உளவியல் சிந்தனை
#மாதவிடாய்_நாட்களில் #மனைவியிடம்_எப்படி #நடந்துக்_கொள்ள #வேண்டும்…???? மாதவிடாய் என்பது பெண்கள் வயதுக்கு வந்ததில் இருந்து நாற்பத்தைந்து அல்லது ஐம்பது வரை மாதாமாதம் வரக்கூடியது. மூன்றில் இருந்து ஐந்து நாட்கள் வரை இது நீடிக்கலாம். இந்த நாட்கள் பெண்களின் வாழ்க்கையில் மிகவும் வலி மிகுந்த நாட்களாகும். கணவனான நீங்கள் இம்மாதிரி சமயங்களில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று அவசியம் தெரிந்துக் கொள்ளுங்கள். மனைவி இம்மாதிரி சமயங்களில் கணவனிடம் அதிகமாக எதிர்பார்ப்பது என்ன தெரியுமா? #கணவனின்_அன்பும், #அதிக_அக்கறையும்_தான். மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு கோபம் சற்று அதிகமாகவே வரும். காரணம் அவர்கள் தாங்கிக் கொண்டிருக்கும் அந்த வலி. எனவே, மாதவிடாய் நாட்களில் மனைவி கோபப்பட்டால் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் வேண்டுமென்று அவ்வாறு கோபமடைவதில்லை. முடிந்தால் இந்த நாட்களில் உணவுகளை நீங்கள் சமைக்கவோ அல்லது அவர்களுக்கு உதவவோ செய்யலாம். அல்லது ஓட்டல்களில் வாங்கி வந்து சாப்பிடலாம். மாதவிடாய் நாட்களில் அவர்கள் வீட்டு வேலைகள் சரிவர செய்யவில்லை என கணவர்கள் கோபப்பட வேண்டாம். இது உடலளவில் சோர்ந்து போயிருக்கும் அவர்களின் மனதை மேலும் சோர்வடைய செய்யும். அந்த நாட்களில் பெண்களுக்கு இடுப்பு மிகவும் வலியெடுக்கும். கால் வீக்கம் சில பெண்களுக்கு இருக்கும். கணவன்மார்கள் மனைவியிடம் கேட்டு இதமாக பிடித்து விடலாம். பெண்கள் இம்மாதிரி நாட்களில் அதிகம் அலைய முடியாது என்பதால், மார்கெட் சென்று வருவது போன்ற வேலைகளை நீங்கள் செய்யலாம். வலி மிகுதியாக இருக்கிறதா என அவ்வப்போது கேட்பதால் மனைவியிடம் நீங்கள் காட்டும் அக்கறை தெரிய வரும். அவர்களுக்கு இது ஆறுதலாகவும் இருக்கும். இன்று நாம் இரண்டு பேறும் ஒன்றாக வெளியே போலாம் என்று பார்த்தேன், நல்ல நாள், நல்ல காரியம் இன்று போய் இப்படி மாதவிடாய் என்று கூறுகிறாயே… என பல வீடுகளில் ஆண்கள் கோபத்தில் திட்டுவது வழக்கம். மாதவிடாய் என்பது ஒவ்வொரு மாதமும் நடக்கும் இயற்கையான நிகழ்வு. இதை தடுக்க முடியாது. எனவே, ஏற்கனவே வலியில் இருக்கும் அவர்களை வார்த்தைகளால் துன்புறுத்துவதை தவிர்க்கவும். வீட்டிற்கு மாதாந்திர சாமான்கள் வாங்கும் போது மனைவியே மறந்து விட்டாலும், அவர்களுக்கு தேவையான நாப்கின்கள், டெட்டால் மற்றும் சோப்பு வகைகளை வாங்க நினைவுப்படுத்த வேண்டும். இதை படிப்பதுடன் நிறுத்தி விடாமல், வாழ்க்கையில் கடைப்பிடிப்பது அவசியமானதே!? பெண்களின் மனது பூ போலத்தான் அதில் வாசனை வருவதும் வாடிப்போவதும் ஆண்களின் கையில் தான் உள்ளது.
#

உளவியல் சிந்தனை

உளவியல் சிந்தனை - ShareChat
276 காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
போஸ்ட் இல்லை
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post