RIP-கலைஞர் கருணாநிதி
#

RIP-கலைஞர் கருணாநிதி

1k காட்சிகள்
24 நாள் முன்
#

RIP-கலைஞர் கருணாநிதி

918 காட்சிகள்
24 நாள் முன்
#

RIP-கலைஞர் கருணாநிதி

சூழ்ச்சியை சூழ்ச்சியால் வென்றவர் கலைஞர்- கலைஞருக்கு தெரியும்.. விவேகானந்தரை குமரிமுனையில் இருந்து அப்புறப்படுத்த முடியாது என்று. அதனால் தான் வள்ளுவனை வானுயர நிறுவினார். கலைஞருக்கு தெரியும்... வால்மீகி ராமாயண உபநிடங்களை நிறுத்த சொல்ல முடியாது என்று.. அதனால்தான், கம்ப ராமாயணத்தை முன்னிலை படுத்தினார். கலைஞருக்கு தெரியும்.. சீதையின் செயலை விமர்சிக்க முடியாது என்று... அதனால் தான், கண்ணகியின் வீரத்தை முன்னிலை படுத்தினார். கலைஞருக்கு தெரியும்.. மகாபாரதத்தை தடுக்க முடியாது என்று.. அதனால் தான், சிலப்பதிகாரத்தை வெகுஜனப்படுத்தினார். இது போல, சரியற்ற, தேவையற்ற ஒன்றை அப்புறப்படுத்த, அதை விட சரியான ஒன்றை கொண்டு வந்தார். ஏறத்தாழ, 70 ஆண்டுகள், ஆரியத்திற்கு இது போன்று ஊமைக்குத்துக்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்தார். அவர்களால், வெளியே சொல்லவும் முடியவில்லை. உள்ளே மெல்லவும் முடிய வில்லை. அவர்களுக்கு தெரியும்.. கலைஞரை ஏன் எதிர்க்க வேண்டும் என்று. கலைஞருக்கும் தெரியும்.. அவர்கள் ஏன் தன்னை எதிர்க்கிறார்கள் என்று. புரிந்தவர்கள் கலைஞர் பின் நின்றார்கள். ஆனால், புரியாத பலர் ஊழல், ஈழம் என்று கட்டுக்கதைகளில் மூழ்கினார்கள். எதிர்மறை அரசியலை நேர் மறையாக செய்தவர் கலைஞர். கலைஞர் என்ற பட்டத்திற்கு 100 சதம் பொறுத்தமானவர்.
530 காட்சிகள்
10 மாசத்திற்கு முன்
#

RIP-கலைஞர் கருணாநிதி

https://sharechat.com/post/ll1OWv7 கலைஞர் 95 1. பிறப்பு : 1924 ஜுன் 3ஆம் தேதி 2. தந்தை : முத்துவேல் 3. தாயார் : அஞ்சுகம் 4. சகோதரிகள் : சண்முகசுந்தரம், பெரியநாயகி 5. இடம் : திருக்குவளை கிராமம், திருவாரூரில்இருந்து 15 மைல் தொலைவில் 6. தந்தையின்முதல்மனைவி : குஞ்சம்மாள் 7. இரண்டாம்மனைவி : வேதம்மாள் 8. மூன்றாவதுமனைவி : அஞ்சுகம் 9. கலைஞரின் முதல்மனைவி :பத்மா (திருமணம் 1944 செப்டம்பர் 13. காலமானது 1948). இவர் இசைச் சக்ரவர்த்தி சி. எஸ். ஜெயராமனின் சகோதரி. 10. இரண்டாம் மனைவி : தயாளுஅம்மாள் (1948 செப்டம்பர் 15) 11. மூன்றாம் மனைவி : ராஜாத்திஅம்மாள் (திருமணம் 1966) 12. பிள்ளைகள் :மு.க. முத்து, முதல்மனைவிக்குப் பிறந்தவர். 13. ஸ்டாலின், அழகிரி, செல்வி, தமிழரசு(தயாளு அம்மாவுக்குப் பிறந்தவர்கள்) 14. கனிமொழி (ராஜாத்தி அம்மாள்) 15. அவருடைய பெற்றோர் மிகவும் எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர்கள். அவரது தாயார் ஓர் ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர்; வறுமையின் காரணமாக அவரது இளமைக் காலத்தில், ஒரு கோவிலில் நடனக் கலைஞராக இருந்தார். 16. கலைஞரின் இயற்பெயர் ‘தட்ஷிணாமூர்த்தி’, பின்னர் அவர் தனது பெயரை ‘முத்துவேல் கருணாநிதி’ என்... *See more* at https://sharechat.com/post/ll1OWv7
1.1k காட்சிகள்
10 மாசத்திற்கு முன்
#

