அமெரிக்காவை அச்சுறுத்தும் அதிபயங்கர புயல் ஃபுளோரன்ஸ்

அமெரிக்காவை அச்சுறுத்தும் அதிபயங்கர புயல் ஃபுளோரன்ஸ்

"200 கிமீ வேகத்தில், பிலிப்பைன்ஸ் நாட்டை அச்சுறுத்தும் இயற்கையின் தாக்குதல்...!" ------------------- "வினை விதைத்தவன் வினை அறுப்பான்" என்கிற நீதி இயற்கைக்கு தெரியாது போலிருக்கிறது. காலநிலை மாற்றத்திற்கு முதல் காரணமான அமெரிக்காவை புளோரன்ஸ் சூறாவளி தாக்கி, வெள்ளப் பெருக்கையும் மின்வெட்டையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், காலநிலை மாற்றத்திற்கு எந்தவகையிலும் காரணமில்லாத பிலிப்பைன்ஸ் நாட்டை, அதை இருமடங்கு பெரிதான மங்கூட் சூறாவளி இன்னும் சில மணி நேரத்தில் தாக்க இருக்கிறது. 700 கிலோமீட்டர் பரப்பளவில் 200 கிலோமீட்டர் வேகத்தில் இந்த புயல் பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது. பணக்கார நாடுகள் செய்த காலநிலை குற்றத்திற்கான தண்டனையை, ஏழை நாடுகள் எதிர்கொள்கின்றன. "தினை விதைத்தவன் வினை அறுப்பான்" என்கிற புதுமொழியை இயற்கை உருவாக்கியிருக்கிறது! ஐநா காலநிலை பணித்திட்ட பேரவை (UNFCCC) அமைப்பின் கீழ், காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் பேச்சுவார்த்தை கடந்த 24 ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. ஆனால், இதுவரை உருப்படியான நடவடிக்கை எதனையும் மேற்கொள்ள - பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களும் அமெரிக்க நாடும் - வழிவிடவே இல்லை. டைட்டானிக் மூழ்கும் போது அடித்தளத்தில் இருந்த ஏழைகள் தான் முதலில் மூழ்கினர். அதே நேரத்தில் மேல்தளத்தில் இருந்த பணக்காரர்கள் மூழ்கும் காலம் வராமல் போகவில்லை. பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு இன்று நடப்பது, அமெரிக்காவுக்கும் நடக்கும் காலம் வராமல் போகாது... ----------------- பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கவுள்ள மங்கூட் புயலின் செயற்கைக்கோள் படம்.
#

அமெரிக்காவை அச்சுறுத்தும் அதிபயங்கர புயல் ஃபுளோரன்ஸ்

அமெரிக்காவை அச்சுறுத்தும் அதிபயங்கர புயல் ஃபுளோரன்ஸ் - ShareChat
264 views
5 months ago
Share on other apps
Facebook
WhatsApp
Copy Link
Delete
Embed
I want to report this post because this post is...
Embed Post