🪴சனிகிழமை வணக்கம் 🪴
2K Posts • 2M views
#✡️புரட்டாசி ஸ்பெஷல் ஜோதிடம் #🙏புரட்டாசி சனி கிழமை🙏 #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻 #📅பஞ்சாங்கம்✨ #🪴சனிகிழமை வணக்கம் 🪴 நலம் தரும் கோடியம்மன் கோவில்💚⚛️ 🏵️வடகிழக்காக ஈசானிய மூலையில் அம்பிகை அமர்ந்திருப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது. 🏵️ஆலயத்தின் அருகே வெண்ணாறு பாய்ந்து கொண்டிருக்கிறது. 🏵️முன்னொரு காலத்தில் சோலைகள் சூழ்ந்த,அழகாபுரி என்னும் தஞ்சையில் பராசரர் என்ற முனிவர் தவம் இயற்றிக் கொண்டிருந்தார்.அப்போது தாரகன்,தஞ்சகன் என்ற அரக்கர்கள் முனிவரின் தவத்துக்கு இடையூறு செய்து கொண்டி ருந்தனர். 🏵️அரக்கர்கள் இருவரும் சிவன்,விஷ்ணு,பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளிடம் வரம் பெற்றிருந்த காரணத்தால்,அவர்களை அழிக்க முடியாது என்று கருதிய முனிவரும் தேவர்களும்,அன்னை பராசக்தியிடம் சரணடைந்தனர். 🏵️தஞ்சபுரீஸ்வரர் என்னும் சிவாலயத்தில் மேற்கு நோக்கிய ஈஸ்வரனும்,தெற்கு நோக்கிய ஆனந்தவல்லி என்ற அம்பிகை யும் வீற்றிருப்பதைக் கண்டு,அந்த அன்னையிடம் தங்களைக் காத்தருளும்படி வேண்டி நின்றனர்.இதையடுத்து ஆனந் தவல்லி விஸ்வரூபம் எடுத்து,கோடி உருவங்களாக மாறி போர்க்கோலம் பூண்டு,அரக்கர்களை வதம் செய்தாள். 🏵️அன்னை கோடி உருவம் பெற்றதால், #கோடியம்மன் என்ற பெயர் ஏற்பட்டது. 🏵️அன்னையால் வதம் செய்யப்பட்ட தஞ்சகன் என்ற அரக்கன்,இறக்கும் தருவாயில் வேண்டிக் கொண்டபடி,தஞ்சன் ஊர் என்பதே ‘தஞ்சாவூர்’ஆனதாக வரலாறு கூறுகிறது. 🛕கோவில் அமைப்பு🛕 🌸இந்த ஆலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை.தோரண வாயிலைக் கடந்து உள்ளே சென்றால்,விநாயகரும்,பாலமுருகனும் இருபுறமும் காட்சி தருகின்றனர். 🌸கோவிலுக்கு முன்பு காவல் தெய்வமான மதுரை வீரன் ஒரு சன்னிதியிலும்,அய்யனார் பூரணம்,பொற்கொடி ஆகிய கிராம தேவதைகள் மற்றொரு சன்னிதியிலும் கிழக்கு பார்த்து வீற்றிருக்கின்றனர்.பலிபீடமும், அதன் அருகே நந்தியும் உள்ளது. 🌸இத்தல அன்னை சிவசக்தி சொரூபம் என்பதால் நந்தி வாகனமாக இருக்கிறது. 🌸மகா மண்டபத்தின் உட்புறம்,அரக்கர்களை அழிக்க அம்பாள் எடுத்த அவதாரமும்,போர் நிகழ்வுகளும் அழகிய வண்ணங்களில் ஓவியமாக தீட்டப்பட்டு கண்களைக் கவருகின்றன. 🌸துவார சக்திகள் இரு புறமும் நிற்க,அர்த்த மண்டபத்தில் விநாயகரும்,பச்சைக் காளியும்,பவளக்காளியும் இரு புறங்களிலும் கற்சிலைகளாக காட்சி தருகின்றனர். 🌸அபிஷேகம் என்றால் இவர்களுக்குத் தான்.உள்ளே கோடியம்மன் ‘வெற்றி தேவதை’யாக அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். 🌸வன்னி மரத்தினை பீடமாகக் கொண்டு,முழுவதும் சுதையினால் ஆன அன்னை,சிவப்புத் திருமுகம் காட்டி திரிசூலத்தைக் கீழே பாய்ச்சிய படி எட்டு கரங்களுடன் அருள்மழை பொழிகிறாள். 🌸திருமணத் தடை நீங்கவும்,மகப்பேறு கிடைக்கவும் பெண்கள் இத்தல அன்னையை வழிபாடு செய்கிறார்கள். 🌸மேலும் சாலை ஓரமாக இருப்பதால் வாகன ஓட்டிகளின் காவல் தெய்வமாகவும் இந்த அன்னை விளங்குகிறாள்.கண் திருஷ்டி விலகவும்,பகை வெல்லவும்,வறுமை நீங்கவும் கண்கண்ட தெய்வமாக கோடியம் மனைக் கும்பிடுகிறார்கள். 🌸தேவியைத் தரிசித்து விட்டு பிரகாரம் வலம் வரும் போது,தென் கிழக்குப் பகுதியில் கணபதி,சிவன்,சிவதுர்க்கை,விஷ்ணு துர்க்கை,கால பைரவர் ஆகிய மூர்த்தங்கள் உள்ளன. 