RIP-கலைஞர் கருணாநிதி

அன்று கா்மவீரா் காமராசருக்கு மொினாவில் இடம் தராத கருணாநிதிக்கு இன்று மொினாவில் இடம் தரக்கூடாது என்று கலைஞர் மீதான வன்மத்தில் *பொய்யான செய்தியை* சமூக வலைத்தளங்களில் இரு நாட்களாகப் பதிவிட்டு வருகிறார் கள். உண்மையில் கலைஞர் கருமவீரருக்கு மெரினாவில் இடம் தர மறுத்தாரா? அரசியலில் எதிரெதிர் துருவமாக இருந்தாலும் எதிர்த்து அரசியல் செய்தாலும் கலைஞர் காமராசர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். அதற்குக் கீழ் காணும் வரலாற்று நிகழ்வுகளே சாட்சி... காமராசர் மறைந்த அன்று அப்போது காங்கிரசுக் கட்சியின் தலைவர்கள், தேனாம்பேட்டை காங்கிரசு அலுவலகத்திலேயே காமராசர் உடலைப் பொதுமக்கள் பார்வைக்கு வைத்து, மற்ற சடங்குகளையும் அங்கேயே நடத்தத் திட்டமிட்டனர். முதல்வர் கருணாநிதியின் காதுகளுக்கு இந்தச் செய்தி போனது. கொதித்து விட்டார் அவர். “காமராசர் ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல. இந்த தேசத்தின் சொத்து, அவரது உடலை ராஜாஜி அரங்கில் வைத்து அரசு முறைப்படி தான் அடக்கம் செய்ய வேண்டும்" என்றார். அப்போது குறுக்கிட்ட அதிகாரி ஒருவர், காமராசர் அப்போது எந்தப் பொறுப்பிலும் இல்லாததைச் சொல்லி, சில சட்டச் சிக்கல்களைத் தெரிவித்ததோடு, மத்திய அரசிடம் அனுமதி பெறவேண்டிய சட்டவிதியை எடுத்துச் சொன்னார். மீண்டும் கோபத்துடன் குறுக்கிட்ட கருணாநிதி, " நான் சொன்னதைச் செய்யுங்கள்... காமராசருக்கு இறுதி மரியாதை செய்வதற்கு நாம் யாரிடமும் போய் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை" என்று கண்டிப்புடன் கூறினார். கிண்டியில் காமராசர் நினைவிடம் அமைந்த அந்தப் பகுதி தேர்வு செய்யப்பட்டதன் காரணமே காந்தியாரின் தீவிர பக்தரான அவர் இறந்ததும் காந்தி பிறந்தநாள் அன்றே.. அந்த தீவிர காந்தியின் பக்தரான காமராசருக்கு காந்தி மண்டபம் அருகிலேயே நினைவிடம் தேர்வுசெய்யப்பட்டு அவரது உடலை அந்த இடத்தில் தான் அடக்கம் செய்து நினைவிடம் அமைத்தனர். அப்போது அந்த இடம் மிகவும் புதர்கள் அடைந்து கிடந்ததால் அதை சுத்தம் செய்தனர். அப்போது முதல்வராக இருந்த கலைஞரும் அதில் ஈடுபட்டு, வேட்டியை மடித்துக் கட்டி, தலையில் துண்டை தலைப்பாகை போல கட்டிக் கொண்டு சுத்தம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குமரிக் கடற்கரையில், காமராசருக்கு, ஏற்றமிகு மணி மண்டபம் அமைத்தது கலைஞர். இங்குக் காமராசரின் மார்பளவுச் சிலையும் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்குக் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன. சென்னைக் கடற்கரை சாலையைக் காமராசர் சாலை எனப் பெயர் மாற்றியது கலைஞர் ஆட்சிக்காலத்தில்.. மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையம் காமராசர் பெயர் தாங்கி நிற்பதற்குக் காரணம் கலைஞர் ஆட்சி.. விருதுநகரில் காமராசர் பிறந்த இல்லத்தை நினைவகம் ஆக்கியது கலைஞர் ஆட்சியில்.. காமராசர் பிறந்த நாளைத் தமிழகமெங்கும் நினைவுகூர்ந்திடும் வகையில் “கல்வி வளர்ச்சி நாள்” என்ற பெயரில் அனைத்துக் கல்விக் கூடங்களிலும் கொண்டாட வேண்டுமென்று அறிவித்து, அதனை அடுத்து வருகின்ற ஆட்சியினர் மாற்றி விடக் கூடாதே என்பதற்காகவே சட்டமாகவே இயற்றியது கலைஞர்... தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்திற்கு காமராசரின் தாயார் பெயர் நினைவில் நிலைத்திருக்கும் வகையில் “அன்னை சிவகாமி அம்மையார் வளாகம்” என்று பெயர் சூட்டியதும், அரசின் “பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்”திற்கு சிவகாமி அம்மையார் பெயரைச் சூட்டி அதை நடைமுறைப் படுத்தியதும் கலைஞர் ஆட்சியில்... எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் காமராசரின் படம் வைக்கப்பட்டது. அந்தப் படத்துக்குக் கீழே எந்தப் பொன்மொழி இடம்பெற வேண்டும் என்பதைக் கருணாநிதியிடம் கேட்டார் எம்ஜிஆர். அவரது ஆலோசனைக்கேற்ப ‘உழைப்பே உயர்வு தரும்’ என்ற பொன்மொழியைப் பொறித்தார் முதல்வர் எம்ஜிஆர். முதல்வர் கருணாநிதி தனது மகன் ஸ்டாலின் திருமணத்துக்கு வருமாறு காமராசருக்கு அழைப்பு விடுத்தார். அப்போது காமராசருக்கு உடல்நிலை சரியில்லை. ஆனாலும், காமராசரின் வருகை அவசியம் என்று கருதிய கருணாநிதி, அண்ணா சாலையில் உள்ள உம்மிடி பத்மாவதி திருமண அரங்கில், மணமக்கள் அமரும் மேடை வரைக்கும் கார் வருவதற்குத் தோதாகச் சிறப்புவழி ஏற்பாடு செய்தார். அதனை ஏற்று, காரிலேயே மேடை வரை வந்து மணமக்களை வாழ்த்திப் பேசினார் காமராசர்.
4.2k காட்சிகள்
10 மாசத்திற்கு முன்
#

