🔯திருமண பரிகாரங்கள்🙏🏻
43K Posts • 69M views
S Kamalakannan
702 views 23 days ago
🚩 *காலை தரிசனம்----------!* *திரு ஆதிரை நட(ன)ராஜர் தரிசனம்-------!!* "ஆடல் கலையே தேவன் தந்தது தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது....! 'நடராஜர் தலைகீழாக நடனமாடும் தரிசனம் ! பரதநாட்டியத்தின் நூற்றெட்டு கரணங்களில் ஒன்றான கங்காவதரணம் என்ற கரணம் இது ! கங்கை ஆகாயத்திலிருந்து இறங்குவதைப் போன்ற நடனம் ! இந்தசிலை இருக்குமிடம் காஷ்மீர் மீயூசியம்.' மங்களகரமான ஸ்ரீ்விசுவாவசு வருடம் : ஐப்பசி மாதம் 23 ஆம் நாள் ! நவம்பர் மாதம் 09 ஆம்தேதி ! (09-11-25) இன்றைய திதி் : தேய்பிறை : பஞ்சமி ! சதுர்த்தி.. காலை 10-15 மணிவரை, அதன்பிறகு பஞ்சமி !! இன்றைய நட்சத்திரம் : திருவாதிரை ! திருவாதிரை.. பின்இரவு 03-50 மணிவரை, அதன்பிறகு புனர்பூசம் !! யோகம் : சித்தயோகம் !! இன்று மேல் நோக்கு நாள் !! ந்திராஷ்டமம் : விருச்சிக ராசிக்கு சந்திராஷ்டமம் !! ராகுகாலம் : மாலை : 04-30 மணி முதல் 06-00 மணி வரை !! எமகண்டம் : மதியம் 12-00 மணி முதல் 01-30 மணி வரை !! குளிகை : மாலை : 03-00 மணி முதல் 04-30 மணி வரை !! சூலம் : மேற்கு ! பரிகாரம் : வெல்லம் !! கரணம் : காலை: 10-30 மணி முதல் 12-00 மணி வரை ! இன்றைய நல்ல நேரம் என்கின்ற சுப ஓரைகள் : காலை : 07-00 மணி முதல் 09-00 மணி வரை ! 11-00 மணி முதல் 12-00 மணி வரை ! மாலை : 02-00 மணி முதல் 04-00 மணி வரை ! 06-00 மணி முதல் 07-00 மணி வரை ! இரவு : 09-00 மணி முதல் 11-00 மணி வரை !! இன்றைய சிறப்புகள் : இன்று திருவாதிரை நட்சத்திரம் ! இன்று நடராஜர் வழிபாடு செய்யவேண்டிய நாள் !! மாதா மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று நடராஜர் வழிபாடு செய்ய வேண்டும் ! எல்லா சிவ ஸ்தலங்களிலும் நடராஜர் சன்னதி இருக்கும் ! "தாயார் இருந்தென்ன தந்தையும் இருந்தென்ன... தன்பிறவி உறவுகோடி தனமலை குவித்தென்ன... பலன் எமனோலை ஒன்றைக் கண்டு தடுக்க உதவுமோ.... இதுவெல்லாம் சந்தை உறவென்று தான் உன்னிரு பாதம் பிடித்தேன்...! கால் தூக்கி ஆடும் ஈசனே-----------! எம்மை கை தூக்கி விடுமய்யா----------! எனையீன்ற .. தில்லைவாழ் நடராஜனே..........!! ஓம் நமோ பகவதே ருத்ராய.. தென்னாடுடைய சிவனே போற்றி .. எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி...!! *நட(ன)ராஜர் அருளாளே இன்றைய நாளும் திரு நாளாகட்டும்------------------!!* *சௌஜன்யம்..!* *அன்யோன்யம் .. !!* *ஆத்மார்த்தம்..!* *தேசியம்..!* *தெய்வீகம்..! பேரின்பம் ...!!* தில்லை கூத்தனார் அருளாசியாளே வாழ்க வளமுடன் 🛕🙏🚩 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻 #🙏கோவில் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🕉️நாக தோஷம் பரிகாரங்கள்🌠
8 likes
15 shares