கோமாதா
33 Posts • 19K views
Guruji Dr Arun Raghavendar
569 views 3 months ago
#கோமாதா *புண்ணியம் தரும் கோமாதா வழிபாடு* பெற்ற தாய்க்கு ஈடாக கருதப்படும் ஒரே உயிரினம் பசு மட்டுமே. பசுவை வெறுமனே மாடு என்று அழைக்காமல், பசுத்தாய், கோமாதா என்று வணங்கி வருகிறோம். மிகச் சிறிய ஆலம் விதை பிரும்மாண்டமான ஆலமரத்தின் தன்மைகளை உள்ளடக்கியிருப்பது போல, ஒவ்வொரு பசுவும் அனைத்து தேவரின் ஒருமை வடிவமாகும். பசு பிரசவிக்கும்போது கன்றின் தலைதான் முதலில் வரும். இந்த நிலையில், இரண்டு தலைகள் கொண்ட பசுவை பார்ப்பதுபோல் இருக்கும். அதாவது முன்பக்கமும், பின்பக்கமும் தலைகள் இருப்பது போல் காணலாம். பசு இப்படிக் காட்சி தருவதை ‘உபயதோமுகி’ என்பர். இந்தக் காட்சியை தரிசிப்பது பெரும் புண்ணியம். இந்த தருணத்தில், பசுவை வலம் வந்து வணங்கினால், நமது சகல பாவங்களும் நீங்குவதுடன், ஈரேழு பதினான்கு உலகங்களிலும் உள்ள சகல தேவதைகளையும் தரிசித்த புண்ணியம் கிடைக்கும். திருமணத் தடை அகன்று விடும். நந்த சப்தமி (கார்த்திகை மாத வளர்பிறை சப்தமி திதி) அன்று பசுவை பூஜை செய்து வணங்கினால், சகல தேவதைகளின் அருள் கிடைக்கும். கன்றுக்கு பால் இல்லாமல், பசுவிடம் இருந்து பால் முழுவதையும் கறந்து விடுபவன், நரகத்தை அடைந்து வேதனையுறுவான். தவிர, மறுபிறவியிலும் மனிதனாகவே பிறந்து, பட்டினியுடனும் நீர் அருந்தவும் முடியாத நோயாளியாகவும் கிடந்து துன்பப்படுவான். நெற்றியில் குங்குமப் பொட்டு அளவுக்கு சுழியுடன் திகழும் பசுக்கள் வீட்டில் இருப்பது பெரும் பாக்கியம். அந்த வீட்டில் திருமணம், பிரசவம் போன்ற சுப காரியங்கள் அடிக்கடி நடைபெறும். ஆடி மாதத்தில் ரோகிணி நட்சத்திர நாளில் மேய்ச்சலுக்குச் சென்று திரும்பும் பசுக்களில், சிவப்பு நிற பசு ஒன்று முதலில் ஓடி வந்து தொழுவத்தில் நுழைந்தால் அந்த வருடம் அதிகம் மழை பொழியும் என்பது ஐதீகம். வீட்டில் பசு இருப்பதால், ஐஸ்வர்யம் பெருகும். பசு மாட்டை விற்பதாக இருந்தால், அதை, கட்டி இருக்கும் தாம்புக் கயிற்றுடன் கொடுக்கக் கூடாது. கயிற்றை நாம் வைத்துக் கொண்டு பசுவை மட்டுமே கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான், வேறு பசுக்கள் உடனடியாக நம் இல்லம் வந்து சேரும் என்பது நம்பிக்கை. அப்பர் தேவாரத்தில் "ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல்" என்று பாடுகிறார். "ஆ" என்றால் பசு; "அஞ்சாடுதல்" என்றால் "பஞ்சகவ்யத்தால் அபிஷேகம் செய்தல்" என்று பொருள். "பஞ்சகவ்யம்" என்பது பசுவிடமிருந்து உண்டாகும் - பால் - தயிர் - நெய் - கோமியம் (பசுவின் ஜலம்) - கோமயம் (பசுஞ்சாணம்) என்னும் ஐந்து பொருள்களும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் சேர்ந்த கலவையே "பஞ்சகவ்யம்" எனப்படும். இதுதவிர, - பால் அபிஷேகம் - தயிர் அபிஷேகம் - நெய் அபிஷேகம் என்று தனித்தனியாகவும் சிவபெருமானுக்குச் செய்வதும் உண்டு. திருவையாறு அருகிலுள்ள "தில்லை ஸ்தானம்" என்னும் தலத்தில் இருக்கும் பெருமானுக்கு நெய் அபிஷேகம் சிறப்பாகும். தில்லை ஸ்தானம் என்னும் இத்தலம் தேவாரத்தில் திருநெய்த்தானம் என்று குறிக்கப்பட்டுள்ளது. பஞ்சகவ்யத்தால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது பசுக்குலத்திற்கே பெருமை என்று அப்பர் குறிப்பிடுகிறார். பால் அபிஷேகத்தை "கோசிருங்கம்" எனப்படும் பசுக் கொம்பினால் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும். பசுவை முன்புறமாக தரிசிப்பதை விட, பின்புறம் தரிசனம் செய்வது மிகவும் நன்மை தரும். பசுவை வணங்கும்போது முன்நெற்றி மற்றும் வால் பகுதியில் சந்தனம், குங்குமம் வைத்து, மலர் அணிவித்து வழிபட வேண்டும். பசுவின் சாணமும் லட்சுமி அம்சமாகும். எனவேதான், அதிகாலையில் சாணத்தை வீட்டு வாசலில் தெளிக்கிறார்கள். பசுவுக்கு பூஜை செய்வது பராசக்திக்கு பூஜை செய்வதற்குச் சமமாகும். பிரம்மா, விஷ்ணு, சிவன் முதலான மும்மூர்த்திகளின் மேலதிகாரியாக "சதாசிவம்" என்றொரு தெய்வம் உண்டு. சதாசிவத்திற்கும் மேலதிகாரியாக "திருமூர்த்தி" இருக்கிறார். இவர்களுக்கும் மேலாக 10 வயது சிறுமியாக "மனோன்மணி" என்ற ஆதிபரப்பிரம்ம சக்தி இருக்கிறாள். இவளே இந்த பிரபஞ்சம், உலகம், உயிர்கள் என அனைத்தையும் படைத்து, காத்து, ரட்சிப்பவளாக இருக்கிறாள். இவளின் எளிய அம்சமாக பசு என்ற கோமாதா, நம்முடன் வாழ்ந்து வருகிறாள். இதனாலேயே, முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும், அஷ்ட வசுக்களும், நவக்கிரகங்களும் பசுவின் உடலில் ஆட்சி செய்கின்றன. கோமாதா பூஜையை அனைவரும் செய்யலாம். எந்த ஜாதி, மதம், மொழியும் தடையாக இராது. உருவ வழிபாடு இல்லை என சொல்லும் மதத்தினர் கூட, கோமாதா பூஜையை மாதம் தோறும் செய்து செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வருகிறார்கள். கோபூஜையை செய்வதால், பணக் கஷ்டம் நீங்கிவிடும். குழந்தை பாக்கியம் உண்டாகும். கெட்ட சக்திகள் நெருங்காது. முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கிவிடும். நீண்ட கால மனக் குறைகள் நீங்கிவிடும். * 💐 * 💐 * #2025_August_20 -Panchangam-and-Planetary-position * 💐 * 💐 * 💐 * 💐 * Follow the Sri Maha Ruthra Pathrakaali Sakthi Peedam, Mambakkam Main Rd, Chennai, Cell : 9543916364, 9176185316 channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Vb6cYVv9cDDVG3aspl3t இணையுங்கள்... ஆன்மீக தகவல்கள் மற்றும் ஜோதிடம் சார்ந்த தகவல்கள்... 🙏 .
ShareChat QR Code
Download ShareChat App
Get it on Google Play Download on the App Store
12 likes
7 shares