இதுவும் கடந்து போகும்
#

இதுவும் கடந்து போகும்

மனைவி கணவனுக்கு எழுதி வைத்துவிட்டு போன சிறு குறிப்பு: *நான் எங்க அம்மா வீட்டுக்கு குழந்தைகளோட போறேன்.* திரும்பி வர 10 நாளாகும். ------------------- நண்பர்களை அழைத்து கொட்டமடிக்க வேண்டாம். போனமுறை சோஃபா பின்னாலிருந்து நாலு பாட்டிலும் சிகரெட் பாக்கெட்டும் எடுத்தேன். -------------------------- பாத்ரூம் சோப் கேசில மொபைல மறந்து வச்சிராதீங்க. போன முறை தேடி அலைஞ்சப்ப அங்க கண்டு எடுத்தேன்.. ------------- மூக்குக்கண்ணாடி அதன் பாக்சில் வைக்கவும். போன முறை ஃப்ரீட்ஜில் இருந்தது. ----------------- வேலைக்காரிக்கு சம்பளம் தந்தாச்சு. உங்க தாராள மனச காட்ட வேண்டாம். ----------------- காலைல பக்கத்து வீட்டுக்கு பேப்பர் போட்டாச்சான்னு daily அவங்ககிட்ட வழிய வேண்டாம். நம்ம பேப்பர்காரன் வேற. ------------------------- சமையல் கட்டு பக்கம் போக வேணாம் ஸிங்க்கு காவி கலருக்கு மாத்தினீங்கன்னா சும்மா இருக்க மாட்டேன் --------------- சாமி படத்துக்கு விளக்கேத்துங்க ரெண்டு ஸ்லோகம் சொன்னா நாக்கு வெந்துடாது ------------------------ வாக்கிங் போறப்போ டீ ஷர்ட் போட்டுக்கோங்க ஜிப்பா வேணாம் ஜிப்பா கலர்ல Free size சுடிதார் டாப்ஸ் இருக்கு அனிதா அன்னிக்கு சிரிச்சா --------------------- Food coupon க்ரெடிட் கார்டு எங்கிட்ட இருக்கு... பீரோவ உருட்ட வேணாம் ------------------- ரெண்டு Securityக்கும் நூறு நூறு ரூபா கொடுத்திருக்கேன் நீங்க லேட்டா வந்தா Gate தெறக்க *வேண்டாம்னுட்டு* -------------------- பால் ஒரு வாரத்துக்கு வேண்டாம்னுட்டேன் அங்க ஸீன் க்ரியேட் பண்ணாம வெளில போய் சாப்பிடுங்க ---------------------- உங்க உள்ளாடைகள் பீரோவில் வலது புறமும் குழந்தைகளோடது இடது புறமும் இருக்கு. மாத்தி போட்டுட்டு Uncomfortable லா இருந்ததுனு ஆஃபீசுல இருந்து புலம்பாதீங்க. ----------------- அன்னன்னிக்கு அவுத்து போடறத தண்ணில நனச்சு காயப்போடுங்க. வளத்தவங்கள சொல்லனும் ----------------------- தூங்கி எழுந்த உடனே பால்கனில நின்னுகிட்டு பல் தேய்காதீங்க.. A.M. மா... P.M. மா... Confirm பண்ணிட்டு பால்கனிக்கு வாங்க ----------------------- உங்க medical report பர்ஃபெக்ட்டா இருக்கு. அந்த லேடி டாக்டரை பாக்கவேண்டிய அவசியமில்லை. ----------------- என் தங்கையின் பிறந்தநாள் போன மாசமே நாம அட்டண்ட் பண்ணியாச்சு. முடிஞ்சிடிச்சி. நடு ராத்திரில விஷ் பண்றேன் பேர்வழின்னு வழிய வேணாம் --------------- பத்து நாள் wi-fi cut. password மாத்திட்டேன். நிம்மதியா தூங்குங்க. ------------------ அப்றம் என் தோழிகள் எல்லாமே Out of station. . ------------------ கட்டக் கடேசியா ஒண்ணு. ரொம்ப புத்திசாலித்தனமா நடந்துக்கறதா நினச்சி ஏதும் பண்ண வேண்டாம். நான் எப்ப வேணாலும் திரும்பி வந்துருவேன். சொல்லாம. !!! ----------------------- *இவள பொண்டாட்டியா கட்டுனதுக்கு ரெண்டு போண்டா டீ சாப்பிட்டு தூங்கியிருக்கலாம்* *என்னா வில்லத்தனம்...*😂😂
172 காட்சிகள்
5 மாசத்திற்கு முன்
#

