படித்துபயனடையுங்கல்
சூராக்கள், வசனங்கள், வார்த்தைகள், குறிப்பிட்ட சில எழுத்துக்களின் எண்ணிக்கை, ஒரே மூலத்திலிருந்து வந்த வார்த்தைகளின் எண்ணிக்கை, தெய்வீகப் பெயர்களின் பல வகைகள் மற்றும் எண்ணிக்கை, குறிப்பிட்ட சில வார்த்தைகளின் தனித்துவமிக்க எழுத்துகள், குறிப்பிட்ட சில வார்த்தைகளினுள் குறிப்பிட்ட சில எழுத்துகளின் இல்லாமை அல்லது வேண்டுமென்று செய்யப்பட்டிருக்கும் மாற்றம், மேலும் குர்ஆனின் மற்ற பல பொருட்களையும் அதன் பரிமாணத்தையும் சேர்த்து - குர்ஆனின் ஒவ்வொரு பொருளும் கணிதரீதியில் தொகுக்கப்பட்டுள்ளது. குர்ஆனின் கணிதக்கட்டமைப்பில் முக்கியமான இரண்டு பெரும்பக்கங்கள் உள்ளன: (1) கணித அடிப்படையிலான இலக்கியத் தொகுப்பு மற்றும் (2) சூராக்கள் மற்றும் வசனங்களின் எண்ணிக்கையில் சம்பந்தப்பட்டிருக்கும் கணித அமைப்பு. விரிவான இந்தக் கணிதக் குறியீடின் காரணமாக, குர்ஆனின் மூலத்திலோ அல்லது பௌதீக அமைப்பிலோ ஏற்படும் மிகச்சிறிய சிதைவும் உடனடியாக வெளிக்காட்டப்படுகின்றது. புரிந்துகொள்ள எளிதானது போலியாகத்தயாரிக்க இயலாதது சரித்திரத்திலேயே முதன்முறையாக தெய்வீக எழுத்தாளருடைய உள்கூடிய சான்றுடன் ஒரு வேதத்தை நாம் பெற்றிருக்கின்றோம் - மனித சக்திக்கும் அப்பாற்பட்ட ஒரு கணிதத்தொகுப்பு. இந்தப் புத்தகத்தை படிப்பவர் எவரும் குர்ஆனின் கணித அற்புதத்தை எளிதாகப் பரிசோதித்திட இயலும். “கடவுள்” (அல்லாஹ்) எனும் வார்த்தை இப்புத்தகம் முழுவதும் தடித்த பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு பக்கத்தின் கீழ்ப் பகுதியிலும் “கடவுள்” எனும் வார்த்தையின் அடுத்தடுத்த நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்புத்தகத்தின் கடைசிப் பக்கமான பக்கம் 372, “கடவுள்” எனும் வார்த்தையின் மொத்த நிகழ்வுகளின் எண்ணிக்கை 2698 அல்லது 19 X 142 என்று காட்டுகின்றது. இன்னும் கூடுதலாக, “கடவுள்” எனும் வார்த்தை காணப்படுகின்ற வசனங்கள் அனைத்தின் எண்களையும் நாம் கூட்டும்போது நாம் பெறுகின்ற கூட்டுத் தொகையானது 118123, இதுவும் ஒரு 19ன் பெருக்குத் தொகையே ஆகும் (118123 = 19 X 6217). பத்தொன்பது என்பது குர்ஆனுடைய கணித ரீதியிலான கட்டமைப்பு முழுவதற்குமான பொதுவான வகுக்கும் எண் ஆகும். இந்தக் குறிப்பிடத் தகுந்த விசயம் மட்டுமே குர்ஆன் இந்த உலகிற்கு கடவுளின் செய்தியாக உள்ளது என்பதற்கு மறுக்க இயலாத சான்றாக இருப்பதற்கு போதுமானது. மனிதனால் அல்லது மனிதர்களால் “கடவுள்” எனும் வார்த்தையின் இடம் பெறுதலை 2698 எண்ணிக்கையிலும் மேலும் அவை இடம்பெறும் வசன எண்களின் எண்ணிக்கையையும் இவ்வாறு செய்திருக்க இயலாது. முக்கியமாக (1) அறியாமைக் காலம் எனக் கருதப்பட்ட அக்காலத்தில் குர்ஆன் அருளப்பட்டதையும், (2) சூராக்களும் வசனங்களும் அவை வெளியிடப்பட்ட காலம், இடம் போன்றவற்றிற்கு ஏற்ப பிரிக்கப்பட்டிருந்தன என்ற உண்மையையும் கருத்தில் கொண்டு காணும்போது இது ஒரு போதும் செய்து விட இயலாத விசயம் ஆகும். வெளிப்பாட்டின் இறங்குவரிசையானது இறுதி வடிவத்திலிருந்தும் மிகவும் மாறுபட்டிருந்தது (பின் இணைப்பு 23). இருந்த போதிலும், குர்ஆனின் கணிதக் கட்டமைப்பு “கடவுள்” எனும் வார்த்தையோடு நின்றுவிடுவதில்லை, அது மிகவும் பரந்தது, மிகவும் சிக்கலானது, மொத்தத்தில் விரிவானது.
#

