உண்மை
#

உண்மை

#எதுவும் நிரந்தரம் கிடையாது #அர்னால்டின் வாழ்க்கை உதாரணம். தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger)அர்னால்டின் பரிதாப நிலை நடிப்பில் படிப்படியாக உயர்ந்து கலிபோர்னியாவின் கவர்னர் என்ற புகழின் உச்சத்தில் இருக்கும் பொழுது தன்னுடைய வெண்கலச் சிலை முகப்பில் நிறுவப்பட்ட வகையில் ஒரு ஆடம்பர ஹோட்டலை திறந்து வைத்தார். ஹோட்டலின் திறப்பு விழாவின் பொழுது அந்த ஆடம்பர ஹோட்டலின் உரிமையாளர் "அர்னால்டு எப்பொழுது வேண்டுமானாலும் இந்த ஹோட்டலுக்கு வந்து முன் பதிவு ஏதும் இன்றி இலவசமாக தங்கிக்கொள்ளலாம், அவருக்கு எப்பொழுதுமே ஒரு அறை இருக்கும்" என்று அறிவித்தார் நாட்கள் நகர்ந்தன ... பதவி போனது .. புகழ் போனது .. சமீபத்தில் சாதாரண மனிதனாக அந்த ஹோட்டலுக்கு சென்ற அர்னால்டுக்கு அதிர்ச்சி காத்திருந்தது ஹோட்டலில் எல்லா அறைகளும் புக்கிங் ஆகிவிட்டது தற்பொழுது அறைகள் ஏதும் இல்லை என்று ஹோட்டல் நிர்வாகம் கூறவே அதிர்ச்சியில் உறைந்து போனார் ஹாலிவுட் முன்னாள் ஹீரொ, கலிபோர்னியா முன்னாள் கவர்னர், அந்த ஹோட்டலை திறந்து வைத்த முன்னாள் வி.ஐ.பி "அர்னால்டு ஸ்குவாஸுனேக்கர்" மனமுடைந்த அர்னால்ட், தான் வைத்திருந்த போர்வையை எடுத்துக்கொண்டு அந்த ஹோட்டலின் முகப்பில் தன்னால் திறந்து வைக்கப்பட்ட, வெறும் அலங்கார பொருளாக நின்றுக்கொண்டிருந்த தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன்னர் செய்வதறியாது படுத்து விட்டார் இந்த சம்பவத்தால் துவண்டு போன அர்னால்ட் அந்த காட்சியை புகைபடம் எடுத்து வலைதளத்தில் பதிவிட்டு உலகத்திற்கு ஓர் செய்தியை சொல்கின்றார் "நாம் பதவியில் இருக்கும் பொழுது மெச்சப்படுவோம், புகழப்படுவோம், நமக்கு உச்சபட்ச மரியாதை தரப்படும்" "எப்பொழுது நாம் பதவியையும், புகழையும் இழக்கின்றோமோ அடுத்த நொடியே நாம் ஒதுக்கப்படுவோம், நமக்கு தந்த சத்தியங்கள் காற்றில் பறக்கவிடப்படும்" "எந்த சத்தியங்களும், வாக்குறுதிகளும் உங்களுக்காக கொடுக்கப்பட்டது அல்ல அது உங்களை அலங்கரித்த பதவிக்கு கொடுக்கப்பட்டது" "உங்கள் புகழை, உங்கள் பதவியை, உங்கள் அதிகாரத்தை ஒரு போதும் நம்பாதீர்கள்" "இது எதுவுமே நிரந்தரம் கிடையாது"
149 காட்சிகள்
9 மாசத்திற்கு முன்
#

உண்மை

கலைஞர் காமராஜருக்கு மெரினாவில் இடம்தரவில்லை என வதந்தி பரப்பும் அறிவிலிகளே! அக்டோபர் 2, காமராஜர் மறைந்த அன்று சோகமே உருவாக, அப்போதைய முதல்வர் கலைஞரும், அவர் அமைச்சரவை சகாக்களும் அவரது உடலை சூழ்ந்து அமர்ந்திருந்தனர். அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், தேனாம்பேட்டை காங்கிரஸ் அலுவலகத்திலேயே காமராஜர் உடலை பொதுமக்கள் பார்வைக்கு வைத்து, மற்ற சம்பிரதாயங்களையும் அங்கேயே நடத்த திட்டமிட்டனர். முதல்வர் கலைஞரின் காதுகளுக்கு இந்த தகவல்போனது. கொதித்துவிட்டார் கலைஞர். “காமராஜர் ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல. இந்த தேசத்தின் சொத்து, அவரது உடலை ராஜாஜி ஹாலில் வைத்து அரசு முறைப்படிதான் தகனம் செய்யவேண்டும்" என்றார். அப்போது குறுக்கிட்ட அதிகாரி ஒருவர், காமராஜர் அப்போது எந்த பொறுப்பிலும் இல்லாததை சொல்லி, சில சட்ட சம்பிராதாயங்களை தெரிவித்ததோடு, மத்திய அரசிடம் அனுமதி பெறவேண்டிய சட்டவிதியை எடுத்துச்சொன்னார். மீண்டும் கோபத்துடன் குறுக்கிட்ட கலைர், " நான் சொன்னதை செய்யுங்கள்...மேலும் காமராஜரின் உடலை கிண்டியில் உள்ள அரசுக்கு சொந்தமான ராஜாஜி நினைவகம் அருகில்தான் அடக்கம் செய்யவேண்டும்...காமராஜருக்கு இறுதி மரியாதை செய்வதற்கு நாம் யாரிடமும் போய் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை" என கறாராக கூறினார் கலைஞர். காமராஜர் உடல் புதைக்கப்படவில்லை சமாதி கட்ட காமராஜர் உடல் தகனம்தான் செய்யபட்டது எனவே கடற்கரையில் சமாதி கட்ட முடியாது அதனால் காந்தி மண்டபம் அருகே காமராஜருக்கு மணிமண்டம் கட்டபட்டது அதையும் கலைஞர்தான் செய்தார்
350 காட்சிகள்
10 மாசத்திற்கு முன்
போஸ்ட் இல்லை
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post