RIP-கலைஞர் கருணாநிதி

🌎🌎உலகமெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் அதனை நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த வணக்கங்கள்.....🙏🙏கலைஞர் அவர்களின் மரணம் என்னை மட்டும் கிடையது அனைவரையும் மூழ்கச் செய்துள்ளது....😔😔அவருக்கு கண்ணிர் 💦 💦 அஞ்சலி செலுத்த விரும்பினால் இதை பரப்புங்கள் நண்பர்களே....🙏🙏கவி கலைஞருக்கு கவி பாட கண்ணிர் உடனா காலனின் கட்ட விழத்து வந்த உன்னை கடவுள் அழைத்த நேரம் இது ஓ.... காவேரியில் மீட்டு எடுத்த உன் உயிர் காவேரியில் விரிய கரை புரண்ட காவேரி நீரும் கண்ணிரின் ப்ரதிபலிபாய் மஞ்சள் துண்டு அ‌ணி‌ந்த உன்னை மஞ்சகமலை தூற்றியாதெ கலைஞர் என பெயர் பெற்ற உனக்கு கல்லீரல் எதிரியாய் ஆனாதே..... தமிழகம்🌎🌎 என்ற பெயர் பெற்ற தந்தார் அண்ணா தமிழுக்கு பெயர் பெற்ற தந்தாய் நீ....👈🏻👈🏻 செம்மொழி மாநாட்டில் உதித்தது உன் உதயா☀☀சூரியனும் தான்.....💫என் போன்ற மனிதர்களை கலைஞன் அகிய கலைஞர் நீ..... உன்னை இழந்தது தமிழகம் 🌎🌎மட்டும் அல்ல.... உயிர் மொழி தமிழும் தான் உன் கை குலுக்கிய நிமிடம் குழந்தைகள் மேன்மையாய் உணர்த்த எங்களை ஈரான்கற்ப எழுத வைத்த நிலையாய் இயன்ப எங்கள் கண்ணிர் 💦 💦 போதத்து.......கடல் போகட்டும் எங்கள் துயர்நிலை மர கனத்த இதயத்துடன் கவி பாட சொல்லும் எங்கள் கண்ணிர் உன் கை புடித்த நிமிடம் கரை ஏற தொடங்கிய எங்கள் இன்று உச்சம் காண காரணம் கலைஞர்...... 💫 💫 என்ன வென்று எழுதுவேன் தமிழின் இழப்பை எழுத்துக்களை எல்லாம் எடுத்து சென்று விட்டு என்னை எழுத சொல்லி ஏளனம் செய்கிறது எடுகள் இனி நாங்கள் ஏமாற்ற என்று எப்படி எழுத்துவேன் கரை புரண்டு காவேரியை கவி படியா உன் உயிரை காவேரியில் காலன் கண்டான் யான கவி பாட செய்யாத எங்கள் மனம் திரியுற தெரியாமல் தடுமாறும்😧😧 எங்கள் திராவிடம் தாளடிய நிலைமை தமிழை உயிராய் நினைத்த உரவே உரைத்த குரலில் உன் எழில் பேச்சில் உணர்வு தமிழில் உச்சத்தில் உரைபாய.....☝☝ஒருமுறை உயிரினும் மேலான உடன் பிறப்பே என்று அன்பான சொந்தகலே இன்று கலைஞர் மறைந்து விட்டார்......... 💫 💫 ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்க விரும்பினால் அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் மீண்டும் ஆழ்ந்த கண்ணிர் உடன் வெளிவருவது....... மதினா மணவரை உடுமலைப்பேட்டை🙏🙏
787 காட்சிகள்
10 மாசத்திற்கு முன்
#

