தமிழீழம் அறிவோம்
24 Posts • 18K views
Rationalist
579 views 12 days ago
தோழர் திருமுருகன் காந்தி பதிவிலிருந்து.. மேதகு பிறந்தநாளில் உரையாடல். தமி*ழீழத்திற்கு பயணம் செய்து, பல்வேறு துறை சார்ந்த போராளிகளுடன் உரையாடி, கலைப்பயிற்சி அளித்து, அவர்களது குடும்பத்தாரோடு நெருங்கிய உறவாய் இன்றளவும் நேசமிக்க தோழமையாய் வாழ்கிறவர் ஓவியர் புகழேந்தி அவர்கள். புலிகளின் செயல்பாடு, அறம், நுண்ணுணர்வு, கட்டுப்பாடு, கடமையுணர்வு, தன்னலம்பாராத அற்பணிப்பு, அரசியல் தெளிவு, மக்கள் மீதான நேயம் என பலவற்றை ஆய்வறிந்தவர். மேதகுவின் பன்முக ஆளுமை குறித்தான இவரது குறிப்புகள் அடங்கிய நூல் தனித்துவமானவை. போராளிகளின் வாழ்வியலை, போரியல் செயல்பாடுகளை தனது ஓவியத்திற்குள்ளாக பதிவு செய்து காவியமாக்கியவர். ஓவியராக, அரசியல் சிந்தனையாளராக, தமிழின உணர்வாளராக அவருடம் உரையாடுவதென்பது சுவையானது. நேரம்-காலம் போவது தெரியாமல் பலவேறு தகவல்களை களஞ்சியமாக நம்மிடம் பகிரக்கூடியவர். அவரது அன்றாட முகநூல் பதிவுகளில் வரலாற்று சுவடுகள் வெளிப்படும். தோழர் ஓவியர் புகழேந்தி அவர்களுடனான உரையாடலை மேதகு பிறந்தநாளில் நடத்துவதைவிட சிறப்பான நாளென எதுவும் இருக்க இயலாது. நவ26 மாலை 6 மணியளவில் திசை புத்தக நிலையத்தில் சந்திப்போம். மேதகு பிறந்தநாளை அவரது நினைவுகளுடன் கொண்டாடிடுவோம். அனைவரும் வாருங்கள். தோழர் திருமுருகன் காந்தி மே பதினேழு இயக்கம் நவம்பர் 25, 2025. #தமிழீழம் அறிவோம் #🚨கற்றது அரசியல் ✌️ #தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்🌺 #புகழேந்தி #திசை புத்தக நிலையம்
17 likes
8 shares
வரிப்புலியாய் கடல்புலியாய் எரிநெருப்பாய் படைதிரட்டாய் தடையுடைத்தாய் தமிழ்வீரா விரிப்படையும் எம்போராட்டம் படைத்துவைக்கும் விடுதலையை மாவீரர்களே உமை வணங்குகின்றோம். மாவீரர் நாள் 27 ##மாவீரர் நாள் #மாவீரர் நாள் வாழ்த்துகள் #தமிழீழம் அறிவோம் # தமிழீழம்
34 likes
16 shares