மைக்கேல் ஜாக்சன்
26 Posts • 95K views
Rationalist
831 views 2 months ago
தோழர் திருமுருகன் காந்தி பதிவிலிருந்து... கருப்பின மக்களின் விடுதலை போராட்டத்திலிருந்து, அவர்களது இசையை பிரிக்க இயலாது. தங்களது உணர்வுகளை, அரசியலை இசையாக வெளிப்படுத்தி மக்களை அணிதிரட்டிய மரபுக்கு சொந்தக்காரர்கள். இந்த மரபு நீண்டது, நெடியது. Amandla எனும் தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்ட பாடல்களின் வீச்சு வரலாற்று சிறப்பு மிக்கது. 'வலிமை' எனும் பொருளை அழுத்தமாக பதிவு செய்து போராட்ட உணர்வை நிலைநிறுத்தும் பாடல்களின் தொகுப்பாக அமெண்டலா அடையாளப்பட்டது. தென்னாப்பிரிக்காவின் நிறவெறி எதிர்ப்புப் போரில் இசை-பாடல்களின் முக்கியத்துவம் குறித்து Amandla எனும் பெயரிலேயே ஆவணப்பட தொகுப்பையும் நீண்ட நாட்களுக்கு முன் காண நேர்ந்தது. இசையில்லாமல் ஆப்ரிக்க போராட்டங்கள் நடந்ததில்லை எனலாம். ஜெனீவாவில் மனித உரிமை அவையத்திற்கு சென்ற ஒரு தினத்தில், ஐ.நா முற்றத்தில் நவீன பாடல் நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. 2-3 மணி நேரத்திற்கு பின்பாக இறுதியில் ஒருவர் சில நிமிடங்கள் பேசியதும் கூட்டம் கலைந்தது. அந்த இசை நிகழ்ச்சி எனது எரித்ரியா நாட்டில் நடக்கும் அழிப்பை குறித்த போராட்ட நிகழ்வு என போராட்டத்திலிருந்த ஒருவர் தெரிவித்தார். அமெரிக்காவில் கருப்பின படைப்பாளிகளின் இசை வெகுசன பரப்பை ஆக்கிரமித்து, நிறவெறி எதிர்ப்பு போராட்டத்தின் நியாயத்தை பரவலாக்கியது. உலகளாவிய புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் தம் மக்களின் வலியை, குரலை பதிவு செய்துகொண்டே இருந்தனர். அப்படியான கலைஞர்களின் பட்டியல் நீண்டநெடியது. நம் தலைமுறையினை ஆக்கிரமித்த இசையும், நடனமும் மைக்கல் ஜாக்சனுடையது. வெகுசன ரசிகத்தன்மைக்கு அப்பாற்பட்ட அவரது சில படைப்புகளில் மேற்குலகின் இரட்டைத்தன்மையை வெளிப்படுத்தியவிதமான பாடல்களை நாம் மறக்க இயலாது. They don't care abt us, Black or White என சிலவற்றை நம்மில் பலர் மறக்க இயலாது. இதில் Black or White பாடல்-நடனம் குறித்த அவரது பதிவுகளில் ' Michael said, “I want to do a dance number where I can let out my frustration about injustice and prejudice and racism and bigotry...".... தற்போது நடந்துவரும் பாலstine ஜெனோcide குறித்த விவாதங்களில் ஒரு பதிவை காண நேரிட்டது. பாலstine குறித்து அவர் பாட இருக்கிறார் என அறிந்தவுடன் ziயோனிஸ்டுகள் மைக்கல் மீது பாலினக்குற்றச்சாட்டை பரப்பினார்கள் என Epஸ்டைன் எனும் தரகரை முன்வைத்து எழுதிவருவதை சிலர் கவனித்திருக்கக் கூடும். மைக்கல் ஜாக்சனை குறித்த ஆவணக்காணொளி மேற்குலக இசை தளத்தில் வெளிப்படும் நிறவெறி குறித்து சுட்டுகிறது. Black or White பாடல்காட்சியில் கருப்பு வேங்கையாக மாறி மைக்கெல் எடுக்கும் அவதாரம் அமெரிக்காவின் கருப்பின போராட்ட அமைப்பான 'ப்ளாக்-பேந்தர்' இயக்கத்திற்கு தொடர்பற்றது என சொல்லிவிட இயலுமா? இசையின் அரசியலையும், அரசியலின் இசையையும் விவாதிப்போம் வாருங்கள். தோழர் திருமுருகன் காந்தி மே பதினேழு இயக்கம் ஆகத்து 31, 2025 ------------- *இந்நிகழ்வு திசை புத்தக நிலையத்தில் நடைபெறவுள்ளது* அனைவரும் வருக!!! நாள் : 31ஆகஸ்டு2025 நேரம் : ஞாயிறு மாலை 5 30 மணி முதல் 5/9, பார்த்தசாரதி பேட்டை தெரு, டிஎம்எஸ்/ஆவின் பாலகம் அருகில், காமராசர் அரங்கம் எதிரில், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600086 Location: https://goo.gl/maps/gsswRNLhsMBXvhKw8 தொடர்புக்கு : 98840 82823 #மைக்கேல் ஜாக்சன் #அவையம் வாசிப்பு வட்டம் #📺வைரல் தகவல்🤩 #💪 மே17 இயக்கம்
10 likes
7 shares