RIP-கலைஞர் கருணாநிதி

முத்தமிழின் பிறப்பே.... எங்களின் இலக்கிய படைப்பே.... எங்கள் அண்ணாவின் துடிப்பே..... எங்களின் நாடித்துடிப்பே.... கலைஞரே நீ ஆற்றியது தமிழ்உரை போற்றுகிறது எங்கள் மனஉரை..... வெற்றிக்கு நீங்கள் தேவை நீங்காத இல்லாதா இடம் எந்த வெற்றியுமில்லை ஆட்சியில் தனித்தும் காத்தாய் எங்கள் ஆறாத உறவாய் எங்களின் நெஞ்சினில் பூத்தாய்....... தமிழுக்கு மணம் சேர்த்தாய் எங்களின் குணம் காக்க காப்பீடு பதித்தாய்.... பசிக்காக உணவு படைத்தாய் பசியே இல்லாமல் இல்லம் படைத்தாய் இருளைக்கூட ஔிரவிட்டாய் இலவச மின் இணைப்பில்...... எங்கள் இதயம் காக்க இறைவன் உன்னை படைத்தான்..... ஆட்சியில் நீங்கள் ஒரு மோதாவி இனி போகுமே எங்கள் ஆவி..... முதுமையை வென்ற புதுமையே முடியாமல் போனாதால் இனி ஏங்குமே.... எங்கள் வாழ்வுமே.... மெரினா போகும் அன்னமே.... இதை தாங்குமா எங்கள் எண்ணமே.... நோயைக்கூட கவிதையாய் வளரவிட்டது உந்தன் ஈகையா.. முத்துப்போன்ற உன் எழுத்திலே மூச்சைக்கூட புள்ளியாய் தவிக்கவிட்டு போனயோ.... சென்று வா தமிழே உன் பேனா எழுதிய தமிழ் நீ மறைந்தாலும் இனி தமிழனின் வார்த்தையில் இனி பிறந்துகொண்டு தான் இருக்கும் நீ ஏற்றிய தமிழ் விளக்கு கடைசி சொட்டு தமிழ் இரத்தம் இருக்கும் வரை உன் எழுத்துக்களை சுவாசிக்கும் தமிழ் மகனே சென்று வா நீ ஊட்டிய தமிழ்ப்பால் உன் பிரிவுக்கு அப்பாலும் தொடரும் சென்று வா எம் தலைவா எங்கள் கண்ணீரில் உன் ஆத்மா சாந்தியடையும் மெரினாவில் தமிழ் இன்று விதைப்படுகிறது.... கண்ணீருடன் உன்னை விதைக்கிறோம் மீண்டு வா உடன்பிறப்பே...... நீ இல்லாத தமிழ் இல்லை தமிழ் இல்லாமலும் நீயும் இல்லை... அது வரை உங்கள் ஒய்வறையில் உறங்குங்கள் நீங்காத உறக்கத்தில்....
301 காட்சிகள்
10 மாசத்திற்கு முன்
#

