அக்கா 💖 தம்பி
உரிமையாய் உறவாடும் என் உயிரின் வரவு நீ , என் உடன்பிறவாத உன்னத உறவும் நீ ! தங்கையும் இன்றி , தமக்கையும் இன்றி தன்னந்தனியாய் தரணியில் நின்றேன் , உடன் பிறப்பென்று ஆண் ஒன்று உண்டு . உன் போல் உறவாய் ஒருவரும் இல்லை. சிரிப்பழகி திகட்டாமல் பேசிடுவாள் . முத்துப்பல் புன்னகையால் முழு அன்பினையும் காட்டிடுவாள் . சின்ன சின்ன தீம் சொற்கள் தென்றலாய் வீசிடுவாள் , கள்ளமில்லா அன்பு என்றால் என்னவென்று நான் அறிந்தேன் . கள்ளி அவள் அன்பினிலே கற்கண்டாய் நான் கரைநேதேன் ! அக்கா என நான் அழைக்க அழைப்புகண்டு மகிழ்ந்திடுவாள் , தவறுகள் நான் செய்தாலும் தண்டனைகள் தரமாட்டாள் , தரமான போதனையால் என் தவறினையும் திருத்திடுவாள் ... உயர உயர நான் செல்ல உளமார வாழ்திடுவாள் , என்னில் ஊரு ஏதும் நேர்ந்துவிட்டால் அவள் உள்ளத்தால் உருகிடுவாள் ... நிலவொளியின் நிறம்கூட நிமிடத்தில் மாறிடலாம் , நிஜமான நின் அன்பு நீளும் என்றும் குறையாதே .. தன்னம்பிக்கை தந்திடுவாள் தங்கமான தமக்கை அவள் , உனை ஒப்பிட்டு கவிதை சொல்ல இப்பூவுலகில் எவரும் இல்லை , என் வரிகளுக்கு வலிமை தரும் கலைமகளே நீ என்பேன் ! தமிழ் தாயின் செல்ல புத்திரியே , உன் இல்வாழ்வு இனிதாக இந்த இளையவனின் பிரார்த்தனைகள் ... மறுஜென்மம் ஒன்றிருந்தால் உன் உடன்பிறப்பாய் வரவேண்டும் ...
#

அக்கா 💖 தம்பி

அக்கா 💖 தம்பி - ShareChat
1.2k காட்சிகள்
2 மாசத்திற்கு முன்
போஸ்ட் இல்லை
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post