இதுதான் இஸ்லாம்
#

இதுதான் இஸ்லாம்

💞#திருக்குர்ஆன்_ஓதுவோம்💞 السلام عليكم ورحمة الله وبركاته கீழ்கண்ட திருக்குர்ஆன் வசனங்களை ஓதியதும் கமெண்டில் (Y) #DONE என பதியுங்கள்.. ✉ (  بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ ) تَبٰرَكَ الَّذِىْ بِيَدِهِ الْمُلْكُ وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرُۙ‏  எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான்; மேலும், அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன். (அல்குர்ஆன் : 67:1) اۨلَّذِىْ خَلَقَ الْمَوْتَ وَالْحَيٰوةَ لِيَبْلُوَكُمْ اَيُّكُمْ اَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيْزُ الْغَفُوْرُۙ‏  உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (அல்குர்ஆன் : 67:2) الَّذِىْ خَلَقَ سَبْعَ سَمٰوٰتٍ طِبَاقًا‌ مَا تَرٰى فِىْ خَلْقِ الرَّحْمٰنِ مِنْ تَفٰوُتٍ‌ فَارْجِعِ الْبَصَرَۙ هَلْ تَرٰى مِنْ فُطُوْرٍ‏  அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காக படைத்தான்; (மனிதனே) அர்ரஹ்மானின் படைப்பில் குறையை நீர் காணமாட்டீர்; பின்னும் (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார்! (அவ்வானங்களில்) ஏதாவது ஓர் பிளவை காண்கிறாயா? (அல்குர்ஆன் : 67:3) ثُمَّ ارْجِعِ الْبَصَرَ كَرَّتَيْنِ يَنْقَلِبْ اِلَيْكَ الْبَصَرُ خَاسِئًا وَّهُوَ حَسِيْرٌ‏  பின்னர் இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார்; உன் பார்வை களைத்து, மழுங்கிச் சிறுமையடைந்து உன்னிடம் திரும்பும். (அல்குர்ஆன் : 67:4) وَلَـقَدْ زَيَّـنَّا السَّمَآءَ الدُّنْيَا بِمَصَابِيْحَ وَجَعَلْنٰهَا رُجُوْمًا لِّلشَّيٰطِيْنِ‌ وَاَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيْرِ‏  அன்றியும், திட்டமாக நாமே (பூமிக்குச்) சமீபமாக இருக்கும் வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கின்றோம்; இன்னும், அவற்றை ஷைத்தான்களை (வெருட்டும்) எறி கற்களாகவும் நாம் ஆக்கினோம்; அன்றியும் அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றோம். (அல்குர்ஆன் : 67:5) وَلِلَّذِيْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ‌ وَبِئْسَ الْمَصِيْرُ‏  இன்னும், எவர்கள் தங்கள் இறைவனை நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்கு நரக வேதனை உண்டு; (அது) மிகக் கெட்ட மீளுமிடமாகும். (அல்குர்ஆன் : 67:6) اِذَاۤ اُلْقُوْا فِيْهَا سَمِعُوْا لَهَا شَهِيْقًا وَّهِىَ تَفُوْرُۙ‏  அதில் அவர்கள் போடப்படுவார்களாயின், அது கொதிக்கும் நிலை (கழுதையின் பெருங்குரலைப் போல்) அருவருப்பான சப்தம் உண்டாவதை அவர்கள் கேட்பார்கள். (அல்குர்ஆன் : 67:7) تَكَادُ تَمَيَّزُ مِنَ الْغَيْظِ‌ كُلَّمَاۤ اُلْقِىَ فِيْهَا فَوْجٌ سَاَلَهُمْ خَزَنَـتُهَاۤ اَلَمْ يَاْتِكُمْ نَذِيْرٌ‏  அது கோபத்தால் வெடித்து விடவும் நெருங்குகிறது; அதில் ஒவ்வொரு கூட்டமும் போடப்படும் போதெல்லாம், “அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?” என்று அதன் காவலாளிகள் அவர்களைக் கேட்பார்கள். (அல்குர்ஆன் : 67:8) قَالُوْا بَلٰى قَدْ جَآءَنَا نَذِيْرٌ  ۙ فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللّٰهُ مِنْ شَىْءٍ اِنْ اَنْتُمْ اِلَّا فِىْ ضَلٰلٍ كَبِيْرٍ‏  அதற்கவர்கள் கூறுவார்கள்: “ஆம்! அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் திட்டமாக எங்களிடம் வந்தார்; ஆனால் நாங்கள் (அவரைப்) பொய்ப்பித்து, “அல்லாஹ் யாதொன்றையும் இறக்கவில்லை; நீங்கள் பெரும் வழிகேட்டில் அல்லாமல் வேறில்லை” என்று சொன்னோம்.” (அல்குர்ஆன் : 67:9) وَقَالُوْا لَوْ كُنَّا نَسْمَعُ اَوْ نَعْقِلُ مَا كُنَّا فِىْۤ اَصْحٰبِ السَّعِيْرِ‏  இன்னும் அவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் (அவர் போதனையைச்) செவியுற்றோ அல்லது சிந்தித்தோ இருந்திருந்தோமானால் நாங்கள் நரகவாசிகளில் இருந்திருக்க மாட்டோம்.” (அல்குர்ஆன் : 67:10) فَاعْتَرَفُوْا بِذَنْبِهِمْ‌ فَسُحْقًا لِّاَصْحٰبِ السَّعِيْرِ‏  (இவ்வாறு) தங்கள் பாவங்களை அவர்கள் ஒப்புக் கொள்வார்கள் - எனவே, இந்நரகவாசிகளுக்குக் கேடுதான். (அல்குர்ஆன் : 67:11) إِنَّ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُم بِالْغَيْبِ لَهُم مَّغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ தனிமையில் தமது இறைவனை அஞ்சுவோருக்கு மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு. (திருக்குர்ஆன் 67:12) #இதுதான் இஸ்லாம்
92 காட்சிகள்
10 மணி நேரத்துக்கு முன்
#

