செய்திகள
92 Posts • 4K views
Makkal Mugam
560 views
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 #செய்திகள #செய்திகள் ஸ்ரீ புரம் ஸ்ரீ நாராயணி பீடம் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் நாராயணி பக்த சபா இணைந்து ஸ்ரீ சக்தி அம்மா அவர்களின் 50 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாமினை சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மாநகராட்சி மேயர் சுஜாதா நாராயணி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பாலாஜி நாராயணி பீடம் இயக்குனர் சுரேஷ் பாபு அறங்காவலர் குழு உறுப்பினர் சௌந்தரராஜன் நாராயணி பீடம் மேலாளர் சம்பத் ஆகியோர் உள்ளனர்
10 likes
14 shares
Makkal Mugam
6K views
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 #செய்திகள் #செய்திகள தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் வேலூர், டிச. 28- தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் புஷ்பம்மாள் ஞானசம்பந்த திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாநில கவுரவத் தலைவர் ராஜவேலு மாநில பொது செயலாளர் பாலாஜி சிங், சட்ட ஆலோசகர் பிரபாகர் ஆகியோர் முன்னிலையில் பொதுக்குழு நடைபெற்றது. பொதுக்குழுவில் தலைமை உரையாக மாநில கவுரவத் தலைவர் ராஜுவேல் அவர்கள் தமிழக அரசிடம் அனைத்து துறை பணியாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அதனை தொடர்ந்து மாவட்ட கௌரவ தலைவர் சம்பத், தாண்டாமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் பதினாறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசு பணியாளர்களுக்கு முன்பு போலவே பழைய ஓய்வுதம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்ய இந்த தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது. மத்திய அரசு போலவே மாநில அரசும் எட்டாவது ஊதிய குழு அமைத்து அதன்படி 1/1/ 2026 முதல் வழங்க தமிழக அரசை இந்த பொதுக்குழு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கின்றது. தமிழகத்தில் காலியாக உள்ள சுமார் 4 லட்சம் பணியிடங்களை நிரப்ப கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பேரூராட்சிகளில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களுக்கு தின கூலியாக ரூ.600 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டி கேட்டுக் கொள்கிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து சங்க நிர்வாகிகளும் அழைத்து பேசி அவர்களின் குறைகளை தீர்த்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறது. இந்த பொதுக்குழு முடிவில் மாவட்ட அமைப்பு செயலாளர் மதன்குமார் நன்றி உரையாற்றினார்.
68 likes
76 shares