சார்லி சாப்லின் பிறந்த தினம்

சார்லி சாப்லின் பிறந்த தினம்

#

சார்லி சாப்லின் பிறந்த தினம்

176 காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
#

சார்லி சாப்லின் பிறந்த தினம்

162 காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
#

சார்லி சாப்லின் பிறந்த தினம்

163 காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
#

சார்லி சாப்லின் பிறந்த தினம்

180 காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
#

சார்லி சாப்லின் பிறந்த தினம்

பேசும் சித்திரம்
#சார்லி சாப்லின் பிறந்த தினம் அரை இன்ச் மீசை... ஆம் இதை மட்டுமே அடையாளமாகக் கொண்ட இருவரில், ஒருவர் உலகை ஆட்டிப்படைத்த சர்வாதிகாரி ஹிட்லர். மற்றொருவர் இன்றைய தினத்தில் பிறந்த நகைச்சுவை உலகின் பிதாமகன் சார்லி சாப்ளின். ஹிட்லர் பத்தாண்டுகளில் மண்ணோடு மண்ணாக காணாமல் போய்விட்டதும் வரலாற்றில் களங்கமாய் வேறு மாதிரி நீங்காமல் பதிவானதையும் அறிவோம். சார்லி சாப்ளின் மட்டும்  காலங்களைக் கடந்து இன்றும் நம் எல்லோரின் புன்னகையில்  வாழ்கிறார். தரையில் இருந்து சிகரத்தைத் தொட்ட சாதாரண தன்னம்பிக்கைக்கான வாழ்க்கை அவருடையது இல்லை. பள்ளத்தாக்கையே சிகரமாக மாற்றிக் காட்டிய சாகச வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் அவர்! சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் என்பதுதான் சார்லி சாப்ளினின் முழுப்பெயர்! 1889-ம் ஆண்டு  இதே ஏப்ரல் மாதம் 16-ந்தேதி பிறந்தவர். ஹாலிவுட் திரையுலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர்.  நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று இவர் தொடாத திசைகளே இல்லை. காட்டாத முகங்கள் இல்லை. சாப்ளினின் புன்னகைக்குப் பின்னால் கண்ணீர்த்துளிகள் நிறைய உண்டு. லண்டனில் மிக மிக வறுமையான குடும்பத்தில்  பிறந்தவர். சாப்ளின் பிறந்த சில நாட்கள் கழித்து பெற்றோரது திருமண வாழ்க்கை முறிந்து போனது. தந்தைவிட்டுச் சென்றதும் தனது அன்னையின் கண்காணிப்பில் வறுமையில் வளர்ந்தார். ஆதரவற்றோருக்கான பள்ளி ஒன்றில் தன் சகோதரருடன் வளர்ந்த சாப்ளின், பசியில் அழாத நாட்கள் இல்லை. சாப்ளினின் தந்தையும் இவரது 12-வது வயதில் இறந்தும் போனார் . இதனால்  தாயார் நிரந்தரமாக மன நலம் பாதிக்கப்பட்டார்.  காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்ட்டு அனாதையானார் சாப்ளின். முதன் முதலில் 1894-ம் ஆண்டில் மியூசிக் ஹாலில் பணியாற்றிய தனது தாய்க்குப் பதிலாக ஒரு சிறிய வேடத்தில் மேடையில்  நடித்தார். கெட்டியாக நடிப்பைப் பிடித்துக் கொண்டார்.  சிறுவனாக பசியின் பிடியில் படுத்த படுக்கையாக இருந்தபொழுதுகளில், இரவுகளில் அவரது தாய் சன்னல் ஓரம் அமர்ந்து வெளியில் நடக்கும் நிகழ்வுகளை நடித்துக் காட்டுவார். சாப்ளினுக்குப் பத்து வயதாக இருந்த போது, ஒரு பூனையாக, நகைச்சுவையான பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை சீனியர் ஒருவர் வாங்கித் தந்தார். இவரது முதல் டாக்கீஸ் 1940-ம் ஆண்டில் வெளியான `தி கிரேட் டிக்டேடர்'. இது அடால்ஃப் ஹிட்லரையும் அவரது பாசிச கொள்கையையும் எதிர்த்து குரல் கொடுத்த படம். இப்படம் அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் குதிப்பதற்கு ஒரு வருடம் முன்பு அங்கு வெளியிடப்பட்டது. இன்றுவரை அப்படம் பேசும் அரசியல் மிகவும் தைரியமானது. எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா? இப்படத்தில் சாப்ளின் இரு வேடங்கள் பூண்டிருந்தார். ஹிட்லர் மற்றும் நாசியர்களால் கொடுமையாக கொல்லப்படும் யூத இனத்தைச் சேர்ந்த