Vennmathi - Webnews
ShareChat
click to see wallet page
@wwwvennmathinewscom
wwwvennmathinewscom
Vennmathi - Webnews
@wwwvennmathinewscom
செய்தி கலாட்டா...
#😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி கரூர் துயரம் - போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளவை ▪️ 12.45 மணிக்கு விஜய் கரூரில் பேசுவார் என த.வெ.க. அறிவித்திருந்தது. ஆனால் 5 மணி நேர தாமதமாகத்தான் அங்கு வருகை தந்தார். ▪️ பேருந்தின் முன்சீட்டில் அமர்ந்திருந்த விஜய், திருக்காம்புலியூர் சந்திப்பை தாண்டியதும் லைட் ஆப் செய்துவிட்டு உள்ளே சென்றார். இதனால், சாலை நெடுக அவரை பார்க்க காத்திருந்தவர்கள், கூட்டம் நடக்கும் இடத்திற்குச் சென்றால் பார்க்க முடியும் என நினைத்து, கூட்டம் நடக்கும் இடத்தை நோக்கி வந்துள்ளனர் ▪️ அதிகப்படியான கூட்டம் கூடியதால் சூழல் கட்டுக்குள் இல்லாமல் போனது. 10,000 பேர் வருவார்கள் என அனுமதி வாங்கப்பட்ட இடத்தில் 25,000 முதல் 27,000 பேர் வரை திரண்டனர் ▪️ கட்சியில் இருந்து கூட்டத்தை ஒழுங்கு செய்ய தன்னார்வலர்கள் இல்லை. குடிநீர், மருந்து, மருத்துவக் குழு எதுவும் அங்கே இல்லை ▪️ காலை முதல் கடும் வெயிலில் காத்திருந்த மக்கள், கூட்ட நெரிசலில் சிக்கியுள்ளனர் ▪️ 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. #விஜய் #💪தி.மு.க #🔷காங்கிரஸ் #📺அரசியல் 360🔴
#😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி விஜய் செய்த பிழைகள்! -------------------- 1) விஜய் பரப்புரை நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை விதிக்கும் கட்டுப்பாடுகளை அரசியல் ரீதியில் பழிவாங்கும் நடவடிக்கையாக சித்தரித்தார் விஜய். 2) அரசு பழிவாங்குகிறது என்ற கருத்து விஜய் கட்சித் தொண்டர்களிடம் விதைக்கப்பட்டதால், காவல்துறை கட்டுப்பாடுகளை அவர்கள் சிறிதும் மதிக்கவில்லை. 3) மின்சாரம் தாக்கி யாரும் இறந்துவிடக் கூடாது என்று, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதையும் அரசியலாக்கினார் விஜய். இன்னும் ஒருபடி மேலே சென்று, நாகப்பட்டினத்தில் மின்சாரத்தை துண்டிக்க தவெக மாவட்டச் செயலாளரை வைத்தே கடிதம் கொடுத்துவிட்டு, பின்பு மின்சாரம் துண்டிக்கப்பட்டதற்கு அரசை குறை கூறினார் விஜய். 4) அதிகம் மக்கள் கூடும் பிரச்சாரக் கூட்டங்களை வழக்கமாக அரசியல் கட்சிகள், நகருக்கு வெளியே உள்ள பெரிய மைதானங்களில் தான் நடத்தும். ஆனால், விஜய் அனுமதி கேட்ட இடங்கள் அனைத்துமே நகரங்களின் முக்கியப் பகுதிகள், மக்கள் இயல்வாகவே அதிகம் கூடும் இடங்களாகும். குறிப்பாக நெரிசல் மிக்க குறுகலான சாலைகளாகும். அங்கு அனுமதி மறுத்தால் அதையும் ஏற்கவில்லை விஜய். 5) விஜய் நடத்தும் மாநாடு மற்றும் கூட்டங்களுக்கு வந்து இறந்த தொண்டர்களுக்கு உடனடியாக இரங்கல் சொல்லும் வழக்கம் விஜய்யிடம் இல்லை. பொறுப்பற்ற தன்மையையே வெளிப்படுத்தி உள்ளார். 6) தடுப்பு வேலிகளை உடைப்பது, மரங்களில் கூரைகளில் ஏறுவது என்று தன் தொண்டர்கள் கட்டுப்பாடு இல்லாமல் கூடுவது தெரிந்த பிறகும், பிரம்மாண்ட பேனர்கள் வைப்பதை ஊக்குவித்தார் விஜய். அவை சரிந்து விழுந்தால் ஏற்படும் ஆபத்து பற்றி விஜய் கவலைப்படவில்லை. 