RIP-கலைஞர் கருணாநிதி

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அணைகளை காமராஜர் கட்டினார். சத்துணவு எம்ஜிஆர் ஆரம்பித்தார் என்று பதிவிடும் போது அரசியல் பார்க்காத நாம் கலைஞர் ஆரம்பித்த திட்டங்களை பார்த்து தெரிந்து கொள்வோம். இதனையும் அரசியலாக பார்க்காமல் இதனை தெரிந்து கொள்ள்வதற்காக படிப்போம்.* 💐💐💐💐💐💐💐💐💐💐 1. *போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது* கலைஞர் 2. *போக்குவரத்தை தேசியமையமாக்கியது* கலைஞர் 3. *மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது* கலைஞர் 4. *1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது* கலைஞர் 5. *தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது* கலைஞர் 6. *குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது* கலைஞர் 7. *முதலில் இலவச* *கண் சிகிச்சை முகாம் அமைத்தது* கலைஞர் 8. *பிச்சைகாரர்கள் மறுவாழ்வு மையம் அமைத்தது* கலைஞர் 9. *கையில் இழுக்கும் ரிக்‌ஷா ஒழித்து இலவச சைக்கிள் ரிக்‌ஷா கொடுத்தது* கலைஞர் 10. *இலவச கான்கிரீட் வீடுகளை ஒடுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தது* கலைஞர் 11. *குடியிருப்புச்சட்டம் (வாடகை நிர்ணயம் போன்றவை) கொண்டுவந்தது* கலைஞர் 12. *இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது* கலைஞர் 13. *பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்தது* கலைஞர் 14. *அரசியலமைப்பில் பிற்படுத்தபபட்டோருக்கான அமைப்பை அமைத்தது* கலைஞர் 15. *அரசியலமைப்பில் BC - 31%, SC - 18 % ஆக உயர்த்தியது* கலைஞர் 16. *P.U.C வரை இலவசக்கல்வி உருவாக்கியது* கலைஞர் 17. *மே 1, சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்தது* கலைஞர் 18. *வாழ்ந்த மனிதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறையாய் அறிவித்தது* கலைஞர் 19. *முதல் விவசாயக்கல்லூரி (கோவை) உருவாக்கியது* கலைஞர் 20. *அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் தந்தது* கலைஞர் 21. *அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது* கலைஞர் 22. *மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தது* கலைஞர் 23. *கோவில்களில் குழந்தைகளுக்கான "கருணை இல்லம் " தந்தது* கலைஞர் 24. *சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தது* கலைஞர் 25. *நில விற்பனை வரையரை சட்டம் அமைத்தது* கலைஞர் 26. *இரண்டாம் அலகு நிலக்கரி மின்உற்பத்தி நெய்வேலி கொண்டுவந்தது* கலைஞர் 27. *பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துகுடி கொண்டுவந்தது* கலைஞர் 28. *SIDCO உருவாக்கியது* கலைஞர் 29. *SIPCOT உருவாக்கியது* கலைஞர் 30. *உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தபபட்டோரில் தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தது* கலைஞர் 31. *பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டுவந்தது* கலைஞர் 32. *மனு நீதி திட்டம் தந்தது* கலைஞர் 33. *பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்தது* கலைஞர் 34. *பசுமை புரட்சி திட்டம் தந்தது* கலைஞர் 35. *கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தப்பட்டோரில் இணைத்தது* கலைஞர் 36. *மிக பிறப்படுத்தபபட்டோரில் வன்னியர், சீர் மரபினரை சேர்த்தது* கலைஞர் 37. *மிக பிற்படுத்தபபட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தது* கலைஞர் 38. *தாழ்த்தப்பட்டோருக்கு18% தன இட ஒதுக்கீடு தந்தது* கலைஞர் 39. *பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தது* கலைஞர் 40. *மிகவும் பிற்படுத்தபபட்டோருக்கு இலவச கல்வி தந்தது* கலைஞர் 41. *வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி இளகலை பட்டப்படிப்பு வரை தந்தது* கலைஞர் 42. *தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது* 43. *இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்க்கு இலவச மின்சாரம் தந்தது* கலைஞர் 44. *சொத்தில் பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கியது* கலைஞர் 45. *அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு தந்தது* கலைஞர் 46. *ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம் அமைத்தது* கலைஞர் 47. *ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது* கலைஞர் 48. *விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது* கலைஞர் 49. *நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது* கலைஞர் 50. *நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தது* கலைஞர் 51. *தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் அமைத்தது* கலைஞர் 52. *கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் தந்தது* கலைஞர் 53. *பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது* கலைஞர் 54. *மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் நிறுவியது* கலைஞர் 55. *பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகம் நிறுவியது* கலைஞர் 56. *டாக்டர் MGR மருத்துவ கல்லூரி நிறுவியது* கலைஞர் 57. *முதன் முதலில் காவிரி நீதிமன்றம் அமைக்க முற்பட்டவர்* கலைஞர் 58. *உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டுவந்தது* கலைஞர் 59. *உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு* 60. *இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தது* கலைஞர் 61. *மெட்ராஸ், சென்னையாக்கியது* கலைஞர் 62. *முதல் தடவை விதவை பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரியில் இடம் அளித்தது* கலைஞர் 63. *தொழிற்சாலைகளுக்கான வெளிப்படை கொள்கை அமைத்தது* கலைஞர் 64. *முதல் தடவை விதவை பெண்கள் தொழில் தொடங்க உதவியவர்* கலைஞர் 65. *கான்கிரீட் சாலை அமைத்தது* கலைஞர் 66. *தொழில்முறை கல்வியில் கிராமபுற மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு செய்தது* கலைஞர் 67. *ஐயன் திருவள்ளுவருக்கு சிலை வைத்தது* கலைஞர் 68. *தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்றுத் தந்தது* கலைஞர் 69. *செம்மொழி மாநாடு நடத்தியது* கலைஞர் 70. *சத்துணவில் கொண்டைக்கடலை, வாழைப்பழம் சேர்த்தது* கலைஞர் 71. *பால் விலை, பேருந்து கட்டணம், மின்சார கட்டணம் உயர்த்தி மக்களை துன்புறுத்தாதவர்* கலைஞர் 72. *விவசாயக்கடனை அறவே தள்ளுபடி செய்து, விவசாய மக்களை காத்தவர்* கலைஞர். *(2006-2011 வரைஐந்து ஆண்டுகளில் பட்டினிச்சாவு இல்லாத மாநிலம் தமிழகம்)* 73. *நியாய விலைக் கடைகளில் மளிகைப் பொருட்கள்(வாசனைச் சாமான்கள், சோம்பு, சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு, வெந்தயம், பிரிஞ்சு இலை, முதற்கொண்டு) அனைத்தும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கச் செய்தவர்* கலைஞர். விலைவாசி அதனால் தான் கட்டுக்குள் இருந்தது அன்று (இன்றைக்கு எத்தனை பெயருக்கு பருப்பு சர்க்கரை முழுமையாக கிடைக்கிறது????) 74. ஈழத் தமிழர்க்காக இரு முறை ஆட்சி துறந்தவர்* கலைஞர். **************************** *இதை சொல்வது அரசியல் வாதி அல்ல வரலாறு.*
1.2k காட்சிகள்
10 மாசத்திற்கு முன்
#

