நான் எடுத்த மொபைல் போட்டோ
556 Posts • 300K views
🎵Dad's Princess💖🎵
844 views 1 months ago
என் வீட்டுத் தோட்டத்தில் 🌱 என் வீட்டு தோட்டத்தில் நான் வளர்த்த செடிகளில் மலர்ந்த பூக்கள் மற்றும் துளசி மற்றும் காய்கறிகள் சீனி மிளகாய் வெள்ளை சீனி மிளகாய் இதில் சமைக்கும் பொழுது சமையல் மிகவும் ருசியாக இருக்கும் இந்த வெள்ளை சீனி மிளகாயிற்கு ஒரு தனி ருசி உள்ளது ...... இந்த வெள்ளை சீனி மிளகாய் சேர்த்து சமைக்கின்ற குழம்பு வகைகளுக்கு அதிக சுவை கூடுகிறது சாதாரணமாக குறைவாக சாப்பிடுபவர்களும் கூட இதை சேர்த்து சமைக்கும் பொழுது சற்று கூடுதலாகவே உண்டு விடுவது இயல்பு மற்றும் இதனை தயிர் மிளகாய் மற்றும் மோர் மிளகாய் ஊறவைத்து காயவைத்து வற்றல் மிளகாய்கள் எண்ணெயில் பொரித்து சாப்பிடும் பொழுது குழம்புக்கு வகைகள் எதுவும் தேவைப்படாது சிறிது மோர் அல்லது தயிர் மட்டுமே போதுமானது அதனுடன் இந்த மோர் மிளகாய் வற்றலை சேர்த்து சாப்பிட்டால் திருப்தியான உணவு உண்ட ஒரு திருப்தி மற்றும் புத்துணர்ச்சி கிடைக்கும் என் வீட்டு தோட்டத்து துளசியை தினமும் பறித்து என் கண்ணனுக்கு ஒரு துளசி மாலை சாற்றுவது வழக்கம் செம்பருத்திப் பூக்களை கொண்டு விநாயகருக்கு அணிவிப்பது சிறப்பு மேலும் சிவப்பு நிறத்தைச் பூக்கள் கடவுளுக்கு சமர்ப்பிக்கலாம் அது அம்மன் கோவிலுக்கும் கிருஷ்ணர் கோவிலாக இருந்தாலும் முருகன் கோவிலாக இருந்தாலும் எல்லா கோவில்களிலும் இந்த மலர்களை சமர்ப்பிக்கலாம் மேலும் நமது வீட்டில் நாமே நட்டு வளர்த்த செடியில் வளர்ந்த பூக்களை கோவிலுக்கும் மற்றும் நம் வீட்டில் உள்ள கடவுளின் புகைப்படங்களுக்கும் அணிவிப்பதில் ஒரு அலாதி இன்பம்....... நமது வீடுகளில் வெண்டைக்காய் கத்திரிக்காய் மற்றும் மிளகாய் போன்றவற்றை பயிரிடுவதால் நமக்கு மருந்து தெளிக்கப்பட்ட காய்கறிகளில் இருந்து விடுதலை மற்றும் இயற்கை முறையில் நமது வீடுகளில் அரிசி கழுவிய தண்ணீர் போன்றவற்றை மற்றும் காய்கறிகள் போன்றவற்றை கழுவிய நீர்களை ஒரு பெரிய பாக்கெட்டில் ஊற்றி வைத்து அதனை மறுநாள் இந்த செடிகளுக்கு தெளிக்கும்பொழுது செடி நன்கு வளர்வதோடு அதற்கு ஊட்டச்சத்தும் கிடைத்து விடுகிறது நம் வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தும் வெங்காயத்தோல் பழ தோல் போன்றவற்றை இந்த செடிகளுக்கு உரமாக பயன்படுத்தலாம் இதனால் செடிகளும் நன்கு வளரும் அதில் வளர்ந்த காய்கறிகளை சாப்பிடுவதால் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கிடைக்கிறது இந்த செடிகளில் முதலில் வளர்ந்த மிளகாய் மற்றும் வெண்டைக்காய் கத்திரிக்காய் போன்றவற்றை செடியிலேயே நின்று நன்கு காயும் வரை விட்டுவிட்டு அதனை வெயிலில் நன்கு காய வைத்து மழைக்கால துவக்கத்தில் அதன் விதைகளை பதியமிட வேண்டும் விதைகளைத் தூவினால் நீர் ஊற்றாமல் மழைக்காலத்தில் நன்கு செழித்து வளர்ந்து விடும் இப்படி செய்வதால் நமக்கு விதைகளும் கிடைக்கிறது நல்ல செடிகளை மீண்டும் பயிர் செய்ய ஏதுவாகிறது.. #நான் எடுத்த மொபைல் போட்டோ #என் வீட்டு தோட்டத்தில்# #என் வீட்டு தோட்டத்தில் #என் வீட்டுத் தோட்டத்தில் #என் வீட்டுத் தோட்டத்தில்
11 likes
2 comments 15 shares
🎵Dad's Princess💖🎵
782 views 1 months ago
என் வீட்டுத் தோட்டத்தில் நான் வளர்த்த செடிகள் பூத்துக் குலுங்குவதை பார்க்கும் பொழுதெல்லாம் என் மனதில் என் ஆழ் மனதில் உள்ள அத்தனை வலிகளும் சிறிது இளைப்பாறுகிறது அந்த நேரங்களில் எல்லாம் எனக்கு பிடித்த ஏதேனும் ஒன்றில் என்னை மறந்து நான் லயித்து கொண்டிருப்பேன் இப்படித்தான் என் வலிகளை நான் இளைப்பாறவிடுகிறேன்..... செடிகளுக்கு நீட்டெடுக்கும் பொழுதெல்லாம் பூக்களை ரசிக்கும் பொழுதெல்லாம் மலர்களைப் பறிக்கும் பொழுதெல்லாம் மலர்களை தொடுத்து கொண்டிருக்கும் பொழுதெல்லாம் அந்த தொடுத்த மலர்களை இறைவனுக்கு அணிவித்து அதை ரசித்து கொண்டிருக்கும் பொழுதும் இப்படி ஒவ்வொரு பொழுதுகளிலும் நமக்கான மனபாரங்களை மறந்து இந்த உலகில் நாமும் ஒரு ஓரமாக வாழ்ந்து விட்டுச் செல்வோமே..., #📝என் இதய உணர்வுகள் #🌙இரவு காதல் கவிதைகள்💕✍️ #💔ஒரு தலை காதல் கவிதைகள்📜 #நான் எடுத்த மொபைல் போட்டோ #என் வீட்டு தோட்டத்தில்#
13 likes
2 comments 13 shares
🎵Dad's Princess💖🎵
733 views 1 months ago
என் வீட்டுத் தோட்டத்து பூக்கள் என் வீட்டுத் தோட்டத்தில் மலர்ந்த பவிழமல்லி மலர்கள் 💮 இதனை சிலர் பாரிஜாதம் என்றும் கூறுவார்கள் இரவில் பூக்கும் இந்த மலரை பறிக்க வேண்டிய அவசியம் இல்லை தானாகவே உதிர்ந்து விடும் பாரிஜாதம் இரவில் பூக்கும் என்பார்கள் இந்த பவிழமல்லியும் இரவில் தான் பூக்கிறது ❤️ #நான் எடுத்த மொபைல் போட்டோ #என் வீட்டு தோட்டத்தில் #என் வீட்டு தோட்டத்தில்# #என் வீட்டு தோட்டத்தில் காய்த்த பலா
8 likes
1 comment 6 shares