🌸இயற்கையிலேயே பசுமை வண்ணத்தில் பச்சைக் காளியாக இருக்கும் பராசக்தி,அரக்கனை அழிக்கப் புறப்பட்ட போது, கோபத்தின் காரணமாக சிவப்பு நிற பவளக் காளியாக மாறினாள். 🌸எனவே,இந்த ஆலயத்தில் நடைபெறும் பச்சைக்காளி, பவளக்காளி விழா இத்தலத்தின் தனிச்சிறப்பு. 🌸தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் சித்திரைத் திருவிழாவிற்கு 15 நாட்களுக்கு முன்பாக,கோடியம்மன் கோவிலில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது முதல் திங்கட்கிழமை ‘அய்யனார் காப்பு’என்றும், செவ்வாய் ‘அம்மன் முதல் காப்பு’என்றும், அதற்கடுத்த செவ்வாய் ‘அம்மன் இரண்டாம் காப்பு’என்றும் சொல்லப்படுகிறது. 🛣️அமைவிடம்🛣️ தஞ்சையின் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் திருவையாறு செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ளது கோடியம்மன் கோவில். 🙏⚛️ௐ சக்தி பராசக்தி⚛️🙏 🙏💚#சர்வம் #சக்திமயம்💚🙏
27 likes
16 shares
#முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # #✡️புரட்டாசி ஸ்பெஷல் ஜோதிடம் #🙏புரட்டாசி சனி கிழமை🙏 #🪴சனிகிழமை வணக்கம் 🪴 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 *கோபால் சாமி* *கோவில் - ஓர்* *அதிசயம்.* சுமார் 900 வருடங்களுக்கு முன்பு திருமங்கலத்திலிருந்து தெற்கே 20 கி.மீ. தொலைவில் "மோதகம் " என்ற இடத்தில் இருக்கும் ஒரு குன்றின் மேல் கட்டப்பட்ட குடவரைக் கோவில். இன்றைக்கு மோதகம் என்றழைக்கப்பட்ட அந்த ஊர் இல்லை. முழுக்க முழுக்க கருங்கல்லால் ஆன மண்டபங்கள், அவற்றைத் தாங்கும் பிரமாண்ட தூண்கள், அதில் திருமாலின் பல்வேறு அவதாரங்களை விளக்கும் சிற்பங்கள் என அனைத்தையும் ஒரே ஒரு செங்குத்துப் பாறை போன்ற ஒரு குன்றில், குன்றைக் குடைந்து அடிவாரத்தில் அரங்கநாதருக்கு ஒரு குடவரைக் கோயிலும், குன்றின் மேல் கோபால் சாமிக்கு ஒரு கோவில் என இரு வகையானக் கோயில்களைக் அக்காலத்தில் கட்டியிருக்கிறார்கள். வழக்கம்போல பாறைகளை எப்படி எதை வைத்துப் பிளந்தார்கள்? எப்படி சிற்பங்களை செதுக்கினார்கள்? எப்படி கீழிருந்து மேலே கொண்டு சென்றார்கள் போன்ற. வியப்புகளையெல்லாம் தாண்டி, அதிசயிக்க வைக்கும் ஒரு விசயம் Nature ventilation by air circulation - அதாவது இயற்கையின் துணை கொண்டு அமைக்கப்பட்ட காற்றோட்டம். குன்றின் மேல் கோபால் சாமி சந்நிதி மிகக்குறுகியது. மிக அதிகம் புளுக்கம் கொண்ட இடம். அந்த இடத்தில் குளுகுளு காற்றோட்டத்தை அதுவும் 900 வருடங்களுக்கு முன்னர் இயற்கையான முறையில் உருவாக்கியிருப்பது "காற்றோட்ட அறிவியலின் உச்சம் " நம் வியப்பிற்கெல்லாம் சிகரம் வைத்தார்போல் இருப்பது அறிவியலால்கூட. விளக்க முடியாமல் இருப்பது. அந்த செங்குத்துக் குன்று இரண்டாகப் பிரிந்து, அதில் கருடன் கை கூப்பி வணங்கியது போன்ற ஒரு சிலை மாதிரியான அமைப்புத் தெரியும். உண்மையில் இது சிலையுமல்ல! யாரும் செதுக்கியதும் அல்ல! கருடன் தன் முதுகில் கோபால் சாமியை வைத்துக் கொண்டு வணங்கியது போல, தானாகவே காற்றின் போக்கால் இயற்கையாக அமைந்தப் பாறை. இதை இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட இந்தக் கோணத்தில் பார்த்தால் மட்டுமே தெரியும்.✍🏼🌹
7 likes
3 shares