RIP-கலைஞர் கருணாநிதி

"கருணாநிதி அறிமுகப்படுத்திய திட்டங்கள் 1. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கப்பட்டது. 2. கை ரிக்சாவின் பயன்பாடு ஒழிக்கப்பட்டு சைக்கிள் ரிக்சா அளிக்கப்பட்டது. ஒரு மனிதனை மற்றொரு மனிதன் ரிக்சாவில் வைத்து தள்ளிச் செல்லும் முறையை ஒழித்தார். 3. சின்னஞ்சிறு கிராமங்களுக்கும் கூட சாலை வசதிகள் உருவாக்கப்பட்டது. தனியார் வசம் சிக்கியிருந்த போக்குவரத்துத் துறை அரசுடமையாக்கப்பட்டது. 4. சிப்காட் தொழில் வளாகங்கள் உருவாக்கப்பட்டது. 5. சிட்கோ தொழில் வளாகங்கள் கொண்டுவரப்பட்டது 6. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தொழிற்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்பட்டது 7. சேலத்தில் உருக்காலை கொண்டு வரப்பட்டது 8. தமிழக கிராமங்கள் அனைத்திற்கும் மின்சார வசதி உருவாக்கப்பட்டது 9. தடையற்ற மின்சாரம் கிடைக்க 8 இடங்களில் மின் நிலையங்கள் உருவாக்கப்பட்டது 10. தமிழகம் வளர்ச்சியின் பாதையில் செல்ல கருணாநிதி அறிமுகப்படுத்திய திட்டங்கள் 1997ல் தரமணி டைடல் பார்க் தகவல் தொழில் நுட்பதிற்கென புதுக் கொள்கைகள் உருவாக்கப்பட்டது. 11. 14,600 கோடி ரூபாய் மதிப்பிலான சென்னை மெட்ரோ திட்டம் கலைஞர் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டதாகும் 12. 108 ஆம்புலன்ஸ் சேவைகள் கருணாநிதியின் ஆட்சியில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது 13. குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டு நகரங்களில் இருந்து குடிசைகள் அனைத்தும் அடுக்குமாடி குடியிருப்புகளாக உருப்பெற்றன. 2010ம் ஆண்டு கலைஞர் இலவச வீடு வழங்கும் திட்டம் தமிழகத்தில் எங்குமே குடிசைகள் இருக்கக் கூடாது என்ற காரணத்தால் உருவாக்கப்பட்டது. 14. சென்னையில் அதிக அளவு கார் தொழிற்சாலைகளை உருவாக்கி தமிழகத்தின் பொருளாதரத்தில் ஒரு மைல் கல்லை அடைய வைத்த பெருமை கருணாநிதிக்கு உண்டு. அதனால் தான் சென்னை ஆசியாவின் டெட்ராய்ட் என்று அறியப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 15. மினிபஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அரசு ஊழியர்களுக்கு கொண்டு வரப்பட்ட திட்டங்கள் 16. அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் உருவாக்கப்பட்டது. 17. தமிழக காவல்துறையினருக்கு ஆணையம் அமைக்கப்பட்டது. 18. மே 1ம் தேதி ஊதியத்துடன் கூடிய அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 19. அரசு ஊழியர்கள் உயிர் இழக்கும் பட்சத்தில் அவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி அளிக்கும் பழக்கம் ஆகியவற்றையும் கூட கருணாநிதி கொண்டுவந்தார். விவசாயிகளுக்காக கருணாநிதி அறிமுகப்படுத்திய திட்டங்கள் 20. விவசாயத்திற்கு இலவச மின்சாரம் (இந்தியாவிலேயே இது போன்ற திட்டம் உருவாக்கப்பட்டது அப்போது தான்) 21. உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டு விளைபொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் வாடிக்கையாளர்களிடம் சென்று சேர்த்தவர் கலைஞர் கருணாநிதி. 22. விவசாயிகளுக்காக 7 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்து அறிவித்தது. 23. விவசாயக் கூலிகளுக்கு சம்பள நிர்ணயம் கொண்டு வரப்பட்டது 24. கிராமப்புற வளர்ச்சிக்கென நமக்கு நாமே திட்டம் உருவாக்கப்பட்டது. அரசு மானியத்துடன் தங்களின் தேவைகளே தாங்களே பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று அறிமுகமாக்கப்பட்டது. 25. கிராமப்புற மேம்பாட்டிற்காக அண்ணா மறுமலர்ச்சித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. பெண்களுக்கான திட்டங்கள் 26. திமுக கட்சியின் மூத்த பெண் தலைவர் மூவலூர் ராமாமிர்தம் அவர்களின் நினைவாக ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் திட்டம் 27. கைம்பெண்களின் மறுமணத்தை ஊக்குவிக்கும் விதமாக கைம்பெண் மறுமண நிதி உதவித் திட்டம் ஆகியவற்றை கொண்டுவந்தவர் கலைஞர் கருணாநிதி. 28. அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. 29. சொத்தில் பெண்களுக்கு சம உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது. 30. பெண்களுக்கான இலவசப் பட்டப் படிப்பிற்கான திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. 31. 33% பெண்களுக்கான இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு மிகவும் வெற்றி கரமாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன. 32. கர்பிணிப் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டது. 33. ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்புகள் வழங்கப்பட்டது. 34. 1989ல் பெண்களுகள் பொருளாதாரத்தில் யாரையும் நம்பாமல் சுயமாக இயங்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது பெண்கள் சுய உதவிக் குழுக்கள். இதன் மூலம் தமிழகத்தில் பெண்களால் சுய தொழில்கள் அதிகம் உருவாகின. தமிழுக்காக கருணாநிதி அறிமுகப்படுத்திய திட்டங்கள் 35. இந்தியாவின் இறுதிப் புள்ளி அல்லது மறுமலர்ச்சி இந்தியாவின் தொடக்கப்புள்ளியாக இருக்கும் தமிழகத்தின் தென் முனையில் அய்யன் வள்ளுவனுக்கு வைக்கப்பட்டது 133 அடி உயரமுள்ள சிலை. 36. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் தமிழ் மொழிக்கு செம்மொழி அங்கீகாராத்தினை பெற்றுக் கொடுத்துவர் கருணாநிதி. 37. கோவையில் மிக பிரம்மாண்டமாய் தமிழ் அறிஞர்கள் படை சூழ வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது செம்மொழி மாநாடு. 38. சிலப்பதிகார நாயகியான கண்ணகிக்கு தமிழர் கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது. 39. தமில் ஆண்டு வரிசைக்கு திருவள்ளுவர் ஆண்டு என்று பெயரிட்டார் 40. சித்திரை ஒன்று தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டாலும் தைத்திருநாளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது 41. மெட்ராஸ் மாகாணம் அண்ணாவின் உழைப்பால் தமிழ் நாடு என்றானது. கலைஞரின் முயற்சியால் மெட்ராஸ் சென்னை என்றானது 42. மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை அவர்களின் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்து 1970களில் இருந்து அனைத்துவிதமான பொது நிகழ்ச்சிகளிலும் பாடப்பட்டது. 