#🙏கந்தசஷ்டி விரதம் 2ஆம் நாள்💚 #📺அக்டோபர் 23 முக்கிய தகவல் 📢 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #🙏கோவில் *****கந்த சஷ்டி கவிதை*****
பந்தமென்று கரமேந்தி
வரமளிக்கவே,
சொந்தமென்று நலம் தந்து
சுகமளிக்கவே,
வந்து நிற்பாய் தமிழ்க்கடவுள்
முருகு என்று நாவினிக்கவே!!!
உன் புகழ் பாடினோம்
யாமறிந்த அழகு மொழியினிலே !!
மாறவில்லை எம் பக்தியுமே
என்றும் மாற்று வழியினிலே!!
வந்திடுமே கோடியருள்
வேல் பிடித்து நீ நிற்கயிலே!!
மால் மருகா மயில்வாகனா
ஈடில்லாச் சுடரே வா..
எந்தனை ஆளும் வடிவே வா..
அறுபடை வேலவா வா..
ஆறு தலை குமரா வா..
எங்குடிக்கு ஆறுதலை தரவா!!
எந்தன் குடி காக்கும்
சேவற்கொடியோனே வா !
எந்தமிழர் இன்னல் நீக்கிட
நெஞ்சில் கருணைப்
பொழிந்திட வா !!
முருகா விரைந்து வா
மயிலோனாய் பறந்து வா!
குமரா வா! சண்முகா வா!
**வேலுண்டு பயம் இல்லை முருகா**