இதுதான் இஸ்லாம்

💞#திருக்குர்ஆன்_ஓதுவோம்💞 கீழ்கண்ட திருக்குர்ஆன் வசனங்களை ஓதியதும் கமெண்டில் (Y) #DONE என பதியுங்கள்.. ✉ ( بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ ) 109:1 قُلْ يٰۤاَيُّهَا الْكٰفِرُوْنَۙ‏ 109:2 لَاۤ اَعْبُدُ مَا تَعْبُدُوْنَۙ‏ 109:3 وَلَاۤ اَنْـتُمْ عٰبِدُوْنَ مَاۤ اَعْبُدُ‌ ۚ‏ 109:4 وَلَاۤ اَنَا عَابِدٌ مَّا عَبَدْتُّمْۙ‏ 109:5 وَ لَاۤ اَنْـتُمْ عٰبِدُوْنَ مَاۤ اَعْبُدُ ؕ‏ 109:6 لَـكُمْ دِيْنُكُمْ وَلِىَ دِيْنِ‏ 109:1, 2, 3, 4, 5, 6. (ஏகஇறைவனை) மறுப்பவர்களே!'' நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு'' எனக் கூறுவீராக! #இதுதான் இஸ்லாம்
126 காட்சிகள்
3 நாள் முன்
#