43. ஆளுநர்கள் இல்லாமல் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் போன்ற நாட்களில் மாநில முதல்வர்கள் கொடியேற்ற வழிவகை செய்தவர் கலைஞர். 44. தமிழ் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கும் வகையில் 20% இட ஒதுக்கீடு வழங்கியவர் கருணாநிதி. பொதுவுடமை 45. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அறிவிப்பினை வெளியிட்டவர் கருணாநிதி. 46. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர்களுக்கான கல்வி தொகை உயர்த்தப்பட்டது. அவர்களுக்கான விடுதிகள் அதிகமாக திறக்கப்பட்டன. 47. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 31 சதவீதம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 18 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது 48. அனைத்து சமூகத்தினரும் சேர்ந்து வாழும் வகையில் சமத்துவபுரங்கள் தமிழகமெங்கும் உருவாக்கப்பட்டன 49. இஸ்லாமிய சமூகத்தினருக்கு 3.5% இட ஒதுக்கீட்டினை அளித்தார் 50. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இணைத்தார். 51. ஆதி திராவிட மக்களுக்கு இலவச வீடுகள் கட்டித்தரப்பட்டது 52. கலப்புத் திருமணங்கள் பெருமளவில் ஊக்குவிக்கப்பட்டது. கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு ஊக்கத் தொகை தந்து கௌரவம் செய்தது திமுக அரசு கல்வித்துறையில் கொண்டு வரப்பட்டத் திட்டங்கள் 53. பொறியாளர் பட்டப்படிப்பிற்காக நடைமுறையில் இருந்த நுழைவுத் தேர்வினை ரத்து செய்யப்பட்டது. 54. மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கப்பட்டது. 55. அதிமுக அல்லது திமுக என்று யார் ஆட்சிக்கு வந்தாலும் காமராஜரால் கொண்டுவரப்பட்ட மத்திய உணவுத்திட்டத்தினை ஒரு போதும் நிறுத்தியது கிடையாது. 2006ம் ஆண்டு ஆட்சியின் போது மாணவர்களுக்கு மத்திய உணவில் வாரம் இரண்டு முட்டை தந்து சிறப்பு ஆணை வெளியிட்டார். 56. மாவட்டந்தோறும் அரசு மருத்துவமனைகளுடன் கூடிய அரசு மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டது. 57. தமிழகத்தில் அதிக அளவு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டது. 58. நெல்லையில் மனோன்மணியம் பல்கலைக்கழகம் தொடங்கி, சேலத்தில் பெரியார் பல்கலைக் கழகம், சென்னையில் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழங்கள் கட்டப்பட்டது. கருணாநிதி அறிமுகப்படுத்திய இதர திட்டங்கள் 59. நில விற்பனை வரையறை சட்டம் 60. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் 61. தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கான ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது 62. தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தினை நிறுவியவர் கலைஞர் கருணாநிதி 63. பிச்சைக்காரர்கள் மற்றும் தொழுநோயாளிகளுக்கான மறுவாழ்வு மையங்கள் இவரின் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது 64. ஊனமுற்றோர் மறுவாழ்வுத் திட்டத்தினை கொண்டுவந்தார் 65. ரேசன் கடைகளில் ஒரு கிலோ அரிசியினை 2 ரூபாய்க்கும் பின்னர் 1 ரூபாய்க்கும் விற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 66. மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அல்லது கலைஞர் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. 67. மக்களுக்கு இலவச கண் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு பின்னர் இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது 68. அரவாணிகள் என்று அழைக்கப்பட்ட மூன்றாம் பாலித்தினவர்களுக்கு திருநங்கைகள் திருநம்பிகள் என்று பெயர் சூட்டி அவர்களுக்கான தனி நல வாரியம் அமைக்கப்பட்டது. 69. நாட்டுப்புற கலைஞர்களுக்கான நலவாரியத்தினையும் அமைத்துக் கொடுத்தது திமுக தலைமை 70. மொழிப்போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கப்பட்டது 71. சுதந்திரந்திரப் போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி அறிவித்தது 72. ஏழை மக்களுக்கு இலவச வேஷ்டி சேலைகள் இவரது ஆட்சியில் இருந்து தான் தரப்பட்டது. 73. சீரான போக்குவரத்து வசதிகளை மக்கள் அடைய நான்கு வழிச் சாலைகள் அதிகம் உருவாக்கப்பட்டன. 74. போக்குவரத்துத் துறையை அரசுடமையாக்கியது மற்றுமின்றி அதற்கென துறையை உருவாக்கியவர் கலைஞர் 75. நேரடி நெல் கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட்டது. 76. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவுத் தேர்தல்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது. 77. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அம்பேத்கர் பெயரில் சட்டக் கல்லூரி உருவாக்கப்பட்டது 78. இஸ்லாமியர்களுக்காக உருது அகாதெமி உருவாக்கப்பட்டது. 79. தேர்வுகளில் மாவட்ட மாநில அளவில் முதல் மூன்று இடம் பிடிப்பவர்களுக்கு மேற்படிப்புக்கு உதவித் தொகை வழங்கி சிறப்புச் செய்தவர் கருணாநிதி 80. சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த சுமார் 23 மேம்பாலங்கள் கட்டப்பட்டது. 81. ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 82. மாவட்டங்களுக்குள் நதி நீர் இணைப்பு சாத்தியப்படுத்தப்பட்டது. 83. காமராஜரின் பிறந்த நாளை கல்வி மேம்பாட்டு நாளாக அறிவித்தவர் 84. 420 பேரூராட்சிகள் உருவாக்கப்பட்டது 85. ராமநாதபுரம் – பரமக்குடி கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது 86. மாலை நேரம் மற்றும் விடுமுறை தின நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டது. 87. மதுரையில் உயர் நீதிமன்றக் கிளை நிறுவப்பட்டது. 88. ராஜராஜன் ஆயிரமாவது ஆண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. 89. இவர் ஆட்சியின் கீழ் 12 அரசு பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. 90. பேருந்து போக்குவரத்துக் கட்டணம், பால் விலை, மற்றும் மின்சாரக் கட்டணங்களின் விலை உயர்த்தப்பட்டது கிடையாது 91. இலவச வண்ண தொலைக்காட்சிகளை கொடுத்தார் 92. உணவுப் பொருட்களை மலிவு விலையில் ரேசன் கடைகளில் இருந்து பெற்றுக் கொள்ளும் படி புதிய அறிவிப்புகளை எப்போதும் வெளியிடுவார் கருணாநிதி. 93. 10 வகுப்பு வரை தமிழ் கட்டாயப்பாடமாக்கப்பட்டது 94. சுயமரியாதை என்ற பெயருக்கு " - கலைஞர் கருணாநிதி கொண்டு வந்த முத்தான 94 திட்டங்கள் by murugan
274 காட்சிகள்
10 மாசத்திற்கு முன்
#