ஒரு நாவிதன். சினிமா மீது மோகம் கொண்ட ஹிட்லர் இப்படத்தை இருமுறைப் பார்த்தார். கோபமும் படவில்லை. சாப்ளின் தன் வாழ்க்கை முழுவதும் அழுகையால் மனம் நிரம்பி இருந்தாலும் மக்களுக்கு கண்ணீரைத் தராமல் புன்னகையைப் பரிசாகத் தந்தார். திரை முன் தோன்றிவிட்டால் அது எதையும் காட்டாமல் சாப்ளின் மட்டுமே தெரிவார். “நான் மழையில் நனைய ஆசைப்படுகிறேன், நான் அழுவது உலகுக்கு அப்பொழுதுதான் தெரியாது!” என்ற புகழ்பெற்ற வார்த்தைகளை உதிர்த்தார். திருமண வாழ்க்கையைப் பொறுத்தவரை 4 முறை திருமணம் செய்திருக்கிறார். 28 வயதில் முதன்முறை 16 வயது மில்ட்ரெட் 'ஹாரிசை' மணந்தார். இவர்களுக்குப் பிறந்த குழந்தை சிறு வயதிலேயே இறந்தும் போனது. இவர்களது திருமண வாழ்க்கை 1920-ம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. 35 வயதில் `தி கோல்ட் ரஷ்' திரைப்படத்திற்கு தயார் செய்து கொண்டிருந்த போது, 16 வயது லீடா க்ரே மீது காதல் கொண்டார். நவம்பர் 26 1924-ல் க்ரே கர்ப்பமான நிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு மகன்கள் பிறந்தனர். இவர்களது மண வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததது. இந்த கசப்பான விவாகரத்தினாலும் வருமான வரி சிக்கல்களாலும் மன அழுத்தத்திற்கு ஆளாகி மிகவும் பாதிக்கப்பட்டார் சாப்ளின். இவரது தலைமுடி நரைக்கத் துவங்கியது. மேலும் நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில் சாப்ளினைப் பற்றிய பல அந்தரங்கச் செய்திகள் இடம்பெற்றன. இவரை எதிர்த்து பிரச்சாரங்கள் நடைபெற்றன. சாப்ளினின் 47-வது வயதில் பாலட் கொடார்டை ஜூன் 1936-ல் ரகசியமாக மணமுடித்தார். சில வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தபின் இத்திருமணமும் விவாகரத்தில் முறிந்தது. இக்காலகட்டத்தில் நடிகை ஜோன் பேரியுடன் இவருக்கு உறவு ஏற்பட்டது. ஆனால், சாப்ளினை பேரி துன்புறுத்தியதால் மெதுவாக அவ்வுறவினை முடித்துக் கொண்டார். ஆனால் மே 1943-ம் ஆண்டு தனது குழந்தைக்கு சாப்ளினே தந்தை என்று வழக்கு தொடர்ந்தார். ரத்த பரிசோதனைகள் சாப்ளினை குற்றமற்றவர் என்று காட்டினாலும், அக்காலத்தில் ரத்த பரிசோதனைகள் நீதி மன்றங்களில் சாட்சிகளாக எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  1943 -ல் தனது 54-வது வயதில் ஓ நீல் என்ற 17 வயதுப் பெண்ணை மணந்தார்.  இத்திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் பல வருடங்கள் நீடித்தது. இவர்களுக்கு எட்டு குழந்தைகள் பிறந்தனர். சாப்ளின், 1977-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று தனது 88-வது வயதில் இறந்தார். இவரது உடலை வாட் நகரில் உள்ள கார்சியர்-சுர்-வெவே கல்லறையில் அடக்கம் செய்தார்கள். மார்ச் 1, 1978-ம் ஆண்டு இவரது உறவினர்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக இவரது உடல் கல்லறையிலிருந்து திருடப்பட்டது. ஆனால் இத்திட்டம் தோல்வியுற்று, திருடர்கள் பிடிபட்டனர். பதினொரு வாரங்களுக்குப் பின் ஜெனீவா ஆற்றின் அருகில் சாப்ளினின் உடலைக் கைப்பற்றினார்கள். சாப்ளினின் நினைவாக வேவேவில் அவரது சிலை ஒன்றை அமைத்துள்ளனர்.  ஆம். இந்த நாளில் நமக்கும் சிறகு முளைக்கட்டும்! உள்ளத்தில பலவிதமான காயங்கள் இருந்தாலும் அதையெல்லாம் மறைத்து ஊருக்கு ஆனந்தம் கொடுப்பதற்காக தன்னை வருத்திக் கொண்ட அந்த  நகைச்சுவை  ஜாம்பவானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உன் புகழினை இனி எத்தனை தலைமுறை வந்தாலும் பேசும்.  #சார்லி சாப்லின் பிறந்த தினம்
177 காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post