#நினைவு அஞ்சலி
நினைவஞ்சலி..!
கருவறையில் என்னை
சுமந்தவளே ..!
என் பசி அறிய
உடன் உண்டவளே ..!
என் உருவத்தின்
உண்மை வடிவமே ..!
பார்த்து, பார்த்து
எனை வளர்த்தவளே ..!
என் பசி யறிந்து
உணவை ருசியோடு
அன்பால் தந்தவளே ..!
என் உடம்புக்கு
ஒன்று என்றால்
உறங்காமல் இருந்தவளே..!
நீ இருந்தவரை நான்
மகனாக இல்லை..!
நான் மகனாக இருக்கும் போது
தாயாக நீ இல்லை ..!
தாயோடு வாழ்ந்த
வாழ்க்கை தான் வாழ்க்கை..!
தாயின்றி வாழ்வது
வெறுமையே..!
உனக்கு ஈடு இவ்
உலகில் ஏதுமில்லை..!
அம்மா..,
இனி ஒரு முறை
பிறப்பாயா. ?
என் தாயாக அல்ல,
என் சேயாக ..!
யுகங்கள் காத்திருப்பேன்
உனக்காக ..!
என்னை சுமந்த
உன்னை சுமப்பதற்காக..!