RIP-கலைஞர் கருணாநிதி

கலைஞர் காமராஜருக்கு மெரினாவில் இடம்தரவில்லை என வதந்தி பரப்பும் முட்டாள்கள் கவனத்திற்கு! அக்டோபர் 2, காமராஜர் மறைந்த அன்று சோகமே உருவாக, அப்போதைய முதல்வர் கலைஞரும், அவர் அமைச்சரவை சகாக்களும் அவரது உடலை சூழ்ந்து அமர்ந்திருந்தனர். அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், தேனாம்பேட்டை காங்கிரஸ் அலுவலகத்திலேயே காமராஜர் உடலை பொதுமக்கள் பார்வைக்கு வைத்து, மற்ற சம்பிரதாயங்களையும் அங்கேயே நடத்த திட்டமிட்டனர். முதல்வர் கலைஞரின் காதுகளுக்கு இந்த தகவல்போனது. கொதித்துவிட்டார் கலைஞர். “காமராஜர் ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல. இந்த தேசத்தின் சொத்து, அவரது உடலை ராஜாஜி ஹாலில் வைத்து அரசு முறைப்படிதான் தகனம் செய்யவேண்டும்" என்றார். அப்போது குறுக்கிட்ட அதிகாரி ஒருவர், காமராஜர் அப்போது எந்த பொறுப்பிலும் இல்லாததை சொல்லி, சில சட்ட சம்பிராதாயங்களை தெரிவித்ததோடு, மத்திய அரசிடம் அனுமதி பெறவேண்டிய சட்டவிதியை எடுத்துச்சொன்னார். மீண்டும் கோபத்துடன் குறுக்கிட்ட கலைஞர், " நான் சொன்னதை செய்யுங்கள்...மேலும் காமராஜரின் உடலை கிண்டியில் உள்ள அரசுக்கு சொந்தமான ராஜாஜி நினைவகம் அருகில்தான் அடக்கம் செய்யவேண்டும்...காமராஜருக்கு இறுதி மரியாதை செய்வதற்கு நாம் யாரிடமும் போய் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை" என கறாராக கூறினார் கலைஞர். காமராஜர் உடல் புதைக்கப்படவில்லை சமாதி கட்ட! காமராஜர் உடல் தகனம்தான் செய்யபட்டது எனவே கடற்கரையில் சமாதி கட்ட முடியாது அதனால் காந்தி மண்டபம் அருகே காமராஜருக்கு மணிமண்டம் கட்டப்பட்டது அதையும் கலைஞர்தான் செய்தார்!
1.3k காட்சிகள்
10 மாசத்திற்கு முன்
போஸ்ட் இல்லை
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post