#🎙️அரசியல் தர்பார் #📺அரசியல் 360🔴 #📢மே 28முக்கிய தகவல்🤗
500 மற்றும் 1000 ரூபாய் மதிப்பிலான நோட்டுகளை நிறுத்தினால் கருப்பு பணத்தையும் ஊழலையும் ஒழிக்க முடியுமா?
#கருப்புபணம்
கட்டுக் கட்டுகளாக கட்டி பாதாள அறையில் பூட்டி வைத்திருப்பதுதான் கருப்பு பணம் என்று பலரும் நினைக்கிறார்கள். உண்மை அப்படியல்ல…
சட்டப்படி பார்த்தால் பில் (Invoice) போடாமல் புழங்கும் பணம் எல்லாமே கருப்புபணம்தான். கரிவேப்பிலை வாங்கும் ஐந்து ரூபாய் ஆனாலும் கையூட்டாக வாங்கும் கோடி ரூபாய் ஆனாலும் அவையெல்லாமே கருப்பு பணம்தான். ஒருவன் லஞ்சமாகவோ அல்லது ஊழல் செய்தோ ஒரு கோடி ரூபாய் பணம் வைத்திருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அந்த ஒரு கோடி ரூபாய் பணத்தாள்களும் கருப்பு பணத்தில் சேரும். அந்தக் கருப்புப் பணத்தை வைத்து முறையான பில் போட்டு தங்கத்தையோ அல்லது வேறு ஏதோ ஒரு பொருளையோ வாங்கிவிட்டால் அடுத்த நொடியே அந்த ஒரு கோடி ரூபாயும் முறையான வெள்ளைப்பணம் ஆகிவிடும். ஒரு நிமிடத்தில் மாறிவிடும் தன்மைகொண்ட கருப்பு பணத்தை எப்படிப் பிடிக்க முடியும்?
ஒரு சில கோடி ரூபாய்களை மட்டுமே இவ்வாறாக மடைமாற்றி அரசாங்கத்தை ஏமாற்ற முடியும். அளவுக்கு அதிகமாக ஊழல் செய்து அதீதமாகச் சேரும் நூற்றுக்கணக்கான கோடி கருப்புப்பபண ரூபாய்களை எல்லாம் எவ்வாறு வெள்ளைப்பணமாக மாற்றுகிறார்கள் என்று பார்ப்போம்…
#ஊழல்பணம்
இருக்கவே இருக்கிறது NRE & NRI கோட்டா…
ஊழலில் பணம் சேர்க்கும் பெருச்சாழிகள் பலரும் தங்கள் குடும்ப உறுப்பினரையோ அல்லது நம்பிக்கைக்குரிய யாரோ ஒருவரையோ ஏதோ ஒரு வெளிநாடுகளுக்கு அனுப்பி ஏதோ ஒரு பெயரில் கம்பெனி போன்ற ஏதோ ஒன்றைத் தொடங்கி அவர் பெயரில் இந்திய வங்கிகளில் NRE அக்கவுண்ட் தொடங்குவார்கள். பிறகென்ன… உலகின் பலப்பல நாடுகளிலிருந்தும் ஆங்காங்கே இருக்கும் ஹவாலா ஏஜெண்டுகள் மூலம் அந்த அக்கவுண்டிற்கு வெளிநாட்டுப் பணத்தை அனுப்புவார்கள். அதற்கு ஈடான இந்தியப் பணத்தை ஊழல் பெருச்சாழிகளிடமிருந்து பெற்று உள்ளூர் ஹவாலா ஏஜென்டுகள் மூலம் லோக்கல் டெலிவரி செய்வார்கள். ஊழல் பணம் எத்தனை நூறு கோடிகளாக இருந்தாலும் NRE மூலம் பக்காவான பாதுகாப்புடன் வெள்ளைப்பணமாக மாறிவிடும். முடிந்தது விடயம். (ரஜினிகாந்த் நடித்த ‘சிவாஜி’ என்ற திரைப்படத்தில் இதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன)
வெளிநாடுகளில் இருந்து NRE அக்கவுண்ட்களுக்கு வரும் பணத்திற்கு எந்தவிதமான கேள்விகளும் இருக்காது. இந்தியச் சட்டங்களால் யாரையும் எதுவுமே செய்ய முடியாது. NRE அக்கவுண்ட்களில் இருந்து தொழில்களில் முதலீடு செய்தால் பலப்பல சலுகைகளும் கிடைக்கும்.
மேலும் பல வழிகளும் உள்ளன…
Just பத்துக் கோடி ரூபாய் அளவுக்கு துபாய் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வீடு வாங்குதல் அல்லது ஏதோ ஒரு தொழிலில் முதலீடு செய்தால் கோல்டன் விசா உட்பட பல சலுகைகள் கிடைக்கும். பிறகென்ன? அந்தந்த நாடுகளின் மதிப்புக் கூடிய பண நோட்டுக்களில் சில நூறு கோடி இந்திய ரூபாய்களை இரண்டு சூட்கேஸ்களில் மட்டுமே அடைத்தும் பாதுகாக்கலாம்.
இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த தேவையானதும், சாத்தியமான வகையிலுமான சட்டதிட்டங்களை உருவாக்குவதற்குத் தகுதியில்லாத ஒன்றிய ஆட்சியாளர்கள் ஏதேதோ முட்டாள்தனமான விடயங்களைப்பேசி நம் அனைவரின் சிந்தனைகளையும் மடைமாற்றுகின்றனர்.
‘ஊழல் மற்றும் கருப்பு பணத்தை ஒழிக்கப்போகிறேன்’ என்று சவால் விடுபவர்கள் எவராக இருந்தாலும் அவர்களை யாரும் நம்பாதீர்கள். இவையிரண்டுமே நம் இந்தியாவில் ஒரு சதவீதம் கூடச் சாத்தியமில்லாத விடயங்களாகும்.