இதுவும் கடந்து போகும்

*தாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு* ************************ 🌷தலைக்கு மேல் /* நான் தூக்கி கொஞ்சிய /* என் தங்க மகன்/* என் தலைக்கு மேல் /* வளர்ந்து நிற்கிறான் /* ஒரு பயம் எனக்கு /* எப்போதாவது ஒருநாள் /* என் விசயத்தில் தலையிடாதே /* என்று சொல்லிவிடுவானோ என்று /* மகனே மறந்தும்/* அப்படி சொல்லிவிடாதே /* மரணித்து போய்விடுவேன் /* சின்ன வயதில்/* நீ அடிக்கடி கேள்விகேட்ப்பாய் /* நான் சலிக்காமல் பதில் சொல்வேன் /* என் வயதான காலத்தில்/* நானும் உன்னிடம் குழந்தை போல்/* வினா எழுப்பக்கூடும் /* கத்தாதே வாயை மூடு /* என்று சொல்லிவிடாதே /* வலி தாங்க முடியாத பாவி நான் /* வீடெல்லாம் நீ இறைத்து வைத்த /* சோற்றுப் பருக்கையை /* என் விரல்களால் கூட்டி அள்ளுவேன் என் முதிர் வயதில் /* என் வாய்க்கொண்டு செல்லும்/* உணவு தட்டி தரையில் விழக்கூடும் /* தவறியும் என்னை திட்டாதே /* தாங்க முடியாது என்னால் /* என் சிறுநீர் பை /* பலம் இழந்திருக்கக்கூடும் /* சில இடங்களில் /* சிறுநீர் சிந்தியிருக்க கூடும் /* இச்.......சீ என்று முகம் சுழிக்காதே /* என் முந்தானையில் /* உன் சிறுநீர் வாசம் /* இன்னும் மறையவேயில்லை/* மயானம் நடந்து போக/* திராணி இருக்கும்போதே/* நான் இறந்துவிடவேண்டும் /* மறந்தும் முதியோர் இல்லத்தில் /* என்னை மூழ்கடித்துவிடாதே /* ஒரு வருடம் /* உனக்கு ரத்ததானம் செய்தவள் நான் என் ரத்தத்தை/* பாலாக்கி பருக செய்தவள் நான்/* பரதேசியாய் என்னை பரிதவிக்க விட்டுவிடாதே /* நான் இறப்பதற்குள் /* ஒரு முறையாவது /* உன் மடியில் என்னை உறங்க வை /* என் உயிர் பிரியும் நேரம் /* நீ என் பக்கத்தில் இரு /* கரம் கூப்பி கேட்கிறேன் / ***_இதை நான் எழுதுவது ஏன் தெரியுமா ? இதை படித்து என் எண்ணம் அறிவாய் / என்னை அறிவாய்/ என்னை நேசிப்பாய் / என்ற நம்பிக்கையில் அல்ல* ஒவ்வொரு தாயின்/* உணர்வும் இதுதான்_ /*** என்பதை நீ உணர வேண்டும் /* பெண்மையை நீ மதிக்க வேண்டும்/* இதை படித்து நீ அழுவாய் /* என்று எனக்குத் தெரியும் /* அழாதே பெண்மையை மதி /* அதுபோதும் நன்றி மகனே/*🌷
170 காட்சிகள்
6 மாசத்திற்கு முன்
#

