இன்று(11-5-2025) ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!
கேட்பதை விட அதிகமாகவே அள்ளிக் கொடுக்கும், அதுவும் கேட்ட மாத்திரத்திலேயே கொடுக்கும் நரசிம்ம மூர்த்தி அவதரித்த தினத்தை நரசிம்ம ஜெயந்தியாக நாம் கொண்டாடுகிறோம்.
நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை.
மற்ற தெய்வங்களைப் போல் அல்லாமல் நரசிம்மர் நினைத்தவுடன் பலனைக் கொடுக்கக் கூடியவர். பக்திக்கு வசப்பட்டு பிரத்தியட்சமாய் வரக்கூடியவர்.
தான் வணங்கும் ஆதிசங்கரரை அழைத்துச் சென்ற கபாலீசனை, அவருடைய சிஷ்யன் மீது ஆரோகணித்து அடித்துக்கொன்றதைப் போல் பக்தர்களுக்கும் தன் அன்பர்களுக்கும் கண்கூடாகப் பலனைக் கொடுக்கக் கூடியவர்.
தன் திருவடியை நம்பிச் சரணடைந்தவர்களுக்கு நன்மை அருள்வதில் நரசிம்மனுக்கு நிகரான தெய்வம் வேறில்லை.
பக்தரின் துன்பத்தை உடனே தீர்ப்பவர் என்பதால் ‘நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை” என்றே சிறப்பாக போற்றுவர்.
எனவே இன்றே உங்களை நரசிம்மரிடம் ஒப்படைத்து விடுங்கள்.
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் தம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்
பொருள்: கோபம், வீரம், தேஜஸ்(பிரகாசம்) கொண்டவர் மகாவிஷ்ணு. எல்லா திசைகளிலும் பார்வை செலுத்துபவர் என்பதால் ‘ஸர்வதோமுகம்’ எனப்படுகிறார். எதிரிகளுக்கு பயத்தையும், மரணத்திற்கே மரணத்தையும், எல்லா நன்மைகளையும் தர வல்லவருமான அந்த நரசிம்மரை நான் வணங்குகிறேன்.
ஸ்ரீ நரசிம்ம பிரபத்தி
மாதா நரசிம்ஹா, பிதா நரசிம்ஹா
ப்ராதா நரசிம்ஹா ஸகா நரசிம்ஹா
வித்யா நரசிம்ஹா, த்(3)ரவிணம் நரசிம்ஹா
ஸ்வாமி நரசிம்ஹா ஸகலம் நரசிம்ஹா
இதோ நரசிம்ஹா பரதோ நரசிம்ஹா,
யதோ யதோ யாஹி: ததோ நரசிம்ஹா,
நரசிம்ஹா தேவாத் பரோ ந கஸ்சித்
தஸ்மான் நரசிம்ஹா சரணம் ப்ரபத்யே.
ஸ்ரீ நரசிம்ம பிரபத்தி -மிக சக்தி வாய்ந்தது -துன்பங்களை போக்கி இன்பங்களை அளிக்கக்கூடியது .
இன்று (11-5-2025) நரசிம்ம ஜெயந்தயாதலால் வீட்டில் விளக்கேற்றி வைத்து மனதை ஒருமுகப்படுத்தி நரசிம்மரை மனதில் நிறுத்தி நரசிம்மா நீயே துணை!நீயே மாதா ,பிதா, தெய்வம் என்று வணங்குங்கள் !
ஸ்ரீ நரசிம்மர் அருள் நிச்சயம் கிடைக்கும் .ஸ்ரீ ந்ருசிம்ஹாய நம :
இந்த ஆண்டு(2025) நரசிம்ம ஜெயந்தி
மே 11ம் தேதி வருகிறது.
சித்திரை மாதம் சதுர்த்தசியும், சுவாதி நட்சத்திரமும் கூடிய பிரதோஷ காலத்திலேயே நரசிம்மர் அவதாரம் எடுத்தார்.
சதுர்த்தசி திதி மே 11 ம் தேதி இரவு 8-18வரை இருப்பதாலும் மே 11 ம் காலை 4-15 முதல் சுவாதி நட்சத்திரம் ஆரம்பமாவதாலும்
மே11ம்தேதியே நரசிம்மர் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.
இன்று(11-5-2025)நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு காணக்கிடக்காத அஹோபிலம் ஜ்வாலா நரசிம்ம தரிசன காணொளிக்காட்சி கீழே!👇🚩🕉🪷🙏🏻
#ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி #நரசிம்ம ஜெயந்தி #நரசிம்மர் ஜெயந்தி #🙏 லட்சுமி நரசிம்மர் #🙏 ஸ்ரீ லெட்சுமி நரசிம்மர்🕉️💛💙