📕கல்வி

📕கல்வி

3.7K உறுப்பினர்
8.2K போஸ்ட்
4.1M காட்சிகள்
📕கல்வி
GIF
https://youtu.be/akGj4pQfsrk #📕கல்வி
GIF
தொழிலாளர் மகள் நீட் தேர்வில் வெற்றி: மருத்துவக் கல்லூரி கட்டண செலவை ஏற்கிறேன் - தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு சென்னை,தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,நீட் தேர்வில் வெற்றி பெற்ற  சென்னை அனகாபுத்தூரை சேர்ந்த ஏழை தையல் தொழிலாளர் மகள்  மாணவி ஜீவிதாவின் விடாமுயற்சியை பாராட்டி அவருடைய மருத்துவ கல்லூரி கட்டண செலவை ஏற்றுக்கொள்கிறேன்.  ஏழை தையல் தொழிலாளர் மகளின் மருத்துவ கனவு நனவாகட்டும்...மாணவிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். #📕கல்வி
GIF
நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு! தமிழகத்தில் 48.57% பேர் தேர்ச்சி!!நீட் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் இதனை ntaneet.nic.in என்ற இணையதளத்தில் காணலாம். தொடர்ந்து மருத்துவக்கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களும் வழங்கப்படுகிறது ஹைலைட்ஸ்முதல் 50 இடங்களுக்குள் தமிழக மாணவ,மாணவிகள் ஒருவர் கூட இடம் பெறவில்லைஅதிகபட்சமாக டெல்லியில் 74.92% பேர் தேர்ச்சி நாடு முழுவதும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் இதனை ntaneet.nic.in என்ற இணையதளத்தில் காணலாம். ( NEET 2019: இன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு!) இந்தாண்டு மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மாதம் 5 தேதி நடைபெற்றது. ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மே 20ம் தேதி நடத்தப்பட்டது. மொத்தம் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் நீட் தேர்வை எழுதினர். இதற்காக மொத்தம் 154 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், நீட் தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான, www.ntaneet.nic.in என்ற பக்கத்தில் முடிவுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீட் தேர்வு எழுதியவர்களில் 74.92% மாணவ மாணவிகள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தமிழகத்தில் 48.57% பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக டெல்லியில் 74.92% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் 50 இடங்களுக்குள் தமிழக மாணவ,மாணவிகள் ஒருவர் கூட இடம் பெறவில்லை. 701 மதிப்பெண்களுடன் நளின் கந்தல்வால் என்ற ராஜஸ்தான் மாணவர் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். நீட் தேர்வின் முடிவுகளைப் பொறுத்தே மருத்துவப்படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், மருத்துவக்கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களும் வழங்கப்படுகிறது. இம்மாத இறுதியில் மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. ஆன்லைனில் நீட் தேர்வு முடிவுகள் பெறும் வழி முறை: படி 1: www.ntaneet.nic.in என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும் படி 2: விண்ணப்ப பதிவு எண்,பிறந்த தேதி, கடவுச் சொல் ஆகியவற்றை பயன்படுத்தி உள்நுழைய வேண்டும் படி 3: NEET 2019 Result என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும் படி 4: தேர்வு முடிவுகள் காட்டப்படும் படி 5: எதிர்காலத் தேவை கருதி தேர்வு முடிவை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும் #📕கல்வி
GIF
நீட் தேர்வு முடிவு நாளை வெளியீடு : தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் பார்க்கலாம் சென்னை, நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) முடிவின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இந்த தேர்வு கடந்த மாதம் (மே) 5-ந்தேதியும், 20-ந்தேதியும் நடைபெற்றது. இந்த நிலையில் நீட் தேர்வு முடிவு நாளை (புதன்கிழமை) வெளியிடப்பட இருக்கிறது. தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தேர்வர்கள் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #📕கல்வி
வேறேதும் போஸ்ட் இல்லை