சிறகடிக்க ஆசை சீரியல் 👩‍❤️‍👨📺
285 Posts • 1M views
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி பற்றிய உண்மை தெரிந்தும் குடும்பத்தினரிடம் அதை சொல்ல முடியவில்லையே என்கிற குற்ற உணர்ச்சியால் செம அப்செட்டில் இருக்கிறார் மீனா. அவரின் நடவடிக்கையில் மாற்றம் தெரிவதால், அவருக்கு என்ன ஆனது என்பதை கண்டுபிடிக்க முனைப்பு காட்டும் முத்து, தன் நண்பனிடம் அவள் ஊருக்கு சென்று வந்ததில் இருந்து தான் இப்படி இருக்கிறாள் என்று சொல்ல, அதற்கு அவர், அப்போ ஊரில் தான் ஏதாச்சும் நடந்திருக்கும் என கூறுகிறார். உடனே முத்துவும் ஊரில் ஒரு சாமியாடியை பார்த்ததால் தான் மீனா இப்படி இருக்கிறாள் என சொல்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம். முத்து வீட்டுக்கு வந்ததும், மீனா இத்தனை நாள் டல்லாக இருப்பதற்கான காரணத்தை தான் கண்டுபிடித்துவிட்டதாக கூறுகிறார். என்ன நடந்தது என அண்ணாமலை கேட்டதும், அவள் மூடி மறைக்கும் விஷயம் நம்ம பாட்டியோட ஊரில் தான் இருக்கு என முத்து சொன்னதும், ஐய்யயோ நம்மைப் பற்றி தான் இவன் சொல்லப்போகிறானா என வெட வெடத்துப் போகிறார் ரோகிணி. ஊரில் நடந்த ஒரு விஷயத்தால் தான் மீனா இப்படி இருக்கிறாள். அது என்ன விஷயம் என்பதையும் நான் கண்டுபிடித்துவிட்டேன். பாட்டி ஊர்ல மீனா பார்த்த விஷயம் தான் அவளின் இந்த நிலைக்கு காரணம் என முத்து சொல்ல, மீனாவும் பதறிப்போகிறார். இவருக்கு எப்படி உண்மை தெரிஞ்சிருக்கும் என மீனா மனசுக்குள்ளேயே கேட்டுக் கொண்டிருக்க, உண்மையை நான் சொல்லவா இல்லை நீயே சொல்றியா என முத்து கேட்க, இவரு என்ன சொல்றாருனு எனக்கு புரியல என மீனா சொன்னதும், சரி நானே சொல்கிறேன் என முத்து தான் கண்டுபிடித்த விஷயத்தை சொல்கிறார். நம்ம ஊருக்கு சென்றபோது கோவிலில் மீனாவிடம் வந்து ஒரு சாமியாடி அவளை ஊரைவிட்டே போயிடு என சொன்னார். அதனால் தான் மீனா பயந்து இருக்கிறாள். அவன் பேசுனதில் ஏதாவது அர்த்தம் இருக்குமோ என நினைத்து பயந்துபோய் இருக்கிறாள் என சொல்கிறார் முத்து. பின்னர் மீனாவை ஒரு பெண் சாமியாரிடம் அழைத்து சென்று அவளுக்கு மந்திரித்த கயறு ஒன்றை கட்டிவிடுகிறார் முத்து. அப்போது அங்கு வரும் சிந்தாமணி, தன்னுடைய பெண்ணுக்கு கல்யாணம் எப்போ நடக்கும் என அந்த பெண் சாமியாரிடம் கேட்க, அதற்கு அவர் சீக்கிரமே நடக்கும், அதுவும் உன்னுடைய விருப்பம் இல்லாமல் நடக்கும் என ஒரு குண்டை தூக்கிப் போடுகிறார். அதுமட்டுமின்றி உன்னுடைய பொண்ணு ஏற்கனவே மாப்பிள்ளை பார்த்துவிட்டதாகவும் கூறுகிறார். இதனால் சிந்தாமணி குழம்பிப் போகிறார். இரவில் முத்துவிடம் ரோகிணியை பற்றிய உண்மையை முத்துவிடம் கூறிவிடுகிறார் முத்து. ரோகிணி தான் கல்யாணி என்றும், கிரிஷ் அவருடைய பையன் தான் என்றும் மீனா சொன்னதை கேட்டு முத்து ஷாக் ஆகிறார். அநேகமாக இது கனவாக இருக்க வாய்ப்பு உள்ளது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம் #சிறகடிக்க ஆசை சீரியல் 👩‍❤️‍👨📺 #💖சிறகடிக்க 🐦 ஆசை💖 #⭐விஜய் தொலைக்காட்சி #📺எனக்கு பிடித்த சீரியல்
10 likes
4 shares
Senthilvel Achari
745 views 12 days ago
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026, ஜனவரி 13ஆம் தேதிக்கான எபிசோடில் மீனாவுக்கு திடீரென மயக்கம் ஏற்பட, அவரை ஸ்ருதி ஹாஸ்பிடலுக்கு கூட்டிக்கொண்டு போயிருக்கிறார். அதே நேரத்தில் ரோகிணி முத்து மற்றும் மீனாவின் வாழ்க்கையை சீரழிக்க புது பிளான் போடுகிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம். சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மனோஜ் தூக்கத்திலேயே எல்லோரும் தன்னை அசிங்கப்படுத்துவது போல கனவு காண்கிறார். அதனால் எல்லாரும் என்னை அசிங்கப்படுத்தாதீங்க, கிண்டல் செய்யாதீங்க என்று கத்திக் கொண்டிருக்கிறார். அப்போது விஜயா வந்து என்னாச்சுடா? எதற்காக