படித்துபயனடையுங்கல்

படித்துபயனடையுங்கல் - a - ShareChat
99 காட்சிகள்
1 நாள் முன்
#

படித்துபயனடையுங்கல்

[சூரா 67: அரசுரிமை (அல்-முல்க்), மிக்க அருளாளரும், மிக்க கருணையாளருமாகிய கடவுளின் பெயரால், [67:1] அரசுரிமைகள் அனைத்தும் எவருடைய கரங் களில் இருக்கின்றதோ அந்த ஒருவர் மிகவும் மேன் மையானவராக இருக்கின்றார், மேலும் அவர் சர்வ சக்தியுடையவராக இருக்கின்றார்., நம்முடைய வாழ்வின் நோக்கம்*, [67:2] உங்களுக்கிடையில் எவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதை அடையாளம் காணுகின்ற நோக்கத்திற்காக மரணம் மற்றும் வாழ்வைப் படைத்த அந்த ஒருவர்.* அவர்தான் சர்வ வல்லமையுடையவராகவும், மன்னிக்கின்றவராகவும் இருக்கின்றார்., [67:22] சிறப்பாக வழிநடத்தப்பட்டிருக்கின்றவர் தன்னுடைய முகத்தின் மீது குப்புற வீழ்ந்தவாறு நடக்கின்ற ஒருவரா, அல்லது சரியான பாதையின் மீது நேராக நடக்கின்ற ஒருவரா?, [67:23] “அவர் ஒருவர்தான் உங்களைத் துவக்கியவராக, மேலும் உங்களுக்கு செவிப்புலன், கண்கள், மற்றும் மூளைகளை வழங்கியவராக இருக்கின்றார். அரிதாகவே நீங்கள் நன்றி செலுத்துகின்றவர்களாக இருக்கின்றீர்கள்,” என்று கூறுவீராக.]
103 காட்சிகள்
3 நாள் முன்
#

படித்துபயனடையுங்கல்

[மிக்க அருளாளரும், மிக்க கருணையாளருமாகிய கடவுளின் பெயரால், [90:5] எவரொருவரும் தன்னை கணக்குக் கொடுப்பதற்கு எப்பொழுதும் அழைக்க மாட்டார் என்று அவன் எண்ணுகின்றானா?, [90:6] அவன், “மிகவும் ஏராளமான பணத்தை நான் செலவு செய்து விட்டேன்!” என்றுபெருமை யடித்துக் கொள்கின்றான்., [90:7] எவரொருவரும் தன்னைப் பார்க்கவில்லை என்று அவன் எண்ணுகின்றானா?, [90:8] இரு கண்களை நாம் அவனுக்குத் தரவில்லையா?, [90:9] ஒரு நாக்கு மற்றும் இரண்டு உதடுகளை?, [90:10] இரண்டு பாதைகளை நாம் அவனுக்குக் காட்டவில்லையா?, [90:11] கடினமான பாதையை அவன் தேர்ந்தெடுக்க வேண்டும்.]
103 காட்சிகள்
3 நாள் முன்
#

படித்துபயனடையுங்கல்

[மிக்க அருளாளரும், மிக்க கருணையாளருமாகிய கடவுளின் பெயரால், உண்மையான நம்பிக்கையாளர்கள் அனைவரும் குர்ஆனை ஏற்றுக் கொள்கின்றார்கள், [28:51] அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, இந்தத் தூதுச் செய்தியை நாம் அவர்களிடம் ஒப்படைத்திருக்கின்றோம்., [28:52] எவர்களை முந்திய வேதங்களைக் கொண்டு நாம் அருள்பாலித்தோமோ அவர்கள் இதன் மீது நம்பிக்கை கொள்வார்கள்., [28:53] அவர்களுக்கு இது ஓதிக்காட்டப்படுகின்ற பொழுது, அவர்கள், “ நாங்கள் இதில் நம்பிக்கை கொள்கின்றோம். இது நம்முடைய இரட்சகரிடமிருந்து வந்த சத்தியமாக இருக்கின்றது. இதைப்பற்றி நாங்கள் கேள்விப்படுவதற்கு முன்னரும் கூட, நாங்கள் அடிபணிந்தவர்களாகவே இருந்தோம்” என்று கூறுவார்கள்.]
93 காட்சிகள்
5 நாள் முன்
#

படித்துபயனடையுங்கல்

[ வெற்றி பெற்றவர்கள், [9:71] நம்பிக்கை கொண்டிருக்கின்ற ஆண்கள் மற்றும், பெண்கள் ஒருவர் மற்றவருக்கு நண்பர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் நன்னெறியை ஆதரிக்கின்றார்கள், மேலும் தீமையைத் தடுக்கின்றார்கள், அவர்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்கின்றார்கள், மேலும் கடமையான தர்மத்தை (ஜகாத்) கொடுக்கின்றார்கள், மேலும் அவர்கள் கடவுள் மற்றும் அவருடைய தூதருக்கு கீழ்ப்படிகின் றார்கள். இவர்கள் கடவுள்-உடைய கருணையால் பொழியப்படுவார்கள். கடவுள் சர்வ வல்லமை யுடையவராகவும், ஞானம் மிக்கவராகவும் இருக்கின்றார்., [9:72] நம்பிக்கை கொண்டிருக்கின்ற ஆண்கள் மற்றும் நம்பிக்கை கொண்டிருக்கின்ற பெண்களுக்கு ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களையும் மேலும், ஏதேனின் தோட்டங்களில் மகத்தான மாளிகைகளையும் கடவுள் வாக்களிக்கின்றார், அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். மேலும் கடவுள்-உடைய அருட்கொடைகள் மற்றும் அங்கீகாரமானது இன்னும் மிகப்பெரியதாக இருக்கின்றது. இதுவே மாபெரும் மகத்தான வெற்றியாக இருக்கின்றது.]
101 காட்சிகள்
6 நாள் முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post