இதுவும் கடந்து போகும்

அதிக விஷயம்... விஷம். -------------------------------------- சிந்திக்க! இடது பக்கமாக படுங்க என்றார் ஒருவர். படுத்தேன். வலது பக்கமாக படுங்க என்றார் இன்னொருவர். படுத்தேன். குப்புற படுக்காதீங்க என்றார். மல்லாக்க படுக்காதீங்க என்றார் இன்னொருவர்.. படுக்கவிடாமல் படுத்தாறங்களே. உருளைக்கிழங்கு அளவோடுதான் ருசியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். வாயு என்றார்... வாயில் படுவதை மறந்தேன்... உலக நாடுகளில் இது மட்டும்தான்... வேற வழியில்லை.. சாப்பிடுங்க என்றார்கள்... இனிப்பை தொட்டுவிடாதீர்கள் அவ்வளவுதான்.. Sugar ஏற்றிவிடும் என்றார்... சரி என்று நிறுத்தினேன். நடக்கும் போது நண்பர் சொன்னார், low sugar ஆகிவிடும், பாத்துக்குங்க.. அப்பப்ப கொஞ்சம் சாப்பிடுங்க என்றார்.. இப்படித்தான் குளிக்க வேண்டும் என்றார்... ஐயோ, தப்பு, அப்படி குளிங்க என்றார்... குளிக்கக்கூட சுதந்திரம் இல்லை... தந்திரமா குளிக்கனும் என்றார்.. காபி, டீ வேண்டாம், அரிசி கஞ்சி வேண்டாம் பால் வேண்டாம் ஐஸ் வாட்டர் வேண்டாம் பாட்டில் ஜீஸ் வேண்டாம் என்றார்கள்... சரி என்று பழகினேன்.. ஒன்று புரிந்தது. ஒன்றும் தெரியாமல் இருந்தாலும் ஆபத்து, அதிகமாக தெரிந்தாலும் ஆபத்து என்று. Over qualification is disqualification என்று எங்கோ படித்த நினைவு Too much informations will make you to suffer from distinguishing between useful And useless informations. நல்லா போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில், உடம்பை பாத்துக்கங்க என்று சொல்லி உடம்பையே பாத்துட்டு இருந்ததன் விளைவு, மனசு வம்பா போச்சு... எல்லோர் பேச்சும் கேட்பதும் ஆபத்து ஒருத்தர் பேச்சும் கேட்காமல் இருந்தாலும் ஆபத்து.. வாழ்க்கை, வாழை இலையில் விழுந்த ரசம் போல, எந்தப் பக்கம் ஓடுது என்றே தெரியாமல் ஓடுகிறது. வாழ்க்கை ரசத்தை குடிக்க முடியலையே? அதிக விஷயம், விஷம். இயல்பா இருங்க. வாழ்க்கை யாத்திரை சுகமான நித்திரையோடு மாத்திரை இல்லாத யாத்திரையாக வாழ்த்துகள். வெற்றி நிச்சயம்
245 காட்சிகள்
6 மாசத்திற்கு முன்
#