இப்படி கத்திக்கிட்டு இருக்க என்று கேட்கிறார். அதற்கு மனோஜ் எல்லாரும் என்னை அசிங்கப்படுத்துறாங்கம்மா நான் என்ன தப்புமா பண்ணினேன் என்று அழுது கொண்டிருக்கிறார். அதற்கு விஜயா அவரை சமாதானம் செய்கிறார். அவள் பண்ணுன தப்புக்கு நீ என்னடா பண்ணுவ? நீ ஏன்டா அழுகுற? உனக்காக நான் இருக்கிறேன், கவலைப்படாத என்று ஆறுதல் சொல்கிறார். மறுபக்கத்தில் முத்து தன் மீது கோபத்தை இருப்பதால் அவர் பேசிய விஷயங்களை நினைத்துக் கொண்டு மீனா ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கிறார். அப்போது கார் ஒன்றில் தவறி விழப் போகிறார். அந்த கார் டிரைவர் உடனே பிரேக் போட்டு நிறுத்தி விட அப்போது அந்த பக்கமாக வந்து ஸ்ருதி மற்றும் ரவி ஓடி வந்து மீனாவை பிடித்துக் கொள்கின்றனர். காரில் இருந்தது செல்வம் என்பதால் செல்வம் என்னாச்சுப்பா ஏன் இப்படி ரோட்டில் கவனம் இல்லாமல் நடந்து போற என்று விசாரிக்கிறார். அப்போது மீனா மயங்கி விழுந்து விடுகிறார். பிறகு ரவியும் ஸ்ருதியும் ஹாஸ்பிடலுக்கு கூட்டிக்கொண்டு போகின்றனர். அங்கு இவர் சரியாக சாப்பிடவில்லை என்று டாக்டர் சொல்கிறார். பிறகு மீனாவை அவருடைய அம்மா வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போகின்றனர். இவ்வளவு பிரச்சனைக்கு காரணம் நீங்க சாப்பிடாதது தான் அதனால சாப்பிடுங்க என்று சொல்ல அதற்கு மீனா மறுக்கிறார். அப்போது முத்து வந்து திட்டுகிறார்‌. ஆனாலும் மீனா சாப்பிட முடியாது நான் தப்பு பண்ணிட்டேன் எனக்கு நானே தண்டனை கொடுத்துக்கொள்கிறேன் என்று அழுது கொண்டிருக்கிறார். உடனே ஸ்ருதி அண்ணாமலைக்கு போன் போட்டு அவரை வரவழைக்கிறார். அப்போது சீதாவும் வந்து தன்னுடைய அக்காவை சாப்பிட சொல்லி கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் சிந்தாமணி வீட்டில் இருக்கும் ரோகிணியிடம் சிந்தாமணி இனி நீ இந்த வீட்டில் இருக்க வேண்டாம் எனக்கு இன்னொரு வீடு இருக்கு அங்க போய் இருந்துக்கோ, இந்த வீட்டில் இருந்தால் மாஸ்டருக்கு விஷயம் தெரிஞ்சா அவங்க என்னை திட்டுவாங்க அதனால நீ வேற வீட்டில் இருக்கிறது தான் நல்லது என்று சொன்னதும் சரி என்று சொல்கிறார். பிறகு ரோகிணி, எனக்கு இனி எதிரி அந்த முத்துவும் மீனாவும் தான் அவங்களை பழி வாங்குவேன். அதோட என் புருஷன் கூட நான் எப்படியாவது சேர்ந்து வாழணும், அதற்கு மாமியார் ஒத்துக்கலைன்னா அவங்க கிட்ட இருந்து என் புருஷனை பிரிச்சு கூட்டிட்டு வருவேன் என்று சொல்ல, அதற்கு சிந்தாமணி நான் உனக்கு சப்போர்ட் பண்ணுவேன் என்று சொல்கிறார். பிறகு ரோகிணி போனதும் சிந்தாமணியின் ஆள் வந்து எதுக்காக இந்த பொண்ணுக்கு இவ்வளவு சலுகை கொடுக்குறீங்க என்று கேட்க, இவளை வச்சு தான் அந்த குடும்பத்தை உடைக்கணும். அந்த வீட்டை எழுதி வாங்கணும், அந்த வீடு பழமையானது... ரெண்டு கிரவுண்ட் இருக்கும் அதனால அதை நாம கைப்பற்றனும் அதற்காக அந்த மனோஜ்க்கு நிறைய பணம் கொடுத்து அவனுக்கு வட்டிக்கு மேல வட்டி போட்டு அந்த வீட்டை என் பேருக்கு எழுதி வாங்கணும் என்று சிந்தாமணி சொல்கிறார். அதோடு மீனாவின் வாழ்க்கையையும் நான் கெடுக்கனும் என்று சிந்தாமணி வில்லியாக தன்னுடைய பிளானை சொல்கிறார். மறுபக்கத்தில் அண்ணாமலை மீனாவின் வீட்டிற்கு வருகிறார். அவரை பார்த்ததும் மீனா அவருடைய காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். பிறகு அண்ணாமலை எனக்கு மீனா மீது கோபம் இல்ல, கொஞ்சம் வருத்தம் தான் இருந்தது அதற்காக சாப்பிடாமல் இருக்க கூடாது என்று அட்வைஸ் சொல்லிவிட்டு போகிறார். அவர் போனதும் முத்து மீனாவை சமாதானம் செய்து சாப்பிட வைக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோட் முடிவடைகிறது. #சிறகடிக்க ஆசை சீரியல் #சிறகடிக்க ஆசை #சிறகடிக்க ஆசை சீரியல் 👩‍❤️‍👨📺 #⭐விஜய் தொலைக்காட்சி #📺எனக்கு பிடித்த சீரியல்
6 likes
4 shares