அண்ணாமலையார் கிரிவலம்
70 Posts • 512K views
Mani Velayutham
633 views 25 days ago
எவ்வளவு நேரத்தில் கிரிவலம் வரவேண்டும்? 🔱கிரிவலத்தை எவ்வளவு நேரத்தில் முடிக்க வேண்டும் என்று சிவபெருமானே சொல்கிறார். பார்வதிதேவி சிவபெருமானின் உடலில் சரிபாதியை பெறுவதற்காக கடும் தவம் புரிந்தார். அதற்கு சிவன் எனது பிரமாண்ட வடிவத்தை (திருவண்ணாமலையை) அதிகாலையில் 2 நாழிகைக்குள் (அதாவது 48 நிமிடங்கள்) சுற்றி வந்தால், என்னில் சரி பாதியை வழங்குவேன் என்றார். 🌎அப்படியே செய்து சிவனின் சரிபாதியாக மாறினார் பார்வதிதேவி. தனக்கு அருள்புரிந்ததை போன்றே, கிரிவலம் வரும் அனைவருக்கும் அருள் வழங்க வேண்டும் என்றார். பார்வதி தேவியின் கோரிக்கைக்கு சம்மதித்தார். ☀பார்வதி தேவியை போல் நம்மால் 48 நிமிடங்களில் மலையை வலம் வரமுடியாது. திருவண்ணாமலை கிரிவலப் பாதை 14 கி.மீ. தூரம் கொண்டது. கிழக்கு கோபுரத்தில் துவங்கி, அதே இடத்தில் நிறைவு செய்ய வேண்டும். கிரிவலத்தை நிறைவு செய்ய 3 முதல் 4 மணி நேரம் ஆகும். 🌕சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு கிரிவலத்தை துவக்கி, சூரிய உதயத்திற்குள் நிறைவு செய்ய வேண்டும். ஆன்மிக அதிர்வலைகள் இரவில் அதிகம் என்பதால் அதுவே உகந்த நேரம். ஓம் நமசிவாய!🙏🙏🙏 | Bhagyam Channel | With Love Kalyan Jewellers #🙏கோவில் #⚡ஷேர்சாட் அப்டேட் #அண்ணாமலையார் கோவில்.. திருவண்ணாமலை கிரிவலம்.. #திருவண்ணாமலை கிரிவலம் #அண்ணாமலையார் கிரிவலம்
7 likes
7 shares