இதுவும் கடந்து போகும்

*அருமையான கதை* 🌈🌈🌈🌈🌈🌈🌈 🌺ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. 🌺 "அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு அவனுடையது தான். . 🌺"அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்க பலரும் தயாராக இருந்தனர். ஆனால் இவன் விற்கவில்லை. 🌺 "இப்போது அந்த வீடு அவன் கண் முன்னே எரிந்துகொண்டிருந்தது. 🌺"ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். தீ முழுவதுமாக பரவிவிட்டதால் அதை அணைத்தும் பிரயோஜனம் இல்லை என்று எந்த முயற்சியும் எடுக்கவில்லை. . 🌺வணிகனோ செய்வதறியாமல் கண்ணில் நீரோடு புலம்பிகொண்டிருந்தான். 🌺"ஐயோ என் வீடு ! என் வீடு ! என்று அலறினான். 🌺"அப்போது அவனின் மூத்த மகன் ஓடிவந்து ஒரு விஷயத்தை சொல்கிறான் “தந்தையே ஏன் அழுகிறீர்கள் ? 🌺 "இந்த வீட்டை நான் நேற்றே மூன்று மடங்கு லாபத்திற்கு விற்றுவிட்டேன். . 🌺"இதனால் நமக்கு நஷ்டம் இல்லை என்று கூறினான். 🌺 "இதை கேட்ட வணிகனுக்கு ஏக மகிழ்ச்சி. 🌺 "அவனது சோகம் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி உண்டானது. 🌺" இப்போது வணிகனும் கூடி இருந்த கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான். 🌺" அதே வீடு தான் " , 🌺 " அதே நெருப்பு தான் " , 🌺"ஆனால் சில வினாடிகளுக்கு முன் இருந்த தவிப்பும் சோகமும் இப்போது அவனிடம் இல்லை. 🌺 "" சிறிது நேரத்தில் வணிகனின் இரண்டாவது மகன் ஓடி வந்து “தந்தையே ஏன் இப்படி கவலையில்லாமல் சிரிக்கிறீர்கள்? நாங்கள் விற்ற இந்த வீட்டிற்கு முன்பணம் மட்டுமே வாங்கியுள்ளோம். முழு தொகை இன்னும் வரவில்லை. 🌺"வீட்டை வாங்கியவன் இப்போது மீதி பணத்தை தருவானா என்பது சந்தேகமே” என்றான். . 🌺 "இதை கேட்ட வணிகன் அதிர்ச்சி அடைந்தான். மீண்டும் சோகத்தில் ஆழ்ந்தான். கண்ணீரோடு மீண்டும் புலம்ப ஆரம்பித்தான். 🌺 "தனது உடமை எரிகிறதே என்ற எண்ணம் மீண்டும் அவனை வாட்டியது. 🌺"சில மணித்துளிகள் பின்பு வணிகனின் மூன்றாவது மகன் ஓடி வருகிறான். “தந்தையே கவலை வேண்டாம். இந்த வீட்டை வாங்கிய மனிதன் மிகவும் நல்லவன் போலும். 🌺 "இந்த வீட்டை வாங்க அவன் முடிவு செய்தபோது வீடு தீ பிடிக்கும் என்று உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது. 🌺 "ஆகையால் நான் பேசியபடி முழு தொகையை கொடுப்பது தான் நியாயம் என்று என்னிடம் இப்போது தான் சொல்லி அனுப்பினான்” என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தான். 🌺"இதை கேட்ட வணிகனுக்கோ ஏக சந்தோஷம். 🌺 "கடவுளுக்கு நன்றி சொல்லி ஆடிப்பாடி மகிழ்ந்தான். கண்ணீரும் சோகமும் மீண்டும் காணாமல் போய்விட்டது. 🌺"மீண்டும் கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான். " இங்கு எதுவுமே மாறவில்லை "அதே வீடு, அதே நெருப்பு, அதே இழப்பு ", *"இது என்னுடையது என்று நினைக்கும்போது அந்த இழப்பு உங்களை சோகத்தில் ஆழ்த்துகிறது.* *"இது என்னுடையது அல்ல என்று நினைக்கும்போது உங்களை சோகம் தாக்குவது இல்லை. .* *"உலகில் எதுவுமே நிரந்தரமானது இல்லை."* " ஒருவனுக்கு மட்டுமே சொந்தமானது இல்லை. அனைத்துமே அழிய கூடியது. "நான் உட்பட எல்லாமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் அழியக்கூடியது அல்லது வேறு ஒருவனுக்கு சொந்தமாக கூடியது இதைத்தான் அனைத்து மதமும் சொல்கிறது எதை நீ இழந்தாய்... எதற்காக அழுகிறாய்... இன்று எது உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையது... மாற்றம் என்பது மட்டுமே மாறாதது.... கடமையை செய்... பலனை எதிர்பாராதே... ஏனெனில் கடமைக்கான பலனை இறைவன் தர மறப்பதில்லை *அன்பாய் இருப்போம்..* *பண்பாய் இருப்போம்..* *நட்பாய் இருப்போம்..* *அனைவரின் நெஞ்சில் நீங்காமலிருப்போம்...* 🌅🌄🌅🌄🌅🌄🌅🌄🌅🌄
177 காட்சிகள்
6 மாசத்திற்கு முன்
#

இதுவும் கடந்து போகும்

கிரீன் சிக்னல் விழுந்தவுடன் ஹார்ன் அடிக்க தெரிந்த பலருக்கு.... ரெட் சிக்னல் விழுந்தவுடன் ப்ரேக் அடிக்க தெரியவில்லை.......🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔😉 'நிம்மதி' இதை யாரும் தொலைக்கவில்லை, ஆனால், இன்று வரை நாம் அனைவரும் இதை தேடிக்கொண்டே இருக்கிறோம். ஒரு சில போலியான வர்ணங்களை விட கருப்பே அழகு .. எதிரி இல்லாம கூட வாழ்ந்திடலாம்... ஆனா எதிர்பார்ப்பு இல்லாம வாழ முடியாது.... ஆடம்பரம் என்பது ஆடும் பம்பரம். எப்பொழுது வேண்டுமானாலும் சாய்ந்து விடலாம் ...! பொய்களெல்லாம் அலங்காரமாய் தெரியும்... கொஞ்ச நாள் போனால், அழி(த்)ந்து விடும்.. உண்மை கடினமாய் தெரியும் ஏற்று கொண்டால் இனிமையை பரிசளிக்கும் - நிலையாக..
178 காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
#

