மதுரை திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்
37 Posts • 37K views
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் மலையிலுள்ள தீபத்தூணில் இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, அக்கோயிலின் செயல் அலுவலர் வி. சந்திரசேகர், செவ்வாய்க்கிழமை மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனு தமிழக அரசியலில் சூறாவளியை கிளப்பி உள்ளது. இந்த வழக்கில் பதிவான நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் விசாரிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு மேல்முறையீடு இந்த மனு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை இரண்டு நீதிபதிகள் அமர்வு விசாரணையை செய்து வருகிறது. நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணை தொடங்கி நடந்து வருகிறது. திருப்பரங்குன்றம் கோவில் விளக்கு வழக்கில் சிக்கந்தர் தர்கா சார்பாக முக்கியமான வாதம் வைக்கப்பட்டு உள்ளது. அதில், கோவில் நிர்வாகம் இல்லாமல் தனி நபர் அங்கே தீபம் ஏற்றுவது சரியல்ல. கோவில் நிர்வாகம் தீபம் ஏற்றாத போது தனி நபர் அங்கே தீபம் ஏற்றுவது சரியல்ல. கோவில் நிர்வாகமே அங்கே தீபம் ஏற்ற நினைக்கவில்லை. அப்படி இருக்க தனி நபர் எப்படி அங்கே செல்ல முடியும், என்று சிக்கந்தர் தர்கா வாதம் வைத்தது. இதற்கு நீதிபதிகள், கோவில் நிர்வாகம் செய்யவில்லை என்றால் மாற்று ஏற்பாடு செய்ய உரிமை உள்ளது, என்று கூறினர். தீபத்தூண் கோவிலை விட பழமையானதா? கோவிலை விட முக்கியமானதா? என்று நீதிபதிகள் இன்று கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கு தமிழக அரசு கொடுத்த பதில் கவனம் பெற்றுள்ளது. தீபத்தூண் கோவிலை விட பழமையானதா? கோவிலை விட முக்கியமானதா? என்று நீதிபதிகள் இன்று கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கு தமிழக அரசு அளித்த பதிலில், தீபத்தூண் பழமையானதா என்றெல்லாம் தெரியவில்லை.. ஆனால் அது வெறும் தூண், அவ்வளவுதான், கோவிலில் விளக்கு ஏற்றுவதே பாரம்பரியம் என்று அரசு தரப்பு பதில் அளித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு மதிக்கவில்லை! CISF-யை கைது செய்வோம்னு சொல்றாங்க! மனுதாரர் குற்றச்சாட்டு 100 ஆண்டுகள் வழக்கத்தை ஒரு நொடியில் மாற்ற சொல்லி இருக்கிறார் நீதிபதி. ஒரு இடத்தில ஒரு தீபம்தான் ஏற்ற முடியும், எல்லா இடங்களிலுமே ஏற்ற முடியும்? தீபத்தூணில் விளக்கு ஏற்றுவது கோவில் நிர்வாக கடமை என்றார் நீதிபதி, ஆனால் அது கட்டாயம் இல்லை என்றும் தமிழக அரசு வாதம் வைத்துள்ளது. திருப்பரங்குன்றம் வழக்கு பின்னணி நேற்று நடந்த மோதல் சம்பவங்களை நீதிபதி சுவாமிநாதன் பார்த்தாரா என்று தெரியவில்லை. நாங்கள் பயந்தது போல நடந்துவிட்டது. நீதிபதி சுவாமிநாதனின் செயல்பாடு நீதித்துறை வரம்பிற்கு அப்பாற்பட்டு உள்ளது; அதிகார வரம்பை மீறி தனி நீதிபதி சுவாமிநாதன் செயல்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது; அவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். நீதிபதி சுவாமிநாதன் உத்தரவால் தமிழ்நாட்டின் நல்லிணக்கம் பாதிப்பு - தமிழக அரசு பரபரப்பு வாதம் நீதிபதி உத்தரவால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. பேரிகார்டுகள் உடைக்கப்பட்டுள்ளன, காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், மதப்பிரச்னை ஏற்படும் நிலை உருவானது. உயர்நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு வழங்குவதே CISF-ன் பணி, அவர்களின் அதிகாரம் நீதிமன்ற எல்லைக்குள் மட்டுமே, அதைத்தாண்டி அல்ல. நீதிபதிகள் மாண்புடன் செயல்பட வேண்டும். நீதிபதிகள் சட்ட ஒழுங்கு விவகாரத்தில் தலையிட கூடாது. நீதிபதிகள் சட்ட ஒழுங்கை கையில் எடுக்க நினைக்க கூடாது. எதையுமே கருத்தில் கொள்ளாமல் நீதிபதி பிறப்பித்த உத்தரவால்தான் இந்த சிக்கல் ஏற்பட்டு உள்ளது. மனுதாரர் 10 நபர்களோடு இணைந்து தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி வழங்கியுள்ளார் நீதிபதி ஜி.எஸ்.சுவாமிநாதன். மனுதாரர் பெரும் கூட்டத்தோடு சென்று சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளார். அவர் மீதே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட வேண்டும், என்று வாதம் வைத்து உள்ளது. #📺டிசம்பர் 5 முக்கிய தகவல் 📢 #மதுரை திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்
6 likes
9 shares