7) எந்தக் கட்சி கூட்டம் நடத்தினாலும் அங்கு வரும் தொண்டர்களுக்கு தண்ணீர், சிற்றுண்டி உள்ளிட்ட உணவு ஏற்பாட்டை கட்சிகளே செய்வது வழக்கம். அதை எல்லாம் பிரியாணி கொடுத்து கூட்டி வரும் கூட்டமென்று கொச்சைப் படுத்தியது தவெக. ஆனால், விஜய் கூட்டத்தில் தண்ணீர் உணவு இன்றி கடும் வெயிலில் மணிக்கணக்கில் காத்திருந்த மக்கள் மயக்கம் அடைந்தபோது, தண்ணீர் உணவு ஏற்பாட்டை ஏன் அரசு செய்யவில்லை என்று கேட்கிறது தவெக. 8) எந்தக் கூட்டத்திற்கும் விஜய் குறித்த நேரத்திற்கு வரவில்லை. ஒரு குறிப்பிட்ட நேரத்தை சொன்ன பிறகு, பல மணி நேரம் கடந்து விஜய் வருவதால் தொண்டர்கள் சோர்வு அடைந்து மயக்கமாகும் நிலை ஏற்படுகிறது. 9) விஜய் கூட்டத்தில் கர்ப்பினி பெண்கள், குழந்தைகள் பங்கேற்கக் கூடாது என்றும், மீறி வந்தால் விஜய் தான் பொறுப்பு என்றும் கறாராகச் சொன்னது நீதிமன்றம். இப்போது கரூரில் குழந்தைகள் வந்ததற்கு விஜய் தான் பொறுப்பு. 10) கரூரில் இவ்வளவு துயரம் நடந்த பிறகும், களத்திற்கு செல்லாமல், திருச்சியில் கூட தங்கி இருந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமல், ஏற்கெனவே திட்டமிட்டபடி விமானத்தில் சென்னை சென்றுவிட்டார் விஜய். பிரதமர், முதலமைச்சர் என்று முக்கியத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்த பிறகும் உடனடியாக விஜய் ஒரு வார்த்தை இரங்கல் கூறவில்லை. ஆனால், முதலமைச்சரோ கரூர் விரைகிறார். அமைச்சர்கள் மருத்துவமனையில் மீட்பு பணியில் உள்ளனர். மக்கள் தலைவர்களுக்கும், கள அரசியல் தெரியாத சினிமா நாயகனுக்கும் உள்ள வேறுபாடு இதுதான். #📺அரசியல் 360🔴 #💪தி.மு.க #🔷காங்கிரஸ் #விஜய்
ஒன்றிய அரசின் 'ஜிஎஸ்டி குறைப்பு நாடகம்' கடந்த 8 ஆண்டுகளில், மக்கள் மீது ரூபாய் 55 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி சுமத்தப்பட்டது! அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள், உடுத்தும் உடை, பாத்திரம், உணவு, விவசாயம், காப்பீடு – எதையும் விடவில்லை. இப்போது 8 ஆண்டுகள் கழித்து ஆண்டுக்கு ரூபாய் 2.5 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரியைக் குறைத்ததாக பெருமை ஒன்றிய அரசு பேசுகின்றது. இதனால், 144 கோடி இந்தியர்களுக்கு கிடைப்பது – ஒருவருக்கு ரூபாய் 57 மட்டுமே! அதிலும் வியப்பு என்னவென்றால், இந்த ரூபாய் 2.5 லட்சம் கோடி சலுகையும் ஒன்றிய அரசு மக்களுக்கு கொடுப்பதல்ல. இது மாநிலங்களின் வரி பங்கு. அதை குறைத்துவிட்டு, பாராட்டை ஒன்றிய அரசு பெற்றுக்கொள்கிறது. 'மாநிலங்கள் வரி செலுத்துகிறது. ஒன்றிய அரசு புகழடைகிறது. மார்க்கெட்டிங் செய்வதில் ஒன்றிய அரசு வல்லவர்கள்! ஒன்றிய அரசின் இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பு என்ற போலி நாடகத்துக்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். -தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வப்பெருந்தகை #📺அரசியல் 360🔴 #💪தி.மு.க #🔷காங்கிரஸ் #🔷ராகுல் காந்தி #தேசிய செய்திகள்