இதுதான் இஸ்லாம்

💞#திருக்குர்ஆன்_ஓதுவோம்💞 கீழ்கண்ட திருக்குர்ஆன் வசனங்களை ஓதியதும் கமெண்டில் (Y) #DONE என பதியுங்கள்.. ✉ ( بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ ) 92:1 وَالَّيْلِ اِذَا يَغْشٰىۙ‏ 92:1. மூடிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக! 92:2 وَالنَّهَارِ اِذَا تَجَلّٰىۙ‏ 92:2. பிரகாசிக்கும் பகல் மீது சத்தியமாக! 92:3 وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْاُنْثٰٓىۙ‏ 92:3. ஆணையும், பெண்ணையும் அவன் படைத்திருப்பதன் மீது சத்தியமாக! 92:4 اِنَّ سَعْيَكُمْ لَشَتّٰىؕ‏ 92:4. உங்கள் முயற்சி பலதரப்பட்டதாக உள்ளது. 92:5 فَاَمَّا مَنْ اَعْطٰى وَاتَّقٰىۙ‏ 92:6 وَصَدَّقَ بِالْحُسْنٰىۙ‏ 92:7 فَسَنُيَسِّرُهٗ لِلْيُسْرٰىؕ‏ 92:5, 6, 7. யார் (பிறருக்கு) வழங்கி (இறைவனை) அஞ்சி, நல்லவற்றை உண்மைப்படுத்துகிறாரோ அவருக்கு வசதிக்குரிய வழியை எளிதாக்குவோம். 92:8 وَاَمَّا مَنْۢ بَخِلَ وَاسْتَغْنٰىۙ‏ 92:9 وَكَذَّبَ بِالْحُسْنٰىۙ‏ 92:10 فَسَنُيَسِّرُهٗ لِلْعُسْرٰىؕ‏ 92:8, 9, 10. யார் கஞ்சத்தனம் செய்து, தேவையற்றவராகத் தன்னை கருதி, நல்லதை நம்ப மறுக்கிறாரோ, சிரமமானதற்கு அவருக்கு வழியை ஏற்படுத்துவோம். 92:11 وَمَا يُغْنِىْ عَنْهُ مَالُهٗۤ اِذَا تَرَدّٰىؕ‏ 92:11. அவன் விழும்போது அவனது செல்வம் அவனைக் காக்காது. 92:12 اِنَّ عَلَيْنَا لَـلْهُدٰىۖ‏ 92:12. நேர்வழி நம்மைச் சேர்ந்தது. 92:13 وَاِنَّ لَـنَا لَـلْاٰخِرَةَ وَالْاُوْلٰى‏ 92:13. மறுமையும், இம்மையும் நமக்கே உரியது. 92:14 فَاَنْذَرْتُكُمْ نَارًا تَلَظّٰى‌ۚ‏ 92:14. கொழுந்து விட்டு எரியும் நெருப்பை உங்களுக்கு எச்சரிக்கிறேன். 92:15 لَا يَصْلٰٮهَاۤ اِلَّا الْاَشْقَىۙ‏ 92:15. துர்பாக்கியசாலியைத் தவிர யாரும் அதில் கருக மாட்டார்கள். 92:16 الَّذِىْ كَذَّبَ وَتَوَلّٰىؕ‏ 92:16. அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்தவன். 92:17 وَسَيُجَنَّبُهَا الْاَتْقَىۙ‏ 92:17. இறையச்சமுடையவர் அதிலிருந்து விலக்கப்படுவார். 92:18 الَّذِىْ يُؤْتِىْ مَالَهٗ يَتَزَكّٰى‌ۚ‏ 92:18. அவர் தனது செல்வத்தை வழங்கி தூய்மையடைந்தவர். 92:19 وَمَا لِاَحَدٍ عِنْدَهٗ مِنْ نِّعْمَةٍ تُجْزٰٓىۙ‏ 92:20 اِلَّا ابْتِغَآءَ وَجْهِ رَبِّهِ الْاَعْلٰى‌ۚ‏ 92:19, 20. மிக உயர்ந்த தன் இறைவனின் முகத்தைத் தேடுவது தவிர திருப்பிச் செலுத்தப்படும் எந்த நன்றிக் கடனும் எவரிடமும் அவருக்கு இருக்காது. 92:21 وَلَسَوْفَ يَرْضٰى‏ 92:21. பின்னர் அவர் திருப்தியடைவார். #இதுதான் இஸ்லாம்
141 காட்சிகள்
6 நாள் முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post