#✝பைபிள் வசனங்கள் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பிரார்த்தனை ##⛪வேளாங்கன்னி சர்ச் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 காலை ஜெபம்*
"விண்ணுலகில் உள்ளவையே, ஆண்டவரைப் போற்றுங்கள்; உன்னதங்களில் அவரைப் போற்றுங்கள். அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள்; அவருடைய படைகளே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள். உலகின் அரசர்களே, எல்லா மக்களினங்களே, தலைவர்களே, உலகின் ஆட்சியாளர்களே, இளைஞரே, கன்னியரே, முதியோரே மற்றும் சிறியோரே, நீங்கள் எல்லாரும் ஆண்டவரைப் போற்றுங்கள். அவர்கள் ஆண்டவரின் பெயரைப் போற்றுவார்களாக; அவரது பெயர் மட்டுமே உயர்ந்தது; அவரது மாட்சி விண்ணையும் மண்ணையும் கடந்தது. அவர் தம் மக்களின் ஆற்றலை உயர்வுறச் செய்தார்; அவருடைய அனைத்து அடியாரும் அவருக்கு நெருங்கிய அன்பார்ந்த மக்களாகிய இஸ்ரயேல் மக்களும் அவரைப் போற்றுவார்கள்".
(திருப்பாடல் 148: 1-2, 11-14)
என்றும் வாழும் எல்லாம்வல்ல எம் இறைவா! உம் திருமுன் பணிந்து, உம்மை ஆராதிக்கின்றேன். எல்லாவற்றிற்கும் மேலாக, உம்மை நான் மிகுந்த அன்பு செய்கின்றேன். நீர் அளித்துள்ள அனைத்து நன்மைகளுக்கும் உமக்கு நன்றி கூறுகின்றேன்.
இன்றைய நாளில் உம்மை மகிமைப்படுத்த, என்னை மீண்டும் எழுப்பியுள்ளீரே, ஆண்டவரே! உமக்கு நன்றி செலுத்துகிறேன். இன்றைய நாளை உம்மிடமே ஒப்படைக்கின்றேன். உம் அன்பினால் எம்மை வழிநடத்தும். தூய ஆவியானவரை எனக்கு துணையாக அனுப்பும்.
இயேசுவே! நீரே ஆண்டவர் என்று உம்மீது நம்பிக்கை கொள்ளவும், ஒளியாகிய உம்மை எல்லா சூழ்நிலையிலும் முழுமையாக நம்பிடவும்; துன்ப வேளைகளிலும், சோர்ந்த நேரங்களிலும் உம்மை இறுகப் பற்றிக்கொண்டு, உமது வழியில் நாங்கள் பயணிக்கவும் எங்களுக்கு நீர் அருள்புரிவீராக.
உண்மையை நோக்கி எங்களை எப்பொழுதும் வழிநடத்தும் எங்கள் துணையாளராம் தூய ஆவியானவர், எங்களைக் குறித்த இறைவனின் திருவுளத்தை நாங்கள் அறியவும், அதன்படி நடக்கவும் எங்களை அறிவுறுத்துவாராக!
இயேசு மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
*ஆமென்.*
விண்ணகத்தில் இருக்கிற...(1)
அருள் நிறைந்த ...(3)
பிதாவுக்கும், சுதனுக்கும்...(1)
*ஆமென்.*