ஆழ்ந்த இரங்கல். ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேசன் காலமானார்...! தமிழக எரிசக்தித்துறை முதன்மை செயலாளர் டாக்டர் பீலா வெங்கடேசன் (55), ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் கொரோனா காலத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளராக செயல்பட்டார்.இதனிடையே, பீலா வெங்கடேசன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பீலா வெங்கடேசன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். #தமிழ்நாடு #சென்னை #செய்தி #💚I Love தமிழ்நாடு #இரங்கல்
தமிழ்நாடு - ShareChat
*தமிழக பொதுமக்களே !..* தமிழகம் முழுவதும், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை பெற அரசின் கவனத்திற்கு எடுத்து செல்ல இணைவீர்!!... 1. குடி தண்ணீர் பிரச்சினைகள் 2. மின் விளக்குகள் பிரச்சினைகள் 3. சாலைவசதி பிரச்சினைகள் 4. அடிப்படை வசதிகள் சார்பான பிரச்சினைகள் 5. ஊராட்சிகள் / மாநகராட்சி தொடர்பான தேவைகள் மேலும் மக்களுக்கு தேவையான அனைத்து விதமான தேவைகளை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்ல தொடர்புக்கொள்வீர் !... ---------------------- மேலும் விபரங்களுக்கு : R. வேல்முருகன் மாநில செய்தி தொடர்பாளர் *தமிழர் சட்ட இயக்கம்* பதிவு எண் : 50/2025 Email : velmuruganmaduraii@gmail.com #பொதுநலன் #பொதுநலன்👍👍🌹🌹 #தமிழ்நாடு #💚I Love தமிழ்நாடு #📺அரசியல் 360🔴
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி.. #💪தி.மு.க #தமிழ்நாடு #தமிழ்நாடு அரசு #செய்தி #💪தி.மு.க #மதுரை
💪தி.மு.க - ः X X 6.50 PM T velmurugan98 jpeg ೪Tnn ` ஊராட் ^ருப்Fங்ாகுனார 09 7025` 58/2025|01 / தங்ருறிம் 1 முசுமகப#் ஈரின் இ யதன ஏனிப்பிரிவு பறு திருப்பாங்குளறம் ` Cin(un; அதுப்பரய் எார்பு  ப பிபாம்   رم  01 14981108, நாச 0409.2025` Dxrenuin MAullnMilcn Nn  மகாராக்கு  பனi பிாப்ப ` Cಖnamu பயரியகு  பர்ட nlkol' பிபியக டுnp பதாய் பயாம் , Filmi ' அகாட்சி = ராட்சியித்திந்குப்பாரத் திருப்பாங்கு்றம் `  Ma விருப்பாஙTுசரம் Anu XnnMntAol' ೊmlon' உறியதசகுட்பட் எகு` Snninl I01 0#ரர5 பா சவிி பபபப A Amrdki ' dnola ஈரராடபிங் Qmmnor Arnn IHamசம் =1"11 தாயமஈIயம [ 0 (a0nuy 'ulunr 09.u _ பறபொரசப்பட்டுரசத ஈய  0 தொிதது ம பாப்பொறபது ` தொியிகசப்படு ிறத ஏகாாருக்கு அனுவனகாரி  ర பட்டார பபாரச்சி திருப்பாங்ருரம் ` Cuurl: |5^ ப~்முருச` ஏற்குச அபஈம்புசசம் ः X X 6.50 PM T velmurugan98 jpeg ೪Tnn ` ஊராட் ^ருப்Fங்ாகுனார 09 7025` 58/2025|01 / தங்ருறிம் 1 முசுமகப#் ஈரின் இ யதன ஏனிப்பிரிவு பறு திருப்பாங்குளறம் ` Cin(un; அதுப்பரய் எார்பு  ப பிபாம்   رم  01 14981108, நாச 0409.2025` Dxrenuin MAullnMilcn Nn  மகாராக்கு  பனi பிாப்ப ` Cಖnamu பயரியகு  பர்ட nlkol' பிபியக டுnp பதாய் பயாம் , Filmi ' அகாட்சி = ராட்சியித்திந்குப்பாரத் திருப்பாங்கு்றம் `  Ma விருப்பாஙTுசரம் Anu XnnMntAol' ೊmlon' உறியதசகுட்பட் எகு` Snninl I01 0#ரர5 பா சவிி பபபப A Amrdki ' dnola ஈரராடபிங் Qmmnor Arnn IHamசம் =1"11 தாயமஈIயம [ 0 (a0nuy 'ulunr 09.u _ பறபொரசப்பட்டுரசத ஈய  0 தொிதது ம பாப்பொறபது ` தொியிகசப்படு ிறத ஏகாாருக்கு அனுவனகாரி  ర பட்டார பபாரச்சி திருப்பாங்ருரம் ` Cuurl: |5^ ப~்முருச` ஏற்குச அபஈம்புசசம் - ShareChat