நரசிம்ம அவதாரம்
15 Posts • 11K views
*சிம்ஹக்ன மூர்த்தி* (சரபேஸ்வர மூர்த்தி): இரண்யகசிபுவைக் கொன்ற நரசிம்மத்தின் அகந்தையை அழிக்க சிவபெருமான் கொண்ட கோலமே "சிம்ஹக்ன மூர்த்தி யாகும். இவரை தரிசிக்க கும்பகோணம் அருகேயுள்ள "திருபுவனம் செல்ல வேண்டும். இங்கேயுள்ள சரபமூர்த்திக்கு ராகுகாலத்தில் விளக்கேற்றி சகஸ்ரநாமம் சொல்ல திருமணம் கைகூடிவரும். தடைகள் விலகிடும். இவர் முன்பு சர்ப யாகம் செய்தால் பகைவர்கள் விலகிடுவர். சென்னையில் கோயம்பேட்டிலுள்ள குறுங்காலீஸ்வரர் கோவிலில் சர்ப மூர்த்திக் கோயில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை ராகுகாலங்களில் இங்குள்ள சர்ப மூர்த்தியை வழிபட்டால் நினைத்து நடைபெறுகிறது, பதவி உயர்வு கிடைக்கிறது . குடும்ப அமைதி பெருகுகிறது. இவர்க்கு திராட்சை ரச அபிசேகம் செய்ய திடமான உடல்வாகு கிடைக்கும். செந்நிற தாமரைமலர் அர்ச்சனையும், பானக நைவேத்தியமும் பிரதோஷம், திங்கற்கிழமையில் கொடுக்க வெற்றி, தடைஅகன்று விடும். சந்தோஷமான அமைதியான குடும்ப வாழ்வு ஏற்படும். திருபுவனம் சிம்ஹக்ன மூர்த்தி படம் கீழே!👇🏻👇🏻 🚩🕉🪷🙏🏻 #ஸ்ரீ நரசிம்ம பெருமாள் #நரசிம்ம அவதாரம் #🙏🏼ஓம் நமசிவாய #🙏கோவில் #தினம் ஒரு கோயில்
14 likes
12 shares