வெங்காயம், ஒரு கறிவேப்பிலை, ஒரு முருங்கை மரம், ஒரு எலுமிச்சை கண்டிப்பாக இருக்கும்படி அமைத்துக் கொள்ளலாம். 🌿 தோட்டம் அமைத்தப்பின் உள்ள முக்கியமான பிரச்சனை பூச்சி தாக்குதல் தான். இதனை இயற்கை உரங்களைப் பயன்படுத்தி எளிதாக கட்டுப்படுத்தலாம். 🍀 மேலும், வீட்டு தோட்டத்தில் சிறிது இடம் இருந்தால் அங்கு வீட்டு சமையலறை கழிவுகளை ஒரு தொட்டியில் இட்டு அடிக்கடி கிளறி விட்டு கொஞ்சம் சாணம் மற்றும் யூரியாவை இட்டு மக்க வைத்தால் இயற்கையான உரம் தயார். 50 நாட்களுக்கு பிறகு அதனை செடிகளுக்கு அளிக்கலாம். 🌾 சிலருக்கு மொட்டை மாடியில் தான் இடம் இருக்கும். அவர்கள் முதலில் மாடியை ஆராய்ந்து, வெளியில் அதிகமாக படுவதாக இருந்தால், ஷேடு நெட் எனப்படும் வலையை பயன்படுத்தி தோட்டம் அமைக்க வேண்டும். 🌾 இது எல்லாம் செய்ய முடியாது என்றால், குறைந்தது தார்பாலின் ஷீட்டையாவது மாடியில் விரித்து அதன் மீது தொட்டிகளை வைக்க வேண்டும். மாடித்தோட்டம் அமைப்பவர்கள் தென்னை நார்கழிவை பயன்படுத்தி தொட்டியை தயார் செய்வது நல்லது. 🍀 தென்னை நார்கழிவை பயன்படுத்தும் பொழுது, அவை ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்வதாலும், எடை குறைவாக இருப்பதாலும் மாடிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. 🍂 ஒரு சிலருக்கு பால்கனியில் மட்டும் தான் இடம் இருக்கும். அவர்கள் குறைந்தது வீட்டிற்கு தேவையான ஐந்து செடிகளையாவது வளர்க்கலாம். 🌾 உதாரணமாக தக்காளி, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை போன்ற சமையலுக்கு அடிப்படையாக தேவைப்படும் செடிகளை மட்டுமாவது பால்கனியில் வைத்து வளர்க்கலாம். 🌿 பால்கனி தரை வீணாகாமல் இருக்க, தார்பாலின் ஷீட் உபயோகிக்கலாம். இல்லையெனில் தொட்டிகளுக்கு அடியில் தட்டுகளை வைத்து அதிகப்படியான தண்ணீர் அதில் வடியுமாறு செய்யலாம். 🌾 கீரை வகைகளுக்கு அதிகமாக வெயில் தேவைப்படாது. எனவே பால்கனியில் வெயில் படாது என்றால் தாராளமாக கீரைகளை வளர்க்கலாம். 🍀 எந்த பகுதியில் தோட்டம் அமைத்தாலும், நம் பகுதிக்கு ஏற்ற, நம்முடைய சீதோஷ்ண நிலையில் வளரக்கூடிய செடிகளையே தேர்வு செய்து விதைக்க வேண்டும். 🌾 தினசரி அரை மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை தோட்டத்திற்காக செலவழித்தால் போதும். வீட்டிற்கு ஆகும் காய்கறி செலவில் பெருமளவை குறைக்க முடியும். 🍂 காய்கறி தோட்டம் அமைப்பது மனம், உடல், பணம் என அனைத்திற்கும் பாதுகாப்பானது என்பதை அனுபவ பூர்வமாகத் தான் உணர முடியும்.
272 காட்சிகள்
4 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்பாலோவ்
காப்பி லிங்க்
புகார்
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்