🙋‍♂ IPL ஸ்கோர் updates
மும்பை இந்தியன்ஸ் அணியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மில்னே இடம் பிடித்திருந்தார். இவர் காயம் காரணமாக தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே வெளியேறினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான அல்ஜாரி ஜோசப்பை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அறிமுக போட்டியிலேயே 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் கைப்பற்றி சாதனைப் படைத்தார். மேலும் இரண்டு ஆட்டங்களில் விளையாடி அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் தற்போது அல்ஜாரி ஜோசப்பிற்குப் பதிலாக தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் பியரன் ஹென்ரிக்ஸை ஒப்பந்தம் செய்துள்ளது. ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியில் பெரேண்டர்ப், மலிங்கா போன்றோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#

🙋‍♂ IPL ஸ்கோர் updates

🙋‍♂ IPL ஸ்கோர் updates - ShareChat
GIF
313 காட்சிகள்
2 மாசத்திற்கு முன்
கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் வீசினார். இதில் முதல் பந்தில் பவுண்டரி அடித்த டோனி 2 மற்றும் 3-வது பந்தை சிக்சர்களாக மாற்றினார். 4-வது பந்தில் 2 ரன் எடுத்த அவர் 5-வது பந்தையும் சிக்சருக்கு பறக்க விட்டார். இதனால் கடைசி பந்தில் சென்னை அணிக்கு 2 ரன் மட்டுமே தேவைப்பட்டது. இந்த பந்தை எதிர்கொண்ட டோனி அடிக்கவில்லை. அது கீப்பர் பார்த்தீவ் பட்டேலின் கைக்கு சென்றது. சென்னை வீரர்கள் ஒரு ரன் ஓட முயன்றனர். எதிர்முனையில் இருந்து ஓடி வந்த ஷர்துல் தாகூரை பட்டேல் சூப்பராக ரன்-அவுட் செய்தார். 20 ஓவர்களில் சென்னை அணி 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களே எடுத்தது. இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி திரில் வெற்றியை பெற்றது. டோனி 84 ரன்களுடன் (48 பந்து, 5 பவுண்டரி, 7 சிக்சர்) களத்தில் இருந்தார். தனது 3-வது வெற்றியை பெற்ற பெங்களூரு அணி அடுத்த சுற்று வாய்ப்பிலும் நீடிக்கிறது. சென்னை அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.
#

🙋‍♂ IPL ஸ்கோர் updates

🙋‍♂ IPL ஸ்கோர் updates - ShareChat
GIF
331 காட்சிகள்
2 மாசத்திற்கு முன்
ரசிகர்கள் டோனி போட்டியிட்டால் அவர் பிரதமர் ஆகவே தாங்கள் வாக்களிக்க போவதாக தெரிவித்துள்ளனர். சில ரசிகர்கள் டோனியின் இப்படி ஒரு இன்னிங்சை பார்த்ததே போது, தோல்வி பற்றி எங்களுக்கு அக்கறையில்லை என பதிவிட்டு வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்தாலும் டோனி தனது பேட்டால் ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு சில வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், டோனியின் இன்னிங்ஸ் இந்திய அணியின் உலக கோப்பை கனவுக்கு மேலும் நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது.
#

🙋‍♂ IPL ஸ்கோர் updates

🙋‍♂ IPL ஸ்கோர் updates - ShareChat
GIF
602 காட்சிகள்
2 மாசத்திற்கு முன்
போஸ்ட் இல்லை
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post