இதுவும் கடந்து போகும்

*உறவுகளை நேசிப்போம்* *காலம் மாறிவிட்டது* *ஒருவர் இல்லையென்றால் அவரைச் சார்ந்தவர் அழுது, கவலைபட்டு வாழ்க்கை என்னவாகுமோ என்று என்னும் காலம் மாறிவிட்டது.* **காரணம்* *மனிதர்களுக்கு மதிப்பு இல்லை,* *உறவினர்களுக்கு உரிமை இல்லை,* *ஆசை மனைவியிடன் அன்பாய் பேச நேரம் இல்லை,* *தான் பெற்ற பிள்ளைகழோடு மகிழ்ச்சியாய் விளையாட ஆர்வம் இல்லை* *மெஷின் போன்ற வாழ்க்கை,* *மெஷின்னுடன்📲 தான் வாழ்க்கை,* *மனைவி இல்லையென்றாலும்* *பரவாயில்லை மொபைல் இருக்கிறது,* *உறவினர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை பேஸ்புக் இருக்கிறது,* *நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை வாட்ஸ்அப் இருக்கிறது.* *அக்காலத்தில் கிடைத்த சந்தோஷத்தில் இப்போழுது 50% சந்தோஷம் கூட கிடைக்காத காரணம் மொபைல் தான்.* *உலகில் மிக பெரிய ஏமாற்றம் போர் அடிக்கும் நேரத்தில் மொபைல்ல சார்ஜ் இல்லை என்றால் தான்.* *நாம் வாழும் வாழ்க்கை மிக குருகிய காலமே நேரத்தை மொபைல் என்ற மெஷினுடன் போக்காமல் சந்தோஷமாக வாழ வழி தேடுவோம் தேடுவது கூகுளில் அல்ல குடும்பதார்களிடம் நண்பர்களிடம் பேசுவதின் மூலம்,சிந்திப்பதின் மூலம், விளையாடுவதின் மூலம், நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.* *ஒரு நாளைக்கு 1 மணி நேரமாவது உயிரற்ற பொருட்களை தூக்கி எரிந்து விட்டு உயிருள்ள பொருட்களுக்கு மதிப்பு கொடுப்போம்.* *எப்போதும் போல பார்வேர்ட் மெஸெஜ் என்று அலட்சிய படுத்தாமல் நம் வாழ்க்கையை அழகாக்குவோம்.* *உன் வாழ்க்கை உன் மொபைலில் இல்லை உன் அன்பில்* *நானும் முயற்சிக்கிறேன்* வாழ்க வளமுடன் இந்த நாள் இனிய நாளாக அமைய என் வாழ்த்துக்கள் !!😍😍😍😍
176 காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
#

இதுவும் கடந்து போகும்

சர்வ வசிய தன ஆகர்ஷ்ன சங்கல்பத்தில் எனக்கு சில நாட்களாக சில கேள்விகள் எழுந்தன அவற்றை இறைநிலையிடம் கொடுத்து ஆழ்ந்து சிந்தித்து வந்தேன் அப்போது குரு மகரிஷி மூலம் எனக்கு சில அறிவியல் பூர்வமான விளக்கங்கள் கிடைத்தன அவற்றை இங்கே அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கேள்விகள் 1. ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கு எதற்காக? 2.வெள்ளை மணம் கொண்ட மலர்கள் ஏன் 3 . பால் பாயாசம் எதற்காக? 4. நாணயங்கள் எதற்காக 5. மஞ்சள் பச்சரிசி எதற்காக? விளக்கங்கள். 1.நெருப்பு அல்லது தீபம் என்பவை ஒளி மற்றும் வெப்பத்தை நுண்ணலைகளாக்கி வான் காந்தத்தில் தொடர்ந்து கரைந்துக் கொண்டே உள்ள திணிவு பெற்ற காந்த அலைகள். ஒற்றை தீபத்தை விட ஐந்து முகம் கொண்ட தீபம் ஐந்து மடங்கு காந்த ஆற்றலை வெளிவிடும். 2.மணம் என்பது காந்தத் திணிவு அதிகம் உள்ளவை. திணிவுள்ள காந்தம் வெளியேரி வான் காந்தத்தில் கரைந்தவாறு உள்ளன. அறிவியல் விளக்கப்படி வெள்ளை என்பதுஅனைத்து ஒளியையும் வண்ணங்களையும் வெளியிடும் பொருள். 3.காந்த அதிர்வுகளை, மந்திர அதிர்வுகளை பால் ஏற்றுக்கொள்கிறது . 4.மனம் மதிப்புடைய பொருளாக ஏற்றுக் கொண்டவை நாணயங்கள். 5.மங்கலம் என்பதற்காக வும் கிருமி நாசினியாகவும் உள்ளது மஞ்சள் பச்சரிசி. ஒளி, ஒலி, மணம்இவற்றில் மண எண்ணங்களை மந்தரங்கள் மூலம்அதிர்வலைகளை உண்டாக்கி வான் காந்தத்தில் கலக்க செய்தல் ஒலி சுவை மூலம் சீவ காந்தத்தில் பரவச்செய்தல். வாழ்க வளமுடன்.
142 காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
போஸ்ட் இல்லை
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post